சந்திரனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

ஒரு மனிதனின் ஜாதகத்தில் பத்தாம் இடத்திற்க்குரியவனாக சந்திரனோ, பத்தாம் இடத்திற்கு உரியவன் உள்ள இடமானது சந்திரனின் வீட்டுக்கு உரியதாகவோ அமைந்திருந்தது என்றால் அது சந்திரனின் காரகத்துவத்தை பெற்றது என்று கூறலாம்.

சந்திரன் வெண்மையானவன். எனவே வெள்ளை நிறமுடைய பொருட்களை கொண்டு எந்த வியாபாரம் செய்தாலும் அது வெற்றியாக அமையும்.

1.   முத்து வியாபாரம்

2.   உப்பு வியாபாரம்

3.   சுண்ணாம்பு வியாபாரம்

4.   சங்கு வியாபாரம்

5.   மீன் பிடித்தல்

6.   பால், தயிர், மோர், வெண்ணை வியாபாரம்

7.   படகு, பரிசல்

8.   டிராவல் ஏஜென்சி

9.   வேளாண்மை

10. நீர்பாசன துறை வேலைகள்

11. ஈரப்பசையுள்ள பழவகை வியாபாரம்

12. பெண்கள் விருப்பப்படும் எந்த தொழிலையும் செயாலாம்.

13. பேன்சி ஸ்டோர்

14. தங்கம், வெள்ளி மற்றும் கவரிங் கடைகள்

15. சீட்டு பிடிகலாம்

16. அரசாங்க துறையில் வேலை கிடைக்கும், முயன்றால் பெறலாம்

17. டாக்டர் ஆகலாம்

18. புகழ்பெற்ற நடிகர்கள் ஆகலாம்

19. ஜோதிடம் கற்று தொழில் செய்யலாம்

20. எழுத்தாளர், பாடலாசிரியர் ஆகலாம்

21. எதற்கும் தகுதியற்றவராக கருதபடகூடியர் கூட சில பணக்கார வீடுகளில் அவ்வீட்டின் பெண்கள் இடக்கூடிய வேலைகளை செய்யக் கூடிய வேலைக்காரர்களாக ஆகின்றனர்.

 

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.