நவகிரகங்களுக்கென அமைந்துள்ள கோயில்கள் :
சூரியன் - சூரியனார் கோவில் :
சூரியனால் உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் பலவித நோய்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை வரும். ஒருவர் ஜாதகத்தில் சூரியன் மிக வீக்காக இருந்தால் இங்கு சென்று வ்ழிபடலாம்.கும்பகோணம் அருகே ஆடுதுறை என்ற இடத்தில் சூரியனார் கோவில் உள்ளது.
சந்திரன் -
திங்களூர் கைலாசநாதர் கோயில் :
சந்திரனுக்கு உரிய ஸ்தலம் இது.இது தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது. சந்திரன் மனோகாரகன் எப்போதும் குழப்பநிலையில் வைத்திருப்பவன். ஜாதகத்தில் சந்திரன் வீக்காக இருப்போர் இங்கு சென்று வழிபாடு செய்யலாம்.
செவ்வாய் - சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் :
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் வீக்காக இருந்தால் இரண்டு மனைவிகள் அமைவதற்க்கு கூட வாய்ப்புண்டு அப்படிப்பட்டவர்கள் கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய்க்கு உள்ள தனி சன்னதியில் வழிபாடு செய்யவேண்டும்.
புதன் - திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் :
பூம்புகார் அருகிலேயே திருவெண்காடு அமைந்துள்ளது இங்குதான் புதன் ஸ்தலம் உள்ளது. குழந்தையில்லாதவர்கள்.சரியாக படிக்காத குழந்தைகள் இங்கு வேண்டிக்கொள்வது சிறப்பு.
குரு பகவான் -ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் :
இவருக்கு கோவில் கும்பகோணத்தில் இருந்து 17 கிமீ தூரத்தில் ஆலங்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள சிவன்கோவிலில் தனிசன்னதி உள்ளது.குருபெயர்ச்சியன்று இக்கோவிலில் கூட்டம் அலைமோதும் குருபகவானை வியாழக்கிழமையன்று இங்கு வழிபட்டால் மிகுந்த நலம் பயக்கும் கும்பகோணம் நகரத்திற்க்கு வந்து அங்கிருந்து செல்வது சிறந்தது.
சுக்கிரன் : கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் :
ஒருவர் ஜாதகத்தில் வறுமை நிலை தாண்டவமாடுபவர்கள் செல்வசெழிப்பை பெறுவதற்காக சுக்கிரவ்ழிபாடு செய்யப்படுகிறது. சூரியனார் கோவிலில் இருந்து 6கிமீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
சனீஸ்வரர் - திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் :
சனீஸ்வரருக்கு சன்னதி காரைக்கால் அருகே திருநள்ளாறுவில் அமைந்துள்ளது நளமகராஜாவுக்கு சனிதோஷம் நீங்கிய இடமிது.பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து அருகில் உள்ளது.கும்பகோணம் அல்லது நாகப்பட்டினத்தில் இருந்து செல்வது சிறந்தது.
ராகு - திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் :
ராகு தோஷம் மிககொடிய தோஷம் சிலருக்கு சீக்கிரம் திருமணமாகாது திருமணமானாலும் குழந்தை உண்டாவதில் சிக்கல்.மேலும் கால சர்ப்பதோஷம் எனசொல்லக்கூடிய தோஷமானது ஒருவரை ஆயுள் வரை நிம்மதி இழக்கவைத்து விடும் இப்படிப்பட்ட துன்பங்கள் உடையோர் ராகு கேது தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ராகு காலத்திலும் குறிப்பாக வெள்ளி ஞாயிறு அன்று ராகு காலத்தில் நடக்கும் சிறப்புபூஜையில் கலந்து கொண்டால் ராகுதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.ராகுவுக்கு கும்பகோணத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருநாகேஸ்வரம் சிறப்பான தலமாகும்.
கேது - கீழ்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் :
கேதுவுக்கு உரிய பரிகாரம் மேற்கொள்வோர் நாகை மாவட்டம் பூம்புகார் அருகேயுள்ள கீழ்பெரும்பள்ளம் என்ற இடத்தில் உள்ள கேது ஸ்தலத்தில் வழிபாடு செய்வது கேதுவினால் ஏற்படும் கடும் துன்பங்களை குறைக்கும்.
=====================================
இது பொதுவான பலன்களே :
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT