9TH- STD - 1. தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் -
1.
தமிழ்ப் பண்பாடு தோன்றிய நூற்றாண்டு- பொ. ஆ.மு. - 3.
2.
முதல் நகரமயமாதல் எங்கு உருவானது - தமிழ்நாடு.
3.
தமிழ் மொழி முதன்முதலில் எழுதப்பட்ட வரிவடிவம் - தமிழ் பிராமி.
4.
சங்ககாலத்தில் தோன்றிய செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்: தொல்காப்பியம் ,பதிணெண் மேல்கணக்கு நூல்கள் , பதிணெண்கீழ்க்கணக்கு நூல்கள் , ஐம்பெரும்காப்பியங்கள்.
5.
தொல்காப்பியத்தின் ஆசிரியர் - தொல்காப்பியர் .
6.
பழமையான தமிழ் இலக்கண நூல் – தொல்காப்பியம்.
7.
தொல்காப்பியத்தின் முதல் 2 பகுதிகள்- தமிழ் மொழியின் இலக்கணத்தை கூறுகிறது.
8.
தொல்காப்பியத்தின் 3 வது பகுதி - மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணம் கூறுகிறது.
9. பதிணெண் மேல்கணக்கு நூல்கள்: எட்டுத்தொகை , பத்துப்பட்டு.
10.
தமிழ் இலக்கியங்களில் காலத்தால் பிற்பட்டவை-பதிணெண் கீழ்கணக்கு நூல்கள்.
11.
தமிழ் இலக்கியங்களில் காலத்தால் முற்பட்டவை - பதிணெண் மேல்கணக்கு நூல்கள்.
12. எட்டுத்தொகை நூல்கள்:
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. பரிபாடல்
4. பதிற்றுப்பத்து
5. ஐங்குறுநூறு
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு
13. பத்துப்பாட்டு நூல்களாவன:
1.
திருமுருகாற்றுப்படை
2.
பொருநராற்றுப்படை
3.
பெரும்பாணாற்றுப்படை
4.
சிறுபாணாற்றுப்படை
5.
முல்லைப் பாட்டு
6.
நெடுநல்வாடை
7.
மதுரைக் காஞ்சி
8.
குறிஞ்சிப் பாட்டு
9.
பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்
14.
வாழ்வியல் அறநெறிகளை எடுத்து கூறும் பதிணெண் கீழ்கணக்கு நூல்களுள் முதன்மையாவை - திருக்குறள்.
15. ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம் ,மணிமேகலை, சீவகசிந்தாமணி,வளையாபதி , குண்டலகேசி.
16.
கல்வெட்டுகளைக் குறித்து படிப்பது - கல்வெட்டியல்.
17.
மொழியின் வரிவடிவம் தோன்றிய காலம்- வரலாற்றின் தொடக்ககாலம்.
18.
குகைகளைப் பெரும்பாலும் தமது வாழிடங்களாகக் கொண்டிருந்தவர்கள் - சமணத் துறவிகள்.
19.
தமிழ்நாட்டில் தமிழ்பிராமி கல்வெட்டுகள் காணப்படும் குகை வாழிடங்கள்: மாங்குளம் , முத்துப்பட்டி , புகலூர் , அரச்சலூர், கொங்கர் புளியங்குளம், ஜம்பை , மதுரை.
20.
போர்களத்தில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக நடப்பட்டது- நடுகற்கள்.
21.
முல்லை நிலவாழ் மக்களின் சிறப்பான செல்வ வளமாக இருந்தது -கால்நடைகள்.
22.
நடுகற்கள் நடப்படுவதற்கான வழிமுறைகள் கூறும் நூல் – தொல்காப்பியம்.
23.
தமிழ் - பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட சங்ககால நடுகற்கள் காணப்படும் இடங்கள்:
1. தேனி மாவட்டம் - புலிமான் கோம்பை, தாதப்பட்டி .
2. புதுக்கோட்டை மாவட்டம் - பொற்பனைக்கோட்டை.
24.
பல்லவர் காலத்தில் நடப்பட்ட நடுகற்கள் பெரிதும் காணப்படுகின்ற நிலம் -முல்லை.
25.
கல்வெட்டுகள் பற்றிய படிப்பு- கல்வெட்டியல்.
26.
மொழியின் வரிவடிவம் தோன்றியகாலம் வரலாற்றின் – தொடக்ககாலம்.
27.
தமிழகத்தில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட மொழியின் வரிவடிவம்- தமிழ் – பிராமி.
28.
கற்பாறை, குகை வாழிடங்கள், சுடுமண் கலங்கள். நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள் காணப்படுகின்ற எழுத்துகள் - தமிழ் – பிராமி.
29.
குகைகளைப் பெரும்பாலும் தமது வாழிடங்களாக கொண்டிருந்தவர்கள் –சமணத்துறவிகள்.
30. குகைகளில் வாழ்ந்த துறவிகளுக்கு, இயற்கையாக அமைந்த குகைகளை வாழிடங்களாக மாற்ற உதயவர்கள் - அரசர்களும் வணிகர்களும்.
31.
தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட ஆண்டு -2006.
32.
கூடல்ஊர் ஆகோள் பெடு தியன் அந்தவன்கல் என்ற வரிகளில் இடம்பெற்ற பொருள் - கூடலூரில் ஆநிரைகவர்ந்த போது பூசலில் கொல்லப்பட்ட தீயன் அந்தவனின் கல்.
33.
புலிமான்கோம்பை உள்ளது - தேனி மாவட்டத்தின் வைகை ஆற்றுப்பள்ளத்தாக்கில்.
34.
தமிழ் பிராமி சுடுமண் பொறிப்புகள்:
1. தமிழ்நாடு - அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி.
2. எகிப்து - பெரனிகே, குசேர்அல் காதிம்.
3. ஓமன் -கோர் ரோரி.
35.
பண்டைத்தமிழர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்த பகுதி- மேற்கு ஆசியா ,ரோமானிய பேரரசு.
36.
சுடுமண்கலங்களில் காணப்படும் பெயர்கள் உள்ள மொழி - தமிழ், பிராகிருதம்.
37.
மெளரியர்காலத்தில் வட இந்திய மக்களால் பேசப்பட்ட மொழிகள் – பிராகிருதம்.
38.
பண்டைய மக்கள் பயன்படுத்திய தொல்பொருள்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் ஆராய்வது- தொல்லியல்.
39.
தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ள இடங்கள்:
1. தமிழ்நாடு அரிக்கமேடு ,அழகன்குளம், கீழடி கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம்
2. கேரளா - பட்டணம்.
40.
சரக்குகிடங்கு, தொட்டிகள், உறைகிணறுகள், தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரங்கள் இருந்ததைக் கண்டறிந்து வெளிப்படுத்திய தொல்லியல் அறிஞர்கள்:
1. சர் இராபர்ட் எரிக் மாட்டிமர் வீலர் – பிரிட்டன்.
2. ஜே.எம்.கசால் – பிரான்ஸ்.
3. ஏ கோஷ்,கிருஷ்ண தேவா – இந்தியா.
41.
பழங்கால மக்கள் வாழ்ந்த இடங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிர்வாகம் செய்யும் அமைப்பு – தொல்லியல்துறை.
42.
இந்தியக்கருவூலம் மற்றும் புதையல் சட்டம் – 1878.
43.
பழங்கால பொருட்கள் மற்றும் கலைக்கருவூலங்கள் சட்டம் – 1972.
44.
பழமைவாய்ந்த நினைவுச் சின்னங்கள், தொல்லியல் ஆய்வுக்களங்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் சட்டம் -1958.
45.
சங்ககால நாணயங்களுக்கான சான்றுகள்:
1. சேர,சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள்.
2. முத்திரை பொறாக்கப்பட்ட நாணயங்கள்.
3. ரோமானிய நாணயங்கள்.
46.
முத்திரை பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ள ஊர்கள்- கொடுமணல் , போடிநாயக்கனூர்.
47.
ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவில் செறிந்து காணப்படுகின்ற இடம்- கோயம்புத்தூர்.
48.
ரோமானிய நாணயங்கள் கிடைக்கப்பெற்ற இடங்கள் - அழகன்குளம் , கரூர் , மதுரை.
49.
கட்டி வடிவிலான தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகங்கள் - புல்லியன் .
50.
கெளடில்யர் என்ற சாணக்கியர் இயற்றிய நூல் - அர்த்தசாஸ்திரம் .
51.
இலங்கையின் புத்த சமய வரலாற்றை கூறும் நூல் - மகா வம்சம் - பாலி மொழி.
52.
எரித்ரியன் கடலின் பெரிப்ளஸ் என்பது - பண்டைய கிரேக்கநூல்.
53.
பெரிப்ளஸ் பொருள் - கடல் வழிகாட்டி.
54.
செங்கடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பே - எரித்ரியன் கடல்.
55.
சேர,பாண்டிய அரசர்கள்,முசிறி,தொண்டி,குமரி , கொற்கை ஆகிய சங்ககாலத்துறைமுகப் பட்டிணங்கள் பற்றி குறிப்புகள் உள்ளது - எரித்ரியன் கடலின் பெரிப்ளஸ்.
56.
இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியவர்- பிளினி.
57.
இந்தியாவுடன் நடைபெற்ற-மிளகு வணிகம் குறித்துக் குறிப்பிட்டுள்ள நூல்-இயற்கை வரலாறு.
58.
கேரளா கடற்கரையில் இருந்த பக்காரே துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாண்டிய மன்னர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளவர் -பிளினி.
59.
ரோமானிய பேரரசின் புவியியல் அமைப்பு விவரங்கள், நிலப்படம் ஆகியவற்றைக் கொண்ட ஆவணம் - புவியியல் .
60.
புவியியல் என்ற நூலை எழுதியவர் – தாலமி.
61.
காவிரிபூம்பட்டனம்,கொற்கை கன்னியாகுமரி, முசிறி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது- புவியியல் .
62.
ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த நிலப்படம்- பியூட்டிக்கேரியன் அட்டவனை.
63.
2-ம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க ஆவணம்- வியன்னா பாப்பிரஸ். முசிறியில் நடைபெற்ற வணிகம் குறிப்பு உள்ளது.
64.
வியன்னா பாப்பிரஸ் தற்போது ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் ஆஸ்திரிய தேசிய நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாப்பிரஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.
65.
அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரி வடிவம்- அசோகன் பிராமி.
66.
பொ.ஆ.மு.3ம் நூற்றாண்டிற்கும் பொ.ஆ.3ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம்-சங்க காலம்.
67.
ஐந்திணை:
1. மலையும் மலைசார்ந்த பகுதிகளும் - குறிஞ்சி
2. காடும் காடு சார்ந்த பகுதிகளும் - முல்லை
3. வயலும் வயல் சார்ந்த பகுதிகளும்-
மருதம்
4. கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் - நெய்தல்
5. வறண்ட நிலப்பகுதி - பாலை
68.
சங்ககால ஆட்சியாளர்கள் - சேரர்கள் , சோழர்கள் , பாண்டியர்கள் , வேளிர்கள்.
69.
அசோகரின் கல் வெட்டுகளில் 'கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளவர்கள் – சேரர்கள்.
70.
கேரளத்தையும், தமிழ் நாட்டின் மேற்குப்பகுதியையும் ஆட்சி புரிந்தவர்கள்- சேரர்கள்
71.
சேரர் தலைநகரம் –-வஞ்சி.
72.
சேரர் துறைமுகப்பட்டிணம் - முசிறி, தொண்டி.
73.
தமிழ்நாட்டில் உள்ள கரூர்தான் வஞ்சி என்றும் கேரளத்தில் உள்ள திருவஞ்சைக்களம் தான் வஞ்சி என்றும் கூறப்பட்டு வருகிறது.
74.
சேரர்கள் மாலை- பனம்பூ.
75.
சேர மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் கிடைத்துள்ள இடம் – கரூர்.
76.
சேரர்கள் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கியம் – பதிற்றுப்பத்து.
77.
சிலப்பதிகாரத்தின் பாட்டுடைத்தலைவி – கண்ணகி.
78.
சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளின் தம்பி - சேரன் செங்குட்டுவன்
79.
சோழர்கள் தலைநகரம் - உறையூர்.
80.
சோழர்கள் துறைமுகப்பட்டிணம் - பூம்புகார் . காவிரிப்பூம்பட்டினம்.
81.
சோழர்கள் தலைசிறந்த மன்னர்- கரிகால சோழன்.
82.
சோழர்கள் இலச்சினை – புலி.
83.
பிற்காலச் சோழர்களின் ஆட்சி- பொ.ஆ.பி 10-ம் - 12-ம் நூற்றாண்டு.
84.
பட்டனப்பாலை என்ற பாடலை இயற்றிய சங்க காலப் புலவர்- கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
85.
சோழர்கள் சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். முகப்பில் புலியின் உருவமும் , மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச்சின்னங்களும் உள்ளன.
86.
பாண்டியர்கள் குறித்தும் அசோகரது கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளன.
87.
பாண்டியர்கள் தலைநகரம் மதுரை, இலச்சினை – மீன்.
88.
தமிழ்ச்சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள்- பாண்டியர்கள்.
89.
மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் குறிப்படுவது- பாண்டிய நெடுஞ்செழியன்.
90. வேளிர்களில் சிறந்தவர்களாகக் கருதப்படும் கடையேழு வள்ளல்கள்- பாரி, ஓரி , காரி , நள்ளி, பேகன், ஆய், அதியமான்.
91.
வெண்ணி என்ற ஊரைச் சார்ந்த வெண்ணிக்குயத்தியர் - பெண்பாற் புலவர்.
92.
இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நெல் வகைகள் - செந்நெல் ,வெண்ணெல் ,ஐவனநெல்.
93.
அகழாய்வுகளில் தாழிகளுடன் நெல் கிடைத்துள்ள இடம்- ஆதிச்சநல்லூர் , பொருந்தல்.
94.
வனப்பகுதிகளில் இடம்விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை – புனம்.
95.
அகழ்வாய்வில் இரும்பு உருக்கு உலைகள் இருந்ததற்கான தடயங்கள் வெளிப்பட்டுள்ள இடம் - கொடுமணல் , குட்டூர்.
96. பொன்னை உருக்கும் உலைகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் - கேரள பட்டணம்.
97.
கண்ணாடி செய்யும் தொழிலககங்கள் இருந்த இடங்கள் - அரிக்கமேடு , குடிக்காடு.
98.
சங்க காலப் பெண்கள் சங்குகளால் ஆன வளையல்கள் அணிந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் – கீழடி.
99.
நூல்நூற்கும் கதிர்களும், துண்டுத் துணிகளும் கிடைத்துள்ள இடம் - கொடுமணல்.
100. தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்டது குறித்த தகவல் உள்ள நூல்- பெரிப்ளஸ்.
101. கடற்பயணம் மேற்கொள்ள உதவியவை பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளவை - கலம், பரி, ஓடம், தோணி, தெப்பம், நாவாய் .
102. அரிசியைக் கொடுத்து மீனை பெற்றனர்- சங்ககாலத்தில் பண்டமாற்றும் முறை இருந்து.
103. உப்புக்கு - அதே அளவு அரிசி பரிமாறிக் கொள்ளப்பட்டது.
104. தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் - யானை தந்தம், மிளகு , நறுமணப் பொருட்கள், நவமணிகள்.
105. இறக்குமதி செய்யப்பட்டது - தங்கம், வெள்ளி, செம்பு.
106. ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக் கடலான அரபிக்கடல் கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
107. கிரேக்க ,ரோமானிய, மேற்கு ஆசிய மக்கள் யவனர் என்று அழைக்கப்பட்டனர்.
108. செங்கடல் கடற்கரையில் பெரனிகே துறைமுகத்திற்கு வடபகுதியில் உள்ள இன்னொரு துறைமுகம் - குசேர்அல்காதிம் .
109. தமிழ் இலக்கியங்கள் சுவர்ணபூமி என்று குறிப்பிடப்படுவது - தென்கிழக்கு ஆசியா.
110. கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் பட்டணம் அமைந்துள்ளது.
111. கொடுமணல் - ஈரோடுக்கு அருகில் உள்ளது.
112. பதிற்றுபத்தில் குறிப்பிடப்படும் கொடுமணல் தான் இவ்வூர் எனக் கருதப்படுகிறது.
113. பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளும், இரும்பு மணிகற்களும்,சங்குவேலைப்பாடு குறித்த சான்றுகளும் கொடுமணல் கிடைத்துள்ளன
114. தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட 300க்கும் மேற்பட்ட மட்கலப் பொறிப்புகள் கொடுமணல் கிடைத்துள்ளன.
115. கொடுமணலில் கிடைத்துள்ள பொருட்கள்:
1. பெருங்கற்கால கல்லறை,
2. குதிரைச்சேணத்தில் பயன்படும் இரும்பு வளையங்கள்,
3. செம்மணிக்கல்லால் செய்யப்பட்ட மணிகள்,
4. தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட குடுவை,
5. மனித எலும்புக்கூடு.
116. உள்நாட்டு வணிக மையங்களாகத திகழ்ந்த நகரங்கள்- காஞ்சிபுரம்,உறையூர், கரூர், மதுரை, கொடுமணல்.
117. திட்டமிட்ட வடிவமைப்பும், செங்கல் கட்டுமானங்களும் கொண்ட மக்கள் வசிப்பிடமே- நகரம் .
118. சங்க காலத்தில் இருந்த வழிபாட்டு முறைகள் - ஆவி வழிபாடு, மூதாதையர் வழிபாடு, வீரர்கள் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு.
119.
தொல்காப்பியம்:
1. குறிஞ்சி - முருகன்
2. முல்லை - திருமால்
3. மருதம் - இந்திரன்
4. நெய்தல் -வருணன்
5. பாலை - கொற்றவை
120. சமய சடங்குகளின் போது நிகழ்த்தப்படும் ஆட்டங்களில் ஒருவகை- வெறியாட்டம் .
121. ஏறத்தாழ பொ.ஆ.மு.1300 முதல் பொ.ஆ.மு.300 வரை - இரும்புக்காலம்/பெருங்கற்காலம்.
122. ஏறத்தாழ பொ.ஆ.மு.300 முதல் பொ.ஆ.300 வரை- பண்டைய வரலாற்றுக்காலம் / சங்க காலம்.
123. பொ.ஆ.முதல் நூற்றாண்டு - எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ்.
124. பொ.ஆ. முதல் நூற்றாண்டு - பிளினியின் இயற்கை வரலாறு .
125. பொ.ஆ.இரண்டாம் நூற்றாண்டு - தாலமியின் புவியியல்.
126. பொ.ஆ.இரண்டாம் நூற்றாண்டு - வியன்னா பாப்பிரஸ்.
127. சங்கம் மருவிய காலம் - பொ.ஆ.300 முதல் பொ.ஆ.500 வரை
128. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை - தமிழ்-பிராமி.
129. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக்குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் – மகாவம்சம்.
130. காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல்,நீர்ப்பாசன வசதி களை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் – கரிகாலன்.
131. சேரர்களைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு – புகளூர்.
132. காயல் சிறந்த நகரம் என்று விவரித்த வெனீஸ் பயணி – மார்கோபோலோ.
133. பொருத்துக:
1. கல்வெட்டியல் - கல்வெட்டுக் குறிப்புகளை ஆராய்வது
2. காலவரிசைக் குறிப்புகள்- முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு
3. மேய்ச்சல் வாழ்க்கை- கால் நடைகளை வளர்த்துப் பிழைக்கும் நாடோடி மக்கள்
4. புடைப்பு மணிகள் - விலையுயர்ந்த கல்லில் செய்யப்பட்ட ஆபரணங்கள்
5. அரிக்கமேடு - சங்க காலத் துறைமுகம்.
0 Comments
THANK FOR VISIT