9TH- STD - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி -

1.    பல்வேறு வகையான அரசாங்கங்கள்:

          1.    உயர் குடியாட்சி

          2.    முடியாட்சி

          3.    தனிநபர் ஆட்சி

          4.    சிறு குழு ஆட்சி

          5.    மதகுருமார்கள் ஆட்சி

          6.    மக்களாட்சி

          7.    குடியரசு

2.    ஆட்சி அதிகாரத்தில் அதிகாரம், சிறு, சிறப்புரிமைகள் பெற்ற ஆளும் வர்க்கத்தினரிடம் காணப்படுவது - உயர்குடி ஆட்சி.

3.    உயர்குடி ஆட்சி நாடுகள் . கா- இங்கிலாந்து, ஸ்பெயின்.

4.    ஒரு நபர், வழக்கமாக அரசரால் அமைக்கப்படும் அரசாங்கம்  - முடியாட்சி.

5.    முடியாட்சி நாடுகள் . கா- பூட்டான், ஓமன், கத்தார்.

6.    முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கம் - தனிநபர் ஆட்சி.

7.    தனிநபர் ஆட்சி . கா- வடகொரியா, சவுதி அரேபியா.

8.    மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டை () அமைப்பை கட்டுப்படுத்துவது - சிறு குழு ஆட்சி.

9.    சிறு குழு ஆட்சி . கா - முன்னாள் சோவியத் யூனியன், சீனா வெனிசூலா, வடகொரியா.

10.   மதகுருமார்கள் தம்மை கடவுளாக () கடவுளின் பெயரால் மத குருமார்களால் அமைக்கப்படும் அரசாங்கம் - மதகுருமார்கள் ஆட்சி.

11.   மத குருமார்களின் ஆட்சி . கா- வாட்டிகன்.

12.   ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட ஒரு தனி நபரோ () குழுவாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கம்மக்களாட்சி.

13.   மக்களாட்சி நாடுகள் . கா-இந்தியா,அமெரிக்கா ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்.

14.   மக்களிடம் () அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இடம் உயரிய அதிகாரம் இருக்கின்ற அரசாங்க முறை-குடியரசு.

15.   குடியரசு நாடுகள் . கா - இந்தியா ,ஆஸ்திரேலியா.

16.   பொ..மு 500 ம் ஆண்டு எந்த நாட்டில் முதன் முதலில் குடியரசு என்னும் சொல் வடிவமைக்கப்பட்டது- ரோம்.

17.   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமே ஆட்சி செய்யும் அமைப்புமக்களாட்சி.

18.   குடியரசு என்னும் சொல் Res publica எந்த மொழி சொல்லத்தின்.

19.   res publica என்பதன் பொருள் - பொது விவகாரம்.

20.   இந்திய அரசியலமைப்பு  ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - 1949 நவம்பர் 26.

21.   இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - 1950 ஜனவரி 26.

22.   மக்களாட்சி DEMOS,CRATIA இரு சொற்கள் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது-கிரேக்கம்.

23.   ஒரு உண்மையான மக்களாட்சி 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது.இது கீழ்நிலையில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும் செயல்படுவதாகவும் எனக் கூறியவர்- மகாத்மா காந்தி.

24.   மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறியவர்- ஆபிரகாம் லிங்கன்.

25.   ஆபிரகாம் லிங்கன் எந்த நாட்டின்  ஜனாதிபதியாக இருந்தார்- அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

26.   உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகாக சுயாட்சி பெற்ற கிராம குழுக்கள் பண்டைய காலத்தில் இருந்தது என்னும் செய்தியை கூறும் நூல் - அர்த்தசாஸ்திரம்.

27.   அர்த்தசாஸ்திரம் நூல் ஆசிரியர்சாணக்கியர்.

28.   தமிழகத்தில் யாருடைய ஆட்சிக் காலத்தில் குடவோலை முறை இருந்தது-பிற்கால சோழர்கள்.

29.   நாடாளுமன்ற அரசாங்க முறை நடத்தப்படும் நாடுகள் - இந்தியா, இங்கிலாந்து.

30.   அதிபர் அரசாங்க முறை நடத்தப்படும் நாடுகள் - அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ், ரஷ்யா, இலங்கை.

31.   மக்களாட்சியின் வகைகள்-2.

          1.    நேரடி மக்களாட்சி.

          2.    மறைமுக மக்களாட்சி -  பிரதிநிதித்துவ மக்களாட்சி.

32.   நேரடி மக்களாட்சி முறை நடத்தப்படும் நாடுகள் - பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து.

33.   மறைமுக மக்களாட்சி முறை நடத்தப்படும் நாடுகள் - இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து.

34.   1912-1913 புது தில்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டிடத்தை வடிவமைத்த பிரிட்டிஷ் கட்டிடக்கலைஞர்கள்- எட்வின் லுட்டியன்ஸ் , ஹெர்பர்ட் பேக்கர்.

35.   நாடாளுமன்றக் கட்டிடத்தை 1921 ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1927 ம் ஆண்டு முடித்தனர்.

36.   மக்களவை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பிரதமர் அமைச்சரை நியமிப்பவர்- குடியரசுத் தலைவர்.

37.   நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள்  எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் - 5.

38.   மக்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2 . ஆங்கிலோ-இந்தியர்கள்.

39.   மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை- 12. (கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை, விளையாட்டு).

40.   இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மக்களவையின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு- 1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21- வரை.

41.   முதல் மக்களவை பொதுத் தேர்தலில் 489 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது- 364 இடங்கள்.

42.   சுதந்திர இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் - ஜவஹர்லால் நேரு.

43.   பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு- 1920.

44.   இந்திய மக்களாட்சி எதிர்கொள்ளும்  முக்கிய சவால்கள்:

          1.    கல்வியறிவின்மை

          2.    வறுமை

          3.    பாலினப் பாகுபாடு

          4.    பிராந்தியவாதம்

          5.    சாதி, வகுப்பு, சமய வாதங்கள்

          6.    ஊழல்

          7.    அரசியல் குற்றமயமாதல்

          8.    அரசியல் வன்முறை

45.   ஒரு சமூகத்தை நிர்வகிக்கும் அமைப்பு- அரசாங்கம்.

46.   ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறைமுடியாட்சி.

47.   ஏதன்ஸ் உட்பட பண்டைய கிரேக்க நாட்டின் ஒருசில நகர அரசுகளில், எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது2500.

48.   இந்தியாவில் மக்களாட்சி முறை அமைப்புகள் இருந்த காலம்-வேதகாலம்.

49.   இந்தியாவில் மக்களாட்சி ஐந்து முக்கிய கொள்கைகள்:

          1.    இறையாண்மை

          2.    சமதர்மம்

          3.    மதச்சார்பின்மை

          4.    மக்களாட்சி

          5.    குடியரசு

50.   நாடாளுமன்றம் எத்தனை அவைகளை கொண்டது: 2.

          1.    மக்களவை /கீழவை / லோக்சபா.

          2.    மாநிலங்களவை / மேலவை / ராஜ்யசபா.

51.   இந்தியாவில் பொதுத் தேர்தலை நடத்துவது - இந்திய தேர்தல் ஆணையம்.

52.   அன்னிய அதிகாரத்தின் கட்டுப்பாடோ இடையூறோ இல்லாதிருப்பதுஇறையாண்மை.

53.   குடவோலை முறையை பின்பற்றியவர்கள்சோழர்கள்.

54.   பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்ட பகுதி - பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்.

55.   மக்களாட்சி தோன்றிய நாடுஏதேன்ஸ்.

56.    டெமோகிரஸிஎன்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது- கிரேக்கம்.

57.   மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்மக்கள்.

58.   உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு- இந்தியா.

59.   வாக்குரிமையின் பொருள் - வாக்களிக்கும் உரிமை.

60.   அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது - அரசியல் சமத்துவம்.

61.   இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல்  பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு- 1951-1952.

62.   இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 1949 நவம்பர் - 26.

63.   நேரடி மக்களாட்சிக்கு ஒரு .காசுவிட்சர்லாந்து.

64.   இந்தியா மறைமுக மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.

65.   பொருத்துக:

          1.    தனிநபராட்சி - வடகொரியா

          2.    வாக்குரிமை - 18

          3.    சாணக்கியர் - அர்த்தசாஸ்திரம்

          4.    மதகுருமார்கள் ஆட்சி- வாடிகன்

 

 

https://www.a2ztnpsc.in/