லக்னங்களின் பொது பலன்கள்

லக்னம் என்றால் என்ன:

ஒருவருடைய ஜாதகத்தில்என்று ஜோதிடர்கள் குறிப்பிட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். ‘எனப்படுவது லக்னத்தை குறிக்கும். ராசியானது ஒருவரின் ஜாதகத்தின் உடல் என்றால் லக்னமானது உயிர் ஆகும்.

லக்ன பலன்கள் என்றால் என்ன:

லக்னம் என்பது சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடபடுகிறது.

ராசி என்பது சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடபடுகிறது.

ஒருவர் பிறக்கும் நேரத்தில் வானில் எந்த ராசி உதயமாகி உள்ளதோ, அந்த ராசி வீடேலக்னம்எனப்படுகிறது.

லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை முழுமையாக அறிய முடியும். லக்னம் எனப்படும் இடம் தான் ஒரு ஜாதக கட்டத்தில் முதல் வீடு ஆகும். இதில் இருந்து தான் பன்னிரண்டு வீடுகளிலும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க முடியும். பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீடும் ஒருவரின் வாழ்கையின் ஒவ்வொரு துறையையும் முடிவு செய்கிறது.

லக்னம் தான் ஒருவரின் ஆளுமை, சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவரின் வாழ்க்கையில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. ராசி என்பது லக்னத்துக்கு உறுதுணை செய்யும் ஓர் அமைப்புதான். லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றது. இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும். அப்போதுதான், அது முழுமையான ஜோதிடப் பலனாக இருக்கும்.

லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

நமது பூமியானது 360 டிகிரி அளவுகொண்ட வான்வெளி பகுதியாகும். அந்த வான்வெளியை 12 சம பங்குகளாக, அதாவது தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாக நமது ஞானிகள் மற்றும் ரிஷிகள் பிரித்துள்ளனர்.

1.       மேஷ லக்னம்

2.       ரிஷப லக்னம்

3.       மிதுன லக்னம்

4.       கடக லக்னம்

5.       சிம்ம லக்னம்

6.       கன்னி லக்னம்

7.       விருச்சிக லக்னம்

8.       துலாம் லக்னம்

9.       தனுசு லக்னம்

10.   மகர லக்னம்

11.   கும்ப லக்னம்

12.   மீன லக்னம்

லக்னமானது தோராயமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறி மாறி வரும்.

சூரியன்மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது சூரிய உதயத்தில் பிறப்பவர்களின் லக்னம் மேஷ லக்னமாக இருக்கும்.

ஆனால் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து பிறக்கும் குழந்தையின் லக்னம் ரிஷப லக்னமாக இருக்கும்.

இப்படி லக்னம் தோராயமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டேயிருக்கும்.

மேஷ லக்னம்

1.   மேஷ லக்னத்தில் பிறந்தவர் செல்வங்களை சேர்ப்பதில் கருத்துள்ளவராக இருப்பார்.

2.   அறிவும் அழகும் பொருந்தி இருக்கும். பிறரிடம் பழகுவதில் சகஜமாக இருப்பார். பலர் விரும்பும் வண்ணம் நடந்து கொள்வார்.

3.   மேஷ லக்னத்தில் சுபர்கள் இருக்க அல்லது சுபர்களால் பார்க்க பூரண ஆயுளுடன் இருப்பார் என்று சொல்லலாம்.

4.   இவர்களுக்கு சூரியன், குரு சுபர்கள். குருவோடு சனி சம்மந்தப்பட்டால் குரு எப்போதும் தன் பலனையே கொடுப்பார். சூரியனும், குருவும் யோகக்காரர்கள்.இருவரும் ஒன்றாக கூடினால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார்கள்.

5.   புதன், சுக்கிரன், சனி இம் மூவரும் இவர்களுக்கு பாவிகள். புதன் மூலம் மாரகம் (மரணம்) இல்லை. சனி, சுக்ரன் மூலம் மாரகம் ஏற்படும்.

6.   மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்கினாதிபதி செவ்வாய், யோகாதிபதியின் சுபத்துவ சம்ப‌ந்தம் முதல் நிலை ராஜயோகத்தினைத்தரும். 9,10ம் இடங்களில் குருவும் செவ்வாயும் இருப்பது, 4ல் குரு லக்கினத்தில் அல்லது 10ல் செவ்வாய் இருப்பது சிறப்பான அமைப்பாகும்.

ரிஷப லக்னம்

1.   ரிஷப லக்னத்தில் பிறந்தவர் செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்லவளும் அழகுள்ளவளுமான மனைவியை அடைந்து சந்தோச வாழ்க்கை அனுபவிப்பர்.

2.   எப்போதும் கூடுமானவரை மன நிம்மதியுடனேயே வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார்.

3.   ரிஷப லக்னத்திற்கு சூரியனும், சனியும் நல்லவர்கள். லக்னத்தில் இந்த சுபர்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஆயுள் 75 என்று சொல்லலாம்.

4.   குரு, சுக்கிரன், சந்திரன் பாவிகள். சனி ஒருவரே இவர்களுக்கு ராஜயோகம் கொடுப்பார்.

5.   செவ்வாய், புதன் மாரகர்கள். இவர்களுடன் பலம் பொருந்திய கிரகங்கள் இருந்தால் இவர்கள் மூலம் மாரகம் இல்லை.

6.   ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 10ல் சனி, லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு அல்லது 6ல் சனி உச்சம் லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

மிதுன லக்னம்

1.   மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எப்ப்போதும் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருப்பர்.  எல்லோருடனும் இனிய வசனங்களே பேசுவார். மங்கையர்களை அதிகமாக விரும்புவார். அவர்கள் மூலம் அடையும் இன்பத்தை பெரிதும் விரும்புவார்.

2.   இவர்களுக்கு கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உண்டு. பெண்கள் இவரைப் பார்த்து ரசிக்கும் தன்மையுடன் இருப்பார்.

3.   மிதுன லக்னத்திற்கு குரு, செவ்வாய், சூரியன் மூவரும் கெட்டவர்கள். குருவுடன் சனி  சேர்ந்தால் யோககாரனாவான்.

4.   சந்திரன் தோசமுடையவன். எனினும் மாரகனாக மாட்டான்.

5.   குரு, செவ்வாய், சூரியன் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள். எதற்கும் இவர்களது வலுவை அறிந்து எதையும்  சொல்ல வேண்டும்.

6.   மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு யோகாதிபதி சுக்கிரன் 5ல் அல்லது 10ல் இருப்பது முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

கடக லக்னம்

1.   கடக லக்னத்தில் பிறந்தவருக்கு வேறு பெண்கள் பேரில் நாட்டம் இருக்கும் என்று சொல்லலாம்.

2.   தந்தை சொல்லுக்கு அதிகமாக மதிப்பு கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்கு சிறிது கெட்ட பெயர்கள் உண்டாகலாம்.

3.   தான தர்மம் செய்வதில் தாரள மனப்பான்மை இருக்கும். செல்வங்கள் இவர்களை வந்தடையும்.

4.   கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

5.   கடக லக்னத்திற்கு செவ்வாயும், குருவும் சுபர்கள். செவ்வாய் யோகா காரகன். செவ்வாயும் குருவும் சேர்ந்திருந்தால் நல்ல யோகத்தை கொடுத்து வாழ்கையை உயர்த்துவார்கள்.

6.   சூரியன், புதன், சுக்கிரன்  மூவரும் பாவிகள்.

7.   சனி, சூரியன், மாரகாதிபதிகள். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.

8.   கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி குருவும் செவ்வாயும் ஆவர். இவர்கள் ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு யோகம் இருந்தாலே முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும். லக்கினத்தில் சந்திரன் 5ல் செவ்வாய், 9ல் குரு மிகவும் சிறப்பைத்தரும்.

சிம்ம லக்னம்

1.   சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களை கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப் பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும்.

2.   பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திட புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் முன் கோபியாகவும் இருப்பார்கள்.

3.   சிம்ம லக்னத்திற்கு செவ்வாயும், சூரியனும் சுபர்கள்.

4.   சுக்ரனும், புதனும் பாவிகள். செவ்வாயுடன் சுக்ரன் கூடி இருந்தால் கெட்ட பலன்களையே கொடுப்பார்கள்.

5.   சுக்ரன், சனி , புதன் இவர்கள் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.

6.   சிம்ம லக்னம் என்ற பெயருக்கேற்ப பல சமயங்களில் மற்றவர்களுக்கு சிம்ம ஸ்வரூபமாகவே விளங்குவார்கள்.

7.   சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குருவும் செவ்வாயும் சுபர்கள், இவர்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இனைந்திருந்தாலோ, ஒருவருக்கொருவர் கேந்திரம், திரிகோணம் பெற்றாலோ முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும். லக்கினத்தில் குரு, 4ல் செவ்வாய் எனும் அமைப்பு சிறப்பான யோகபலனைத் தரும்.

கன்னி லக்னம்

1.   சற்று அடக்கமாக இருப்பார்கள். எதிலும் திறமைசாலிகளாக விளங்குவார்கள்.

2.   எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும், விவேகமும் இருக்கும். நல்ல நடத்தை உள்ளவர்களாகவும் விளங்குவார்கள்.

3.   கன்னி லக்னத்திற்கு சந்திரனும், சனியும் சுபர்கள்.

4.   செவ்வாய், குரு பாவிகள். புதனும், சுக்கிரனும் யோககாரர்கள்.

5.   புதனும் சுக்கிரனும் கூடி வலிமை பெற்றிருந்தால் நல்ல யோகத்தை கொடுப்பார்கள்.

6.   சந்திரன், செவ்வாய், குரு இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.

7.   இவர்கள் திறமைசாலிகள் என்று பெயரெடுத்து  புகழுடன் விளங்குவார்கள்.

8.   கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் யோகாதிபதி ஆவார். 1,2ம் இடங்களில் அல்லது 9,10ம் இடங்களில் புதன் சுக்கிரன் இனைந்து நிற்ப்பது, 2, 9ல் சுக்கிரன் மட்டும் தனித்து நின்றாலும் முதல் நிலை ராஜயோகம் சிறக்கும்.

துலா லக்னம்

1.   தாரசு பிடிக்கும் தொழில் ஏற்படும். தராசு போல பேசுவார்கள். வியாபாரத்தில் சாமர்த்தியம், புத்திசாலிதனம், செல்வம் சேர்பதில் கவனம். எதிலும் முன் ஜாக்கிரதை இருக்கும். செல்வங்கள் சேரும்.

2.   வாழ்கையில் சுகங்கள் அனுபவிக்கவும் வாய்ப்பு உண்டு. ஆயுள் நீண்டது என்றே கூற வேண்டும்.

3.   துலா லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள்.

4.   சூரியன், செவ்வாய், குரு பாவிகள். சந்திரனும், புதனும் யோகக்காரர்கள்.

5.   சந்திரனும், புதனும் கூடியிருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள்.

6.   சூரியன், குரு மாரகாதிபதிகள். செவ்வாய் தோஷம் உடையவர்.

7.   துலா லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 4,5க்குடைய சனி நல்லவர். 9, 10க்குடைய புதனும், சுக்கிரனும் நல்லது செய்வர், ஜாதகத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று, புதன் அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெற்று இருந்தால் ஜாதகர் முதல் நிலை ராஜயோகத்தினை சிறப்பாக அனுபவிப்பார்.

விருச்சிக லக்னம்

1.   விருசிக லக்னதில் பிறந்தவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சி உள்ளவராக இருப்பார். பெண்களின் மீது அன்பு வைத்திருப்பார். சற்று முன்கோபம் என்பது இருக்கும், செல்வன் என்று பெயர் எடுப்பர்.

2.   எடுத்த காரியத்தை விரைவுடன் செய்யும் ஆற்றலுடையவராக இருப்பார். கொஞ்சம் அவசர குணம் இருக்கும்.

3.   விருசிக லக்னத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர்கள்.

4.   லக்னத்தை சுபர்கள் பார்க்க இவர்கள் 9௦ வயது வரையில் வாழ்ந்து இருப்பார்கள் என்று கூறலாம்.

5.   சூரியனும், சந்திரனும் கூடினால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள்.

6.   செவ்வாய், புதன், சுக்கிரன் மாரகாதிபர்கள்.

7.   குருவும், சனியும் கொள்ள மாட்டார்கள். புதனும் கொள்ள மாட்டார். மாரக ஸ்தானத்தில் பாவிகள் இருந்தால் கஷ்ட கண்டம் ஏற்படும்.

8.   விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, லக்கினாதிபதி செவ்வாய், குரு, சூரியன், சந்திரன் ஆகியோர் மிக நல்லதைச் செய்வர். இவர்களுக்கு தர்மகருமாதிபதி யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம் இவற்றில் ஒன்றிரண்டு இருந்தாலே ஜாதகர் சிறப்பான பலன்களை அனுபவிப்பார். சூரியன் சந்திரன் 9,10ல் ஆட்சி அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் சந்திரன் அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் குரு மிகச்சிறப்பைத் தரும்.

தனுசு லக்னம்

1.   தனுசு லக்னத்தில் பிறந்தவர் நல்ல அறிவுள்ளவராகவும் சொத்துக்கள் உள்ளவராகவும் இருப்பார். மனைவியிடம் அன்புடன் பழகி அவளுடைய நல்லெண்ணத்தையும் பெறுவார். மற்றவர்களுடன் இனிய சுபாவத்துடன் பழகுவார்.

2.   தனுசு லக்னத்திற்கு சூரியனும், செவ்வாயும் சுபர்கள்.

3.   சுக்கிரன் ஒருவரே பாவி. சூரியனும், புதனும் யோகக்காரர்கள். இருவரும் கூடி இருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள்.

4.   சுக்கிரனும், புதனும் கூடினால் மாரகாதிபதியாவான். சுக்ரனுக்கு மாரகம் கொடுக்கும் வல்லமை உண்டு.

5.   சந்திரன், சனி கொல்ல மாட்டார்கள். மற்ற கிரகங்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.

6.   தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், புதன் நல்லவர்கள் இவர்களில் இருவர் ஆட்சி உச்ச பலத்துடன் நின்றாலே போது முதல் நிலை ராஜயோகம் அமையும்.

மகர லக்னம்

1.   மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பலதரப்பட்ட வாழ்க்கை அமையும். நல்ல வஸ்திரங்கள் அணிவது, ஆடை ஆபரணங்கள் சேர்க்கையில் ஆசை இருக்கும்.

2.   பெண்கள் இன்பத்தில் நாட்டம் இருக்கும். சாதூர்யதுடன் பேசுவர். முன்னேற்றத்தை கருதி பல திட்டங்கள் போட்டு கொண்டே இருப்பார்கள்.

3.   மகர லக்னத்திற்கு செவ்வாய், புதன், சுக்கிரன் சுபர்கள்.

4.   சந்திரன், குரு பாவிகள். சுக்ரன் யோககாரகன்.

5.   சுக்ரனும், புதனும் கூடினால் ராஜயோகம் கொடுப்பார்கள்.

6.   சூரியனும், சனியும் மாரகம் கொடுக்க மாட்டார்கள். சந்திரனுடன் சேர்ந்த சனி மாரகாதிபன். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிருக்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.

7.   மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்படுமால் முதல் நிலை ராஜயோகம் அமையும்.

கும்ப லக்னம்

1.   கும்ப லக்னத்தில் பிறந்தவர் மனைவியிடம் அன்புள்ளவராக இருப்பார். தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவராக இருப்பார்.

2.   பெண்கள் பால் அதிக அன்பும், பரிவும் காட்டுபவராக இருப்பார். கல்வி கேள்விகளில் பூரண பலன் இருக்காது. சில சமயங்களில் கர்வம் அதிகமுள்ளவராக பிறருக்குத் தோற்றமளிப்பார்

3.   கும்ப லக்னத்திற்க்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள்.

4.   சந்திரன், செவ்வாய், குரு பாவிகள், சுக்கிரன் யோககாரகன். செவ்வாயும், சுக்ரனும் கூடி இருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள்.

5.   குரு மாரகம் கொடுக்க மாட்டன்.செவ்வாய், சந்திரனுடன் கூடி இருந்தால் மாரகம் கொடுப்பான். மாரகதிபதிகள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.

6.   கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன், சுக்கிரன், செவ்வாய் நல்லவர்கள். செவ்வாய் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்பட்டாலும். அல்லது மூன்று நாயகர்களில் ஜாதகத்தில் ஏதேனும் இருவருக்கு சுபத்துவ சம்பந்தம் ஏற்ப்பட்டாலும் முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும்.

மீன லக்னம்

1.   முன்னோர்கள் தேடி வைத்த பொருள்களை அழித்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டு விடலாம்.

2.   தன் காரியங்களை பிறர் அறியாமல் ரகசியமாக பாதுகாத்து கொள்வதில் ஜாக்கிரதை உள்ளவராக இருப்பார்.

3.   அதிக திறமை உள்ளவராகவும் காணப்படுவார்.

4.   சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், சனி பாவிகள்.

5.   செவ்வாயும், குருவும் யோகக்காரர்கள். இவர்கள் கூடியிருந்தால் பிரபலமான ராஜ யோகத்தை கொடுப்பார்கள்.

6.   சூரியன், சந்திரன், புதன், சனி மாரகாதிபர்கள்.

7.   மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்கினாதிபதி குரு, பாக்கியாதிபதி செவ்வாய் ஆகிய இருவரால், தருமகருமாதிபதி யோகமோ, அல்லது குருமங்கள யோகமோ, 5ம் அதிபதி சந்திரனால், குரு சந்திரயோகமோ, சந்திரமங்கள யோகமோ ஏற்ப்பட்டால் முதல் நிலை ராஜயோகத்தினை பூரணமாக அனுபவிக்கலாம்.

ஒருவருக்கு லாபதிபதி யார்?

1.   சரலக்கினகாரர்களுக்கு(மேஷம், கடகம், துலாம், மகரம்) லாபாதிபதியாகிரவர் பாதகாதிபதியாவதால் நன்மைகளை செய்வதில்லை. பாதகாதிபதி எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் பெரும் நன்மைகளை செய்வதில்லை.

மற்ற லக்கினகாரர்களுக்கு.

2.   ரிஷப லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி குரு அவர் லக்கினாதிபதி சுக்கிரனுக்கு பகை, குருவுக்கு மற்றொரு அதிபத்தியம் 8ம் இடம் ஆதலால் அவருடைய திசா புத்தி காலங்களில் நன்மைகள் கிடைப்பதில்லை.

3.   மிதுன லக்கினகாரகளுக்கு லாபாதிபதி செவ்வாய் லக்கினாதிபதி புதனுடன் பகை, செவ்வய்க்கு மற்றொரு ஆதிபத்தியம் 6ம் இடம் ஆதலால் நன்மைகள் செவ்வாயும் தனது திசா புத்தி காலங்களில் அளிப்பத்ற்கில்லை.

4.   சிம்ம லக்கினகாரர்களுக்கு தனலாபாதிபதி புதன் லக்கினாதிபதி சூரியனுடன் நட்பு அதலால் மற்ற லக்கினகாரர்களை விட இந்த லக்கினத்திற்க்கு மட்டும் பலன் பரவாயில்லாமல் இருக்கும்.

5.   கன்னி லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி சந்திரன் இவரும் அமர்ந்த இடத்தைப்பொறுத்து சாமன்ய பலன்களை அளிப்பார். ஆனாலும் லக்கினதிபதியுடன் அவ்வளவாக சுமூகமான உறவு இல்லை என்பதால் பரவாயிலாமல் பலன்கள் கிடைக்கும்.

6.   துலாலக்கினகாரர்களுக்கும் ஒரே அத்பத்தியம் உள்ள சூரியன் லாபாதிபதியானாலும், லாபதிபதியே பாதகாதிபயாவதாலும், லக்கினாதிபதி சுக்கிரனுக்கு சூரியன் நல்லவனல்ல என்பதாலும் பெரும்பாலும் துலாலக்கின காரர்களுக்கு சூரியனின் காரகங்கள் கிடைப்பதில்லை. மூத்த சகோதரர்கள் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அவர்களால் குடும்பத்திற்க்கு பிரயோஜனம் இருக்காது. த‌ந்தை மகனின் பாசங்கள் காரணத்திற்க்கு உட்பட்டே இருக்கும், காரணம் முடிந்தவுடன் பாசமிருக்காது. ஆதலால் இவர்களுக்கு சூரியன் நன்மையை செய்வான் என்று நம்புவதற்கில்லை.

7.   விருச்சிக லக்கினகாரர்களுக்கு புதன் அஷ்டமலாபாதிபதியாகிரார். லக்கினாதிபதி செவ்வாயுடன் பகை ஆத்லால் இவர்களுக்கும் லாபாதிபதியால் நன்மையில்லை.

8.   த‌னுசு லக்கினகாரர்களுக்கும் லாபதிபதி சுக்கிரன் ஆறாம் ஆதிபத்தியம் வருவதாலும், லக்கினாதிபதியுடன் சுமூகமான நிலையில்லாததாலும் சுக்கிரன் தனது திசா புத்திகாலங்களில் நன்மைகள் செய்வார் என்பத‌ற்கில்லை.

9.   கும்ப லக்கினகாரர்களுக்கு தனலாபாதிபதி குரு லக்கினாதிபதி சனியுடன்  பெருத்த பகையில்லை, ஆகையால் பரவயில்லாத் பலன்களை அளிப்பார்.

10. மீன லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி சனி விரயாதிபதியும் ஆவதால் லாபம் நிஷ்பலம் ஆகும். ஆனால் பயப்படுவதிற்க்கு ஒன்றும் இல்லை.

11. மொத்தத்தில் லாபாதிபதியால் எந்த லாபமும் இல்லை. எதனால் என்றால்

12. லக்கினத்திக்கு மூன்றுக்குடையவன் ஒரு பாபி.

13. லக்கினத்திற்க்கு ஆறாமிடத்திர்குறியவன் மூன்றாம் இடத்ததிபனை விட பாபி.

14. ஆறுக்கு ஆறாம் இடத்ததிபன் 11ம் இடத்திற்குறியவன் இவர்கள் இருவரையும் விட பாபி.

15. ஆதலால் 11ம் இடத்ததிபனை லாபாதிபன் என்று எப்படி சொல்லுவது?

 

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.