கிரகங்களின் பொது குணம்
சூரியன்
1. ஆன்மாவை
பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில்
அமையவேண்டும்.
2. வேதங்களில்
தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம்
என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும் சரிர பலமும் அடையமுடியும்
என்பது அனுபவம் கண்ட உண்மை.
3. சுயநிலை,சுய-உயர்வு,
செல்வாக்கு கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம்,
ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன் சூரியன்.
4. சூரியன்
அக்கினியை அதிதேவதையாக கொண்டவன். தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன்.
5. சூரியன்
நட்சத்திரம் - உத்திரம், உத்திராடம், கார்திகை
6. சூரியன்
ஆட்சி - சிம்மம்
7. உச்சம் - மேஷம்
8. நீசம் - துலாம்
9. பகை - ரிஷபம்,
மகரம், கும்பம்
10. நட்புக் கிரகங்கள் : சந்திரன், செவ்வாய், குரு.
11. பகைக் கிரகங்கள் : சுக்கிரன், சனி, ராகு, கேது
12. சமக் கிரகம் : புதன்
சந்திரன்
1. மனதிற்க்கும்,
உடலுக்கும் காரகன் சந்திரன். உலக வாழ்வுக்கு சரிர பலம் முக்கியம். சரிர பலத்திற்க்கு
மனவளம் அடிப்படை.
2. ஜாதகத்தில்
சந்திரன் பலம் பெற்றிருந்தால் இரண்டையுமே அடைய முடியும்.
3. சந்திரன்.
நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்.
4. தாய்க்கு
காரகன் சந்திரன்.
5. நாம் பிறக்கும்
போது சந்திரன் இருந்த வீட்டை வைத்துதான் கோச்சார பலன்கள் நிர்ணயிக்கபடுகின்றது. சந்திரன்
ஜாதகத்தில் அமைந்த வீடு தான் இராசி.
6. சூரியனோடு
கோச்சார ரீதியாக சேரும் பொழுது அமாவாசை ஆகின்றது.
7. சூரியனும்,
சந்திரனும் ஓன்றுக்கொன்று பார்வையிடும் பொழுது அதாவது நேர்கோட்டில் 180 பாகையில் சந்திக்கும்
பொழுது பௌர்ணமி ஆகின்றது.
8. சந்திரன்
ஆட்சி- கடகம்
9. உச்சம் - ரிஷபம்
10. நீசம் - விருச்சகம்
11. சந்திரனுக்கு பகை : இல்லை.
12. நட்புக் கிரகங்கள் : சூரியன்,புதன்
13. பகைக் கிரகங்கள் : ராகு,
கேது
14. சமக் கிரகம் : செவ்வாய்,
குரு, சுக்கிரன், சனி
செவ்வாய்
1. அங்காரகன்,
குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல்
தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள்
ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும் என்பது உறுதி.
2. பெருந்தன்மை
அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும்
பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம். ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும்
காரகன்.
3. செவ்வாய்க்கு நட்சத்திரங்கள் - அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை
4. ஜாதகத்தில்
செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை. லக்னத்திற்கு
2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு
சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும்.
5. செவ்வாய்
குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம் உண்டாகும்.
6. செவ்வாய்
சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.
7. செவ்வாய்
ஆட்சி - மேஷம்,விருச்சிகம்.
8. உச்சம் - மகரம்
9. நீசம் - கடகம்
10. பகை - மிதுனம்,கன்னி.
11. நட்புக் கிரகங்கள் : சூரியன், சந்திரன், குரு
12. பகைக் கிரகங்கள் : புதன்,
ராகு, கேது
13. சமக் கிரகம் : சுக்கிரன்,
சனி
புதன்
1.
சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு
பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ
அந்த கிரகத்தின் தன்மை பிரதிபல்க்கும்.
2.
புதன் நட்சத்திரங்கள் - கேட்டை, ஆயில்யம், ரேவதி
3.
புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு
சேர்ந்தால் புதஆதித்ய யோகம் உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும்.
4.
புதன் -வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின்
மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம்.
5.
நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு,
புத்தக வெளியீடு இவைகளுக்கு புதபலமே காரணம்.
6.
புதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி
உச்சம் பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும்.
7.
புதன் ஆட்சி- மிதுனம்,கன்னி
8.
உச்சம் - கன்னி
9.
நீசம் - மீனம்
10. பகை - கடகம்
11. நட்புக் கிரகங்கள் : சூரியன், சுக்கிரன்
12. பகைக் கிரகங்கள் : சந்திரன்
13. சமக் கிரகம் : செவ்வாய்,
குரு, சனி, ராகு, கேது
குருபகவான்
1. குருவருள்
திருவருள் என்பார்கள். குருபகவான் என்று சிறப்பித்து கூறப்படும் குருபார்க்க கோடி நன்மை.
குருபார்வை அதாவது வந்தால் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்யலாம் என்ற வழக்கம்
உள்ளது.
2. சுபகிரக
வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான்.
3. குருபகவான்
ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இனைந்நு 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல்
அமைந்தால் ராஜயோகம். கோடிஸ்வர யோகம் அமையும்.
4. மேதைகளையும்>
ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான்.
5. விவேகத்தையும்,
அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில்
ஆகாயம் குருபகவான்.
6. கன்னி
லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.
7. குருபகவான்
ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும்
ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம்.
8. தெய்வ
அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். அறிவு வாயந்த குழந்தைகளை பெறுவதும்
குருபகவான் அருள்தான்.
9. குருவின்
நட்சத்திரங்கள் - புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி.
10. குருவின்
வியாழன் ஆட்சி- தனுசு ,மீனம்.
11. உச்சம் - கடகம்
12. நீசம் - மகரம்
13. பகை - ரிஷபம்,
மிதுனம்.
14. நட்புக் கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்
15. பகைக் கிரகங்கள் : புதன், சுக்கிரன்
16. சமக் கிரகம் : சனி,
ராகு, கேது
சுக்கிரன்
1. கலைக்கு
காரகன் சுக்கிரன்.
2. சுக்கிரன் நட்சத்திரங்கள் - பரணி, பூரம், பூராடம்.
3. சுக்கிரன்
சந்திரனுடன் கூடி பலமுடன் 10ல் இருந்தால் நடிப்புகலையில் தேர்ச்சிபெற்று, குறிப்பிட்ட
ஜாதகர் அல்லது ஜாதகி நட்சத்திர ஸ்தானம் பெற்று அவ்வகையில் அதிர்ஷ்டசாலியாக திகழ முடியும்.
4. லக்னம்
எதுவானாலும் சரி சுக்கிரன் 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக கலைத்துறை
ஓன்றில் பாண்டித்யம் பெற்று அதனால் மற்றோரை பரவசபடுத்துகின்ற ஆற்றல் அமைந்து அவ்வகை
5. யில் அதிர்ஷ்டம்
பெற முடியும்.
6. பொருட்களை
வாங்குவதும், விற்பதும் இன்றைய வாழ்வியலில் முக்கியமான தொழில் ஆகும். இந்த தொழில் வளமையை
ஏற்படுத்துவார் சுக்கிரன்.
7. சுக்கிரன்
பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றிகிடைக்கும். ஓருவரது ஜாதகத்தில் சுக்கிரன் தசாகாலம்
நடக்கும் போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு
வழிவகுப்பார்.
8. குறிப்பிட்ட
ஓரு நபரை பார்த்து இவர் ஜென்டில்மேன் என்று சொன்னால் அவர் ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக
அமைந்துள்ளார் என்று அர்த்தம்.
9. லக்னத்திற்க்கு
4ல் ஆட்சி, உச்சம், நட்புப்பெற்று அமர்ந்தால் வண்டி, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து
ஆகியவை அற்புதமாக அமையும்
10. சுக்கிரன்
ஆட்சி - ரிஷபம், துலாம்
11. உச்சம் - மீனம்
12. நீசம் - கன்னி
13. பகை - கடகம்,சிம்மம்.
14. நட்புக் கிரகங்கள் : புதன், சனி, ராகு, கேது
15. பகைக் கிரகங்கள் : சூரியன், சந்திரன்,
16. சமக் கிரகம் : செவ்வாய்,
குரு,
சனிபகவான்
1. மகர ராசிக்கும்,
கும்ப ராசிக்கும் அதிபதி.
2. சனிபகவான்
நட்சத்திரங்கள் - அனுஷம், பூசம், உத்திரட்டாதி.
3. நீசம்
பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார்.
4. உச்சம்
பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார்.
5. சனிபகவான்
பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும் இடமான
3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.
6. நீண்ட
கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். வாகனம் காகம்.
7. ஓருவர்
ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில் இருந்தால் வாத நோயை
ஏற்படுத்தும். சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும் பெறவாய்ப்பு உண்டு.
8. ஜாதகத்தில்
நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும் வாய்ப்பு உண்டு.
வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம், பெரிய இயந்திர தொழிற்சாலை,
தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன்.
9. சனிபகவான்
பலம் பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும்
வாரி வழங்குவார்.
10. சனி ஆட்சி-
மகரம் ,கும்பம்.
11. உச்சம் - துலாம்
12. நீசம் - மேஷம்
13. பகை - கடகம்,
சிம்மம் விருச்சிகம்.
14. நட்புக் கிரகங்கள் : புதன், சுக்கிரன், ராகு, கேது
15. பகைக் கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்
16. சமக் கிரகம் : குரு
இராகு
1.
இராகு நட்சத்திரங்கள் - சதயம், சுவாதி, திருவாதிரை.
2. இவருக்கு
சொந்த வீடுகள் கிடையாது. எந்த நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த
பலன்களை வழங்குவார். இராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி.
3. சனியை
போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு
நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார்
4. இராகு.
7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார்.
5. இராகு
சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில்
இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார்.
6. பலமிழந்த
இராகு - ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக
அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு
பலமே காரணம்.
7. இராகு
லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார்.
6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.
8. நட்புக் கிரகங்கள் : சுக்கிரன், சனி.
9. பகைக் கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்
10. சமக் கிரகம் : குரு
புதன்,
கேது
1.
கேது நட்சத்திரங்கள் - அஸ்வினி, மகம், மூலம்
2. இவருக்கு
ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்க்கும், எந்த ஓரு
பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும் காரகத்துவம் உள்ளது கேது.
3. எளிமை,
கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும் கேதுவே. வியாதியில்
இருந்து நிவாரணம் தருவதும், பகைவரை முறியடிக்க செய்வதும் கேது.
4. கோபத்தில்
நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம். கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை என்பது ஜோதிட
பழமொழி.
5. விபத்துகளையும்.
தாகாத சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம், விருச்சிகத்தில் உச்சம்.
பஞ்ச பூதங்களில் ஜலம். கேது ஞானமாரக்கத்தில் ஆன்மீகத்தை வழங்குபவர்.
6. நட்புக் கிரகங்கள் : சுக்கிரன், சனி.
7. பகைக் கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்
8. சமக் கிரகம் : குரு
புதன்,
கிரகங்களின் தத்துவம்
ஆண்
ராசிகள் ,ஒற்றைப்படை ராசிகள் - மேஷம்,
மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்.
பெண்
ராசிகள் இரட்டைப்படை ராசிகள் - ரிஷபம்,
கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்.
ஆண்
கிரகங்கள் - சூரியன்,செவ்வாய்,குரு
பெண்
கிரகங்கள் - சந்திரன் ,சுக்ரன்,ராகு
அலி
கிரகங்கள் - புதன்,சனி,கேது
கிரகங்களின்
நாடி
1.
குரு,
புதன், சனி - வாத நாடி
2.
சூரியன்,
செவ்வாய், - பித்த நாடி
3.
ராகு,
கேது,சுக்ரன், சந்திரன் - சிலேஷ்ம நாடி
கிரகங்களின்
நிறம்
1.
சந்திரன்,
சுக்ரன், – வெண்மை நிறம்
2.
சூரியன்,
செவ்வாய், கேது – சிவப்பு நிறம்
3.
புதன்
– பச்சை
4.
குரு
– மஞ்சள் நிறம் – பெண் நிறம்
5.
ராகு
– கருமை நிறம்
கிரகங்களின்
ரத்தினங்கள்
1.
சூரியன்
- மாணிக்கம்
2.
சந்திரன்
- முத்து
3.
செவ்வாய்
- பவளம்
4.
புதன்
- பச்சை
5.
குரு
- புஷ்பராகம்
6.
சுக்ரன்
- வைரம்
7.
சனி
- நீலம்
8.
ராகு
- கோமேதகம்
9.
கேது
- வைடூர்யம்
கிரகங்களின்
வாகனங்கள்
1.
சூரியன்
- மயில், தேர்
2.
சந்திரன்
- முத்து விமானம்
3.
செவ்வாய்
- (அன்னம்) செம்போத்து, சேவல்
4.
புதன்
- குதிரை, நரி
5.
குரு
- யானை
6.
சுக்ரன்
- (கருடன்) குதிரை, மாடு, விமானம்
7.
சனி
- காக்கை, எருமை
8.
ராகு
- ஆடு
9.
கேது
– சிம்மம்
கிரகங்களின்
தன்மை
1.
செவ்வாய்,
சந்திரன், ராகு, கேது – சரக் கிரகங்கள்
2.
சூரியன்,
சுக்ரன் – ஸ்திரக் கிரகங்கள்
3.
புதன்,
குரு, சனி – உபயக் கிரகங்கள்
கிரகங்களின்
நட்பு வீடுகள்
1.
சூரியன்
– விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்
2.
சந்திரன்
– மிதுனம், சிம்மம், கன்னி.
3.
செவ்வாவ்
– சிம்மம், தனுசு, மீனம்
4.
புதன்
- ரிஷபம், சிம்மம், துலாம்.
5.
குரு
- மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்.
6.
சுக்ரன்
– மிதுனம், தனுசு, மகரம், கும்பம்.
7.
சனி
– ரிஷபம், மிதுனம்.
8.
ராகு,
கேது – மிதுனம், கன்னி,துலாம், தனுசு, மகரம், மீனம்.
கிரகங்களின்
பகை வீடுகள்
1.
சூரியன்
- ரிஷபம், மகரம், கும்பம்
2.
செவ்வாய்
- மிதுனம், கன்னி
3.
புதன்
- கடகம், விருச்சிகம்
4.
குரு
- ரிஷபம், மிதுனம், துலாம்
5.
சுக்ரன்
- கடகம், சிம்மம், தனுசு
6.
சனி
- கடகம், சிம்மம், விருச்சிகம்
7.
ராகு,
கேது - கடகம், சிம்மம்
8.
சந்திரன்
- எல்லா வீடுகளும் நட்பு (பகை கிடையாது)
கிரகங்களின்
சமித்துக்கள்
1.
சூரியன்
- எருக்கு
2.
சந்திரன்
- முருக்கு
3.
செவ்வாய்
- கருங்காலி
4.
புதன்
- நாயுருவி
5.
குரு
- அரசு
6.
சுக்ரன்
- அத்தி
7.
சனி
- வன்னி
8.
ராகு
- அறுகு
9.
கேது
- தர்ப்பை
கிரகங்களின்
சுவைகள்
1.
சந்திரன்
- உப்பு
2.
குரு
- தித்திப்பு
3.
சுக்ரன்
- புளிப்பு
4.
சூரியன்
- கார்ப்பு
5.
செவ்வாய்
- எரிப்பு, உறைப்பு
6.
புதன்
- உவர்ப்பு
7.
சனி
- கைப்பு
8.
ராகு
- கைப்பு
9.
கேது
- உறைப்பு
கிரகங்களின்
திக்குகள்
1.
சூரியன்
- கிழக்கு
2.
சந்திரன்
- வாயுமூலை (வடமேற்கு)
3.
செவ்வாய்
- தெற்கு
4.
புதன்
- வடக்கு
5.
சுக்ரன்
- ஆக்னேயம் (தென்கிழக்கு)
6.
குரு
- ஈசான்யம் (வடகிழக்கு)
7.
சனி
- மேற்கு
8.
ராகு
- தென்மேற்கு
9.
கேது
– வடமேற்கு
கிரகங்களின்
தெய்வங்கள்
1.
சூரியன்
- சிவன்
2.
சந்திரன்
- பார்வதி
3.
செவ்வாய்
- சுப்ரமண்யர்
4.
புதன்
- விஷ்ணு
5.
குரு
- பிரம்மா, தக்ஷிணாமூர்த்தி
6.
சுக்ரன்
- லக்ஷ்மி, (இந்திரன்), வருணன்
7.
சனி
- யமன், சாஸ்தா
8.
ராகு
- காளி, துர்கை, கருமாரியம்மன்
9.
கேது
- விநாயகர், சண்டிகேச்வரர்
மறைவு
1.
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது – லக்னத்துக்கு 8,
12-ல் இருந்தால் மறைவு.
2.
சந்திரன், புதன், குரு
– லக்னத்துக்கு 3, 6,
8, 12-ல் இருந்தால் மறைவு.
3.
சுக்ரன் லக்னத்துக்கு
3, 8-ல் மட்டும் இருந்தால் மறைவு. 6, 12-ல்
இருந்தால் மறைவு இல்லை.
சில ஜோதிட உண்மைகள்
1.
மேஷம் மற்றும் விருச்சிக
ராசியில்பிறந்தவர்கள் ஆழ்ந்த பாசத்துடன் இருப்பார்கள்.அதே சமயம் கடும் கோபத்துடன் இருப்பார்கள்.இவர்கள்
யாரை நேசிக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமகோபத்தைக்காட்டுவார்கள் இவர்கள் நிறைய ஜோக்
அடிப்பார்கள்.பேச்சில் இவர்களிடம் தோற்றுத்தான் போகவேண்டும்.இவர்களிடம் ரகசியம் சிறிதும்
தங்காது.
2.
ரிஷபம் மற்றும் துலாம்
ராசியில்பிறந்தவர்கள் தன்னை அழகுபடுத்திக்கொள்வதிலும் தன்னலத்திலும் ஆர்வமுள்ளவர்களாக
இருப்பார்கள்.எப்போதும் ஜாலியாக இருப்பதை இவர்கள் விரும்புவார்கள்.
3.
மிதுனம் ராசியில்
பிறந்தவர்கள் பிடிவாதகுணத்துடன் இருப்பார்கள்.இதில் புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு
ஓரளவு நற்குணங்கள் இருக்கும்.
4.
கடக ராசியில் பிறந்தவர்கள்
இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள்.இதில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் நாம் ஒவ்வொருவரும்
நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.இவர்களுக்கு ரிஷபராசியின் குணங்கள் நிறைய இருக்கும்.
5.
சிம்ம ராசியில்
பிறந்தவர்கள் அதிகாரம் செய்வதிலும்,சிறந்த நிர்வாகத்திறமையும் கொண்டவர்கள்.இவர்களுக்கு
எப்போதும் மேஷ விருச்சிக கும்ப ராசியினர் பக்க பலமாக இருப்பார்கள்.
6.
கன்னி ராசியில்
பிறந்தவர்கள் அஸ்தம் நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் போல சுயநல சொரூபிகள் இந்த உலகத்திலேயே
கிடையாது.மற்ற நட்சத்திரங்களான உத்திரம், சித்திரையில் பிறந்தவர்கள் ஆணெனில் பெண்ணாலும்
பெணெனில் ஆணாலும் எப்போதும் நன்மை உண்டு.
7.
தனுசு ராசியில்
பிறந்தவர்கள் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கப்பிறந்தவர்கள்.மாநிறமாகவும்
ஓரளவு குண்டாகவும் இருப்பார்கள்.சாமர்த்தியமாக பேசுவதில் திறமைசாலிகள்.
8.
மகரம்,கும்பம்
ராசியில் பிறந்தவர்கள் தர்மம் நீதி நியாயம் இவற்றிற்காக தன் குடும்பம் , வேலை, தொழில்
என அனைத்தையும் இழக்கத்தயாராக இருப்பார்கள்.இவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தை அனுபவிக்கப்பிறந்துள்ளனர்.
உலகின் 100 கோடீஸ்வரர்களில் 80 பேர் மகரராசியில் பிறந்திருப்பர்.
9.
கும்பராசி அகத்தியமகரிஷி
பிறந்த ராசியாகும்.கோபுரகலசத்திற்குள் என்ன இருக்கும்? யாருக்கும் தெரியாது.அதுபோல
இந்த ராசியினர் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.இவர்கள்
மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.இவர்களுக்கு எங்கும் எப்போதும் புகழ் உண்டு.
10. மீனராசியில் பிறந்தவர்களும் புண்ணியாத்மாக்களே! இவர்களிடம்
சிக்கனத்தை எதிர்பார்க்கக்கூடாது.
மேஷத்திற்கும்
கன்னிக்கும் ஆகாது.
விருச்சிகத்துக்கும்
கடகத்துக்கும் ஆகாது.
ரிஷபத்துக்கும்
மேஷத்துக்கும் ஒரளவே சரிப்படும்.
கடகத்துக்கும்
கன்னிக்கும் சூப்பராக ஒத்துப்போகும்
கிரஹங்கள்
அடுத்த ராசிகளின் பார்வை
ஒரு ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்போது, அதை விட்டுப்
போவதற்குமுன்பே அடுத்த ராசிகளைப் பார்ப்பார்கள். கிரஹங்கள், தாங்கள் இருக்கும் ராசியிலிருந்து
அடுத்த ராசிக்கு மாறுமுன், அந்தந்த அடுத்த ராசியின் குண விசேஷங்களை முன்னதாகவே அடையப்பெற்று,
அதற்குத் தகுந்தவாறு அடுத்த ராசியின் பலாபலன்களை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
1. சூரியன்
- 5 நாள்
2. புதன்,
சுக்ரன் - 7 நாள்
3. செவ்வாய்
- 8 நாள்
4. குரு - 2 மாதம்
5. ராகு,
கேது - 3 மாதம்
6. சனி - 6 மாதம்
ராகு, கேது இவைகள் கிரஹங்கள் அல்ல. இவைகள் சாயா கிரஹங்கள். மற்ற
ஏழு கிரஹங்களை வைத்துதான் ஜோதிட பலன்களைக் கூறியுள்ளார். அவருக்குப் பிறகு தோன்றிய
ஜோதிட மேதைகள்தான் ராகு கேதுகளையும் சேர்த்து ஒன்பது கிரஹங்களாகக் கருதி பலன்களைச்
சொல்லியுள்ளார்கள். ராகு கேது எப்பொழுதும் ஒன்றுக்கொன்று சமசப்தமத்தில் அதாவது 180
பாகைகளில் இருக்கும். ராகு கேதுகளுக்கு சொந்த வீடும் கிடையாது; பார்வைகளும் இல்லை எனப்
பலர் கருதுகிறார்கள். இக்கிரஹங்கள் எந்த ராசியில் உள்ளனவோ, எந்த கிரஹத்தோடு கூடி உள்ளனவோ
அல்லது எந்த கிரஹங்களின் பார்வைகளைக் கொண்டு உள்ளனவோ அக்கிரஹங்களின் தத்துவங்களைக்
கொண்டுதான் பலாபலன்களை அளிப்பார்கள். சூரிய சந்திரர்கள் தன்னைக் காட்டிக் கொடுத்ததால்
இவர்களுக்கு ராகு கேதுவினால் பலத்த பகைமை ஏற்படுகிறது. இந்த சாயா கிரஹங்களுடன் சேர்ந்த
எந்த கிரஹமும் தோஷத்தை அடைகிறது. முக்கியமாக சூரியனுக்கு ராகுவும் சந்திரனுக்குக் கேதுவும்
பலத்த தோஷம் உண்டாக்குகின்றன.
கிரகங்களின்
பார்வை
எல்லா கிரகங்களும், தான் இருக்கும் இடத்திலிருந்து 7-வது வீட்டைப்
பார்ப்பார்கள்.
1. செவ்வாய், தான்
இருக்கும் இடத்திலிருந்து 4, 7, 8 வீடுகளைப் பார்க்கும்
2. குரு, தான்
இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 வீடுகளைப் பார்ப்பார்.
3. சனி, தான்
இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார்.
கிரகங்கள்
ராசியில் சஞ்சரிக்கும் கால அளவுகள்
1. சூரியன் ஒவ்வொரு
ராசியிலும் 1 மாதம் சஞ்சரிப்பான்.
2. சந்திரன் ஒவ்வொரு
ராசியிலும் 2 1/4 நாள் சஞ்சரிப்பான்.
3. செவ்வாய் ஒவ்வொரு
ராசியிலும் 1 1/2 மாதங்கள் சஞ்சரிப்பான்.
4. புதன் ஒவ்வொரு
ராசியிலும் 1 மாதம் சஞ்சரிப்பான்.
5. குரு ஒவ்வொரு
ராசியிலும் 1 வருஷம் சஞ்சரிப்பான்.
6. சனி ஒவ்வொரு
ராசியிலும் 2 1/2 வருஷங்கள் சஞ்சரிப்பான்.
7. ராகு ஒவ்வொரு
ராசியிலும் 1 1/2 வருஷங்கள் சஞ்சரிப்பான்.
8. கேது ஒவ்வொரு
ராசியிலும் 1 1/2 வருஷங்கள் சஞ்சரிப்பான்.
9. சுக்ரன் ஒவ்வொரு
ராசியிலும் 1 மாதம் சஞ்சரிப்பான்.
(வக்ரம், அதிசாரம், ஸ்தம்பனம் காரணமாக ராசியில் சஞ்சார கால அளவுகள்
மாறும்) கிரஹத் தன்மை (சர-ஸ்திர-உபயம்)
கிரகங்கள்
பலன் தரும் காலங்கள்
சூரியன்,
செவ்வாய், கிரகங்கள் ஆரம்ப காலத்திலேயே பலன்களைக் கொடுப்பார்கள்.
சந்திரன்,
புதன் கிரகங்கள் அவர்கள் காலம் முழுவதும் பலன்களைக் கொடுப்பார்கள்.
குருவும்,
சுக்ரனும் அவர்கள் காலத்தின் மத்தியில் பலன்களைக் கொடுப்பார்கள்.
சனி,
ராகு, கேது (பிற்கூரிலே) பலனைக் கொடுப்பார்கள்.
கிரகங்களின்
மார்க்கம்
1. சூரியன்,
சந்திரன், செவ்வாய், குரு, சனி, புதன், சுக்ரன் ஆகிய 7 கிரகங்களும் ராசியைப் நேர்புறமாக சுற்றி வருவார்கள்
(clockwise).
2. ராகு,
கேது கிரஹங்கள் எதிர்ப்புறமாகச்
சஞ்சாரம் செய்வார்கள் (anti-clockwise).
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT