10TH- STD - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்.

1.    ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில்  உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள்  மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பு - மொத்த  உள்நாட்டு உற்பத்தி (GDP).

          1.    பண்டங்கள் என்பது - தொட கூடிய பொருள்.

          2.    பணிகள் என்பது - தொட்டு உணர முடியாததது.

2.    எந்த ஒரு பண்ட, பணிகள்  அங்காடியின் மதிப்பில் சேர்க்கப்படுகிறதோ அது -மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும் (GDP).

3.    நுகர்வுக்காக () பயன்பாட்டுக்காக உள்ள பண்டங்கள் மற்றும் பணிகள்-இறுதி நிலை பண்டங்கள் மற்றும் பணிகள்.

4.    எந்த பண்டங்கள் மற்றும் பணிகள்  மற்றொரு பண்ட பணிகளை உற்பத்தி செய்ய பயன்படுகிறதோ மற்றும் மற்ற பண்ட பணிகளை உற்பத்தி செய்ய ஒரு பகுதியாகிறதோ அதுஇடை நிலை பண்டங்கள்என்று கூறியவர்கள் - டைலர்  கோவன் , அலெக்ஸ் டாபர்ராக் .

5.    மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்த பண்டங்கள் மட்டும் சேர்க்கப்படுகிறது- இறுதிநிலை பண்டங்கள்.

6.    மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிட எந்த பண்டங்களை கணக்கில் எடுப்பதில்லை- இடைநிலை பண்டங்கள்.

7.    இடை நிலை பண்டத்தின் மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால், அதன் விளைவு - இரு முறை கணக்கிடுதல்.

8.    அந்தநாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்)  உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு  முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும் - மொத்த நாட்டு உற்பத்தி (GNP).

9.    மொத்த நாட்டு உற்பத்தி (GNP) = C + I + G + (X - M) + NFIA.

          1.    C - நுகர்வோர்

          2.    I - முதலீட்டாளர்

          3.    G - அரசு செலவுகள்

          4.    X - M- ஏற்றுமதி - இறக்குமதி

          5.    NFIA - வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்.

10.   ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல்  எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால்  உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்) களின் மொத்த மதிப்பே-மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP).

11.   மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும்  பண மதிப்பு - நிகர நாட்டு உற்பத்தி (NNP).

12.   நிகர நாட்டு உற்பத்தி (NNP) = மொத்த நாட்டு உற்பத்தி (GNP) - தேய்மானம்.

13.   மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தைக் கழித்து பின் கிடைப்பது - நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP).

14.   நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) – தேய்மானம்.

15.   மக்களின் வாழ்க்கைத்  தரத்தை உணர்த்தும் ஒரு கருவி- தலா வருமானம் .

16.   நாட்டு  வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன்  மூலம் கிடைப்பது - தலா வருமானம்() தனி நபர்  வருமானம்.

17.   தலா வருமானம்(PCI) =    

18.   1867-68 ல்  முதன் முதலாகஇந்தியாவின்  வறுமை மற்றும் ஒரு  பிரிட்டிஷ்யில்லா ஆட்சிஎன்ற புத்தகத்தில் தனி நபர்  வருமானத்தைப் பற்றி முதன் முதலாக கூறியுள்ளவர்- தாதாபாய் நௌரோஜி.

19.   நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள்  மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம்  அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானம் - தனிப்பட்ட வருமானம் (PI).

20.   தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு  செலவிடப்படுகின்ற வருமானம்- செலவிடத் தகுதியான வருமானம் (DI).

21.   இந்தியாவின் GDP எத்தனை வகையில் கணக்கிடப்படுகிறது: 2.

          1.    காலாண்டு

          2.    ஆண்டு தோறும்

22.   இந்தியாவின் நிதியாண்டை எத்தனை காலாண்டுகளாக GDP மதிப்பிடுகிறது: 4.

          1.    முதல் காலாண்டு               Q1 : ஏப்ரல், மே, ஜுன்.

          2.    இரண்டாம் காலாண்டு        Q2 : ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர்.

          3.    மூன்றாவது காலாண்டு      Q3 : அக்டோபர், நவம்பர், டிசம்பர்.

          4.    நான்காவது காலாண்டு       Q4 : ஜனவரி, பிப்ரவரி, மார்ச்.

23.   ஒரு  நிதியாண்டு - ஏப்ரல் 2020 முதல் 31 மார்ச் 2021 வரை.

24.   ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்கின்ற அனைத்து இறுதிப் பண்ட பணிகளின் பண மதிப்பை குறிக்கும்- மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP).

25.   மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) = C + I + G + (X - M).

          1.    C – நுகர்வோர்

          2.    I – முதலீட்டாளர்

          3.    G – அரசு செலவுகள்

          4.    (X-M) ஏற்றுமதிஇறக்குமதி.

26.   1934 ல் யாரால் GDP- யின் நவீன கருத்து முதன் முதலில் உருவாக்கப்பட்டது- சைமன் குஸ்நட்.

27.   மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள்-3

          1.    செலவின முறை.

          2.    வருமான முறை.

          3.    மதிப்பு கூட்டு முறை.

28.   ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப் பண்ட  பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின்  கூட்டுத் தொகை- செலவின முறை.

29.   செலவுகள் இச்சமன்பாடு  Y = C + I +G + (X - M).

30.   பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி  செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிடும்போது கிடைப்பது - வருமான முறை.

v  வருமான முறையில் GDP = கூலி + வாரம் + வட்டி + லாபம்.

31.   உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது - மதிப்புக் கூட்டு முறை.

32.   GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்லை.

33.   GDP அளவை மட்டும் அளவிடுகிறது தரத்தை அல்ல.

34.   GDP யில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறவில்லை.

35.   இந்திய பொருளாதாரம் எத்தனை துறைகளாகப் பிரிக்கப்படுகிறது: 3.

          1.    முதன்மைத் துறை (விவசாயத்துறை).

          2.    இரண்டாம் துறை (தொழில்துறை).

          3.    மூன்றாம் துறை (பணிகள் துறை).

36.   வேளாண் சார்ந்த நடவடிக்கைகள்  மற்றும் விவசாய  நடவடிக்கைகள் கால்நடை , பண்ணைகள், மீன் பிடித்தல், சுரங்கங்கள், காடுகள் வளர்த்தல், சோளம், நிலக்கரி போன்ற மூலப்பொருட்களை உற்பத்தி செய்கிற முறை - முதன்மைத் துறை.

37.   மூலப் பொருட்களை மாற்றியமைப்பதன்  மூலம் பண்டங்கள்  மற்றும் பணிகள் உற்பத்தி செய்யப்படுகின்ற முறை - இரண்டாம் துறை.

38.   இரும்பு மற்றும் எஃகு தொழில், ஜவுளித் தொழில், சணல், சர்க்கரை, சிமெண்ட், காகிதம், பெட்ரோலியம்,ஆட்டோமொபைல்ஸ் மற்றும் பிற சிறுதொழில்கள்- இரண்டாம் துறை.

39.   அரசு, அறிவியல் ஆராய்ச்சி,போக்குவரத்து, தகவல் தொடர்பு, வர்த்தகம், தபால் மற்றும் தந்தி,வங்கி, கல்வி, பொழுதுபோக்கு, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவை- மூன்றாம் துறை.

40.   இந்தியாவில்  மிகப்பெரிய துறை - பணிகள் துறை.

41.   விவசாய பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா - 2 வது பெரிய நாடு.

42.   உலகில் இந்தியா தொழில்துறையில் - 8 வது இடம்.

43.   பணிகள் துறையில் இந்தியா - 6 வது இடம்.

44.   ஒரு பொருளாதாரத்தில் ஒரு பகுதி, தொழில்  அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பே-மொத்த மதிப்பு கூடுதல் (GVA).

45.   GVA = GDP + மானியம்வரிகள் (நேர்முக வரி, விற்பனை வரி).

46.   அமர்த்தியா சென்:

          1.    பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஓர்  அம்சமாகும்.

          2.    பொருளாதார வளர்ச்சி மனிதனின் பொருள்சார் தேவைக்கு மட்டும் கவனம் செலுத்துகிறது.

          3.    ஐக்கிய நாடுகளின் பார்வையில், பொருளாதார வளர்ச்சி என்பது வாழ்க்கை தரம் உயர்தல் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துதலாகும்.

47.   இந்தியா மொத்த உள்நாட்டு  உற்பத்தியில், 2.8 டிரில்லியன் USD பெற்று உலகத்தில் - எத்தனையாவது தரவரிசையில் உள்ளது - 6.

48.   ஒரு பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு சரியானது - மனிதவள மேம்பாடு  குறியீடு (HDI).

49.   இந்தியா தனி நபர் வருமானத்தில்  - நடுத்தர வருவாய் நாடுகளின் பிரிவில் இடம் பிடித்துள்ளது.

50.   இந்தியால் பிறப்பின் போது எதிர்ப்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் - 65 ஆண்டுகள்.

51.   5 வயதுக்குட்பட்ட  44% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர்.

52.   1990 ம் ஆண்டு பாகிஸ்தானின்  முகஹப்உல். ஹிக் என்ற பொருளியல் அறிஞரால்  அறிமுகப்படுத்தப்பட்டது - மனித மேம்பாட்டுக் குறியீடு. (HDI)

53.   UNPயில் வெளியிடப்பட்ட சமீபத்தில்  மனித வளர்ச்சி மதிப்பீடுகளில் இந்தியா 189  நாடுகளில் - 130 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

54.   இந்தியாவின் 2017 ன்  HDIயின் மதிப்பு - 0.640.

55.   இந்திய பொருளாதாரம் என்பது:

          1.    வளர்ந்துவரும் பொருளாதாரம்.

          2.    தோன்றும் பொருளாதாரம்.

          3.    இணை பொருளாதாரம்

56.   1990  மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் -  GSI 266.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

57.   பூட்டானின் அரசாங்கத்தை வழிநடத்தும் ஒரு தத்துவம்- மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) .

58.   ஒரு மக்கள் தொகை கூட்டு மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை அளவிடப் பயன்படும் குறியீட்டை உள்ளடக்கியது- மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) .

59.   GNH என்பது பூட்டான் அரசியலமைப்பு 18 ஜுலை 2008ல் சட்ட பூர்வமாக்கி, பூட்டான் அரசு அமைத்துள்ளது.

60.   ‘GNH’ என்ற வார்த்தையை 1972ல் உருவாக்கியவர் - ஜிகமே சிங்கயே வாங்ஹக் என்ற பூட்டான் அரசர்.

61.   1990 புதிய பொருளாதாரக் கொள்கை- LPG அல்லது தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் , உலகமயமாக்கல்.

62.   வங்க தேசத்திற்கு பிறகு இந்தியா உலகத்தில் - 5 வது மிக வேகமாக வளர்ந்து வருகின்ற நாடு.

 

https://www.a2ztnpsc.in/