PAGE NO : 237   7TH  STD 1st TERM    உற்பத்தி  TOTAL QUESTION : 30  

1.    நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும் மூலப்பொருள் அல்லாதவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயல்உற்பத்தி.

2.    உற்பத்தியின் வகைகள் : 3.

          1.    முதன்மை நிலை உற்பத்தி.

          2.    இரண்டாம் நிலை உற்பத்தி.

          3.    மூன்றாம் நிலை உற்பத்தி.

3.    முதன்மைநிலை உற்பத்தி - வேளாண்மை துறை.

          1.    சுரங்கத்தொழில்

          2.    மீன்பிடித்தல்

          3.    காடுகள்

          4.    வேளாண்மை

          5.    எண்ணெய் வளங்களை பிரித்தெடுத்தல்

4.    இரண்டாம்நிலை - தொழில் துறை:

          1.    பொறியியல், கட்டுமான துறை.

          2.    பருத்தி தொழிற்சாலை.

          3.    மாவிலிருந்து ரொட்டி தயாரித்தல்.

          4.    இரும்புத்தாதுவிலிருந்து பயன்படக்கூடிய பொருட்களைத் தயாரித்தல்.

5.    மூன்றாம் நிலை -  சேவைத் துறை.

          1.    பாதுகாப்புத் துறை

          2.    வங்கித் துறை

          3.    கல்வித் துறை

          4.    வணிகம், வங்கி காப்பீடு

          5.    போக்குவரத்து, செய்தி தொடர்பு

          6.    சட்டம் , நிர்வாகம்

          7.    கல்வி, உடல்நலப் பாதுகாப்பு

6.    நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பவை - மூன்றாம் நிலை.

7.    ஒரு பொருளின் உற்பத்திக்கு உதவுகின்ற காரணிகள்:

          1.    நிலம்

          2.    உழைப்பு

          3.    முதலிடு

8.    உற்பத்திக்கான காரணிகள்:

          1.    நிலம்

          2.    உழைப்பு

          3.    மூலதனம்

          4.    தொழில் முனைவோர்

9.    நிலத்தின் சிறப்பியல்புகள் :

          1.    நிலம் இயற்கையின் கொடை.

          2.    நிலத்தின் மதிப்பு நிலையானது.

          3.    நிலம் அழிவில்லாதது.

          4.    நிலம் ஒரு முதன்மைச் உற்பத்தி காரணி .

          5.    நிலம் இடம் பெயரக் கூடியதன்று.

          6.    நிலம் ஆற்றல் வாய்ந்தது.

          7.    நிலம் செழிப்பு தன்மையில் மாறுபடும்.

10.   உழைப்பு சிறப்பியல்புகள்:

          1.    உழைப்பை உழைப்பாளர் இடமிருந்து பிரிக்க இயலாது.

          2.    உழைப்பு இடம்பெயர கூடியது.

11.   வேலையினால் ஏற்படும் துன்பத்தை கருதாமல் , கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ பகுதியாகவோ அல்லது மனதால் பயன் கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு என கூறியவர்- ஆல்பிரட் மார்ஷல்.

12.   மூலதனத்தின் சிறப்பியல்புகள் :

          1.    மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்தி காரணி.

          2.    மூலதனம் அதிகம் இயங்கும் தன்மை உடையது.

          3.    இதன் அளிப்பு நெகிழுந்தன்மை உடையது.

          4.    மூலதனம் ஆக்கம் உடையது.

          5.    மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்.

13.   பொருளியலின் தந்தை - ஆடம் ஸ்மித்.

14.   ஆடம் ஸ்மித்தின் சிறந்த இரு படைப்பு நூல்கள் :

          1.    நன்னெறி கருத்து உணர்வு கொள்கை.

          2.    நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு (1776).

15.   வேலை பகுப்பு முறையை அறிமுகம் செய்தவர்- ஆடம்ஸ்மித்.

16.   பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதுமூலதனம்.

17.   இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகை செல்வங்களே மூலதனம் என்றவர் - ஆல்பிரட் மார்ஷல்.

18.   மூலதனத்தின் வடிவங்கள் :

          1.    பருப்பொருள் மூலதனம் - இயந்திரங்கள்.

          2.    பணம் மூலதனம் - வங்கி வைப்புகள்.

          3.    மனித மூலதனம்கல்வி.

19.   தொழில் முனைவோர் தொழில் அமைப்பாளர் எனவும் அழைக்கப்படுகிறார்.

20.   தற்காலத்தில் தொழில்முனைவோர்  எவ்வாறு அழைக்கப்படுகிறார்- சமுதாய மாற்றம் காணும் முகவர்.

21.   பயன்பாட்டின் வகைகள்:

          1.    வடிவம் பயன்பாடு

          2.    காலம் பயன்பாடு

          3.    இடம் பயன்பாடு

22.   முதன்மைக் காரணிகள் என்பது:

          1.    நிலம்

          2.    உழைப்பு

23.   பெறப்பட்ட காரணிகள்:

          1.    முதலீடு

          2.    அமைப்பு

24.   நிலையான அளிப்பினை உடையது நிலம்.

25.   பொருளாதாரத்தில் இன்றியமையாத செயல்கள்:

          1.    உற்பத்தியும்

          2.    நுகர்வும்

26.   மனித மூலதனம் - கல்வி, உடல் நலம்.

27.   தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்முகவர்.

28.   புதுமை புனைபவர் - தொழில் முனைவோர்.

29.   நாடுகளின் செல்வம் - ஆடம் ஸ்மித்.

30.   தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது- கலப்பு பொருளாதாரம். 

 

https://www.a2ztnpsc.in/