புறப்பொருள் திணைகள்

1.    புறப்பொருள் திணைகள்

          1.    வெட்சித்திணை

          2.    கரந்தைத்திணை

          3.    வஞ்சித்திணை

          4.    காஞ்சித்திணை

          5.    நொச்சித்திணை

          6.    உழிஞைத்திணை

          7.    தும்பைத்திணை

          8.    வாகைத்திணை

          9.    பாடாண்திணை

         10.   பொதுவியல்திணை

         11.   கைக்கிளை

         12.   பெருந்திணை

புறப்பொருள் திணைகள்

 

1.    வெட்சித்திணை

மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளைச் (மாடுகளை) சொத்தாகக் கருதினர். ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாக இருந்தது. ஆநிரைகளைக் கவர்ந்துவர வெட்சிப் பூவினைச் சூடிக்கொண்டு செல்வர். எனவே, ஆநிரை கவர்தல் வெட்சித் திணை எனப்பட்டது.

2.    கரந்தைத்திணை

கரந்தைத் திணை. கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மக்கள் மீட்கச்செல்வர். அப்போது கரந்தைப் பூவைச் சூடிக்கொள்வர். அதனால் கரந்தைத் திணை என்று பெயர் பெற்றது.

3.    வஞ்சித்திணை

காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை.

4.    காஞ்சித்திணை

காஞ்சித் திணை. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, காஞ்சிப் பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை.

5.    நொச்சித்திணை

நொச்சித்திணை. மண்ணைக் காக்கக் கோட்டைகள் கட்டப்பட்டன. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூடிப் போரிடுவது நொச்சித்திணை

6.    உழிஞைத்திணை

உழிஞைத் திணை தம்பி. மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை.

7.    தும்பைத்திணை

தும்பைத் திணை. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை. போரிடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப் பூ மாலையையே சூடியிருப்பார்கள். போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.

8.    வாகைத்திணை

வாகைத்திணை. போரிலே வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை. வாகை என்றாலே வெற்றிதானே!

9.    பாடாண்திணை

பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, பாடாண்திணை (பாடு+ஆண்+திணை = பாடாண்திணை).

10.   பொதுவியல்திணை

வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது, பொதுவியல் திணை.

11.   கைக்கிளை

கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்.

12.   பெருந்திணை

இது பொருந்தாக் காமத்தைக் குறிக்கிறது.

 

 

https://www.a2ztnpsc.in/