திருமணத்தை தாண்டிய உறவு
திருமணத்தை தாண்டிய உறவு
காதல், காமம், உறவுகளை சொல்வது எண்ணங்களை உருவாக்குவது ஐந்தாம் பாவகம். ஐந்தாம் பாவகம் காதல், கற்பனைகளை உருவாக்குகிறது. ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானம். ஏழாம் பாவம் உடல் சேர்க்கை. களத்திர ஸ்தானம். ஐந்தாம் பாவகம் அதனுடைய கேந்திர ஸ்தானங்கள் எட்டாம் இடம், 11ஆம் இடம், இரண்டாம் இடம் ஆகிய பாவகங்களிடையே உள்ள கிரகங்களின் கூட்டணி சேர்ந்தால் திருமணத்தை தாண்டிய தவறான உறவு ஏற்படும். ஒன்றுக்கு மேற்பட்ட நபருடன் தொடர்பு ஏற்படும்.
குடும்ப உறவில் பிரச்சினை
ஐந்தாம் பவாக அதிபதி எட்டாம் பாவக அதிபதியுடன் தொடர்பு ஏற்பட்டால் கள்ளத் தொடர்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரகசிய சிநேகங்கள் உருவாகும். திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் உறவுகள் ஏற்படும். எட்டாம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.
சுகம் தரும் ஸ்தானம்
ஜாதகத்தில் 4வது இடம் சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.
பாவ கிரகங்களின் சேர்க்கை
மிதுனம், தனுசு, மீனம், கன்னி ஆகிய ராசிகள் இரட்டை பட்ட ராசிகள் ஐந்து, ஏழு, எட்டு, பதினொன்றாம் பாவகமாக வந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். எட்டாம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.
யாருடன் யார் நட்பு
திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள். சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் மூலம் திருமணத்தை தாண்டிய ஏற்படும்.
பிற பெண்களின் தொடர்பு
ஆண்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். ஏழாம் வீட்டில் சனி சுக்கிரன் கூட்டணி இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார்.
ஜாதகத்தில் ராகு கேது
லக்னத்துக்கு 7, 8ல் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், தேவைகள் ஒத்துப்போகின்றன. அதனால்தான் தோஷம் உள்ள ஜாதகத்துடன் தோஷம் உள்ள ஜாதகங்களை சேர்க்க வேண்டும் என்கின்றனர். திருமண பொருத்தம் பார்க்கும் போது ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. திருமணத்திற்கு பிந்தைய வேறு தொடர்பு ஏற்படுகிறது.
இரண்டாம் திருமண யோகம்
ஏழாம் வீட்டில் சனி, புதன் இணைந்து இருந்து, வேறு ஏதேனும் இரு கிரகங்கள் 11 ஆம் வீட்டில் இருந்தால், அப்படிப்பட்ட ஜாதகர் இருமுறை திருமணம் செய்ய நேரிடும். இந்த அமைப்பில் கேது ஏதாவது ஒரு வழியில் வகையில் தொடர்பு பெற்றால் அந்த இரண்டாவது திருமணம் ரகசியமாகவே நிகழ்ந்தேறும்.
ஒருவரின் ஜாதகத்தில், 7 ஆம் அதிபதி, 6, 8, 12 ஆம் இடங்களைத் தொடர்பு பெறும் போதோ அல்லது தொடர்பு பெறும் இடங்கள் உபய ராசியாகும் போதோ அது நிச்சயம் இரண்டாம் திருமண யோகத்தை அளிக்கும்.
பரிகாரம் இருக்கு
என்னதான் கிரகங்கள் தவறான கூட்டணியில் இருந்தாலும் இந்த கிரக கூட்டணியை குரு பார்வை செய்தால் பாதிப்புகள் நீங்கும், தவறான பாதையில் செல்ல மனது இடம் கொடுக்காது.
குலம் காப்பவர் குல தெய்வம். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வதால் கெட்டது நீங்கி நன்மைகள் பெருகும். மனோகாரகன் சந்திரன், திங்கட்கிழமைகளில் சிவ ஆலய தரிசனம் செய்வது பாதிப்புகளை நீக்கும்.
அதே போல புதன் புத்திகாரகன், புத்தியை தெளிவாக செயல்பட வைப்பவர். நல்ல புத்தி கிடைக்க திருவெண்காட்டில் அமைந்துள்ள புதன் பகவானை வழிபட வேண்டும்.
0 Comments
THANK FOR VISIT