திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.
2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்.
3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன் பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது.
7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8. ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12. எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!
ஜோதிடம் என்பது
கலை. அந்தக் கலையைப் பயில்வது சுலபம். சுவாரஸ்யம். ஜோதிடம் என்பது கணக்கு. அந்தக் கணக்கை
நாமே போட்டு, விடை தெரிந்து கொள்ளலாம். ஜோதிடம் என்பது வாழ்க்கை. அந்த வாழ்க்கையை,
நம் வாழ்க்கையை நாம் வாழாமல் எப்படி? ஆகவே ஜோதிடம் குறித்து உங்களுடன் பேசுவதில் எனக்கு
எல்லையில்லா சந்தோஷமே!
ஜோதிட ரீதியாக
உள்ள சில தோஷங்கள் பற்றி சிலர் அறியாமையால் குழப்பங்களை ஏற்படுத்தி வீண்பயத்தை பரப்புகிறார்கள்.அவற்றுக்கெல்லாம்
முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரிவான விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும், உங்கள்
முன் வைக்கப் போகிறேன்.
கேது
திசை இருக்கும்போது திருமணம் செய்யலாமா?
இறையருளும் குருவருளும்
இருந்தால், எந்தத் தடையையும் வெல்லலாம். எந்த தோஷத்தின் வீரியத்தையும் குறைக்கலாம்.
ஆகவே கவலை வேண்டாம் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.
திருமணத்திற்குத்
தடை தரக்கூடிய சில விஷயங்களை மட்டும் பார்ப்போம்.
இரண்டு நாட்களுக்கு
முன்பு ஒரு பெண் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தார், 33 வயது,7 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
அவருக்கு ஒருமுறை
அல்ல இருமுறை திருமணம் நடந்துள்ளது, ஆனாலும் தற்போது தனியாகத்தான் உள்ளார்.
ஏன்? என்ன ஆனது?
முதல் கணவர் விபத்தில்உயிரிழந்தார்.
(இவருக்குப் பிறந்த குழந்தைதான் இந்தப் பையன்.
இரண்டாவதாக விவாகரத்து
பெற்றவரை மணந்தார், ஆனால் அவர் சில மாதங்களிலேயே தன் முதல் மனைவியோடு மீண்டும் சேர்ந்து
வாழத்தொடங்கிவிட்டார். இந்தப் பெண் மீண்டும் தனிமையாக வாழ்ந்து வருகிறார்.
இப்போது அந்தப்
பெண்மணியின் கேள்வி.னக்கு ஏன் திருமணம் நிலைக்கவில்லை? ஏதாவது தோஷம் உள்ளதா?
நன்றாக கவனியுங்கள்.
இவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை. ராகு கேது தோஷமும் இல்லை.ஆனாலும் ஏன் மணவாழ்க்கை நிலைக்கவில்லை?
மிக எளிமையான விஷயம்தான்.
அதாவது மிகச் சாதாரணமான விஷயம்தான் நடந்திருக்கிறது அப்போது.
இவருடைய
முதல் திருமணம் நடக்கும் போது கேது திசை நடந்தது.
இரண்டாவது
திருமணமும் அதே கேது திசையில் தான் நடந்தது,
எனவேதான் இரண்டும்
நிலைக்கவில்லை.
முதல் கணவர் இறந்தது
அவர் ஜாதகப்படி மாரக திசை,
இந்தப் பெண்ணுக்கு
கேதுதிசையின் காரணமாக நிலைக்காத கணவர் அமைய வேண்டும் என்பது விதி. ஆகவே அது நடந்தது.
இரண்டாவது கணவர்
ஆயுளுக்கு பங்கம் இல்லை. அதனால் மனம் மாறி முதல் மனைவியிடமே அவரைக் கொண்டு சேர்த்தது,
இப்போது சொல்லுங்கள்.தோஷமே
இல்லாதவருக்கும் மணவாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுகிறதா? இல்லையா?
தோஷங்களுக்கு முக்கியத்துவம்
தராதீர்கள்,
உங்கள் ஜாதகத்திற்கும்
இன்றைய கிரக நிலைகளுக்கும் உள்ள தொடர்பை கவனித்து, என்ன திசா புத்தி நடக்கிறது என ஆராய்ந்து
மண வாழ்க்கை அமைத்துக் கொண்டால் சிறப்பைத் தரும்.
கேது
திசையில் திருமணம் செய்யக்கூடாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது.
கேது பகவான் ஒருவருக்கு
பொருளைக்கொடுத்துவிட்டு அதை அனுபவிக்க விடமாட்டார். அல்லது அந்த பொருளினால் பிரச்சினைகளைக்
கோர்த்துவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்,
கேதுவின் திசா
ஆண்டுகளான 7 வருடமும் இது நீடிக்கும்.
இதற்கு
என்ன பரிகாரம் செய்யலாம்?
ஒரே பதில்.ஏழு
வருடத்தையும் அமைதியாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எதன் மீதும் பற்றில்லாமல் துறவியைப்போல்
வாழ்ந்தால், துன்பம் இல்லாமல் கடந்து போய்விடலாம். எதன் மீதாவது ஆசையோ பற்றோ வைத்தால்
அவ்வளவுதான்.அதை உங்களுக்கு உடனடியாகக் கொடுத்து அதன்மூலமாக பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே
போவார்.
வேறு பரிகாரமே
இல்லையா என்று கேட்கிறீர்களா?
மீண்டும்
மீண்டும் சொல்கிறேன். பரிகாரம் என்பது தோஷத்தின் வீரியத்தைக் குறைக்குமே தவிர, தோஷத்தையே
இல்லாமல் செய்துவிடாது.
தோஷ வீரியத்தை
எப்படிக் குறைக்கலாம்? உங்களுக்கு ஒரு பழமொழி சொல்கிறேன்.
துதிக்கை உள்ள
விநாயகரும், வால் உள்ள அனுமனும் கேது திசையின் வீரியத்தை கட்டுப்படுத்தவார்கள்.
கேது பகவானின்
அதிதேவதை வழிபாடும் பலம் சேர்க்கும்.
யமதர்ம ராஜனின்
உதவியாளர், நம் பாவபுண்ணியங்களை கணக்கிட்டுவரும் “சித்ரகுப்தன்”தான் கேதுவின் அதிதேவதை.
அவர் காஞ்சிபுரத்தில்
தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார் சித்திரகுப்தன். அந்தக் கோயிலுக்குச் சென்று 7 விளக்குகள்
ஏற்றி வழிபடுங்கள். நன்மை நடக்கும். அப்படிக் கோயிலுக்குச் செல்லும் போது, மறக்காமல்
உங்கள் ஜாதகத்தையும் எடுத்துச் சென்று அவர் காலடியில் வைத்து வணங்குங்கள்.
பௌர்ணமி அல்லது
சனி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் தரிசனம் செய்யுங்கள். நல்ல மாற்றத்தை உணருங்கள்.
இன்னும்
சில பரிகாரங்கள்.
நவக்கிரகத்தில்
உள்ள கேது பகவானுக்கு சித்ரான்னம் எனும் உணவு அல்லது புளியோதரை சாதம் நைவேத்தியம் செய்து
தானம் வழங்குங்கள். நன்மை கிடைக்கும்.
இதையெல்லாம் செய்ய
முடியாவிட்டால், சித்தன் போக்கு சிவன் போக்கு” என அமைதியாக இருங்கள். எல்லாம் நன்மையே.
கணவன்
ஓரிடம்.மனைவி வேறிடம்! இது மாங்கல்ய தோஷமா?
மாங்கல்ய பலம்
கேள்விப்பட்டிருக்கிறோம்தானே. அதேபோல் மாங்கல்ய தோஷம் என்பதையும் அறிந்திருப்போம்.
மாங்கல்ய
தோஷம்?
ஒரு ஜாதகத்தில்
8ம் இடம் தான் மாங்கல்ய ஸ்தானம். குறிப்பாக பெண் ஜாதகத்திற்கு மட்டுமே பெரும்பாலும்
பார்க்கப்படும். அப்படியானால் ஆண்களுக்கு பார்க்கமாட்டார்களா? என்று யோசிக்கலாம்.
திருமணப் பொருத்தத்தின்
போது “ பெண் ஜாதகத்திற்குத்தான் ஆண் ஜாதகம் பொருந்துகிறதா” என்று பார்க்கப்படுமே தவிர,
ஆண் ஜாதகத்திற்கு பெண் ஜாதகத்தைப் பார்க்கக்கூடாது.
இரண்டுமே ஒன்றுதானே.
என்னங்க இது.என்று யாரேனும் சொல்லலாம். ஆனால் பார்க்கப்படும் முறையானது இப்படித்தான்.
உதாரணமாக “பெண்
பார்க்கப் போகிறோம்” என்று தான் கூறுவார்கள், மாப்பிள்ளை பார்க்கப்போகிறோம் என்று கேள்விபட்டிருக்கிறீர்களா?
மாப்பிள்ளை வீடு
பார்க்க போகிறோம் என்றுதான் சொல்லுவோம். சொல்லுவார்கள்.
அதுபோலத்தான்
“ பெண்ணுக்குத்தான் ஆணே தவிர, ஆணுக்குப் பெண் அல்ல”
மாங்கல்ய தோஷம்
பெண்ணுக்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்று.
என்ன
செய்யும் மாங்கல்யதோஷம்.
திருமணத்திற்குப்பின்
கணவனுக்கு “மாரக கண்டம் “ ஏற்படுத்தும் என்பதே, பெரும்பாலோர் சொல்லுவது!
இது உண்மையா? எட்டாம்
இடம், அதன் அதிபதி கிரகத்தின் நிலை, நவாம்சநிலை இவையெல்லாம் கவனிக்கப்பட வேண்டும்.
மாரகம்
மட்டுமே தான் தருமா? இல்லை,
கணவன் மனைவி சேர்ந்து
வாழ்வதுதான் சிறப்பு. அதைவிடுத்து கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம் என வாழ்ந்தால்
அதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது?
இதுவும் மாங்கல்யதோஷம்தான்.
பெண் ஜாதகத்தில்
ராசிக் கட்டத்தில் எந்த இடத்திலும் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருந்தாலும் அதுவும்
மாங்கல்யதோஷம்தான்.
நிச்சயமாக அவருடைய
கணவர் சம்பாத்தியத்திற்காக வெளியூர் அல்லது வெளிநாட்டில் தான் இருப்பார்.
சில மாதங்களுக்கு
முன், சென்னையில் தேசிய வங்கி ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் என்னிடம் ஜாதகம் பார்க்கவந்தார்,
அவர் சொன்னதை அப்படியே
சொல்கிறேன்.
“எனக்கு திருமணமாகி
7 வருடங்கள் ஆகின்றன. எங்கள் திருமணத்தின்போது என் கணவர் மும்பையிலும், நான் பெங்களூரிலும்
பணியில் இருந்தோம்.
என் கணவர் வாரம்
அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். பிறகு அவர் போராடி சென்னைக்கு மாறுதலாகி
வந்தார்,
அதன்பின் நான்
கஷ்டப்பட்டு சென்னைக்கு மாறுதல் வாங்குவதற்குள், அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துச்
சென்று விட்டார்,
நான் இங்கு என்
மாமியாருடன் இருக்கிறேன். நானும் என் கணவரும் எப்போது தான் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வோம்?
என்று கேட்டார்.
நான் இவர் ஜாதகத்தைப்
பார்த்தவுடன் தெரிந்த விஷயம் மண வாழ்க்கை சிறப்பில்லை என்பதுதான்.
ஆனால் தோஷத்தையும்
சில தியாகங்கள் மூலமாக சரிசெய்ய முடியும்.
அவரிடம் நீங்கள்
வேலையை ஏன் விடக்கூடாது? வேலையை விட்டுவிட்டால் உங்கள் கணவரோடு சேர்ந்து வாழமுடியுமே.எனக்கேட்டேன்.
அவர் தன் வேலையை
விட முடியாது என சொல்லிவிட்டார். “ அப்படியானால் இப்படித்தான் உங்கள் வாழ்க்கை இருக்கும்’என்று
உறுதியாய்ச் சொன்னேன்.
தோஷ பரிகாரம் என்பது
ஆலய வழிபாட்டால்தான் சரியாகும் என்பதில்லை,
இப்படி சில தியாகங்களாலும்
சரியாகும்.
அதாவது ஜாதகத்தில்
ஒவ்வொரு கட்டமும் “பொருள்பற்று, உயிர்பற்று” என இரண்டு விஷயங்களை உள்ளடக்கியதாகும்.
பொருள்பற்று என்பது
பொருளாதாரம் சார்ந்தது,
உயிர்பற்று என்பது
வாழ்க்கை சார்ந்தது,
நிச்சயமாக, உறுதியாக
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் அனுபவிக்க கொடுத்துவைக்கப்படும். மற்றதை விலக்கியே
வைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
நோயற்று இருந்தால்,
பணம் தராது. பணம் தந்தால் எதையும் அனுபவிக்க உடல் ஒத்துழைக்காது. இது யதார்த்தமான உண்மை.
என் நண்பனின் திருமணத்தன்று
மாங்கல்யம் காணமல் போனது.
இது ஏன்? எதனால்?
பார்ப்போம்.
தாலி
தானம் செய்யுங்கள்; தோஷம் நீங்கும்!
என் நண்பனின் திருமணம்.
அப்போது தாலி கட்டுவதற்கு முன்பு மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க அனுப்பினார்கள்.
அதன்படி மண்டபத்தில் எல்லோரிடமும் ஆசி பெறப்பட்டது. பிறகு மணமேடைக்கு வந்து தாம்பூலத்
தட்டைப் பார்த்தபோது, ஐயர் உட்பட சுற்றி நின்றவர்கள் அதிர்ந்து போனார்கள். ஆமாம்...
திருமாங்கல்யத்தைக் காணவில்லை!
ஆசிர்வாதம் செய்த
எவரோ ஒருவர் மாங்கல்யத்தைக் களவாடிவிட்டார்.
வேறு வழியே இல்லை.
அவசர அவசரமாக விரலிமஞ்சள் வைத்து மாங்கல்யம் தயார் செய்து தாலி கட்டினார் நண்பர்,
ஒருமாதம் கழித்து
என்னைப் பார்த்தவர் “ ஏன் இப்படி நடந்தது? இது ஏதாவது அபசகுனமா?’’ என்றும் கேட்டார்.
இங்கே ஒரு விஷயம்.நண்பருடையது
காதல் திருமணம். எனவே, ஜாதகம் ஏதும் பார்க்கப்படவில்லை.
நான் அவர் ஜாதகத்தையும்
அவர் மனைவியின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு ஒரே வரியில் சொன்னேன்.“ஒன்றும் பயப்பட
வேண்டாம். இது “புனர்பூ தோஷம்”மட்டுமே. மாங்கல்ய தோஷம் ஏதும் இல்லை என்று சொல்லி, தைரியம்
தந்து அனுப்பினேன்.
அவருக்கு திருமணம்
முடிந்து தற்போது 27 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றளவும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
0 Comments
THANK FOR VISIT