7TH- STD - இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்துகொள்ளல்-

1.    இயற்கை நிகழ்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் மேல் ஏற்படும் எதிர்மறை தாக்குதல்- இயற்கை இடர்.

2.    இயற்கை இடர்கள்  வகை : 2 .

          1.    புவியியல் இடர்

          2.    உயிரியல் இடர்

3.    சமூகத்தில் கடுமையான இடையூறு மற்றும் பரவலான பொருளாதார சமூக () சுற்றுச்சூழல் இழப்புகளை ஏற்படுத்துவது - பேரிடர் .Disaster.

4.    கடலில் உருவாகும் இயற்கை இடர்சூறாவளி. ஹரிக்கேன்

5.    பேரிடர்  வகை : 2 .

          1.    இயற்கை பேரிடர்

          2.    மனிதனால் உருவாகும் பேரிடர்

6.    புவி உட்பகுதியில் ஏற்படும் இயற்கை பேரிடர்-

                1.    நிலநடுக்கம்

                2.    சுனாமி

                3.    எரிமலை வெடிப்புகள்.

7.    புவி மேற்பரப்பில் ஏற்படும் இயற்கை பேரிடர் .

          1.    நிலச்சரிவு

          2.    பனிச்சரிவு.

8.    வானிலை ஆய்வு மற்றும் நீர் வளம் ஆகியவற்றால் ஏற்படும் இயற்கை பேரிடர்.

          1.    புயல்காற்று

          2.    சூறாவளி

          3.    பனிமழை

          4.    வெள்ளம்

9.    சுகாதாரத்தினால் ஏற்படும் இயற்கை பேரிடர் - தொற்றுநோய்.

10.   மனிதனால் உருவாகும் பேரிடர்:

          1.    சமூக தொழில்நூட்பம்

          2.    போர்


11.   ஒரு திடீர் நகர்வு () புவி மேலோட்டில் ஏற்படும் நடுக்கம்நிலநடுக்கம்.

12.   நிலநடுக்கத்திற்கு காரணம்:

          1.    புவித்தட்டுக்களின் நகர்வு

          2.    நிலச்சரிவு

          3.    மேற்பரப்பில் பிளவு

13.   இந்தியாவில் புழுதிப்புயல் தாக்கிய ஆண்டு- 2018 மே 2,3 .

14.   2004  ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு தமிழகத்தினை தாக்கிய மிக மோசமான புயல்- கஜா.

15.   சுனாமி () ஆழி பேரலை எவ்வாறு ஏற்படுகிறது:

          1.    நிலநடுக்கம்

          2.    கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு

          3.    எரிமலை வெடிப்பு

          4.    குறுங்கோள்கள்

16.   சுனாமி என்னும் சொல் எந்த மொழி சொல் : ஜப்பான்.

          1.    சு          - துறைமுகம்

          2.    னாமி    - அலைகள்

17.   கனமழை, புயல், பனி உருகுதல், ஆழிப்பேரலை () அணைக்கட்டு உடைதல் போன்றவற்றால் திடிரென ஏற்படும் அதிக அளவிலான நீர் வெளியேறுதல்வெள்ளப்பெருக்கு.

18.   வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகள் :

          1.    சொத்து மற்றும் உயிரிழப்பு.

          2.    மக்கள் இடப்பெயர்வு.

          3.    காலரா .

          4.    மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.

19.   உயரழுத்தத்தால் சூழப்பட்ட குறைவழுத்த பகுதியில் உருவாகும் காற்று -  புயல்.

20.   கஜா புயலால் தமிழகம் தாக்கப்பட்ட நாள்- 2018 - நவம்பர் – 10 .வேகம் 120, கி. மீ.

21.   தீயை தடுக்கும் 3 அம்சங்கள்:

          1.    கண்டறிதல்

          2.    தடுத்தல்

          3.    அணைத்தல்

22.   தொழிற்சாலை பேரிடருக்கு .கா : போபால் விஷவாயு கசிவு.

23.   பேரிடர் மேலாண்மையின் நிலைகள் எத்தனை படிநிலைகளை கொண்டது - 6 .

          1.    பேரிடர் முன் ஆபத்தை குறைத்தல் நிலை:

                      1.    தயார்நிலை

                      2.    மட்டுப்படுத்துதல்

                      3.    கட்டுபடுத்துதல்

          2.    பேரிடர் பின் மீட்டெடுத்தல் நிலை:

                      1.    துலங்கல்

                      2.    மீட்டல்

                      3.    முன்னேற்றம்

24.   பேரிடரின் போது முதல் கட்ட நடவடிக்கை - மீட்டல்.

25.   பேரிடருக்கு பின்பு மீட்பு நிலை என்பது : 3 நிலைகளை கொண்டுள்ளது.

                1.    அவசர கால நிவாரணம் வழங்குதல்.

                2.    மறுவாழ்வு.

                3.    மறுகட்டமைப்பு.

26.   பேரிடருக்கு பின் மீட்டெடுத்தல் என்பதை விட இயற்கை பேரிடரை - மட்டுப்படுத்துதல் என்பது குறைந்த செலவுடையது.

27.   எதிர்கால பேரிடர் விளைவுகளை குறைப்பதற்கான திட்டம் -மட்டுப்படுத்துதல்.

28.   இந்திய பெருங்கடலில் சுனாமி புயல் எழுச்சி மையத்தை அமைத்த அமைப்பு:

          1.    அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை - DST.

          2.    விண்வெளி துறை - DOS.

          3.    அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் - CSIR.

29.   தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எந்த அமைச்சகத்தின் கீழ் வரும்-உள்துறை.

30.   தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முதன்மை நோக்கம்:

          1.    இயற்கை மற்றும் மனிதனில் உருவாகும் பேரிடர்களுக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

          2.    பேரழிவு நெகிழி திறனில் மேம்பாடு.

          3.    நெருக்கடி கால செயல்பாடு.

31.   தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு- டிசம்பர் 25 -2005.

32.   தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை SDRF என்பது 80 - போலிஸ் தனிபடையுடன் அமைக்கப்பட்டது.

33.   மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் 2018-2030 முன்னோக்கு திட்டத்தினை தயாரித்த அமைப்பு:

          1.    வருவாய் துறை

          2.    பேரிடர் மேலாண்மை துறை

34.   பொருட்சேதம் உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கைக் காரணி- இடர்.

35.   பேரிடரின் விளைவைக் குறைக்கும் செயல்பாடுகள்மட்டுப்படுத்தல்.

36.   ஒரு திடீர் நகர்வு () புவி மேலோட்டின் திடீர் நடுக்கம் - புவி அதிர்ச்சி.

37.   பேரிடரின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் - பேரிடர் மேலாண்மை அழைக்கப்படுகிறது.

38.   மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும் அலைகளை நீரின் இடப்பெயர்வுசுனாமி.

39.   தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண் - 101.

40.   பொருத்துக:

          1.    NDMA - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்.

          2.    NDMI -  தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்.

          3.    SDRF -  தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை.

          4.    NDRF -  தேசியப் பேரிடர் மறுமொழி படை.

          5.    DDMA - மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்.

41.   பொருத்துக:

          1.    புவி அதிர்ச்சி - பிளவு

          2.    சூறாவளி - புயலின் கண்

          3.    சுனாமி  - இராட்சத அலைகள்

          4.    வறட்சி - சமமற்ற மழை

          5.    தொழிற்சாலை விபத்து   - கவனமின்மை

 

https://www.a2ztnpsc.in/