7TH- STD - வரி மற்றும் அதன் முக்கியத்துவம் -

1.    மன்னன் தன் குடிமக்களிடம் வரி வசூலித்து, அவர்களின் நலத்திற்காகவே மீண்டும் செலவு செய்கிறான் என்று கூறியவர்- காளிதாஸ்.

2.    வரிகள் என்பவை ஒருவர் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டாய பங்களிப்பாகும் என்று கூறியவர்சேலிக்மனின்.

3.    ஒருவர் தாம் ஈட்டும் வருமானம், வருமான வரம்பிற்கு உட்பட்டதாயின் செலுத்தவேண்டிய வரி - வருமான வரி.

4.    ஆடம் ஸ்மித்தின் வரிவிதிப்பு கோட்பாடுகள் :

          1.    சமத்துவ விதி

          2.    உறுதிப்பாட்டு விதி

          3.    வசதி விதி

          4.    சிக்கன விதி

5.    மக்கள் தத்தமது வசதிக்கேற்ற வகையில் செலுத்துவதற்காக அரசு வரி விதிக்கும் முறைகளுள் ஒன்று - சமத்துவ விதி.

6.    மக்கள் மீது சுமத்தப்படும் வரியானது, எளிமையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பதை விளக்கும் விதி - சமத்துவ விதி.

7.    வசூலிக்கப்படும் வரியின் மூலம் வரி செலுத்துவோருக்கு ஓர் உறுதிப்பாட்டு தன்மையை உருவாக்கும் விதி - உறுதிப்பாட்டு விதி.

8.    எந்த விதியின் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து வீண் செலவுகளும் தவிர்க்கப்படுகிறது- உறுதிப்பாட்டு விதி.

9.    வரி செலுத்துவோருக்கு அதிகப்பட்ச வசதிகளை வழங்கும் வகையில் வரி விதிக்கப்படுவது - வசதி விதி.

10.   வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்பட வேண்டும் என்று கூறும் விதி - சிக்கன விதி.

11.   வரிவிதிப்பின் வகைகள் : 3 .

          1.    விகிதாச்சார வரி

          2.    வளர் வீத வரி

          3.    தேய்வு வீத வரி

12.   வருமான அளவை பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது - விகிதாச்சார வரி.

13.   ஒருவரின் வருமானம் அதிகரிக்கும் போது அதற்கேற்ப வரி விகிதமும் அதிகரிப்பது -வளர் வீத வரி.

14.   அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி - தேய்வு வீத வரி.

15.   வரியின் வகைகள் : 2.

          1.    நேர்முக வரி

          2.    மறைமுக வரி

16.   அரசுக்கு நேரடியாக செலுத்தும் வரி - நேர்முக வரி.

17.   நேர்முக வரிக்கு .கா:

          1.    சொத்து வரி

          2.    வருமான வரி

          3.    நிறுவன வரி

          4.    உறுதிப்பத்திரங்கள் மீதான வரி

18.   மத்திய வருமான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு- 1963.

19.   எந்த சட்டத்தின் மூலம் நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம் (CBDT)அமைக்கப்பட்டது - மத்திய வருமான சட்டம் (1963).

20.   நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவை ஈட்டும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி - நிறுவன வரி.

21.   ஒருவர் வைத்துள்ள சொத்துக்களின் மதிப்புக்கு ஏற்ப விதிக்கப்படும் வரி - சொத்து வரி.

22.   ஒருவர் வெகுமதியாக அல்லது அன்பளிப்பாக பெறும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி - அன்பளிப்பு வரி.

23.   எந்த வரி செலுத்துவதிலிருந்து ஒருவருக்கு விலக்கு அளிக்கப்படுவதிலை - சொத்து வரி.

24.   ஒருவரின் வரிச்சுமை, மற்றொருவர் மீது சுமத்தப்படுவதை குறிக்கும் வரி - மறைமுக வரி.

25.   மறைமுக வரிகளுக்கு .கா :

          1.    சேவை வரி

          2.    விற்பனை வரி அல்லது (VAT)

          3.    கலால் வரி (ஆயத்தீர்வை)

          4.    பொழுதுபோக்கு வரி

26.   சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படும் வரி - சேவை வரி.

27.   விற்பனை செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி - விற்பனை வரி.

28.   மொத்த விற்பனையாளர்களிடமிருந்தும், சில்லரை விற்பனையாளர்களிடமிருந்தும் பெருட்களை வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய வரி - கலால் வரி (ஆயத்தீர்வை).

29.   மாநில அரசால், பொழுதுபோக்கிற்காக ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் வரி - பொழுதுபோக்கு வரி.

30.   பொருட்களின் விற்பனை, உற்பத்தி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படும் வரி - சரக்கு மற்றும் சேவை வரி(GST).

31.   அர்த்தசாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் (வரிவிதிப்பு பற்றி கூறுகிறது)-

கௌடில்யர் () சாணக்கியர்.

32.   மதிப்பு கூட்டு வரியை (VAT)முதன் முதலில் அறிமுகம் செய்த மாநிலம்ஹரியானா.

33.   ஹரியானா மாநிலம் மதிப்புக் கூட்டு வரியை(VAT) அறிமுகப்படுத்திய ஆண்டு- 2003.

34.   24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு2005.

35.   இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி GSTநடைமுறைப்படுத்தப்பட்ட நாள்2017- ஜூலை 1.

36.   GST வரிவிதிப்பு 5 3கைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை:

          1.    0%

          2.    5%

          3.    12%

          4.    18%

          5.    28%

37.   சரக்கு மற்றும் சேவை வரியில் (GST)இருந்து விலக்கு அளிக்கப்பட்டவை :

          1.    காய்கறிகள்

          2.    உணவு தானியங்கள்

38.   அரசால் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை நாம் பயன்படுத்துவதால் விதிக்கப்படும் வரிசுங்கம் மற்றும் சாலை வரி.

39.   தூய்மை பாரத வரி நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் - 2015, நவம்பர் 15.

40.   தூய்மை பாரத வரியின் வரி விகிதம் எவ்வளவு - 0.5%

41.   தற்போது - 14%க்கும் மேற்பட்ட சேவை வரி நடைமுறையில் உள்ளது.

42.   நிதி நிர்வாகத்திற்கு வருவாயை உயர்த்துவதே - வரி விதிப்பின் நோக்கமாகும்.

43.   ஓர் அரசின் திறனுக்கேற்ப வரிகளை உயர்த்துவது - நிதித்திறன் என அழைக்கப்படுகிறது.

44.   வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி - தேய்வுவீத வரி.

45.   மறைமுக வரி :

          1.    சேவை வரி

          2.    மதிப்பு கூட்டப்பட்ட வரி

          3.    சுங்கவரி

46.   பொருத்துக:

                1.    வரி விதிப்பு கொள்க - ஆடம் ஸ்மித்

                2.    சொத்து வரி - நேர்முக வரி

                3.    சுங்கவரி -  மறைமுக வரி

                4.    01.07. 2017 - சரக்கு மற்றும் சேவை வரி

                5.    நேர்முக வரி - குறைந்த நிகழ்ச்சி உடையது

                6.    மறைமுக வரி - அதிக நிகழ்ச்சி உடையது.

 

https://www.a2ztnpsc.in/