செவ்வாயின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

செவ்வாய் காரகத்துவம் பெற்ற கிரகமாக இருக்குமேயாயின், அவர்கள் பின்வரும் தொழில் செய்ய ஏற்றவர்களாக மாறுகின்றனர்.

1.   ரியல் எஸ்டேட் துறை இவர்களுக்கு சிறந்தது. வீடுகள், நிலபுலன்கள் விற்பனை செய்து வருமானம் பெறலாம்.

2.   எங்கெங்கு நெருப்பின் துணை அவசியமோ அங்கெல்லாம் இவர்கள் உண்டு. உதாரணமாக செங்கல் சூளை, கொள்ளுப்பட்டறைகள், மின் வாரியங்கள், பயங்கர கருவிகள் தயார் செய்யும் இடங்களில் இவர்களுக்கு வேலை கிடைக்கும். அல்லது இவர்களே அவ்வேலையை செய்வார்கள்.

3.   இவர்களில் மிகப்ப்ரும்பாலோர்க்கு சமையல் தொழில் செய்யத் தெரியும். ஹோட்டல் துறை இவர்களுக்கு வாய்க்கும்

4.   குயவர்கள் ஆகலாம்

5.   சிற்பிகள் ஆகலாம்

6.   ஓவியர் ஆகலாம்

7.   காவல்துறை / இராணுவத்தில் பனி கிடைக்கும்

8.   விளையாட்டு வீரர்கள் ஆகலாம்.

9.   சிலம்பம், குத்துசண்டை வீரர் ஆகலாம்.

10. பவள வியாபாரம்

11. மாயாஜாலம், ஏவல், பில்லி, சூன்யம் எல்லாம் சர்வ சதாரணமாக அமையும்

12. சர்கஸில் வேலை கிடைக்கும்

13. பெரிய தோப்புகள் மூலம் லாபம் பெறலாம்

14. விவசாயத்திற்கு ஏற்ற நிலத்தை குத்தகைக்கு விடுவதாலும், துவரைப்பயிரிடுவதாலும் நன்மை அடையலாம்.

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.