இலக்கணம் வகை
1.
முதலெழுத்துக்கள் எண்ணிக்கை – 30.
2.
உயிர்மெய் - 216.
3.
ஆய்த எழுத்து - 1.
4.
ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள்
- முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை.
5.
தமிழில் எழுத்தானது வகை - 2. முதலெழுத்து, சார்பெழுத்து.
6.
சார்பு எழுத்துக்கள் எண்ணிக்கை மொத்தம்- 10.
7.
உயிரெழுத்து - 12 எழுத்துக்கள்.
8.
மெய்யெழுத்து - 18 எழுத்துக்கள்
9.
வல்லினம் எழுத்துக்கள் - க், ச், ட், த், ப், ற். வன்மையாக ஒலிக்கின்றன.
10.
மெல்லினம் எழுத்துக்கள் - ங், ஞ், ண், ந், ம், ன். மென்மையாக ஒலிக்கின்றன.
11.
இடையினம் எழுத்துக்கள் - ய், ர், ல், வ், ழ், ள். வன்மையாகவும் மென்மையாகவும் இல்லாமல்
12.
அளபெடை வகைகள் - 2. உயிரளபெடை, ஒற்றளபெடை.
13.
உயிரளபெடை எத்தனை வகைப்படும்- 3. செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை.
14.
செய்யுளிசை அளபெடை எவ்வாறு அழைக்கப்படுகிறது - இசைநிறை அளபெடை.
15.
ஒற்றளபெடை வகை – 11. ங், ஞ், ண், ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் ஃ .
16.
போலி எத்தனை வகைபடும்-3. முதற்போலி, இடைப்போலி , இறுதிப்போலி.
17.
திணை வகைகள்- 2. உயர்திணை, அஃறிணை
18.
உயர்திணை - ஆண்பால், பெண்பால், பலர்பால்.
19.
அஃறிணை - ஒன்றன்பால், பலவின்பால்.
20.
இடம் வகைகள் - 3. தன்மை, முன்னிலை, படர்க்கை.
21.
பால் வகைகள் - ஐந்து வகைப்படும்.
22.
வழக்கு எத்தனை வகைப்படும்-2.இயல்பு வழக்கு, தகுதி வழக்கு.
23.
இயல்புவழக்கு எத்தனை வகைப்படும்-3 .இலக்கணமுடையது, இலக்கணப்பலி , மரூஉ.
24.
தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்-3. இடக்கரடக்கல், குழூஉக்குறி, மங்கலம்.
25.
வேற்றுமை வகைகள்- 8.
26.
வினைமுற்று வகைகள்-2.
27.
பெயரெச்சம் வகைகள்-2.
28.
வினையெச்சம் வகைகள்-2.
29.
பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்- 6.
30.
ஆகுபெயர் வகைகள் -16.
31.
சொற்கள் தொடராகும்போது, இரு சொற்களுக்கிடையே உருபுகள் மறைந்து வரும் தொடர்கள் - தொகைநிலைத் தொடர்கள்.
32.
தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும்- 6.
33.
ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது - தொகாநிலைத் தொடர் .
34.
தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும்- 9.
35.
புணர்ச்சி வகைகள் எத்தனை – 2.
36.
விகாரப் புணர்ச்சி வகைகள் – 3. தோன்றல்,திரிதல்,கெடுதல்
37.
தளை எத்தனை வகைப்படும்-7.
38.
அடி எத்தனை வகைப்படும்- 5.
39.
தொடை எத்தனை வகைப்படும்- 8 .
40.
அசை எத்தனை வகைப்படும் - 2.
41.
சீர் எத்தனை வகைப்படும்- 4.
42.
பொருள்கோள் எத்தனை வகைப்படும்- 8.
43.
வினா எத்தனை வகைப்படும்- 6.
44.
விடை எத்தனை வகைப்படும்- 8.
45.
இலக்கண வகை சொற்கள் - 4.
46.
இலக்கிய வகை சொற்கள் - 4.
47.
வழக்கு வகைகள்- 2.
48.
இயல்பு வழக்கு வகைகள் - 3.
49.
தகுதி வழக்கு வகைகள் - 3.
50.
வெண்பா வகைகள் - 6.
51.
ஆசிரியப்பாவின் வகைகள்- 4.
52.
தொழிற்பெயர் வகைகள்: 4.
53.
அடிதோறும் இருசீர்களைப் பெற்று வருவது – குறளடி.
54.
அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது - சிந்தடி.
55.
அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது - அளவடி அல்லது நேரடி .
56.
அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது - நெடிலடி .
57.
அடிதோறும் ஆறு அல்லது அதற்குமேற்பட்ட பல சீர்களைப் பெற்று வருவது- கழிநெடிலடி.
58.
போலி எத்தனை வகைபடும்-3. முதற்போலி, இடைப்போலி , இறுதிப்போலி.
59.
முதற்போலி எடுத்துக்காட்டு: முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை.
·
பசல் - பைசல்
·
மஞ்சு- மைஞ்சு
·
மயல்- மையல்
60.
இடைப்போலி எடுத்துக்காட்டு: இடையில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை
·
அமச்சு - அமைச்சு
·
இலஞ்சி - இலைஞ்சி
·
அரயர் - அரையர்
61.
கடைப்போலி எடுத்துக்காட்டு: இறுதியில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை.
·
அகம்- அகன்
·
நிலம்- நிலன்
·
முகம் - முகன்
·
பந்தல் - பந்தர்
·
சாம்பல்- சாம்பர்
62.
ஒரு சொல்லில் உள்ளஅனைத்து எழுத்துகளும், மாறியிருந்தாலும், பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும் - ஐந்து – அஞ்சு.
63.
மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது.
64.
உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை.
65.
உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை.
66.
உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை.
67.
உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை.
68.
மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் மாத்திரை அளவு - அரை மாத்திரை.
69.
குற்றியலிகரம், குற்றியலுகரம் மாத்திரை அளவு - அரை மாத்திரை.
70.
அளபெடை எழுத்துகளின் மாத்திரை - இரண்டிற்கு மேல்.
71.
' ஐ' மாத்திரை அளவு – 2.
72.
ஐகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒரு மாத்திரை, ஒன்றரை மாத்திரை.
73.
'ஔ' மாத்திரை அளவு - 2 .
74.
ஒளகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒன்றரை மாத்திரை.
75.
'ம்' மாத்திரை அளவு - அரை மாத்திரை.
76.
மகரக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை .
77.
ஆய்த எழுத்து ஃ மாத்திரை அளவு - அரை மாத்திரை.
78.
ஆய்தக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை.
79.
உயிரளபெடை மாத்திரை - இரண்டிற்கு மேல் வரும்.
80.
ஒற்றளபெடை மாத்திரை - இரண்டிற்கு மேல் வரும்.
81.
திணை வகைகள்- 2. உயர்திணை, அஃறிணை
82.
இடம் வகைகள் - 3. தன்மை, முன்னிலை, படர்க்கை.
83.
தன்மை - நான், நாங்கள்.
84.
முன்னிலை - நீ, நீங்கள்.
85.
படர்க்கை - அவன், அவை, அவர்.
86.
தன்மை ஒருமை – நான்.
87.
தன்மை பன்மை – நாங்கள்.
88.
முன்னிலை ஒருமை – நீ.
89.
முன்னிலை பன்மை – நீங்கள்.
90.
படர்க்கை ஒருமை -அவன், அவள், அவர்.
91.
படர்க்கை பன்மை - அவர்கள், அவை.
92.
படர்க்கை, ஆண்பால் – அவன்.
93.
படர்க்கை, பெண்பால்- அவள்.
94.
படர்க்கை, ஒன்றன்பால்- அது.
95.
தன்மைப் பெயர்கள் - நான்,யான், நாம், யாம்.
96.
தன்மை வினைகள் - வந்தேன், வந்தோம்.
97.
முன்னிலைப் பெயர்கள் - நீ,நீர், நீவிர்,நீங்கள்.
98.
முன்னிலை வினைகள் - நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்.
99.
படர்க்கைப் பெயர்கள் - அவன், அவள், அவர், அது, அவை.
100. படர்க்கை வினைகள் - வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள் பறந்தது, பறந்தன.
101. பால் வகைகள் - ஐந்து வகைப்படும்.
1. ஆண்பால்- அவன், இவன்.
2. பெண்பால்- அவள், இவள்.
3. பலர்பால்- அவர், இவர்.
4. ஒன்றன்பால்- யானை,புறா.
5. பலவின்பால்- பசுக்கள், மலைகள்.
102. உயர்திணை - ஆண்பால், பெண்பால், பலர்பால்.
103. அஃறிணை - ஒன்றன்பால், பலவின்பால்.
104. வழக்கு எத்தனை வகைப்படும்-2.இயல்பு வழக்கு, தகுதி வழக்கு.
105. இயல்புவழக்கு எத்தனை வகைப்படும்-3 .இலக்கணமுடையது, இலக்கணப்பலி , மரூஉ.
106. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்-3. இடக்கரடக்கல், குழூஉக்குறி, மங்கலம்.
107. அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும் வல்லினம் மிகும்- அ + சட்டை = அச்சட்டை
108. அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும் - அந்தப்பக்கம், இந்தக்கவிதை.
109. எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும் – எந்தத்திசை.
110. இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும் - தலையைக் காட்டு.
111. நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும் - எனக்குத் தெரியும்.
112. அகர, இகர, உகர ஈற்று வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும்.
113. இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும் - எழுதிப் பார்த்தாள்.
114. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும் - படித்துப் பார்த்தார்.
115. ஆய், என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும் - படிப்பதாய் + சொன்னாள் = படிப்பதாய்ச் சொன்னாள் .
116. எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும் - செல்லாக் காசு, ஓடாக் குதிரை.
117. உவமைத்தொகையில் வல்லினம் மிகும் – மலர்ப்பாதம்.
118. உருவகத்தில் வல்லினம் மிகும். சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும் – தமிழ்த்தாய், வாய்ப்பவளம்.
119. எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்- எட்டுப்புத்தகம் , பத்துக்காக.
120. அப்படி, இப்படி எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும் - அப்படிச்செய் , இப்படிக்காட்டு, எப்படித்தெரியும்?
121. திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்- கிழக்குக் கடல், கிழக்குப் பகுதி, மேற்குச் சுவர்.
122. மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்- மரம் + சட்டம் = மரச்சட்டம்.
123. என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின் வல்லினம் மிகும்- எனக் கேட்டார் .
124. அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்- அதற்குச் சொன்னேன் இதற்குக் கொடு , எதற்குக் கேட்கிறாய்?
125. இனி, தனி ஆகிய சொற்களின்பின் வல்லினம் மிகும்- இனிக் காண்போம் , தனிச் சிறப்பு.
126. மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்- மிகப் பெரியவர் .
127. ஓரெழுத்து ஒரு மொழி சிலவற்றின் பின் வல்லினம் மிகும்- தீப் பிடித்தது , பூப் பந்தல்
128. வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும். - கேட்டுக் கொண்டான் .
129. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும் – புலித்தோல்.
130. இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும் – மல்லிகைப்பூ, சித்திரைத்திங்கள்.
131. சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும்- சாலப்பேசினார், தவச்சிறிது.
132. எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது- தம்பி படித்தான்.
133. அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது - அது சென்றது, இது பெரியது.
134. எது, எவை என்னும் வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது - எது கிடைத்தது?
135. பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது-எழுதிய பாடல்.
136. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை) வல்லினம் மிகாது- இலை பறித்தேன்.
137. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது - செய்து பார்த்தாள்.
138. வினைத்தொகையில் வல்லினம் மிகாது – எழுதுபொருள், வளர்பிறை.
139. அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
140. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது – தாய்தந்தை , இரவுபகல்.
141. மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது, அண்ணனோடு போ,எனது சட்டை
142. விளித் தொடர்களில் வல்லினம் மிகாது- தந்தையே பாருங்கள்.
143. படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது- வரும்படி சொன்னார்.
144. வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது- வாழ்க தமிழ் .
145. எட்டு, பத்து தவிர பிற
எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது - ஒரு புத்தகம்.
146. அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது- அன்று சொன்னார்.
147. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட, நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது.
148. மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது - என்னோடு சேர்.
149. இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது- தமிழ் படி - (ஐ) - தமிழைப் படி.
150. சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது - உறு பொருள் , கடி காவல் .
151. அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது- பார் பார் , சலசல .
152. கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.
153. சொற்கள் தொடராகும்போது, இரு சொற்களுக்கிடையே உருபுகள் மறைந்து வரும் தொடர்கள் - தொகைநிலைத் தொடர்கள்.
கயல், விழி
இவ்விரு சொற்களுக்கு இடையே போன்ற( 'கயல் போன்ற விழி') என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
154. தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும்- 6.
1. வேற்றுமைத்தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை
155. தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும் - 9.
1. எழுவாய்த்தொடர்
2. விளித்தொடர்
3. வினைமுற்றுத்தொடர்
4. பெயரெச்சத்தொடர்
5. வினையெச்சத்தொடர்
6. வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
7. இடைச்சொற்றொடர்
8. உரிச்சொற்றொடர்
9. அடுக்குத்தொடர்
156. குறுக்கங்கள் எத்தனை வகைப்படும் - 4.
1. ஐகாரக்குறுக்கம்
2. ஔகாரக்குறுக்கம்
3. மகரக்குறுக்கம்
4. ஆய்தக்குறுக்கம்
157. புணர்ச்சி வகைகள் எத்தனை – 2.
1. இயல்பு புணர்ச்சி
2. விகாரப் புணர்ச்சி
158. புணர்ச்சியின்போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது - இயல்பு புணர்ச்சி.
1. வாழை + மரம் = வாழைமரம்
2. செடி + கொடி = செடிகொடி
3. மண் + மலை = மண்மலை
159. புணர்ச்சியின்போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது - விகாரப் புணர்ச்சி.
160. விகாரப் புணர்ச்சி வகைகள் – 3.
1. தோன்றல்
2. திரிதல்
3. கெடுதல்
161. தோன்றல் விகாரம்:
நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு
நுழைவு , தேர்வு ஆகிய சொற்கள் இரண்டும் இணையும்போது த் தோன்றுகின்றது.
162. திரிதல் விகாரம்:
பல் + பசை = பற்பசை
பல் , பசை ஆகிய சொற்கள் இரண்டும் இணையும்போது ல் - ற் ஆகத் திரிகின்றது
163. கெடுதல் விகாரம்:
புறம் + நானூறு = புறநானூறு
புறம் , நானூறு ஆகிய சொற்கள் இரண்டும் இணையும்போது ம் கெடுகின்றது.
164. தளை எத்தனை வகைப்படும் -7.
1. நேரொன்றாசிரியத்தளை - மா முன் நேர்
2. நிரையொன்றாசிரியத்தளை- விளம் முன் நிரை
3. இயற்சீர் வெண்டளை- மா முன் நிரை, விளம் முன் நேர்
4. வெண்சீர் வெண்டளை- காய் முன் நேர்
5. கலித்தளை- காய் முன் நிரை
6. ஒன்றிய வஞ்சித்தளை- கனி முன் நிரை
7. ஒன்றா வஞ்சித்தளை- கனி முன் நேர்
165. அடி எத்தனை வகைப்படும் - 5.
1. குறளடி
2. சிந்தடி
3. அளவடி (அ) நேரடி
4. நெடியடி
5. கழிநெடிலடி
166. அடிதோறும் இருசீர்களைப் பெற்று வருவது – குறளடி.
167. அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது - சிந்தடி.
168. அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது - அளவடி அல்லது நேரடி .
169. அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது - நெடிலடி .
170. அடிதோறும் ஆறு அல்லது அதற்குமேற்பட்ட பல சீர்களைப் பெற்று வருவது- கழிநெடிலடி.
171. தொடை எத்தனை வகைப்படும் - 8 .
1. மோனைத்தொடை
2. எதுகைத்தொடை
3. முரண்தொடை
4. இயைபுத்தொடை
5. அளபெடைத்தொடை
6. இரட்டைத்தொடை
7. அந்தாதித் தொடை
8. செந்தொடை
172. அசை எத்தனை வகைப்படும் - 2.
1. நேரசை
2. நிரையசை
173. சீர் எத்தனை வகைப்படும் - 4.
1. ஓரசைச்சீர்
2. ஈரசைச்சீர்
3. மூவசைச்சீர்
4. நாலசைச்சீர்
174. பொருள்கோள் எத்தனை வகைப்படும் - 8.
1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
2. மொழிமாற்றுப் பொருள்கோள்
3. நிரல்நிறைப் பொருள்கோள்
4. விற்பூட்டு பொருள்கோள்
5. தாப்பிசைப் பொருள்கோள்
6. அளைமறிப் பாப்புப் பொருள்கோள்
7. கொண்டுகூட்டுப் பொருள்கோள்
8. அடிமறி மாற்றுப் பொருள்கோள்
175. வினா எத்தனை வகைப்படும்- 6.
1. அறிவினா
2. அறியா வினா
3. ஐய வினா
4. கொளல் வினா
5. கொடை வினா
6. ஏவல் வினா
176. விடை எத்தனை வகைப்படும் - 8.
1. சுட்டு விடை
2. மறை விடை
3. நேர் விடை
4. ஏவல் விடை
5. வினா எதிர் வினாதல் விடை
6. உற்றது உரைத்தல் விடை
7. உறுவது கூறல் விடை
8. இனமொழி விடை
177. சொல் இலக்கணம் - இரண்டு வகைப்படும்.
178. இலக்கண வகை சொற்கள்: 4.
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்
179. இலக்கிய வகை சொற்கள்: 4.
1. இயற்சொல்
2. திரிசொல்
3. திசைச்சொல்
4. வடசொல்
180. வழக்கு வகைகள்- 2.
1. இயல்பு வழக்கு
2. தகுதி வழக்கு
181. இயல்பு வழக்கு வகைகள் - 3.
1. இலக்கணம் உடையது
2. இலக்கணப் போலி
3. மரூஉ
182. தகுதி வழக்கு வகைகள் - 3.
1. இடக்கரடக்கல்
2. குழூஉக்குறி
3. மங்கலம்
183. வெண்பா வகைகள் - 6.
1. குறள் வெண்பா
2. நேரிசை வெண்பா
3. இன்னிசை வெண்பா
4. பஃறொடை வெண்பா
5. நேரிசைச் சிந்தியல் வெண்பா
6. இன்னிசைச் சிந்தியல் வெண்பா
184. ஆசிரியப்பாவின் வகைகள்- 4.
1. நேரிசை ஆசிரியப்பா
2. இணைக்குறள் ஆசிரியப்பா
3. நிலைமண்டில ஆசிரியப்பா
4. அடிமறி மண்டில ஆசிரியப்பா
185. தொழிற்பெயர் வகைகள்: 4.
1. விகுதி பெற்ற தொழிற்பெயர்,
2. எதிர்மறைத் தொழிற்பெயர்
3. முதனிலைத் தொழிற்பெயர்,
4. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
186. வினைமுற்று வகைகள் -2.
1. தெரிநிலை வினைமுற்று
2. குறிப்பு வினைமுற்று
187. பெயரெச்சம் வகைகள் - 2.
1. தெரிநிலைப் பெயரெச்சம்
2. குறிப்புப் பெயரெச்சம்
188. வினையெச்சம் வகைகள் - 2.
1. தெரிநிலை வினையெச்சம்
2. குறிப்பு வினையெச்சம்
189. பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும் - 6.
1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. காலப்பெயர்
4. சினைப்பெயர்
5. குணப்பெயர்
6. தொழிற்பெயர்
190. வேற்றுமை வகைகள் - 8.
1. முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை),
2. இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள் வேற்றுமை),
3. மூன்றாம் வேற்றுமை,
4. நான்காம் வேற்றுமை,
5. ஐந்தாம் வேற்றுமை,
6. ஆறாம் வேற்றுமை,
7. ஏழாம் வேற்றுமை,
8. எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)
191. ஆகுபெயர் வகைகள் -16.
1.
பொருளாகுபெயர்
2.
இடவாகுபெயர்
3.
காலவாகு பெயர்
4.
சினையாகு பெயர்
5.
பண்பாகுபெயர்
6.
தொழிலாகு பெயர்
7.
என்ணலளவை ஆகுபெயர்
8.
எடுத்தலளவை ஆகுபெயர்
9.
முகத்தளவை ஆகுபெயர்
10.
நீட்டலளவை ஆகுபெயர்
11.
சொல்லாகு பெயர்
12.
தானியாகு பெயர்
13.
கருவியாகு பெயர்
14.
காரியவாகு பெயர்
15.
கருத்தாவாகு பெயர்
16.
உவமையாகுப்பெயர்
0 Comments
THANK FOR VISIT