7TH- STD -  புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் -

1.    இந்தியாவில் வியப்பை ஏற்படுத்தும் அளவில் பக்தி கவிதைகள், செய்யுள்கள் இயற்றப்பட்டனஇடைக்காலம்.

2.    புதிய சமயக் கருத்துக்களும்அன்றாட வாழ்வில் வேதியியல் அறிவின் வழிபட்ட ஞான மார்க்கம், சடங்கு மற்றும் நற்செயல்கள் வழிபட்ட கர்மா மார்க்கம் ஆகிய இரண்டை காட்டிலும் பக்தி மார்க்கமே சிறந்தது என எதில் கூறப்பட்டுள்ளது - பகவத் கீதை.

3.    பக்தி இயக்கம் () வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி தமிழகத்தில் - 7 ஆம் நூற்றாண்டை ஓட்டி தொடங்கியது.

4.    தொடக்ககால இஸ்லாம் சமயத்தின் உலகப்பற்றுதலுக்கு எதிராகத் தோன்றியது - சூபி தத்துவம்.

5.    தீவிர உணர்ச்சிவசப்பட்ட பக்தி மற்றும்  ஆழமான தியானம் மூலமே கடவுளை உணர முடியுமென நம்பியது- சூபி கோட்பாடு.

6.    இந்துக்களும் இசுலாமியர்களும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரே ஒரு கடவுள் மட்டுமே என்று கூறியவர்ஹரிதாசர்.

7.    தமிழகத்தில் பக்தி இயக்கத்தை தொடங்கி வைத்த வைணவ - ஆழ்வார்கள் (12) சைவ  நாயன்மார்கள் (63) தமிழ் மொழியில் பக்தி பாடல்களை இயற்றி தங்கள் கடவுள்களுக்கு சமர்ப்பித்தனர்-

8.    சிவன் , விஷ்ணு  ,கிருஷ்ணர் குறித்த பாடல்கள்- தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் பாடப்பட்டுள்ளது.

9.    விஷ்ணுவின் அவதாரத்தை குறிப்பாக ராமர் மற்றும் கிருஷ்ணர் அவதாரங்களை அடிப்படையாகக் கொண்டது­- வைணவம்.

10.   1102 பத்திகளை கொண்ட திருவாய்மொழி என்னும் நூலை இயற்றியதால் புகழ்ப்பெற்றவர்- நம்மாழ்வார்.

11.   நம்மாழ்வாரின் 4000 பாடல்களை'நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் பெயரில் தொகுத்தவர்நாதமுனி.

12.   பெண் ஆழ்வார் - ஆண்டாள்

13.   தாய் யசோதை இடத்தில் தன்னை பாவித்து குழந்தை கிருஷ்ணனை பற்றி பல பாடல்கள் புனைந்துள்ளவர்- பெரியாழ்வார்.

14.   கோவில் நகரமான எந்த  கோவிலின் துளசி தோட்டத்தில் பெரியாழ்வார் ஆண்டாளைக் கண்டெடுத்து தனது குழந்தையாக ஏற்றுக் கொண்டார்- ஸ்ரீவில்லிபுத்தூர்.

15.   ஆண்டாளின் புகழ்பெற்ற கவிதை நூல்கள்:

          1.    திருப்பாவை - கிருஷ்ணனை அடையும் வழி.

          2.    நாச்சியார் திருமொழி - பெண்ணின் புனித பாடல்கள்.

16.   திருவரங்கம் கோவிலில் உள்ள விஷ்ணுவின் அவதாரமான அரங்கநாதன் மீதான காதலை தனது பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்- ஆண்டாள்

17.   முதல் மூன்று ஆழ்வார்கள் :

          1.    பொய்கையாழ்வார்

          2.    பூதத்தாழ்வார்

          3.    பேயாழ்வார்

18.   தென் இந்திய கோவில்களில் சிலை வழிபாடு செய்தவர்கள் : மும்மூர்த்திகளான-திருஞானசம்பந்தர் அப்பர் , சுந்தரர்.

19.   சைவ புனித நூலான திருமுறையின் அடிப்படையாக உள்ள நாயன்மார்களின் அனைத்து பாடல்களையும் தொகுத்தவர்-  நம்பியாண்டார் நம்பி (கி.பி.1000).

20.   திருமுறையில் உள்ள நூல்கள் : 12.

          1.    11 நூல்களை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி.

          2.    12 வது நூல் சேக்கிழார்  இயற்றியது - பெரியபுராணம்.

21.   அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர்:

          1.    சங்கராச்சாரியார் ()

          2.    ஆதிசங்கரர் (கி.பி. 700 - 750)

22.   ஞானத்தைப் பெறுவதன் மூலம் ஜீவாத்மா, பரமாத்மாவுடன் (பிரம்மா) இணயும் என்பது - அத்வைதம் தத்துவத்தின் சாரம் .

23.   ஆதிசங்கரரின் மடங்கள், வழிபாட்டு நிலையங்கள் மற்றும் கற்றுக்கொள்வதற்கான மையங்களாக விளங்குகின்ற இடங்கள் :

          1.    பத்ரிநாதர்

          2.    பூரி

          3.    துவாரகா

          4.    சிருங்கேரி

24.   வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சியில், வேதாந்த பள்ளியின் அடிப்படை நூலான ஆதிசங்கரர் எழுதிய உரை சாலச் சிறந்ததாக உள்ளது- பிரம்ம சாஸ்திரம்.

25.   பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் செல்வாக்குப் பெற்ற வைணவத் திருத்தொண்டர்இராமானுஜர்.

26.   இராமானுஜர் முன்வைத்த விசிஷ்டாத்வைதம் தத்துவம்-ஆத்மாவானது பிரம்மத்துடன் கலந்த பின்னரும் தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொள்கிறது என்பதாகும்

27.   இராமானுஜர் நீண்ட நெடிய ஆன்மிக பயணங்களுக்குப் பின்னர் - ஸ்ரீரங்கத்தில் குடியேறினார்.

28.   விஷ்ணு மீதும் இராமானுஜர் இணையான லக்ஷ்மி மீதும் கொண்டிருந்த பக்தி நெறி-  ஸ்ரீவைஷ்ணவம் என அழைக்கப்பட்டது.

29.   இராமானுஜர் கோவில்களில் நுழைவதற்கான சாதிய கட்டுப்பாடுகளைக் கண்டனம் செய்தார்.

30.   புகழ் பெற்ற சமஸ்கிருத கல்வி மையமாக விளங்கிய காஞ்சிபுரம் - வடகலை வைணவம் செழித்தோங்கியது.

31.   தென்கலை வைணவம் - ஸ்ரீரங்கம் மையமாகக் கொண்டிருந்தது.

32.   வட இந்தியாவில் பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர் -இராமானந்தர்.

33.   தெலுங்கு தத்துவ ஞானி -  வல்லபாச்சாரியார் .

34.   மதுராவிற்கு அருகே கோவர்தன் குன்றுகளில் கிருஷ்ண பகவானுக்கு ஒரு கோவிலை அமைத்துள்ளவர்- வல்லபாச்சாரியார் .

35.   கவிஞர், இசைக்கலைஞர், பார்வைத்திறனற்றவர் - சூர்தாஸ் .

36.   கோவர்தன் குன்றில் உள்ள கிருஷ்ணர் கோவிலோடும்- சூர்தாஸ்.

37.   ஆக்ராவில் உள்ள கோவிலோடும் தொடர்புடையவர்- சூர்தாஸ் .

38.   சூர்தாசரின் புகழ்பெற்ற கவிதைகளின் தொகுப்புசூர்சாகர்.

39.   மேவார் நாட்டின் பட்டத்து இளவரசரின் மனைவி - மீராபாய் .

40.   கிருஷ்ண பகவானின் தீவிர பக்தை மற்றும் அவருடைய பஜனை பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர்- மீராபாய்.

41.   வங்காளத்தில் வைணவ சமயத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது - சைதன்ய தேவர்.

42.   துளசிதாசர் இந்தி மொழியில் எழுதிய ராமனின் கதையை மீண்டும் சொல்லும் இராமசரிதமானஸ் என்ற நூல், நட்பு மற்றும் விசுவாசத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்தது.

43.   விஷ்ணுவின் அவதாரமான விதோபா குறித்து இயற்றிய ஆன்மீகப் பாடல்களுக்காகவே அபங்கா () கீர்த்தனைகள் நன்கு அறியப்பட்டிருந்தவர் -துக்காராம்

44.   மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் மாவட்டத்தில், பந்தர்பூர் பண்டரிபுரத்தில் - உள்ள கோவில் - விதோபா () பாண்டுரங்க

45.   சூபி என்னும் சொல்'சுப்' என்னும் சொல்லிலிருந்து வந்தது சுப் என்னும் பொருள் -கம்பளி.

46.   இடைக்கால இந்தியாவைச் சோர்ந்த சூபிகள் முக்கிய அமைப்பினராக பிரிக்கப்பட்டனர்- 3 .

          1.    சிஸ்டி           - மொய்னுதீன் சிஸ்டி

          2.    சுரவார்டி               - அப்துல்-வகித் அபு நஜிப் - ஈரான் சூபி.

          3.    பிர்தெசி                 - சுரவார்டி-ன் கிளை - பீகாரில் மட்டும்.

47.   சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலம் ஆக்கியவர்- மொய்னுதீன் சிஸ்டி.

48.   மொய்னுதீன் சிஸ்டி  - ஆஜ்மீரில் 1236 ல் இயற்கை எய்தினார்

49.   ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள - ஷரிப் தர்கா என்னும் இடத்தில் மொய்னுதீன் சிஸ்டி  நினைவிடம் உள்ளது

50.   இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கு அறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பை சேர்ந்த சூபி - நிஜாமுதீன் அவுலியா.

51.   நிஜாமுதீன் அவுலியா பின்பற்றிய புகழ்பெற்ற பலருள் கவிஞர் - அமீர் குஸ்ருவும் ஒருவர்

52.   இந்து இஸ்லாம் சமயங்கள் இடையே ஒத்திசைவு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டவர்- கபீர்.

53.   கபீரின் கவிதை தொகுப்புகள்- கிரந்தவளி, பைஜக்.

54.   லாகூருக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்த சீக்கியர்களின் முதல் குரு - குரு நானக் (1469 - 1539)

55.   குரு நானக் லாகூருக்கு அருகே - கர்தார்பூரில் குடியேறினர்

56.   குருநானக்கின் 550 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், இந்திய அரசு குர்தாஸ்பூரில் உள்ள நானக் கோவில் முதல் பாகிஸ்தானில் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாகிப் வரை இரண்டு நகரையும் இணைக்கும் வகையில் நடைபாதையை அமையவுள்ளது -

57.   சீக்கியர்களின் புனித நூலான- குருகிரந்சாகிப். குருநானக் மற்றும் அவருக்குப் பின் வந்தோர் போதனைகளால் தொகுக்கப்பட்டது.

58.   ஒவ்வொரு சீக்கிய குருவும் தங்களுக்கு அடுத்த குருவை நியமித்தனர்.

59.   குருநானக்  லேனாவை தனக்கு பின் குருவாக குரு நானக் நியமித்தார்.

60.   யாருடைய காலத்தில் பாகல் என்னும் திருமுழுக்கு அறிமுகம் செய்யப்பட்டது - குருகோவிந்த் சிங்.

61.   குறுவாளால் கிளறப்பட்ட இனிப்பான நீரை கொடுத்தல் - பாகல்.

62.   கால்சாவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் - 5 தனித் தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

63.   கால்சாவின் 5 உறுப்பினர்கள்:

          1.    கேஷ்    - வெட்டப்படாத முடி

          2.    கன்கா   - சிகைக்கோல்

          3.    கிர்பான்         - குறுவாள்

          4.    கடா      - இரும்புக் காப்பு

          5.    கச்சேரா         - உடலின் கீழ்ப்பகுதியில் அணியும் உள்ளாடை

64.   குரு கோவிந்த் சிங்கிற்கு பின்னர் புனித நூலான குருவாக கருதப்பட்டது -குருகிரந்சாகிப்.

65.   யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்பெரியாழ்வார்.

66.   அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் - ஆதி சங்கரர்.

67.   பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர்- இராமாநந்தர்.

68.   சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் - மொய்னுதீன் சிஸ்டி.

69.   சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர் - குரு நானக்.

70.   பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர்- விஷ்ணு சித்தர்.

71.   சீக்கியர்களின் புனிதநூல் - குருகிரந்தசாகிப்

72.   ரவி தாஸ் சீடர்- மீராபாய்.

73.   இராமானுஜரின் தத்துவம் - விசிஷ்டாத்வைதம்

74.   தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் - கர்தார்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

75.   பொருத்துக:

          1.    பாகல்   - குரு கோவிந் சிங்

          2.    இராமசரிதமானஸ் - துளசிதாசர்

          3.    ஸ்ரீவைஷ்ணவம்  - இராமானுஜர்

          4.    கிரந்தவளி - கபீர்

          5.    சுரவார்டி  - அப்துல் வகித் அபுநஜிப்

          6.    ஆண்டாள்  - திருவில்லிபுத்தூர்

          7.    துக்காராம் - மகாராஷ்டிரா

          8.    சைதன்யதேவா   - வங்காளம்

          9.    பிரம்ம சூத்திரம்  - ஆதிசங்கரர்

         10.   குருத்வாராக்கள்  - சீக்கியர்கள்

 

 

https://www.a2ztnpsc.in/