1, 5, 9 -ம் பாவ திரிகோண பலன்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் பாவங்களில்,  ஆட்சி பெற்ற கிரகங்கள் இருந்தால் அரசு உயர் பதவியும், சொகுசான வாழ்க்கையும் அமையும்.

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில், உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தால் அரசனுக்கு இணையான வாழ்க்கை அமையும். அரசியலில் அழியாப் புகழ் கூடும்

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் நட்பு, சமம் என்ற நிலையில் மூன்றிலும் கிரகங்கள் இருந்தால், நல்ல வாய்ப்புகள் தானாக வந்து உயர்வு தரும். முயற்சிக்கு உரிய பலன் கைமேல் கிடைக்கும்

திரிகோண ஸ்தானமான, 1,5, 9 -ம் இடங்களில் பகை, நீசம் பெற்ற கிரகங்கள் இருந்தால், வாழ்க்கையே போராட்டமாக அமையும். கடின உழைப்பால் மட்டுமே தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தால் வெற்றிகரமான வாழ்க்கை அமையும். நினைத்ததையெல்லாம் சாதிக்க முடியும்.

லக்னத்தில்

லக்னத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால் சொந்த உழைப்பில் முன்னேற்றம்,  நண்பர்கள், மனைவி மூலம் உதவிகள் பெற்று உயர்வு அடைவார்கள்.

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில்

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 - ம் இடத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால்,  தங்களின்  பிள்ளைகள்  மூலமாகவோ, அவர்களின் ஜாதகரின் சுயபுத்தியினாலோ உயர்வு அடைவார்கள்.

பாக்கிய ஸ்தானத்தில் 9 - ம் இடத்தில்

பாக்கிய ஸ்தானமான 9 - ம் இடத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால், பிறருற்கு சேவை செய்வதன் மூலமாகவோ,  அப்பாவின் வழியாகவோ, தன்னுடைய கடின உழைப்பாலோதான் உயர்வு காண முடியும்.

சூரியன்

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் சூரியன் நின்று இருந்தால், அரசு வகையிலும், அரசியல், பொதுக் காரியங்கள், விசுவாசமான நபர்கள் மூலம் ஆதாயம் உயர்வு கிடைக்கும்

சந்திரன்

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் சந்திரன் நின்று இருந்தால், தாய் வழியில் சொத்துகள், பெண்கள் வழியில் வருமானம், தன் சுய உழைப்பாலும் உயர்வு வரும்

குரு

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் குரு இருந்தால், கோயில், பொதுச் சேவை, வங்கி மூலம் ஆதாயம், பைனான்ஸ், முன்னோர் சொத்துகள் மூலம் சுகமான வாழ்க்கை அமையும்

சுக்கிரன்

திரிகோண ஸ்தானமான 1, 5, 9 -ம் இடங்களில் சுக்கிரன் இருந்தால், கலைகளில் வருமானம், புகழ், பெண்கள் மூலம் ஆதாயம், திடீர் லாட்டரி யோகம், எதிர்பாராத அதிர்ஷ்டம், பிறரது பணம் வந்து உயர்வு தரும்.

சனி

திரிகோண ஸ்தானமான 1, 5 , 9 -ம் இடங்களில் சனி இருந்தால் வாழ்க்கையே பலவிதமான போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். எதுவும் அவ்வளவு எளிதாக அமையாது. நினைப்பது எதுவும் நடக்காமல் போனாலும், நடப்பது யாவும் நன்மைக்கே அமையும்.

ராகு கேது

திரிகோண ஸ்தானமான 1, 5 ,9 -ம் இடங்களில், ராகு, கேது இருந்தால் திடீரென முன்னேற்றம் அடைவார்கள்" .

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.