புணர்ச்சி வகைகள், குறுக்கங்கள்
1.
குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்- 4.
1. ஐகாரக்குறுக்கம்
2. ஔகாரக்குறுக்கம்
3. மகரக்குறுக்கம்
4. ஆய்தக்குறுக்கம்
2.
புணர்ச்சி வகைகள் எத்தனை – 2.
1. இயல்பு புணர்ச்சி
2. விகாரப் புணர்ச்சி
3.
புணர்ச்சியின்போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது - இயல்பு புணர்ச்சி.
1. வாழை + மரம் = வாழைமரம்
2. செடி + கொடி = செடிகொடி
3. மண் + மலை = மண்மலை
4.
புணர்ச்சியின்போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது - விகாரப் புணர்ச்சி.
5.
விகாரப் புணர்ச்சி வகைகள் – 3.
1. தோன்றல்
2. திரிதல்
3. கெடுதல்
6.
தோன்றல் விகாரம்:
நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு
நுழைவு , தேர்வு ஆகிய சொற்கள் இரண்டும் இணையும்போது த் தோன்றுகின்றது.
7.
திரிதல் விகாரம்:
பல் + பசை = பற்பசை
பல் , பசை ஆகிய சொற்கள் இரண்டும் இணையும்போது ல் - ற் ஆகத் திரிகின்றது
8.
கெடுதல் விகாரம்:
புறம் + நானூறு = புறநானூறு
புறம் , நானூறு ஆகிய சொற்கள் இரண்டும் இணையும்போது ம் கெடுகின்றது.
0 Comments
THANK FOR VISIT