வல்லினம் மிகும் இடங்கள்
1.
அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும் வல்லினம் மிகும்- அ + சட்டை = அச்சட்டை
2.
அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும் - அந்தப்பக்கம், இந்தக்கவிதை.
3.
எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும் – எந்தத்திசை.
4.
இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும் - தலையைக் காட்டு.
5.
நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும் - எனக்குத் தெரியும்.
6.
அகர, இகர, உகர ஈற்று வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும்.
7.
இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும் - எழுதிப் பார்த்தாள்.
8.
உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும் - படித்துப் பார்த்தார்.
9.
ஆய், என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும் - படிப்பதாய் + சொன்னாள் = படிப்பதாய்ச் சொன்னாள் .
10.
எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும் - செல்லாக் காசு, ஓடாக் குதிரை.
11.
உவமைத்தொகையில் வல்லினம் மிகும் – மலர்ப்பாதம்.
12.
உருவகத்தில் வல்லினம் மிகும். சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும் – தமிழ்த்தாய், வாய்ப்பவளம்.
13.
எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்- எட்டுப்புத்தகம் , பத்துக்காக.
14.
அப்படி, இப்படி எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும் - அப்படிச்செய் , இப்படிக்காட்டு, எப்படித்தெரியும்?
15.
திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்- கிழக்குக் கடல், கிழக்குப் பகுதி, மேற்குச் சுவர்.
16.
மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்- மரம் + சட்டம் = மரச்சட்டம்.
17.
என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின் வல்லினம் மிகும்- எனக் கேட்டார் .
18.
அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்- அதற்குச் சொன்னேன் இதற்குக் கொடு , எதற்குக் கேட்கிறாய்?
19.
இனி, தனி ஆகிய சொற்களின்பின் வல்லினம் மிகும்- இனிக் காண்போம் , தனிச் சிறப்பு.
20.
மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்- மிகப் பெரியவர் .
21.
ஓரெழுத்து ஒரு மொழி சிலவற்றின் பின் வல்லினம் மிகும்- தீப் பிடித்தது , பூப் பந்தல்
22.
வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும். - கேட்டுக் கொண்டான் .
23.
ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும் – புலித்தோல்.
24.
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும் – மல்லிகைப்பூ, சித்திரைத்திங்கள்.
25.
சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும்- சாலப்பேசினார், தவச்சிறிது.
0 Comments
THANK FOR VISIT