திருமணம் உண்டா இல்லையா? ஜோதிடம் சொல்வதென்ன?

ஒருவருக்கு, அவர்தம் ஜனன கால ஜாதகத்தில், அவரின் லக்கினம், சுப கிரகங்களின் தொடர்பும், இலக்கினாதிபதி பலமாக இருந்தாலும், அவருக்கு திருமணம் நடக்கும். 

லக்கினாதிபதி, ஜாதகரைக் குறிக்கும்.

2ஆம் இடம் குடும்பத்தைக் குறிக்கும்.

7ஆம் இடம் திருமணம் செய்யும் நபரைக் குறிக்கும், அதாவது பெண் ஜாதகருக்கு வரப்போகும் கணவனைப்பற்றி. ஆண் ஜாதகர் என்றால் அவருக்கு வர இருக்கும் மனைவியைக் குறிக்கும். இதில் நவாம்ச லக்கினத்திற்கு, சுபர் தொடர்பானால், திருமணம் நிச்சயம் நடக்கும். இதே போல் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், 2 மற்றும் 7ஆம் இடத்திற்கு (வீட்டிற்கு) சுபர்கள் தொடர்பு இருந்தால் திருமணம் நடக்கும்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 1, 2, 7ஆம் இடங்கள், இம்மூன்றும் பாதிக்கப்பட்டால், திருமணம் நடக்காது. மேலும், பிறப்பு ஜாதகத்தில், 1 மற்றும் 7 ஆம் அதிபதிகள், நவாம்சத்தில் உள்ள இடத்தை காணவேண்டும். அவைகள், அந்த அதிபதிகள், முறையே 2, 6, 8, 12ஆம் இடங்களில் பிறப்பு ஜாதகத்திலும் மற்றும் நவாம்சத்தில் இருந்தால், திருமணத்தடையை ஏற்படுத்தும். இரண்டில் ஒரு இடத்தில் நன்றாக இருந்தால் திருமணம் நடக்கும். ஆனால், பிரச்னை உண்டு. சுக்கிரன் பாதிக்கப்பட்டால், திருமணத்தடை ஏற்படுத்தும். பிறப்பு ஜாதகம் மற்றும் நவாம்ச ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில் இருந்தால், திருமணம் நடக்கும்.