10TH - STD - வேளாண்மைக் கூறுகள் -

1.    இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு-1953.

2.    இந்தியாவில் உள்ள மண் வகைகள்-8 பிரிவுகள்.

          1.    கரிசல் மண் - 29.69%

          2.    செம்மண் - 28%

          3.    வண்டல் மண்  -22.16%

          4.    காடு மற்றும் மழை மண் -7.94%

          5.    வறண்ட பாறை மண் - 6.13%

          6.    சரளை மண் -2.62%

          7.    களிமண் மற்றும் சதுப்பு மண் -2.17%

          8.    உப்பு மற்றும் கார மண் - 1.29%

3.    கிணற்றுப் பாசனம் முதல் - 5 மாநிலங்கள்:

          1.    உத்தரப் பிரதேசம் -26.6%

          2.    மத்திய பிரதேசம் -14.6%

          3.    ராஜஸ்தான் - 13.1%

          4.    குஜராத் -7.8%

          5.    பஞ்சாப் - 7.1%

4.    ஏரி பாசனம் முதல்  -5 மாநிலங்கள்

          1.    தமிழ்நாடு -3.78%

          2.    ஆந்திரப் பிரதேசம்-3.40%

          3.    மத்திய பிரதேசம் -2.64%

          4.    தெலங்கானா -2.30%

          5.    கர்நாடகா -1.54%

5.    இந்தியாவில் சாகுபடியாகும் முக்கிய பயிர்களை பிரிவுகள்: 4.

          1.    உணவு பயிர்கள்

          2.    வாணிப பயிர்கள்

          3.    தோட்டப்பயிர்கள்

          4.    தோட்டக்கலை பயிர்கள்

6.    ஆற்று சமவெளியில் காணப்படும் புதிய வண்டல் மண் -காதர்.

7.    வண்டல் சமவெளியில் 30 மீ மேல் உள்ள உயர் பகுதியில் காணப்படும் பழைய வண்டல் மண்-பாங்கர்.

8.    இந்திய வேளாண் பருவகாலங்கள்.

          1.    காரிஃப் பருவம் -ஜூன் -செப்டம்பர்.

          2.    ராபி பருவம் -அக்டோபர் - மார்ச்

          3.    சையத் பருவம் - ஏப்ரல் - ஜூன்.

9.    சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைத்ததினால் உருவாகும் மண் -வண்டல் மண்.

10.   தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவான மண் - கரிசல் மண்.

11.   பழமையான படிகப் பாறைகளான கிரானைட், நைஸ் போன்ற பாறைகள் சிதைவு அடைவதால் உருவாகும் மண் -செம்மண்.

12.   வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண்சுவரல் காரணமாக உருவாகும் மண் -சரளை மண் .

13.   பனிமலை வெப்பநிலை வேறுபாடுகளால் பெளதீக சிதைவின் காரணமாக உருவாகும் மண்-காடு மற்றும் மலை மண்.

14.   வறண்காலநிலை, அதிவெப்பம் காரணமாஆவியாதல் அதிகமாக இருப்பதால் மேல் மண் வறண்டு காணப்படும் மண்-வறண்ட பாறை மண்.

15.   வடிகாலமைப்பு இல்லாமையல் நீர்ப்பிடிப்பு காரணமாக தீங்கு விளைவிக்கக்கூடிய உப்புக்கள் நுண்புழை காரணமாக மண்ணின் கீழ் அடுக்கில் இருந்து மேற்பரப்பிற்கு கடத்தப்படும் மண் -உப்பு மற்றும் கார மண்.

16.   அதிக மழை அளவு அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் காணப்படும் மண் -களிமண் மற்றும் சதுப்பு நிலம்.

17.   இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 2015 ஆம் ஆண்டு அறிக்கையின்படி எத்தனை மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது-147.

18.   நீர்பாசனம் வகைகள் மற்றும் பரப்பளவு.

          1.    குழாய் கிணறு பாசனம் - 46%.

          2.    கால்வாய் நீர்ப் பாசனம் -24%.

          3.    கிணற்று பாசனம்-16%.

          4.    ஏரிப் பாசனம் -3%.

          5.    பிறர் நீர் ஆதாரங்கள் -11%.

19.   இந்தியாவின் இரண்டாவது மற்றும் முக்கியமான நீர் பாசன ஆதாரம்- கால்வாய் நீர்ப்பாசனம்.

20.   இந்தியாவின் மிகப்பழமையான பாசன முறை - ஏரி பாசனம்.

21.   2015-ஆம் ஆண்டின் படி இந்தியாவில் எத்தனை மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் கால்வாய் பாசன வசதியை பெற்றுள்ளன -15.8.

22.   இந்தியாவில் மொத்த பாசன பரப்பளவில் எத்தனை சதவீதம் கிணற்றுப் பாசனத்தின் கீழ் உள்ளது -62%.

23.   நவீன நீர்ப்பாசன முறைகள் : சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு முறை பாசனம்,மையச்சுழல் நீர்ப்பாசனம்.

24.   குறைந்த அளவு நீரில் அதிக மக்சூல் பெறுவது மற்றும் தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் -பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா.

25.   நுண்நீர் திட்டத்தில் பாசனத் எத்தனை மாநிலங்கள் மட்டும் சுமார் 78 சதவீத நீர்ப்பாசன வசதியை பெற்றுள்ளது-5.

          1.    ஆந்திரப்பிரதேசம்,

          2.    கர்நாடகா ,

          3.    குஜராத்,

          4.    மகாராஷ்ட்ரா ,

          5.    தமிழ்நாடு.

26.   பல்நோக்கு திட்டம்:

                1.    தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் -தாமோதர் - மேற்கு வங்கம் , ஜார்க்கண்ட்.

                2.    பக்ரா நங்கல் திட்டம் -சட்லஜ்-பஞ்சாப், ஹரியானா ,ராஜஸ்தான்.

                3.    ஹிராகுட் திட்டம் -மகாநதி -ஒடிசா.

                4.    கோசி திட்டம்-கோசி -பீகார் மற்றும் நேபாளம்.

                5.    துங்கபத்ரா திட்டம் -துங்கபத்ரா-ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா.

                6.    தெகிரி அணை-பகிரிதி-உத்தரகாண்ட்.

                7.    சம்பல் பள்ளத்தாக்கு திட்டம் - சம்பல் -ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம்.

                8.    நாகர்ஜுனா சாகர் திட்டம்-கிருஷ்ணா-ஆந்திர பிரதேசம்.

                9.    சர்தார் சரோவர் திட்டம் -நர்மதை -மத்திய பிரதேசம். மகாராஷ்டிரா, ராஜஸ்தான்.

               10.   இந்திராகாந்தி கால்வாய் திட்டம் -சட்லஜ்-ராஜஸ்தான்,பஞ்சாப், ஹரியானா.

               11.   மேட்டூர் அணை -காவிரி -தமிழ்நாடு.

27.   உலகின் பெரிய புவியீர்ப்பு அணை -பக்ரா நங்கல் திட்டம்.

28.   உலகின் மிக நீளமான அணை-ஹிராகுட் திட்டம்.

29.   பீகாரின் துயரம் -கோசி.

30.   வேளாண்மையை நிர்ணயிக்கும் காரணிகள்:

          1.    இயற்கை காரணிகள் - நிலத்தோற்றம்,காலநிலை ,மண்.

          2.    அமைப்புசார் காரணிகள் - நிலத்தின் அளவு, நில வாரம் முறை.

          3.    உள்கட்டமைப்பு காரணிகள்- நீர்ப்பாசனம் ,மின்சாரம், போக்குவரத்து.

          4.    தொழில்நுட்ப காரணிகள் -வீரிய விதைகள், ரசாயன உரங்கள் , பூச்சிக்கொல்லிகள்.

31.   வெட்டுதல் மற்றும்  எரித்தல் வேளாண்மை என்றனழக்கப்படும் வேளாண்மை -இடப்பெயர்வு வேளாண்மை.

32.   மலைப்பிரதேசங்களில் பின்பற்றப்படும் வேளாண்மை முறை -படிக்கட்டு முறை வேளாண்மை.

33.   சிறிய நிலத்தில் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிக விளைச்சளை பெரும் வேளாண்மை -தீவிர வேளாண்மை.

34.   இந்தியாவின் பூர்வீகப் பயிர் -நெல்.

35.   உலக அளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை வகிக்கும் நாடு -இந்தியா.

36.   அதிக விளைச்சல் தரும் நெல் விதைகள் - CR தான் 205,A.R. தான் 306,CRR 451.

37.   நெல் உற்பத்தியில் முதல் மாநிலம் -மேற்கு வங்காளம்.

38.   நெல் பயிருக்கு அடுத்து இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் கோதுமை.

39.   கோதுமை உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலங்கள் -85%உற்பத்தி)

          1.    உத்தரப் பிரதேசம்.

          2.    பஞ்சாப்.

          3.    ஹரியானா.

          4.    ராஜஸ்தான்.

          5.    மத்திய பிரதேசம்.

40.   ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட பயிர் -சோளம் ,கம்பு.

41.   தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கிய பயிர்சோளம்.

42.   வாணிபப் பயிர்கள் :

          1.    கரும்பு

          2.    புகையிலை

          3.    பருத்தி

          4.    சணல்

          5.    எண்ணெய் வித்துக்கள்

43.   கரும்பு உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் -இந்தியா.

44.   சர்க்கரை உற்பத்தியில்  முதல் இடம் - கியூபா .

45.   சர்க்கரை உற்பத்தியில்  இரண்டாம் இடம் - பிரேசில் .

46.   சர்க்கரை உற்பத்தியில்  மூன்றாவது இடம் -இந்தியா.

47.   சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் -உத்தர பிரதேசம்.

48.   பருத்தி உற்பத்தியில் முதல் இடம் -சீனா.

49.   பருத்தி உற்பத்தியில் இரண்டாவது இடம் -இந்தியா.

50.   சணல் உற்பத்தியில் முதலிடம் உள்ள மாநிலம் -மேற்கு வங்காளம்.

51.   எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடம்  உள்ள மாநிலம் -குஜராத்.

52.   நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடம் -சீனா.

53.   நிலக்கடலை உற்பத்தியில் இரண்டாவது இடம்- இந்தியா.

54.   உலக காபி உற்பத்தியில் இந்தியா இடம் -7.

55.   இந்தியாவில் காபி உற்பத்தியில் முதலிடம்-கர்நாடகா. 71%.

56.   அயன மண்டல பயிர்- நெல்.

57.   வெப்பமண்டல இழைப்பயிர்- சணல்.

58.   அயன மண்டல மற்றும் உப அயன மண்டல காலநிலைபயிர்-தேயிலை.

59.   வெப்ப ஈரப்பத அயன மண்டல காலநிலைபயிர்-இரப்பர்.

60.   நறுமண பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதன்மை மாநிலம்-கேரளா.

61.   தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கால்நடை கணக்கெடுப்பு- கால்நடை வளர்ப்பு துறை .

62.   மாவட்ட அளவிலான கணக்கெடுப்பு-  மண்டல இணை இயக்குனர்.

63.   எந்த மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறதுசெம்மண்.

64.   ஆறுகளின் மூலம் உருவாகும் மண் -வண்டல் மண்.

65.   வாணிபப் பயிர் -பருத்தி.

66.   கரிசல் மண் என அழைக்கப்படுவது -பருத்தி மண்.

67.   இந்தியாவில் தங்க இலைப்பயிர் என அழைக்கப்படுவது-சணல்.

68.   இந்தியாவின் சர்க்கரை கிண்ணம்-உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார்.

69.   இந்தியாவில் உள்ள இடப்பெயர்வு வேளாண்மையின் பல்வேறு பயிர்கள்:

          1.    ஜூம் -அசாம்.

          2.    பொன்னம் -கேரளா.

          3.    பொடு - ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஓடிசா.

          4.    பீவார், மாசன், பென்டா, பீரா -மத்திய பிரதேசத்தில் பல்வேறு பகுதிகள்.

70.   இந்தியாவின் உயரமான அணை- டெகிரி அணை.

71.   உலகின் மிக நீளமான அணை எது - ஹிராகுட் திட்டம்.

72.   மேட்டூர் அணை எந்த ஆற்றில் உள்ளது - காவேரி.

73.   இந்தியாவின் மூன்றாவது முக்கிய உணவுப்பயிர்-சோளம்.

74.   உலகின் பெரிய புவி ஈர்ப்பு அணை எது -பக்ரா நங்கல் திட்டம்.

75.   இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்சைடுகளால் உருவானது -சரளை மண்.

76.   இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய தேயிலை வகைகள் - 2.

          1.    பூகி (BOHEA) - சீனாவின் பிறப்பிடம்.

          2.    அசாமிகா (ASSAMICA) - இந்தியாவின் பிறப்பிடம்.

77.   இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் காபி வகை.

          1.    அராபிகா - தரம் அதிகம்

          2.    ரொபஸ்டா - தரம் குறைந்த வகை

78.   1902 இரப்பர் தோட்டம் முதன் முதலில் எங்கு உருவாக்கப்பட்டது -கேரளா

79.   பழங்கள் மற்றும் காய் வகைகள் உற்பத்தியில் இந்தியா -2வது இடம்.

80.   ஆப்பிள் உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம்-இமாச்சலப் பிரதேசம்.

81.   உலக காய் வகைகள் உற்பத்தியில் இந்தியா மட்டும் எத்தனைசதவீதத்தை அளிக்கிறது -13%.

82.   ஏழை மக்களின் பசு என அழைக்கப்படுவது -வெள்ளாடு.

83.   இந்தியாவில் முதல் கால்நடை கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு-1919 .

84.   20-வது கால்நடை கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு-2017.

85.   கால்நடை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது - 5.

86.   2016-2017 இ்ன் படி நம் நாட்டின் மொத்த பால் உற்பத்தி - 163.7 மில்லியன் டன்கள்.

87.   பால் உற்பத்தி முதலிடம் மாநிலம் - உத்திரபிரதேசம்.

88.   இறைச்சி உற்பத்தியில் முதலிடம் மாநிலம் -உத்தரப் பிரதேசம்.

89.   உலக மீன் உற்பத்தியில் 3 சதவீதத்துடன் சீனாவிற்கு அடுத்தபடியாக உள்ள நாடு -இந்தியா.

90.   இந்திய கடற்கரையின் நீளம் -6100 கி.மீ.

91.   தீவுக் கூட்டங்களையும் சேர்த்து கடற்கரையின் நீளம்- 7517 கி.மீ.

92.   கடல்மீன் உற்பத்தியில் முதன்மையான மாநிலம் எது- கேரளா.

93.   உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மையாக உள்ள மாநிலம் எது - ஆந்திரா.

94.   இந்தியாவின் முக்கிய வேளாண்மை புரட்சி:

          1.    மஞ்சள் புரட்சி -எண்ணெய் வித்துக்கள், கடுகு, சூரியகாந்தி.

          2.    நீலப்புரட்சி -மீன்கள் உற்பத்தி.

          3.    பழுப்பு புரட்சி-தோல், கோக்கோ, மரபுசாரா உற்பத்தி.

          4.    தங்க நூலிழைப் புரட்சி -சணல் உற்பத்தி.

          5.    பொன் புரட்சி - பழங்கள், தேன் மற்றும் தோட்டக்கலைப்பயிர்.

          6.    சாம்பல் புரட்சி -உரங்கள்.

          7.    இளம் சிவப்பு புரட்சி -வெங்காயம், மருந்து பொருட்கள் இறால் உற்பத்தி.

          8.    பசுமைப் புரட்சி - அனைத்து வேளாண் உற்பத்தி.

          9.    வெள்ளி புரட்சி - முட்டை மற்றும் கோழிகள்.

         10.   வெள்ளி இழை புரட்சி - பருத்தி.

         11.   சிவப்பு புரட்சி -இறைச்சி உற்பத்தி, தக்காளி உற்பத்தி.

         12.   வட்ட புரட்சி - உருளைக்கிழாங்கு.

         13.   பசுமை புரட்சி -உணவு தானியங்கள்.

         14.   வெண்மை புரட்சி -பால் உற்பத்தி.

 https://www.a2ztnpsc.in/