எதுகை, மோனை, இயைபு

1.    மோனை: செய்யுளில் முதலெழுத்து ஒன்றிவருவது மோனை

2.    சீர்மோனை: செய்யுளில் சீர்தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனை

.கா. துப்பார்க்குத் துப்பாய் துப்பாக்கித் துப்பார்க்கு

இக்குறட்பாவில் சீர்தோறும் முதலெழுத்துக்கள் அனைத்தும் (து) ஒன்றி வந்துள்ளன.

3.    அடிமோனை: செய்யுள்களில் அடிதோறும் முதல் சீரின் முதல் எழுத்து ஒன்றிவருவது அடிமோனை

.கா.

ன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

ன்நெஞ்சே தன்னைச் சுடும்.

இக்குறட்பாவில் முதலடியின் முதலெழுத்தும் () இரண்டாமடியின் முதலெழுத்தும் () ஒன்றி வந்துள்ளன.  

4.    இணை மோனை (1,2) : ஒரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும் வரும் முதல் எழுத்து ஒன்றி வருவது இணை மோனை எனப்படும்.

.கா. டிந்த டிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

5.    பொழிப்பு மோனை (1,3) : ஒரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் முதல் எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு மோனை

.கா. புனையா ஒவியம் புனையா நிற்றலும்

6.    ஒரூஉ மோனை (1,4) : ஒரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் முதல் எழுத்து ஒன்றி வருவது ஒரூஉ மோனை

.கா. பொய்ம்மையும் வாய்மை இடத்த பொய்ம்மையும் புரைதீர்ந்த

7.    கூழை மோனை (1,2,3): ஒரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும மூன்றாம் சீரிலும் வரும் முதல் எழுத்து ஒன்றி வருவது கூழை மோனை

.கா. தானம் வமிரண்டும் ங்கா வியனுலகம்

8.    மேற்கதுவாய் மோனை (1,3,4) : ஒரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் முதல் எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் மோனை

.கா. வானின்று உலகம் ழங்கி ருதலால்

9.    கீழ்கதுவாய் மோனை (1,2,4) : ஒரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் முதல் எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் மோனை

.கா. ருள்மேல் ருவினையும் சேரா றைவன்

10.   முற்று மோனை (1,2,3,4) : செய்யுளில் நான்கு சீரிலும் முதலெழுத்து ஒன்றி வருவது முற்று மோனை

.கா. பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு

 

 

11.   எதுகை: செய்யுளில் இரண்டாமெழுத்து ஒன்றிவருவது எதுகை எனப்படும்.

12.   சீர்எதுகை : செய்யுளில் சீர்தோறும் இரண்டாமெழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை

.கா : சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

13.   அடிஎதுகை : செய்யுள்களில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது அடி எதுகை

.கா:  தாம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

      வாம் வழங்கா தெனின்.

இக்குறட்பாவில் முதலடியின் இரண்டாமெழுத்தும் () இரண்டாமடியின் இரண்டாமெழுத்தும் () ஒன்றி வந்துள்ளன

14.   இணை எதுகை (1, 2) : ஒரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும் வரும் இரண்டாமெழுத்து ஒன்றி வருவது இணை எதுகை

.கா: பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

15.   பொழிப்பு எதுகை (1, 3) : ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு எதுகை

.கா: தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

16.   ஒரூஉ எதுகை (1,4) : ஒரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது ஒரூஉ எதுகை

.கா: துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

17.   கூழை எதுகை (1,2,3): ஒரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது கூழை எதுகை

.கா: ற்றுக ற்றற்றான் ற்றினை அப்பற்றைப்

18.   மேற்கதுவாய் எதுகை (1,3,4) : ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் எதுகை

.கா: க்கொண்ட எல்லாம் ப்போம் ப்பினும்

19.   கீழ்கதுவாய் எதுகை (1,2,4) : ஒரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் எதுகை

.கா: ழுக்கம் விழுப்பம் தரலான் ழுக்கம்

20.   முற்றெதுகை (1,2,3,4) : செய்யுளில் நான்கு சீரிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது முற்றெதுகை

.கா: துப்பார்க்குத் துப்பாய் துப்பாக்கித் துப்பார்க்கு

21.   இயைபு: செய்யுளின் அடிகளிலும் சீர்களிலும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபுத் தொடை

கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்

கொடிகள் வானம் படிதர மூடும்

கண்ட பேரண்டந் தண்டலை நாடும்

கனக முன்றில் அனம்விளை யாடும்.

மேற்கண்ட பாடல்களில் இறுதியில் ஒரே ஒலி தரும் கூடும், மூடும், நாடும், ஆடும் என்னும் சொற்கள் அமைந்துள்ளன.

.கா: தென்றல் விளையாடு மலை

தமிழ்முனிவன் வாழு மலை

https://www.a2ztnpsc.in/