நவாம்ச பலன்கள் – மேஷம்
1.
தமக்கு
தெரிந்த ரகசியத்தை வெளிப்படையாக சொல்வார்கள். விளைவுகளை கண்டு பயந்தாலும் வெளியில்
காட்ட மாட்டார்கள்.
2.
விடாப்பிடிவாதம்
கொண்டவர்கள். விடாது முயற்சி செய்து காரியம் சாதித்து கொள்வார்கள். ஈடுபட்ட செயல் அனைத்திலும்
தனது சக்திக்கு மேற்பட்டு உழைத்து கறை ஏறுவார்கள். பிறரது யோசனையை ஏற்க மாட்டார்கள்.
3.
எப்பொழுதும்
சிரித்த முகத்துடன் இருப்பார்கள். ஆனால் கண்டிப்பானவர் எனும் பெயர் கிடைக்கும். பிரதி
பலன் பார்க்காமல் செயல்படும் இவர்களது உழைப்பை பிறர் பயன் படுத்திக்கொள்வர்.
4.
பலராலும்
பாராட்டப் படுவார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். பொது நிகழ்ச்சியில் வாக்குவாதம்
செய்வார்கள். சச்சரவுகளும், வதந்திகளும் தாக்கினாலும் கலங்க மாட்டார்கள்.
5.
சமாதனம்
பிடிக்கும் என்றலும் முதல் முயற்சி எடுக்க மாட்டார்கள். எதிரியே எதிரில் வந்து சமாதானம்
செய்ய முயற்சி செய்வார்.
6.
அதிகாரம்
மிக்கவர், பணபலம் கொண்டவர்கள் இவர்களை நாடி வருவர். அனுசரித்து சென்றால் அமைச்சர் பதவி,
அரசு எந்திரத்தை இயக்கும் அதிகாரம் கிடைக்கும்.
7.
அதிகம்
சம்பாதிப்பார்கள். அதே நேரத்தில் அதிகம் செலவும் செய்வார்கள். பரம்பரை சம்பிரதாயாங்களை
தொடர்ந்து செய்வர். புகழ் மிக்க ஆன்மீகவாதிகள் இவர்களின் செல்வத்தை அனுபவிப்பார்கள்.
நெருங்கிய உறவினர்களை வாழ வைத்துப் பார்பார்கள்.
8.
இந்த
நாவம்ச ஆண்களுக்கு எல்லா வகையிலும் ஏற்ற பெண் அமைவார். ஆனால் இந்த நவாம்ச பெண்களுக்கு
அப்படி அமையாது.
9.
புகழ்
பெற்ற குடும்பத்தில் பிறப்பு ஏற்படும், இவர்கள் வளர வளர குடும்பத்தில் பல பிரச்சனைகள்
வரும். பின்னர் மறைந்து விடும். முகத்தில் அடையாள சின்னம் இருக்கும். சிரசிலும் தளும்பு
ஏற்பட வாய்ப்பு உண்டு.
10. தங்களிடம் பிறர் கூறும் எதையும் சிரித்து
தலையாட்டி ஏற்றுக் கொள்வார்கள். பிறருடன் இனைந்து சாப்பிட மாட்டார்கள்.
11. பொதுவாக சொல்லிக் கொள்ளும் படி இளமையில்
கல்வி அமையாது. பொது அறிவு அதிகம். புத்தகங்கள் அதிகம் படிப்பார்கள். கல்வியை ஒருவாறு
சாமர்த்தியமாக முடிப்பார்கள்.
12. உடன் பிறந்தவர்களால் உதவி இல்லை. தந்தையைப்
போன்ற மனநிலை இருக்கும். தாயார் உடைந்த உறவுகளை இணைப்பார்.
13. எப்போதும் பணத்தேவை இருக்கும். தெரிந்தவர்களுக்கு
தெரிந்தவர்களிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்து அல்லல்பட வேண்டி இருக்கும்.
14. முப்பது வயதுக்கு மேல் பணம் தாராளமாக புழங்கும்.
ஆனாலும் சேமிப்பில் கவனம் செலுத்த முடியாது. திட்டமிடாத செலவுகள் கையிருப்பை காலி பண்ணும்.
15. படிப்புக்கு சம்மந்தம் இல்லாமல் அரசாங்கம்
மூலம் வருமானம் கிடைக்கப்பெறும். நவாம்ச லக்னத்திற்கு பத்தாம் இடதில் சூரியன் தொடர்பு
ஏற்பட்டால் அரசாங்க தொழிலும், சந்திரன் பத்தாம் இடத்தில தொடர்பு பெற்றால் கல்வி துறையிலும்,
செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் சீருடை பணியிலும், நோய் தீர்க்கும் பணியிலும் வாய்ப்பு
கிடைக்கும். புதன் இருந்தால் கல்வி மற்றும் எழுத்து துறையில் வாய்ப்பு கிடைக்கும்.குரு
இருந்தால் மதம் மற்றும் தர்மம் போன்ற துறைகள் அமையும். சுக்கிரன் எனில் படிப்படியான
முன்னேற்றம் உள்ள உத்தியோகமும், சனி இருந்தால் விவசாய சார்பும், ராக கேதுகளுக்கு பல
தொழில்களும் அமையும்.
16. இல்லற விஷயத்தில் ஜாதகர் ஆண் என்றால் மனைவியை
நம்ப வைப்பதற்கே காலமெல்லாம் பாடுபட வேண்டி இருக்கும். ஜாதகர் பெண் எனில் அழகும் அதிகாரமும்
கலந்து இருப்பார். பிடிவாதம் அதிகம் பிடிப்பார்.
நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சூரியன்
மேஷ சூரியன் தேகத்திற்கு
வலிவும் பொலிவும் தருவார். பரிசும் பாராட்டுகளும் குவியும். சதா காலமும் எதையாவது செய்து
கொண்டே இருப்பார்கள். பழைய முறைகளை மாற்றி புதியனவற்றை அறிமுகபடுதுவார்கள். பிடிவாத
குணம் அதிகம். எல்லோரும் தங்களை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். தற்பெருமைக்கும்
குறைவில்லை. மோசடிகளை அம்பலப்படுத்தி கேவலப்படுத்தவும் செய்வார்கள். வேவுபார்க்கும்
வேலையை திறம்பட செய்வார்கள். மேஷ சூரியன் உள்ளவர்களுக்கு அரசாங்க தொடர்பும் அதனால்
நன்மையையும் உண்டாகும். எப்போதும் சக்தி வெளியாகிக் கொண்டிருப்பதால் களைப்பு ஏற்படும்.
நல்ல ஓய்வே சிறந்த மருந்து.
நவாம்ச பலன்கள் – மேஷத்தில் செவ்வாய்
வழிய சென்று உதவுவார்கள்
ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி இருக்கும். தலை இட்டு மாட்டிக் கொள்வார்கள். பலரது அந்தரங்கங்கள்
அத்துப்படி ஆகும். தேவை இல்லாமல் பேசி விடுவார்கள். வம்பை விலைக்கு வாங்கிய கதை ஆகிவிடும்.
தன் தவறை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆத்திரம், அவசரம், சந்தேகம் என சர்வ நாசத்தில்
மூழ்க நேரும். தற்கொலை செய்து கொள்ளலாமா என்பதற்கு ஒப்பான சூழ்நிலைகளை வாழ்கையில் காண்பார்கள்.
ஆயுள் தீர்க்கம் தான் எனினும் ஆபத்துகளும், விபத்துகளும் குறிப்பிடும் படி இருக்கும்.
காயம், தழும்பு நிச்சயம் ஏற்படும்.
நவாம்ச பலன்கள் – மேஷத்தில் புதன்
கூர்ந்த மதியுடையவர்கள்.
பேனா பிடித்தாலும் வியக்க வைப்பார்கள். மைக் பிடித்தாலும் மெய் மறக்க வைப்பார்கள்.
அவ்வப்போது சண்டித்தனம் பண்ணும் உடல் நிலை இருந்தாலும் மனவலிமையால் அதையும் எற்று செயல்
படுவார்கள். நையாண்டி கலையில் வல்லவராகும் வாய்ப்பை இங்கே உள்ள புதன் தருவார்.
ரசிகர், ரசிகர்
மன்றங்கள், வெளி வட்டார தொடர்பு என பிரபலம் கிடைக்கும். நாடெங்கும் பிரயாணம், நாள்தோரும்
பாராட்டு என முன்னேற்றம் நாளுக்கு நாள் கிடைக்கும். இவர்கள் எழுதியோ, பேசியோ ஏடா கூடத்தில்
மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
நவாம்ச பலன்கள் – மேஷத்தில் குரு
தலைவர் என போற்றப்
படுவார்கள். எதையும் உறுதியாக பேசுவார்கள். பேச்சுக்கு எதிர்பேச்சே இல்லை. ஆன்மீகம்,
சமய சடங்குகளை குறைவின்றி ஏற்று நடத்துவார்கள். நன்கொடைகள் குவியும்.
பல இடங்களுக்கு
சென்று வருவார்கள். பலதரப்பு மக்களின் உறவும் உண்டாகும்.பலராலும் இவர்களது தேவைகள்
நிறைவேறும். பலரும் போற்றும் படி பல நிகழ்சிகளை நடத்துவார்கள். வசதி வாய்புகள் வலிய
வந்து சேரும்.
ஒரே நேரத்தில்
இரண்டு மூன்று தோழில்களை செய்வார்கள். அதில் ஒன்று பொது வாழ்கையை தொடர்பு படுத்தி இருக்கும்.
ஒரு வழியில் ஆன்மீகவாதியாக தென்பட்டாலும் கேளிக்கை அரங்குகளிலும், சூதாட்ட விடுதிகளிலும்
பலருடன் சேர்ந்து உற்சாகமாக வலம் வருவார்கள்.
நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சுக்கிரன்
அலங்கார பிரியர்கள்.
இவர்களிடம் நல்ல திறமை இருக்கும். கலைகளில் தொடர்பு பெறுவார்கள். ஆனால் எதுவுமே அரைகுறையாக
இருக்கும். எல்லாம் அறிந்தவர் போல் காட்டிக் கொள்வார்களே ஒழிய அந்த அளவு ஆர்வம் இருக்காது.
செலவுக்கு பணம் வேண்டும் என்ற சமயத்தில் மட்டும் தங்கள் தொழிலில் அக்கறை காட்டுவார்கள்.
பணம், போரும் கையில் வந்ததும் செலவழிக்கும் வரை அடங்க மாட்டார்கள். ஆடி தீர்த்த பின்
அடங்க நேரிடும். உல்லாச பிரயாணங்கள் நிறைய இருக்கும்.
காதல் மன்னர்கள்.
திருமணத்திற்கு பிறகும் காதலை தொடர்வதால் இல்லத்தில் பிரச்சனைகள் தோன்றும். பெண்களால்
பயன்கள் தாராளமாய் கிடைக்கும். கொஞ்சம் கூட யோசிக்காமல் அனுபவிப்பார்கள்.
இவர்கள் திறமைசாலிகள்
என்று குறிப்பிட முடியாது ஆனாலும் வாய்ப்புகளும் ஆதரவுகளும் கை கொடுத்து தூக்கி விடும்.
நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சனி
எல்லோருக்கும்
ஏற்ற மனிதர்கள் இவர்களே. தன் தேவைகளை விட்டு விட்டு தம்மை நாடி வந்தவர்களை அக்கறையுடன்
அணுகுவார்கள். எப்படிப்பட்ட சிக்கலையும் தீர்த்து வைக்கும் அபார ஞானம் வாய்க்கப் பெரும்.
சமயோசிதமாக செயல் படுவார்கள். பெரிய அந்தஸ்து உள்ளவர்கள் இவர்கள் இல்லம் தேடி வருவர்.அறிவே
பிரதானம். அனுபவம் குறைவு என்றாலும் திறமைசாலிகள்.பிறருடைய நம்பிக்கையை மட்டுமே விரும்புவார்கள்.
சாதாரண மனிதனை புகழ் மிக்கவராக மாற்றும் மாயாஜாலம் அறிந்தவர்கள். இதனால் நன்பர்கள்
நாலவட்டதிலும் இருப்பார்கள்.
நவாம்ச பலன்கள் – மேஷத்தில் ராகு
ஆசைகள் அனைத்தும்
நிறைவேறும், வெகு உயர்ந்த ஸ்தானத்தை பெறுவது உறுதி. பலரும் கீழ்படிந்து நிற்பார்கள்.
சம்பந்தம் இல்லாதோரும் வணங்கி நிற்பர். இவர்களது மேல்மட்ட தொடர்புகள் மேம்பாட்டு கவுரவத்தை
பெற்று தரும். ஆளைப்பார்த்து எடைப்போடாதே என்பது இவர்களுக்கு பொருந்தும். அப்படி ஒரு
மாதிரி விசித்திரமாக காட்சி அளிப்பார்கள். செய்யும் தொழிலுக்கும் கிடைத்த புகழுக்கும்
சம்மந்தம் இல்லா தோற்றம் வாய்க்கும்,
தனக்கு நன்றாக
வரும் தொழிலில் ஈடுபட மாட்டார்கள் இருக்கும் சூழ்நிலைக்கேற்ப விருப்பப்பட்ட செயல்களை
செய்து அதையே தொழிலாக மேற்கொள்வார்கள். பலமுறை சறுக்கி விழுவார்கள். ஆனாலும் விடமாட்டார்கள்.
புது புது வழிகளை கண்டுபிடித்து கொண்டிருப்பார்கள். பிறரை அசத்தும் படி எதாவது செய்து
திகைக்க வைத்து விடுவார்கள். ஆயிரத்தில் ஒருவர் எனலாம். சாதனை மனிதர்களாக ராகுவால்
உருவாக்கப்படுவார்கள்.
நவாம்ச பலன்கள் – மேஷத்தில் கேது
எதிர்ப்புகள்,
இன்னல்கள் என இடையூறுகள் பல தருவார் இந்த மேஷ கேது. சிரித்து பழகி முதுகில் குத்தும்
நண்பர்கள் வாய்க்கப் பெற்றவர்கள். மாந்ரீகம், தாந்ரீகம், ரசவாதம் என்று நடைமுறைக்கு
ஒத்துவராதவற்றில் நம்பிக்கை கொண்டு கைப்பொருள் இழக்க நேரும். காலமும் வீணாகும்.
கல்வியில் மேம்பட்டு
விளங்குவார்கள். பிறர் வியக்கும்படி பேர் பெற்ற மாணாக்கராய் இருந்திருப்பர். எனினும்
சம்பாதிக்க இந்த கல்வி உதவாது. சாமர்த்தியமும் போதாது.
கூடுமானவரை பிறருக்கு
உதவுவதும், பிறரை மன்னிப்பதும், ஸ்தல யாத்திரைகளுக்கு சென்று வருவதும் நன்மை தரும்.
நவாம்ச பலன்கள் – மேஷத்தில் சந்திரன்
பலவிதமான மனிதர்களை
காலா காலத்தில் சந்தித்து உறவு கொள்வர். நீண்ட காலம் புது உறவுகள் நீடிக்க செய்யும்.
காரணம், உதவி செய்ய முன்வரும் குணம் இவர்களது குணமே. துணிந்து உதவுவார்கள். யார் எதை
சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இவர்களை தடுக்க முடியாது. இவர்கள் இருக்கும் இடத்தில்
அனைவரையும் மேலோர், கீழோர் என்றில்லாமல் தன்கட்டுக்கு கொண்டுவரும் திறமை உண்டு. சிறு
பிராயத்திலேயே இவர்கள் தம் குடும்பத்தில் முக்கியம் பெறுவார்கள். திருமணத்திற்கு பிறகு
தமது குடும்பதிலும் தங்கள் முடிவுகளையே ஏற்கும்படி செய்வார்கள். பெற்றோர் மீது பரிவும்
பாசமும் உள்ளோர் எனினும் சூழ்நிலையில் பிரிவுகளும், பிரச்சனைகளும் வரும். எனினும் குறை
கூற மாட்டார்கள். பிறர் குறை கூற விடவும் மாட்டார்கள். தாயே தெய்வம் எனலாம். நண்பர்கள்
உறவினர்கள் சந்திக்கும் பொழுது ஊர் விசயங்களையே பேசுவார்கள். தன் வீட்டு விசயங்களை
வெளியிட மாட்டார்கள். விவரமானவர்கள்.
ஒரு தலைவராகவோ,
பலரும் அறிந்த பிரமுகராகவோ உலா வர இந்த மேஷ சந்திர அம்சம் உதவும்.
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT