குழந்தை பாக்கியம் எப்போது?
1. ஒருவருடைய
ஜாதகத்தில் 5ம் இடத்தை வைத்து புத்திர பாக்கியத்தை கணிக்க வேண்டும்.
2. ஆனால்
பெண்கள் ஜாதகத்தில் 5ம் இடத்தை பார்ப்பதோடு, 5க்கு 5ம் இடமான 9ம் இடத்தை வைத்து புத்திர
பாக்கியத்தை கணிக்க வேண்டும்.
3. குரு பகவான்
புத்திரகாரகன் ஆகிறார், அவருடைய நிலையை வைத்தும் புத்திர பலனைக் கானலாம்.
4. ஒருவருடைய
ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியும், குருவும் நன்றாக அமையவில்லை என்றால், அதாவது பகை
நீசம் பெற்று கெட்டு நின்றால் புத்திர பாக்கியம் நன்றாக அமைவதில்லை.
5. புத்திர
ஸ்தானாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்று அஸ்தங்கம் அடைந்தால் புத்திர பலன் உண்டாவதில்லை
அல்லது புத்திர இழப்பு ஏற்ப்படுகிறது.
6. புத்திர
ஸ்தானத்தில் குரு அமர்ந்திருந்தாலும்(காரகா பாவ நாஸ்த்தி) புத்திர பலன் உண்டாவதில்லை.
அது குருவினுடைய ஆட்சி உச்ச வீடாக இருந்தால் மாறாக நற்பலன்கள் ஏற்ப்படுகிறது.
7. புத்திர
ஸ்தானாதிபதி, புத்திரகாரகன், இவர்கள் அம்சத்தில் நின்ற இடத்ததிபதி ஆகியோருடைய திசை
புத்தி காலங்களில் புத்திர பலன் உண்டாகிறது.
8. கோசார
ரீதியாக குரு ராசியிலிருந்து 2,5,7,9,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது புத்திர பலன்
உண்டாகிறது.
9. ரிஷபம்,
சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிகள் புத்திர ஸ்தானமாக வந்தால் புத்திர வழியில்
நற்பலன்கள் அமைவதில்லை.
10. புத்திர
ஸ்தானம் கடகமாக இருந்து அதில் சனி தனது நட்சத்திர காலில் வீற்றிருந்தால் நிறைய புத்திர
பாக்கியம் ஏற்படுகிறது.
11. புதன்
5ம் இடத்தில் இருந்தால் பெண் புத்திர பாக்கியம் ஏற்படும், அல்லது புத்திர பக்கியம்
குறைவாக இருக்கும்.
12. 5க்குடையவர்
எத்தனை கிரகங்களுடன் சேர்க்கை பெற்றுள்ளாரோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
13. அதே போல்
5ம் இடத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
14. புத்திர
ஸ்தானத்தில் ராகு, கேது வீற்றிருந்தால் புத்திர தோஷம் ஏற்படுகிறது.
15. புத்திர
ஸ்தானாதிபதி அம்சத்தில் அமர்ந்த இடத்தில் இருந்து ஜென்ம லக்கினம் வரை எண்ணினால் எத்தனை
ராசிகள் வருகிறதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
16. ஒருவருடைய
ஜாதகத்தில், சூரியன், புதன், சனி சேர்க்கை பெற்று 11ம் இடத்தில் வீற்றிருந்தால் பல
பிள்ளைகளை பெற்றெடுக்கும் யோகம் உண்டாகும்.
இதில்
எது மிக அதிக பலமோ அதன்படி பலன்கள் நடக்கும்.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT