ஓரெழுத்து ஒருமொழி
1.
ஓரெழுத்து ஒருமொழி
ஈ, பூ, கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள். இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு. இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.
2.
ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்:
1. ஆ- பசு
2. ஈ- கொடு
3. ஊ- இறைச்சி
4. ஏ- அம்பு
5. ஐ- தலைவன்
6. ஓ - மதகுநீர் தாங்கும் பலகை
7. கா- சோலை
8. கூ- பூமி
9. கை- ஒழுக்கம்
10. கோ-அரசன்
11. சா- இறந்துபோ
12. சீ- இகழ்ச்சி
13. சே- உயர்வு
14. சோ- மதில்
15. தா - கொடு
16. தீ- நெருப்பு
17. தூ- தூய்மை
18. தே- கடவுள்
19. தை- தைத்தல்
20. நா- நாவு
21. நீ- முன்னிலை ஒருமை
22. நே- அன்பு
23. நை- இழிவு
24. நோ வறுமை
25. பா- பாடல்
26. பூ- மலர்
27. பே - மேகம்
28. பை- இளமை
29. போ- செல்
30. மா- மாமரம்
31. மீ- வான்
32. மூ - மூப்பு
33. மே- அன்பு
34. மை- அஞ்சனம்
35. மோ- மோத்தல்
36. யா- அகலம்
37. வா- அழைத்தல்
38. வீ- மலர்
39. வை- புல்
40. வௌ - கவர்
41. நொ- நோய்
42 . து- உண்.
0 Comments
THANK FOR VISIT