புத்திர
பாவம்
குழந்தை செல்வம்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையை முழுமை பெற வைப்பதாகும். திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும்
அடுத்து எதிர்பார்ப்பது ஓரு குழந்தை செல்வத்தைத்தான். ஏழை முதல் பணக்காரர் வரை தனக்கென
ஒரு வாரிசு உருவாவதையே பெரிய பாக்கியமாகக் கருதுகிறார். அவரவர் சக்திக்கேற்ப குழந்தையை
நல்லபடி வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு குழந்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும்
என்று ஆசைப்படுகிறார்கள். யாருமே தங்களுக்கு குழந்தை செல்வம் வேண்டாம் என்று மனதளவில்
கூட நினைப்பதில்லை. ஆனால், இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குபவர்கள் நிறைய பேர் உண்டு.
ஜோதிட ரீதியாக
நாம் ஆராய்கின்ற போது யாருக்கு சிறப்பாக குழந்தை பாக்கியம் அமையும். குழந்தை பாக்கியமே
இல்லாதவர் யார் என்பதை கண்டுபிடித்து விடலாம். குறிப்பாக ஒருவரின் 5ம் பாவமானது பலமாக
அமைந்திருந்தால் குழந்தை பாக்கியத்தை பெற முடியும்.
ஜோதிட ரீதியாக
புத்திர பாக்கியம் சிறப்பாக அமைய குரு பகவான் புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமையப்
பெறுவது முக்கியமானதாகும். அதுபோல 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண
ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு
5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து
விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது. அதுபோலவே 5ம் வீட்டையும்,
5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து
மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும்
சிறப்பானது என்பது போல 5ம் அதிபதி பாவியாக இருந்தாலும் வலுப்பெற்று அமைந்து சுபர் பார்வை
பெறுவது சிறப்பான புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.
ஆண்
வாரிசு
நவ கோள்களில் ஆண்
கிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடிய குரு, சூரியன்,செவ்வாய் வலுப்பெற்று 5ல் இருந்தாலும்
5ம் அதிபதியுடன் இருந்தாலும் ஆண் கிரகங்களின் வீடு என வர்ணிக்கப்படக் கூடிய மேஷம்,
விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய பாவங்களில் 5ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும்
சிறப்பான ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். மேற்கூறிய பாவங்களில் குரு அமைந்திருந்தாலும்
சிறப்பான ஆண் வாரிசு உண்டாகும்.
பெண் கிரகங்கள்
என வர்ணிக்கப்படக் கூடிய சுக்கிரன் சந்திரன் 5ல் வலுவாக அமைந்தாலும் 5ம் அதிபதியாக
சுக்கிரன், சந்திரன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சந்திரன் வீடான கடகத்தில் அமைந்திருந்தாலும்
பெண் குழந்தை யோகம் உண்டாகும். அதுபோல இரட்டை படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,
மகரம், மீனம் ஆகியவற்றில் 5ம் அதிபதி அமைந்திருந்தாலும் பெண் குழந்தை யோகத்தைக் கொடுக்கும்.
சர்புத்ரபாக்யம்
சர்புத்திர பாக்கியம்
யாருக்கு அமையும் என்று பார்த்தால் 5ம் பாவத்தில் ஆண் கிரகங்களும் பெண் கிரகங்களும்
இணைந்து அமைந்திருந்தால் சர்புத்திர பாக்கியமான ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் உண்டாகும்.
5ம் அதிபதி ஆண் கிரகமாக இருந்து பெண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் பெண் கிரகமாக
இருந்து ஆண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் சர்புத்திர பாக்கியம் அமையும்.
புத்திர
ஸ்தானமான 5ல் அமைந்துள்ள கிரகங்களின் தசா புக்தி
காலங்களிலும்,
5ம் அதிபதி மற்றும் 5ம் அதிபதி சாரம் பெற்ற தசா புக்தி காலங்களிலும், குரு மற்றும்
குரு சாரம் பெற்றுள்ள தசா புக்தி காலங்களிலும் குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள்
ஏற்படும். பெண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் பெண் குழந்தையும் ஆண் கிரகங்களின்
தசா புக்தி காலத்தில் ஆண் குழந்தை யோகமும் கொடுக்கும். சனி, ராகு, கேது, புதன் போன்ற
கிரகங்கள் 5 ஆம் வீட்டில் அமைந்திருந்தாலும், 5ம் அதிபதியாக இருந்தாலும் 5ம் அதிபதி
நீசம் அஸ்தங்கம் பெற்றாலும் ராகு கேதுவின் சாரம் பெற்றிருந்தாலும் புத்திர பாக்கியம்
உண்டாவதில் தடை ஏற்படுகிறது. அதுபோல சந்திரனுக்கு 5ல் பாவிகள் இருப்பதும் 5ம் அதிபதி
பலவீனம் அடைவதும் புத்திர தோஷமாகும். 5ம் வீட்டிற்கு இருபுறமோ, குருவுக்கு இருபுறமோ
பாவ கிரகங்கள் அமையப் பெற்றாலும் புத்திர தோஷம் உண்டாகிறது.
அதுபோல ஜென்ம லக்னத்திற்கு
5ம் அதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் 5ம் அதிபதியையும், 5ம் வீட்டையும், குரு பகவானையும்,
சனி பார்வை செய்தாலும் திருமணம் நடைபெறும் காலங்களில் சர்ப கிரகங்களின் தசா புக்திகள்
நடைபெற்றாலும், புத்திர பாக்கியம் அமைவதில் தாமதம் உண்டாகும். கருச்சிதைவு, கருத்தறிக்கத்
தடை ஏற்படும்.
ஜெனன காலத்தில்
5ம் இடம் புதனின் வீடான மிதுனம், கன்னியாகவோ, சனி வீடான மகரம் கும்பமாகவோ இருந்து அதில்
சனி மாந்தி அமையப் பெற்று, புத்திர காரகன் குருவும் பலவீனமாக இருந்தால் தத்து புத்திர
யோகம் அதாவது பிறருடைய குழந்தையை தத்து எடுத்து வளர்க்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில்
புத்திர ஸ்தானமான 5ம் இடம் சுப கிரகங்களால் சூழப்பட்டு குரு பகவான் வலுவாக அமையப் பெற்றாலும்,
5ம் அதிபதி கேந்திர திரிகோணாதிபதிகளுடன் சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும்
உடன் அமையும் கிரகங்கள் நட்பு கிரகங்களாக இருந்தாலும் பெருமையையும், உயர்வையும் அடைய
முடியும்.
அதுவே 5ம் அதிபதி
பகை பெற்றோ 6, 8, 12களில் மறைந்தோ, பாதக அமையப் பெற்றோ, ராகு சனி சாரம் பெற்றோ, பாதகாதிபதி
சாரம் பெற்றோ குரு பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றோ இருந்தால் புத்திரர் அனுகூலம் இருக்காது.
தேவையற்ற பிரச்சனைகளையும் வீண் விரயங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.
ஐந்தாம் பாவகத்தில்
குழந்தைகளின் முன்னேற்றங்கள், பூர்வீக சொத்துக்கள், முற்பிறப்பில் செய்த நல்வினைகள்,
மந்திர சாஸ்திரங்களும், அதிர்ஷ்டம் , மற்றும் சாதகனின் பொழுது போக்கு விசயங்களை அறியலாம்
.
சாதகனின் அறிவை
குறிக்கும் ஸ்தானமும் இதுதான்,
சாதகனின் காதலை
குறிக்கும் ஸ்தானமும் இதுதான்
இந்த பாவகத்தில்
எந்த கிரகம் நிற்கிறதோ அதன் காரகம் சம்ம்நதபட்ட அறிவு ஜாதகனுக்கு கிடைக்கும்
இந்த பாவக அதிபதி
கெட்டுவிட்டால் பூர்வீக சொத்து கிடைக்காது
இந்த பாவகதில்
ராகு, கேது நின்றாலும் புத்திர ஸ்தானம் பாதிக்கும்.
சாதகனின் காதல்
ஸ்தானாதிபதி இவர் தான் இந்தி அதிபதி ஆறில் போனால் காதல் பிரச்சனை ஆகும் ,எட்டில் போனால்
காதலால் அவமானபடுவான்
வளர்ச்சி ஸ்தானமான
பத்து, பதினொன்றில் போனால் காதல் வெற்றி அடையும்
ஐந்தாம் அதிபதி
ஆருக்கு போனால் பூர்வீக சொதினில் ,சண்டை, சச்சரவு வரலாம்,
ஐந்தாம் பாவ அதிபதி
நாலுக்கு போனாலும் ஜாதகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்காது
ஐந்தாம் பாவ அதிபதி
ஆறாமிடம் போனாலோ அல்லது எட்டாம்மிடம் போனாலோ நாலாம் மிடம் போனாலோ குழந்தை பிறப்பதில்
தாமதம் ஏற்படும்
தனித்த
குரு ஐந்தில் நின்றாலும் புத்திர பாக்கியம் தடைபடும்
ஐந்தில்
சனி செவ்வாய் நின்றாலும் பிரச்சனை தான்
இனி ஐந்தாம் பாவகத்தில்
மற்ற கிரகங்கள் நின்றாள் என்ன பலன் என்பதை பாப்போம்
ஐந்தாம்
மிடம் சூரியன் நின்றால் - ஜாதகனுக்கு அரசியல் ஞானம் உடையவனாக இருப்பான் சிறந்த
அறிவு படைத்தவனாக இருப்பான்
ஐந்தாம்
மிடம் சந்திரன் நின்றால் ஜாதகனுக்கு
நல்ல கற்பனை வளம், கலை இலக்கியத்தில் ஆர்வம், சிறந்த ஓவிய திறமை, காதல் ஆர்வம் இருக்கும்,
ஐந்தாம்
மிடம் செவ்வாய் நின்றால் ஜாதகனுக்கு
மந்திர வித்தை, விளையாட்டு தந்திரங்கள், மல்யுத்த ஆர்வம், சிலம்பாட்ட ஆர்வம், அணைத்து
விளையாட்டில் யுக்க்தியுடன் செயல்படுவார் . குழந்தைகள் கொஞ்சம் முரட்டுத்தனமாக வளரலாம்,
ஐந்தாம்
மிடம் புதன் நின்றால் ஜாதகனுக்கு
மிகுந்த அறிவுடன் செயல்படுவார், கவி பாடும் திறமை இருக்கும், இளமைகளந்த காதல் இருக்கும்,
தத்துபுத்திர யோகம் ஜாதகனுக்கு உண்டு (புதன்
அலி கிரகம் என்பதால் )
ஐந்தாம்
மிடம் சுக்கிரன் நின்றால்
ஜாதகனுக்கு பணம்
சம்பாதிக்கும் திறமை இருக்கும், நிதி நிர்வாகம் சிறப்புடன் இருக்கும் ,காதல் எண்ணம்
அதிகம் இருக்கும் , ஆடல், பாடல், பொழுதுபோக்கு விசயங்களில் ஜாதகனுக்கு மிகுந்த ஈடுபாடு
இருக்கும் , கவர்ச்சியின் வழிகளில் ஜாதகன் செயல்படுவார்
ஐந்தாம்
மிடம் குரு நின்றால்
ஜாதகனுக்கு ஒழுக்கம்
அதிகம் இருக்கும், வேத சாஸ்திரத்தில் ஈடுபாடு இருக்கும் ,ஆன்மீக விசயங்களில் கவனம்
இருக்கும், ஆனால் குழந்தை தாமதமாக பிறக்கும் ( குரு புத்திர காரகன் ,காரகனே புத்திர
ஸ்தானத்தில் இடம் பெறகூடாது )
ஐந்தாம்
மிடம் சனி நின்றால்
ஜாதகனுக்கு சிறந்த
தொழில் நுணுக்கம் ஏற்படும், அறிவு மந்தமாக செயல்படும், விளையாட்டு விசயத்தில் ஆர்வம்
இருக்காது,
ஐந்தாம்
மிடம் ராகு நின்றால்
ஜாதகனுக்கு சூதாட்டத்தில் கவனம் ஏற்படும், பூர்வீக சொத்தில் பிரச்சனை வரலாம் , குழந்த
பிறப்பதில் சிக்கல் ஏற்படலாம்
ஐந்தாம்
மிடம் கேது நின்றால்
ஜாதகனுக்கு ஆழ்ந்த சிந்தனை, ஆன்மீக நாட்டம்
வரலாம், தெளிவான வார்த்தைகளுடன் பேசுவார்,
சித்தர்களை போல இருக்க ஆசைபடுவார் ,குழந்த பிறப்பதில் தாமதம் உருவாகும் .
ஐந்தாம்
பாவாதிபதி லக்னத்தில் நின்றால்
அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு ,புத்திரம், பூர்வீகம், அறிவு உண்டு
ஐந்துகுடையவன்
லக்னதிலோ அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதலில் அதிக ஈடுபாடு இருக்கும்
ஐந்துகுடையவன்
ஏழில் நின்றாலோ அல்லது ஏழுக்கு உடையவன் ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதல் திருமணம்
உண்டு
ஐந்தாம்
பாவகதில் பாவகிரகம் நிற்கக்கூடாது
ஐந்தாம் பாவகதிர்க்கு இருபுறமும் பாவாகிரகம் நிற்ககூடாது
விரயாதிபதி, அட்டமாதிபதி
இந்த பாவகத்தில் நின்றாள் குழந்தை, அறிவு,காதல் தடைபடும்
ஐந்தாம் பாவகதில்
சனி ,செவ்வாய் சேர்கை இந்த பாவக சிதிலமடைய வாய்ப்பு உண்டாகும்
ஐந்தாம் பாவகம்
பெண் ராசியாகி ஐந்தாம் அதிபதி பெண் ராசிகளில் நின்று பெண் கிரகங்கள் இந்த பாவகத்தில்
இருந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்கும்
ஐந்தாம் பாவகம்
ஆண் ராசியாகி ஐந்தாம் பாவ அதிபதி ஆண் ராசியில் நின்று ஆண் கிரகங்கள் இந்த பாவகதில்
நின்றாள் பிறக்கும் குழந்தை ஆண்குளந்தையாகும்
ஐந்தாம் அதிபதி
நீசம், அச்தன்கதம் அடைந்து இருந்தால் ஜாதகருக்கு குல தெய்வ வழிபாடு குறை இருக்கும்
ஐந்தாம் அதிபதி
ஆட்சி, உச்சம், வர்கோத்தமம் பெற்று இருந்தால் இவரின் குல தெய்வம் இவரை நன்கு காக்கும்
.
ஐந்தாம் அதிபதி
லக்னத்தில் இருந்தால் குழந்தையின் அன்பும் ஆதரவும் ஜாதகருக்கு உண்டு,
ஐந்தாம் அதிபதி
நாளில்,ஆறில்,எட்டில் இருந்தால் குழந்தையின் அன்பு, ஆதரவு ஜாதகருக்கு கிடைக்காது
கர்ப்பம்
தரிப்பு தசா புத்தி அடிப்படையில்
பூர்வ புண்ணிய
ஸ்தானதிபதியின், தசா புத்தி காலங்களே கர்ப்பமடைய ஏற்ற காலமாகும்.
ஜாதகத்தில் குரு
நன்றாக இருந்தால், குருவின் தசா புத்தி காலங்களும் கர்ப்பமடைய ஏற்ற காலமாகும்.
பூர்வ புண்ணிய
ஸ்தானதிபதியின், தசையில், குரு புத்தியிலும் கர்ப்பமடையலாம்.
குரு தசையில்,
பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின் புத்தியிலும் கர்ப்பமடையலாம்.
ஜாதகத்தில் களஸ்திர
ஸ்தானாதிபதியை குரு பார்த்தால், களஸ்திர ஸ்தானாதிபதியின் தசாகாலத்தில் வரும் குரு புத்தியிலும்
கர்ப்பம்தரிக்கலாம்.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT