10TH- STD - தமிழ்நாடு - மானுடப் புவியியல் -
1.
மனித சமுதாயம் வளர்ச்சி பெற்ற வழிமுறைகள் மற்றும், இயற்கை சூழலுடனான செயல்பாடுகள் குறித்துக் கற்றறிதல்- மானுடப் புவியியல்.
2.
அக்ரிகல்சர் என்ற சொல் இலத்தீன் வார்த்தைகளான - அகர் மற்றும் கல்சரா -என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள்- நிலம் மற்றும் வளர்த்தல்.
3.
தமிழ்நாட்டின் முக்கியமான தொழில் – வேளாண்மை.
4.
இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து எத்தனை சதவீதம் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண் துறையைச் சார்ந்துள்ளனர் - 65%.
5.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு - 21%.
6. வேளாண்மை வளர்ச்சியை தீர்மானிக்கும் புவியியல் காரணிகள்:
1. நிலத்தோற்றம்
2. காலநிலை
3. மண்
4. நீர்ப்பாசனம்
7.
தமிழ்நாட்டின் முக்கிய வணிக பயிர்கள் - கரும்பு, பருத்தி, சூரியகாந்தி தென்னை, முந்திரி, மிளகாய், எள், நிலக்கடலை, தேயிலை, கபி ஏலக்காய் இரப்பர்.
8.
தமிழ்நாடு பூமத்தியரேகைக்கு அருகிலும், வெப்ப மண்டலத்திலும் அமைந்துள்ளதால் எந்த காலநிலையைப் பெறுகிறது - வெப்ப மண்டலக் காலநிலை.
9.
தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது- வடகிழக்கு பருவக்காற்று.
10.
பயிர்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிக்குத்தேவையான கனிமசத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிப்பது - மண்.
11.
தமிழ்நாட்டில் சில பகுதிகள் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது- தீவிர தன்னிறைவு வேளாண்மை .
12.
தோட்ட வேளாண்மை - மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகள்
13.
கலப்பு வேளாண்மை- காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகைகள்
14.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் (TANU) கீழ் செயல்பட்டுவரும் நிறுவனம் - தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI).
15.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) தொடங்கப்பட்ட ஆண்டு - 1985- ஏப்ரல்.
16.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) உள்ள இடம் - தஞ்சாவூர் -ஆடுதுறை.
17.
தமிழ்நாட்டின் முக்கிய உணவுப் பயிர் – நெல்.
18.
தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்கள்:
1. சொர்ணவாரி - சித்திரைப்பட்டம்- (ஏப்ரல் - மே) - (ஆகஸ்ட் - செப்டம்பர்)-
பருத்தி , திணை வகைகள்
2. சம்பா - ஆடி பட்டம்- (ஜூலை - ஆகஸ்ட்) - (ஜனவரி - பிப்ரவரி)
3. நவரை- (நவம்பர் - டிசம்பர்) -(பிப்ரவரி- மார்ச்) பழங்கள்,காய்கறிகள், நெல் , கரும்பு.வெள்ளரி, தர்பூசணி.
19.
தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கிய நெல் வகைகள் - பொன்னி ,கிச்சடி சம்பா.
20.
நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் எத்தனை யாவது இடம் – 3.
21.
தமிழ்நாட்டில் அதிக நெல் உற்பத்தி செய்யும் பகுதி - காவிரி டெல்டா பகுதி.
22.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் – தஞ்சாவூர்.
23.
தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பகுதியினரின் முக்கியமான உணவு - திணை வகைகள்.
24.
தமிழ்நாட்டின் முக்கிய தினை பயிர்கள் - சோளம், கேழ்வரகு ,கம்பு.
25.
இந்தியா எந்த ஆண்டை தினைப் பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரித்தது -2018.
26.
உலக உணவு மற்றும் வேளாண்மை கழகம் (FAO) எந்த ஆண்டை சர்வதேச தினைப்பயிர்கள் ஆண்டாக அனுசரிக்க தீர்மானித்துள்ளது - 2023.
27.
புரத சக்தியின் முக்கிய ஆதாரம் - பருப்பு வகைகள்.
28.
தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பருப்பு வகைகள்- கொண்டைக் கடலை, உளுந்து, பச்சைப்பயிறு , துவரம்பருப்பு, தட்டை பயிறு ,கொள்ளு.
29.
கொண்டைக்கடலை உற்பத்தியில் மாநிலத்தில் முதல் இடம் உள்ள மாவட்டம் – கோயம்புத்தூர்.
30.
பச்சை பயிறு ,உளுந்து அதிகமாக உற்பத்தியாகும் மாவட்டங்கள்- திருவாரூர் நாகப்பட்டினம் ,தூத்துக்குடி.
31.
கொள்ளு பயிர் கூடுதலாக பயிரிடப்படும் மாவட்டங்கள்- தர்மபுரி,கிருஷ்ணகிரி.
32.
இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் - இயற்கை கரிம வேளாண்மை திட்டம்.
33.
தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துக்கள் - நிலக்கடலை, எள், ஆமணக்கு, தென்னை, சூரிய காந்தி ,கடுகு.
34.
தமிழ்நாட்டின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர் - நிலக்கடலை.
35.
தமிழ்நாட்டின் முக்கியமான வாணிபப் பயிர் – கரும்பு. ஓராண்டு பயிர்.
36.
இழைப்பயிர் மற்றும் வாணிபப் பயிர்- பருத்தி.
37.
தமிழ்நாட்டின் முக்கிய தோட்டப்பயிர்கள் - தேயிலை, காபி, இரப்பர்,முந்திரி சின்கோனா.
38.
தேயிலை உற்பத்தியில் முதலிடம் உள்ள மாநிலம் – அசாம்.
39.
தேயிலை உற்பத்தியில் இரண்டாமிடம் உள்ள மாநிலம் – தமிழகம்.
40.
காபி உற்பத்தியில் முதலிடம் உள்ள மாநிலம் – கர்நாடகா.
41.
காபி உற்பத்தியில் இரண்டாமிடம் உள்ள மாநிலம் – தமிழகம்.
42.
முந்திரி பெரும் பகுதிகளில் பயிரிடப்படுகின்ற மாவட்டம்- கடலூர்.
43.
இரப்பர் தோட்டங்கள் எந்த பகுதிகளில் பயிரிடப்படுகின்றது – கன்னியாகுமரி.
44.
தேயிலைத் தோட்டங்கள் எந்த பகுதிகளில் பயிரிடப்படுகின்றது - நீலகிரி மலைகள் , கோயமுத்தூர்.
45.
காபி பயிரிடப்படுகின்ற பகுதி - மேற்கு தொடர்ச்சி மலைகள் , கிழக்குத் தொடர்ச்சி மலைகள்.
46.
சின்கானா பயிரிடப்படுகின்ற பகுதி - ஆனை மலை.
47.
ஏலக்காய் தோட்டங்கள் பயிரிடப்படுகின்ற பகுதி- மதுரை.
48.
ஊரக மக்களின் சமூக பொருளாதாரத்தின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாக இருப்பது - கால்நடை வளர்ப்பு.
49.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த கால்நடைகள் - 88,92,473.
50.
இந்தியாவில் கருப்பு வகை தேயிலை உற்பத்தியிலும், கலப்பு வகை தயிலை உற்பத்தியிலும் முன்னனி வகிக்கும் நிறுவனம்- டான் டீ. (TANTEA )
51.
(TANTEA ) - தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் .
52.
டான் டீ (TANTEA) நிறுவனத்தின் தேயிலை பயிரிடும் பரப்பு - 4,500 ஹெக்டேர்.
53.
தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம் - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் (இது பிரபலமாக ஆவின் என்று அழைக்கப்படுகிறது)
54.
இந்தியாவில் 'ஏழை மக்களின் பசு' என்றழைக்கப்படுவது - வெள்ளாடுகள்.
55.
தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் - 1,076 கி.மீ . (நாட்டின் கடற்கரையில் 13 சதவீதம்).
56.
தமிழகத்தின் கடற்கரை பகுதி பரப்பளவு - 0.19 மில்லியன் சதுர கிலோமீட்டர்.
57.
பெருங்கடல் அல்லது கடற்கரையில் இருந்து சில கிலோமீட்டர் தூரம் வரை மீன்பிடித்தல் - கடலோர மீன்பிடிப்பு.
58.
கடற்கரையில் இருந்து பொதுவாக 20 முதல் 30 மைல்கள் தூரம் வரையிலும், பல 100 அல்லது 1000 க்கும் மேற்பட்ட அடிகள் ஆழத்தில் மீன்பிடித்தல் - ஆழ்கடல் மீன்பிடிப்பு.
59.
தமிழ்நாடானது :
1. 3 - முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள்.
2. 3 - இடைநிலை மீன்பிடித் துறைமுகங்கள் .
3. 363 - மீன்பிடித் தளங்களைக் கொண்டுள்ளது .
60.
உள்நாட்டு மீன் உற்பத்தியில் 10 சதவீத உற்பத்தியுடன் முன்னிலையில் உள்ள மாவட்டம்- வேலூர்.
61.
இந்திய பரப்பளவில் தமிழ்நாடு - 4%.
62.
இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு- 6%.
63.
இந்திய நீர் வளத்தில் தமிழ்நாடு- 2.5%.
64.
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு ஏறத்தாழ - 930 மில்லி மீட்டர்.
65.
தமிழ்நாட்டில் மழை பொழிவு:
1. வடகிழக்கு பருவக்காற்று - 47%
2. தென்மேற்குப் பருவக்காற்று - 35%
3. கோடைகாலம் - 14%
4. குளிர்காலம் - 4%
66.
தமிழ்நாட்டில் நீர்வள ஆதாரங்கள்:
1. ஆற்று வடிநிலம் – 17.
2. நீர்த் தேக்கங்கள் – 81.
3. ஏரிகள் - 41127.
4. ஆழ்துளை கிணறுகள் மற்றும் மற்ற கிணறுகள் - 4,98,644.
5. திறந்தவெளி கிணறுகள்- 15,06,919.
6. மொத்தம் - 20,46,788 மி.க. மீ
67.
இந்தியாவின் மிகப் பழமையான அணைகளில் ஒன்று - மேட்டூர் அணை.
68.
மேட்டூர் அணை மூலம் நீர்ப்பாசன வசதி - 2,71,000 ஏக்கர்.
69. மேட்டூர் அணை மூலம் நீர்ப்பாசன வசதியை பெறும் மாவட்டங்கள்:
1. சேலம்,
2. ஈரோடு
3. கரூர்,
4. திருச்சிராப்பள்ளி
5. தஞ்சாவூர்,
6. திருவாரூர்,
7. நாகப்பட்டினம்
70.
பவானிசாகர் அணை அமைந்துள்ள மாவட்டம் – ஈரோடு.
71.
நாட்டின் மண்-கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளில் ஒன்று - பவானிசாகர் அணை.
72.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையில் இருந்து ஏறத்தாழ 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆணை- அமராவதி அணை.
73.
சதுப்பு நில முதலைகள் (சீங்கன்னி) காணப்படுகின்ற அணை - அமராவதி அணை.
74.
எந்த அணையில் அண்மையில் ஒரு சிறிய நீர்மின் நிலையம் நிறுவப்பட்டது - அமராவதி அணை.
75.
கிருஷ்ணகிரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் தர்மபுரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள அணை -கிருஷ்ணகிரி அணை.
76.
செங்கம் தாலுகாவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - சாத்தனூர் அணை.
77.
தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஒன்றியங்கள் நீர்பாசனம் வசதி வசதியை பெறும் அணை - சாத்தனூர் அணை.
78.
முதலை பண்ணை மற்றும் வண்ணமீன் பண்ணை அமைந்துள்ள அணை- சாத்தனூர் அணை.
79.
சாத்தனூர் அணையில் நீர் கொள்ளளவு திறன் - 7321 மில்லியன் கன அடிகள்
80.
சாத்தனூர் அணை - முழு அளவு 119 அடி.
81.
முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட ஆண்டு -1895.
82.
முல்லைப்பெரியாறு அணையின் உயரம் ,நீளம்- உயரம் 175 அடி, நீளம் 1200 அடி.
83.
கேரளாவில், தேக்கடி மலையில் உருவாகும் பெரியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை-முல்லைப் பெரியாறு அணை.
84.
ஆண்டிப் பட்டிக்கு அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - வைகை அணை.
85.
வைகை அணையின் உயரம் - 111 அடி. 71 அடி உயரம் மட்டுமே நீரை சேமிக்க முடியும்.
86.
வைகை அணை திறக்கப்பட்டு ஆண்டு - 1959 ஜனவரி 21.
87.
வைகை அணையில் அமைந்துள்ள தோட்டம் - சிறிய பிருந்தாவனம்.
88.
வைகை அணை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது - தேனி மாவட்டம்.
89.
திருநெல்வேலி நகரில் இருந்து ஏறத்தாழ 47 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள அணை-மணிமுத்தாறு அணை.
90.
திருநெல்வேலியில் இருந்து 49 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அணை-பாபநாசம் அணை.
91.
காரையார் அணை என அழைக்கப்படுவது - பாபநாசம் அணை.
92.
பாபநாசம் அணையில் எத்தனை மெகாவாட் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது - 28 மெகாவாட்.
93.
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட திட்டம் - பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்.
94.
ஏழு ஆறுகளின் நீரினைப் பெற்று அங்கு உள்ள ஏழு நீர்த்தேக்கங்களை ஒன்றோடொன்று இணைக்கும் எதிர்கால நோக்கத்தின் விளைவாக உருவான திட்டம்- பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்.
95.
ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ள திட்டம் - பரப்பலாறு திட்டம்.
96.
தமிழ்நாட்டின் மொத்த மேற்பரப்பு நீரின் அளவு - 24,864 மில்லியன் கன மீட்டர்.
97.
தமிழ்நாட்டின் பயன்படுத்திக் கொள்ளத்தக்க நிலத்தடி நீர்வளம் – 22433 மி.க.மீ.
98.
தமிழ்நாட்டின் நீரின் தற்போதைய பயன்பாட்டின் அளவு - 13,558 மி.க.மீ.
99.
திட்டமிடல், செயல்படுத்துதல், நீர்வளத்தைப் பெருக்குதல், விநியோகித்தல் மற்றும் நீர்வளங்களின் உகந்த பயன்பாட்டை நிர்வகிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது- நீர்வள மேலாண்மை.
100.
தமிழ்நாட்டின் தனிநபர் நுகர்வின் அளவு -900 கன மீட்டர்.
101.
இந்தியாவின் தனிநபர் நீர் நுகர்வின் அளவு - 2,200 கன மீட்டர்.
102.
மாநிலத்தில் உள்ள நீர்வளத்தில் வேளாண்மைக்காக நுகரப்படுகிறது-75 சதவீதம்.
103. நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு:
1. பழுப்பு நிலக்கரி - 55.3%
2. வெர்மிகுலைட் - 75%.
3. டுனைட் - 59%.
4. செம்மணிக்கல் - 59%.
5. மாலிப்டீனம் - 52%.
6. டைட்டானியம் - 30%.
104.
இரும்புத்தாது படிவுகள் காணப்படுகின்றன மாவட்டம் - சேலம் - கஞ்சமலை, திருவண்ணாமலை - கல்வராயன் மலை.
105.
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு படிவுகள் காணப்படுகின்றன பகுதி - காவிரி வடிநில பகுதி.
106.
மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது - நெய்வேலி
107.
நிலக்கரி படிமங்கள் காணப்படுகின்ற பகுதி – இராமநாதபுரம்.
108.
மேக்னசைட் கிடைக்கும் இடம் - சேலம்.
109.
பாக்சைட் கிடைக்கும் இடம் - சேர்வராயன், கோத்தகிரி, உதகமண்டலம் , பழனி மலை, கொல்லிமலை
110.
ஜிப்சம் கிடைக்கும் இடம் - திருச்சி, திருநெல்வேலி , தூத்துக்குடி விருதுநகர்.
111.
இல்மனைட் ,ரூட்டைல் கிடைக்கும் இடம் - கன்னியாகுமரி கடற்கரை மணல் பரப்புகளில்.
112.
சுண்ணாம்பு கிடைக்கும் இடம் - கோயம்புத்தூர், கடலூர் , திண்டுக்கல் காஞ்சிபுரம்.
113.
தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க நன்கு வளர்ந்த ஒரு தொழில் - பருத்தி நெசவாலை.
114.
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு - 30%.
115.
கைத்தறி, விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு புகழ் பெற்றது-ஈரோடு.
116.
தமிழ்நாட்டின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்.
117.
தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என குறிப்பிடப்படும் பகுதிகள் - கோயம்புத்தூர் , திருப்பூர் ,ஈரோடு .
118.
தமிழ்நாட்டின் நெசவு தலநகரம் - கரூர்.
119.
பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு எந்த இடத்தை வகிக்கிறது – 4 இடம்.
120.
தமிழ்நாட்டின் முக்கிய பட்டு நெசவு மையங்கள்:
1. காஞ்சிபுரம்
2. ஆரணி
3. கும்பகோணம்
4. சேலம்
5. கோயம்புத்தூர்
6. மதுரை
7. திருநெல்வேலி
121.
தமிழ்நாட்டின் ஆண்டு பட்டு உற்பத்தி - 1200 மெட்ரிக் டன்கள்.
122.
எந்த பகுதிகளில் செயற்கை பட்டு துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன-இராமநாதபுரம்.
123.
இந்தியாவில் தோல் பதனிடும் தொழிலகங்களில் தமிழ்நாடு 60% உற்பத்தியையும், காலணிகள் தோல் ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் - 38 % பங்களிப்பையும் அளிக்கிறது .
124. தோல் பதனிடும் தொழிலகங்கள் அமைந்துள்ள நகரங்கள்:
1. வேலூர்
2. இராணிப்பேட்டை
3. ஆம்பூர்
4. வாணியம்பாடி
125.
தோல் ஏற்றுமதியில் 37% பங்களிப்புடன் முதன்மை மாவட்டமாக உள்ளது-வேலூர்.
126.
CLRI - மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆய்வகம் அமைந்துள்ள இடம்-சென்னை.
127.
TNPL தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனம் அமைந்துள்ள மாவட்டம். - கரூர் – காகிதபுரம்.
128.
தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனம்ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு -1979.
129.
சிமெண்ட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தை வகிக்கும் நாடு – இந்தியா.
130.
இந்தியா சிமெண்ட் உற்பத்தியில் வருடாந்திர உற்பத்தி - 181 மில்லியன் டன்கள்.
131.
தமிழ்நாட்டில் முக்கிய சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒன்று - தமிழ்நாடு சிமெண்ட் கழகம் (TANCEM).
132.
கல்நார் சிமெண்ட் அட்டை அலகு எங்கு உள்ளது – ஆலங்குளம்.
133.
கற்கலன் குழாய் அழகு எங்கு உள்ளது - விருத்தாச்சலம்.
134.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் எத்தனை சதவீதம் உள்ளன - 59.6 %.
135.
மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகாவுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலம்– தமிழ்நாடு.
136.
சர்வதேச அளவில் மிகச்சிறந்த பகுதிகளாகவும் ஏற்றுமதியை ஊக்குவிக்க கூடிய சூழ்நிலை பெற்றதாகவும் அமைந்துள்ளது - சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.
137.
சிறப்பு பொருளாதார மண்டலத்தின் முக்கிய நோக்கங்கள் - வணிக சமநிலையை அதிகரித்தல், வேலை, முதலீட்டு அதிகரித்தல், புதிய வேலைவாய்ப்பு உண்டாக்குதல் மற்றும் சிறந்த நிர்வாகம்.
138. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ள இடங்கள் :
1. நாங்குநேரி
2. எண்ணூர்
3. ஓசூர்
4. பெரம்பலூர்
139.
டைடல் பூங்கா - 2, டைடல் பூங்கா - 3, உயிரி மருந்தகம் அமைந்துள்ள இடம் – சென்னை.
140.
டைடல் பூங்கா – 4 அமைந்துள்ள இடம்- கோயம்புத்தூர்.
141.
தொழில்துறை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு நாட்டின் உற்பத்தியில் - 11% முதல் 12% வரை.
142.
இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு - 17 %.
143.
ரசாயன மற்றும் வார்ப்பு பெருள் தொழிலகம் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் - 13 சதவிகிதம்.
144.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய குடிசைத் தொழில் - கைத்தறித் துறை.
145.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த சர்க்கரை ஆலைகள் : 34.
1. கூட்டுறவுத்துறை – 16.
2. தனியார் துறை – 18.
146.
தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை இதன் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது - தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் (TTDC).
147.
ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே - மக்கள் தொகை.
148.
மக்கள்தொகைப் பண்புகள் பற்றிய புள்ளிவிவர ஆய்வுகள் – மக்கட்தொகையியல்.
149.
2011 - தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை - 7,21,47,030. - 7.21 கோடி.
150.
2011- தமிழ்நாட்டின் ஆண், பெண் மக்கள் தொகை - 3,61,37,975 மற்றும் 3,60,09,055.
151.
2011- இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை - 5.96%.
152.
2011 - மாவட்ட அளவில் 4.219 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட அதிக அளவு நகர்ப்புற மக்கள் தொகையைக் கொண்டு முதல் இடத்தில் உள்ள மாவட்டம் - சென்னை.
153.
2011- மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட மாவட்டம்- நீலகிரி .
154.
2011- தமிழ்நாட்டின் மக்களடர்த்தி - 555 - ச.கி.மீ.
155.
இந்தியாவின் மக்களடர்த்தியில் தமிழ்நாடு எத்தனை யாவது இடம் – 12.
156.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தேசிய சராசரி - 382.
157.
சென்னை மக்களடர்த்தி ச.கி. மீ - 26,903 ச.கி. மீ.
158. நமது மாநிலத்தின்மொத்த மக்கள் தொகை:
1. இந்துக்கள் -87.58%.
2. கிறித்தவர்கள்-6.12%.
3. இஸ்லாமியர்கள்-5.86%.
4. சமணர்கள் -0.12%.
5. சீக்கிய மதம் -0.02%.
6. புத்த மதம் -0.02%.
159.
2011 - தமிழ்நாட்டில் நகர்ப்புற மக்கள் தொகை- 34,917,440 -
48.40%
160.
2011 - தமிழ்நாட்டில் கிராமப்புற மக்கள் தொகை-37,229,590 - 51.60 %.
161.
1,000 ஆண்களுக்கு இணையாக உள்ள பெண்களின் எண்ணிக்கை - பாலின விகிதம்.
162.
2011 - தமிழ்நாட்டின் பாலின விகிதம் - 996.
163.
2011 - இந்தியாவின் பாலின விகிதம் - 940.
164.
2011 - மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 32 மாவட்டங்கள் பாலின விகிதம் 15 மாவட்டங்களில் 1000 அதிகமாக உள்ளது.
165. பாலின விகிதம் அதிகம் கொண்ட மாவட்டங்கள்:
1. நீலகிரி - 1,041.
2. தஞ்சாவூர் - 1,031.
166. பாலின விகிதம் குறைவான மாவட்டங்கள்:
1. தர்மபுரி – 946.
2. சேலம் - 954.
167.
2011- தமிழகத்தின் கல்வியறிவு விகிதம்- 80.09%.
168.
2011- தமிழகத்தின் ஆண்களின் கல்வியறிவு விகிதம் - 86.77.%.
169.
2011- தமிழகத்தின் பெண்களின் கல்வியறிவு - 73.44 %.
170.
2011-மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம்- 74.04%.
171.
2011- இந்தியாவின் ஆண்களின் கல்வியறிவு விகிதம் - 82.14%,
172.
2011- இந்தியாவின் பெண்களின் கல்வியறிவு விகிதம் - 65.46%.
173.
தமிழகத்தின் அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டம் – கன்னியாகுமரி.91.75 %.
174.
தமிழகத்தின் குறைந்த கல்வியறிவு கொண்ட மாவட்டம் – தர்மபுரி 68.54 %.
175.
தமிழகத்தின் மொத்த சாலைகளின் நீளம் - 1,67,000 கிலோமீட்டர் .
176.
தமிழகத்தின் மொத்த சாலைகளின் நீளத்தில் எத்தனை கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் பராமரிக்கப்படுகிறது - 60628 கிலோமீட்டர் .
177.
பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டணி இயக்கத் திட்டத்தின் கீழ் (PPP) மொத்த சாலைத் திட்டங்களில் 20 %பங்களிப்புடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது- தமிழ்நாடு.
178.
தெற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது - சென்னை.
179.
தமிழ்நாட்டின் மொத்த இருப்புப் பாதையின் நீளம் - 6,693 கிலோ மீட்டர்.
180.
தமிழ்நாட்டின் மொத்த ரயில் நிலையங்கள் – 690.
181. தமிழ்நாட்டில் எத்தனை முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன: 4 .
1. சென்னை
2. கோயம்புத்தூர்
3. மதுரை
4. திருச்சிராப்பள்ளி
182. உள்நாட்டு விமான நிலையங்கள்: 2.
1. தூத்துக்குடி
2. சேலம்
183.
இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் – சென்னை.
184.
தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை –NH- 44. ஒசூரிலிருந்து கன்னியாகுமரி வரை 627.2 கிலோமீட்டர்.
185.
தமிழ்நாட்டின் மிகக் குறைவான நீளங்கொண்ட நெடுஞ்சாலை – NH 785 மதுரையிலிருந்து நத்தம் வரை 38 கிலோ.
186.
தமிழ்நாட்டின் மூன்று துறைமுகம் - சென்னை, எண்ணூர் , தூத்துக்குடி.
187.
இடைநிலை துறைமுகம் – நாகபபட்டினம்.
188.
தமிழ்நாட்டில் உள்ள சிறிய துறைமுகங்கள் -15.
189.
தமிழ்நாட்டின் செயற்கைத் துறை முகமாகும்- சென்னை
190.
சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் நாட்டின் துறைமுகங்களில் இரண்டாவது பெரிய துறைமுகம் - சென்னை துறைமுகம்.
191.
தகவல் தொடர்பு என்பது இலத்தீன் வார்த்தையான கம்யூனிகேர் என்பதிலிருந்து பெறப்பட்டது இதன் பொருள் – பகிர்தல்.
192. தகவல்தொடர்புகளின் இரு பிரிவுகள்:
1.
தனிமனித தகவல் தொடர்பு
2. பொதுத்தகவல் தொடர்பு
193.
வணிகத்தின் இரு கூறுகள் - ஏற்றுமதி , இறக்குமதி.
194.
இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு எத்தனை சதவீதம் - 12.2%.
195.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பிற்கு இடையேயான வேறுபாடு-வர்த்தக சமநிலை.
196.
இந்தியாவின் பட்டாசு உற்பத்தியின் தலைநகர்- சிவகாசி.
197.
மனித உயிருக்கும் மற்றும் உடமைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை – இடர் தணித்தல்.
198.
பேரிடர் அவசரகால தொலைபேசி எண்- 1077.
199.
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் முதலிடம் உள்ள மாநிலம் – தமிழ்நாடு.
200.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணை தலைவர் – முதலமைச்சர்.
0 Comments
THANK FOR VISIT