செவ்வாய் தோஷம்.
ஒருவருக்கு ஜாதகத்தைக்
கணிக்கும்போது, லக்னம் என்னும் புள்ளியிலிருந்தே ஜாதகம் இயங்கும்.
எந்த நேரத்தில்
எந்த பலனைத் தரவேண்டும் என்பதை தசாபுத்திகள் தீர்மானிக்கின்றன. அவற்றை எப்படித் தரவேண்டும்
என்பதை கோச்சார கிரகங்கள் நிர்ணயம் செய்கின்றன.
விதி, மதி, கதி
என்ற மூன்று அம்சங்களே ஜோதிடத்தில் பிரதானமானது என்கிறார்கள் ஜோதிட சாஸ்திரம் அறிந்த
வல்லுநர்கள்.
1.
விதி
என்பது நமக்கு என்ன விதிக்கப்பட்டது என்பதைக் காட்டுவது.
2.
மதி
என்பது இப்படி விதிக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக எப்படி மாற்றியமைத்துக் கொள்வது என்பதைக்
காட்டுவது.
3.
கதி
என்பது மாற்றியமைக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவது என்பதைக்
குறிக்கிறது.
செவ்வாய்
தோஷம்.
ஆணோ பெண்ணோ, திருமணத்திற்காக
வரன் பார்க்கும்பொழுது முதல் கேள்வியாக எதிர்நோக்குவது செவ்வாய் தோஷம் இருக்கா என்பது
தான்.
அப்படி
இந்த செவ்வாய் தோஷம் என்ன தான் செய்யும்?
1.
உண்மையில்
செவ்வாய் தோஷம், பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே இல்லை என்பதே உண்மை.
2.
தோஷம்
என்ற ஒன்று இருந்தாலே தோஷ நிவர்த்தி அல்லது தோஷ பரிகாரம் அல்லது தோஷ விமோசனம் கண்டிப்பாக
உண்டு. அதனால்தான் அந்தக் காலத்திலேயே அதாவது புராணக் காலத்திலேயே சாபம் கொடுக்கப்பட்டது.
சாபவிமோசனமும் அளிக்கப்பட்டது.
3.
ஒருவர்
ஜாதகத்தில், லக்னம் மற்றும் ராசிக்கு 2ம் இடம், 4ம் இடம்,
7ம் இடம், 8ம் இடம், 12ம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய்க் கிரகம் இருந்தால்
செவ்வாய் தோஷம்!
4.
செவ்வாய்
தோஷம் மட்டுமே லக்னம் மற்றும் ராசி என்னும் இரண்டுக்குமே பார்க்கப்படுகிறது.
5.
அதற்கு
காரணம், லக்னம் உயிராகவும், ராசி உடலாகவும் இருப்பதால் தான். அதனால் செவ்வாய் தோஷம்
உடலையோ உயிரையோ பாதித்து விடும் என்று நம்பப்பட்டு வந்தது.
6.
லக்னம்
மற்றும் ராசிக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில், செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பொத்தாம்பொதுவாக” சொல்லிவிட முடியாது.
7.
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய லக்னம் மற்றும் ராசிக்கு செவ்வாய்
தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
8.
மிதுனம், கன்னி
லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு மட்டுமே தோஷ வீரியம் உள்ளது. அதற்கும் விதி விலக்குகள்
உண்டு.
ஜோதிடம்
என்பது உங்களை பயம் காட்டி ஒடுக்குவது அல்ல.
எந்த தோஷம் இருந்தாலும்
கவலை வேண்டாம்.வாழ்க்கையில் ஒரே தோஷம்தான் அது சந்தோஷம்!
மேஷம்,
கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம்
ஆகிய ராசி மற்றும் லக்னத்துக்கு செவ்வாய் தோஷம் விலக்கு எனச் சொல்லியிருந்தேன். உண்மையில்,
இந்த ஐந்து லக்கினம் மற்றும் ராசிக்கு செவ்வாய் தோஷம் வேலையே செய்யாது.
மிதுனம்
கன்னிக்கு மட்டுமே தோஷம் உண்டு.
அதற்கும் சில விதிவிலக்குகள், தோஷ நிவர்த்தியாதல் என இருக்கின்றன.
ரிஷபம்,
துலாம், தனுசு, கும்பம், மீனம்
ஆகிய ராசி மற்றும் லக்னத்துக்கு செவ்வாய் தோஷம் விலக்கு உண்டா என்று என்னிடம் நிறைய
பேர் கேட்கிறார்கள்.
இந்த ஐந்து ராசிக்கும்
லக்னத்துக்கும் செவ்வாய், நட்பு கிரகம். எனவே செவ்வாய் தோஷ விலக்கு உண்டு.
தோஷம் தருகின்ற
செவ்வாயை குரு பார்த்தாலோ சேர்ந்தாலோ, சனி பார்த்தாலோ சேர்ந்தாலோ செவ்வாய் தோஷம் ஒருபோதும் வேலை
செய்வதில்லை.
கேதுவோடு
இணைந்தாலும், செவ்வாய் தோஷம்
வேலை செய்வதில்லை
செவ்வாய் திசை
கடந்தவர்கள் அல்லது செவ்வாய் திசையை இனியும் அனுபவிக்க முடியாதவர்களுக்கு செவ்வாய்
தோஷம் வேலை செய்வதில்லை.
செவ்வாயின்
நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்கள், பிறக்கும் போதே செவ்வாய் திசையில்தான்
பிறக்கிறார்கள்.
பிறக்கும்போதே
செவ்வாய் திசை இருப்பதால், அவர்கள் செவ்வாய் திசையைப் பார்க்கவே மாட்டார்கள். எனவே
அவர்களுக்கு செவ்வாய் தோஷம் வேலை செய்யவே செய்யாது.
சந்திரனின்
நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம்
ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், திருமண வயதிற்கு முன்பே செவ்வாய் திசையைக் கடந்து
விடுவதால் அவர்களுக்கும் செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை.
ராகுவின்
நட்சத்திரங்களான திருவாதிரை, ஸ்வாதி, சதயம், குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதியில் பிறந்தவர்கள், செவ்வாய் திசையை எதிர்கொள்ளவே
மாட்டார்கள். எனவே அவர்களுக்கும் செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை.
செவ்வாய் தோஷத்தால்,
ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அப்படி எவரேனும்
கூறும்பட்சத்தில் நிச்சயமாக, உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். அந்த பாதிப்போ வேதனையோ.அது
செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்டது அல்ல! கோச்சார கிரகங்களால், குறிப்பாக, ராகு மற்றும்
சனி பகவானால் உண்டாகும் சில பாதிப்புகளே காரணம்! மேலும் தசா புத்தியையும் கணக்கில்
கொள்ளவேண்டும். ஆக, செவ்வாயால் தோஷமில்லை என்பதை உறுதியாக நம்பலாம்.
மிதுனம்
மற்றும் கன்னி ராசி மற்றும்
லக்னக்காரர்களுக்கு மட்டுமே, செவ்வாய் தோஷ வீரியத்தை நான் மேலே குறிப்பிட்டபடி விலக்குகள்
உண்டா என ஆராய்ந்து, அதிலும் தோஷ நிவர்த்தி ஆகவில்லையென்றால் மட்டுமே, செவ்வாய் தோஷக்காரர்கள்
செவ்வாய் தோஷக்காரர்களை மணம் புரிந்து கொள்ளவேண்டும். அதுமட்டுமல்லாமல், உங்கள் ஜாதகத்தில்,
ராசிக்கட்டத்துக்கு பக்கத்தில் நவாம்சம் என்றொரு கட்டம் உண்டு. அதில், செவ்வாயின் நிலை,
குருவின் நிலை, சுக்கிரனின் நிலை ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
நவாம்சக் கட்டத்தில்,
செவ்வாய், மேற்கூறிய மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தாலும்
தோஷத்தின் வீரியம் அதாவது செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
செவ்வாய் தோஷத்திற்கு
முக்கியத்துவம் தராமல், ஜாதக ரீதியான பொருத்தங்களை (கவனிக்கவும் இங்கு நான் நட்சத்திர
ரீதியான பொருத்தத்தைச் சொல்லவில்லை) கவனித்து திருமணங்களைச் செய்தாலே, மனமொத்த தம்பதியாக
நீடூழி வாழ்வார்கள்.
செவ்வாய் பகவான்
என்பவர் யார்?
பரத்வாஜர் ரிஷிக்கும்
தேவகன்னிகைக்கும் நர்மதை ஆற்றங்கரையில் பிறந்தவர் என்றும் ரிஷியாலும் தேவகன்னிகையாலும்
அதாவது தாய்தந்தையால் கை விடப்பட்டு, பூமா தேவியால் வளர்க்க பட்டவர் செவ்வாய் பகவான்
என்றும் கூறப்படுகிறது.
அவரே குஜன், பௌமன்,
அங்காரகன் என்று அழைக்கப்படும் மங்கலகாரகன் செவ்வாய் பகவான்).
இவர் தீமைகளை அழிப்பதற்காகப்
படைக்கப்பட்டவர், எனவே இவர் அழிக்கும் நெருப்பு.
சூரியன்: ஆக்கும் நெருப்பு
செவ்வாய்: அழிக்கும் நெருப்பு
கேது: தெய்வீக நெருப்பு தீபம், கற்பூரம், யாகம்,
ஹோமம்
தீய சக்தி எனும்
குப்பைகள் எரிக்கபட்டால்தான் நாம் நலமாக இருக்க முடியும், எனவே செவ்வாயைப் பார்த்துப்
பயப்படத் தேவையில்லை, அவர் மங்கலகாரகன், சுபத்தை மட்டுமே செய்வார்.
இப்படி அசுரர்களை
அழிக்க சூரியனால் படைக்கப்பட்ட செவ்வாய், அசுரர்களை வதம் செய்த இடம் மகர ராசி. அந்த
மகர ராசியில்தான் செவ்வாய் உச்சம் எனும் உயரிய அந்தஸ்தை அடைகிறார்,
ஆட்சி வீட்டில்
( மேஷம், விருச்சிகம் ) 100 சதவிகித பலம், உச்ச வீடான மகரத்தில் 200 சதவிகித பலம் என
அடைகிறார்,
அசுரர்களை அழித்த
செவ்வாய், அசுர குருவான சுக்கிராச்சார்யர் என்ற சுக்கிரனை அழிக்க முற்படும் போது சுக்கிரன்,
செவ்வாயோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.
அதாவது மனிதர்களின்
பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களைத் தர நவகிரகங்கள் உருவாக்க பட இருக்கிறார்கள். அதில்
உம்மையும் ( செவ்வாயை) ஒரு கிரகமாக நான் அங்கீகரிக்கிறேன். எனவே என்னை ஒன்றும் செய்துவிடாதே
என கேட்டுக்கொள்கிறார் சுக்கிர பகவான்.
அதை ஏற்று செவ்வாய்
பகவான், சுக்கிரனை வதம் செய்யாமல் விட்டு விடுகிறார்.
இதனால் செவ்வாய்,
சுக்கிரன் வெளிப்பார்வைக்கு ஒருவருக்கொருவர் பகை போல் தெரிந்தாலும் இருவருக்கும் ரகசிய
நட்பு உள்ளது.
இதை நம் ஜாதகத்தில்
எப்படி உணர முடியும்?
ஒருவரின் ஜாதகத்தில்
செவ்வாய், சுக்கிரன் இணைந்திருந்தாலோ, தொடர்பு பெற்றாலோ,
கணவன் மனைவி இருவரும் சதா சர்வ காலமும் சண்டை சச்சரவு என இருப்பார்கள், ஆனால் வருடம்
தவறாமல் குழந்தை பெற்றுக்கொள்வார்கள். இதுதான் சுக்கிரன், செவ்வாய் எனும் ரகசிய நட்பு.
சுக்கிரனின் ஆட்சி
வீடுகளான ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னக் காரர்களுக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை
ஏற்படுத்துவதில்லை.
இனி 12 ராசிகளுக்கும்
சுருக்கமாக ஒரு வரியில் ஏன் செவ்வாய் தோஷம் பாதிப்பதில்லை எனப் பார்ப்போமா?
லக்னம்/ராசி
மேஷம்:
விருச்சிகம் : இது செவ்வாயின் ஆட்சி( சொந்த வீடு). தன் வீட்டுக்கே
யாராவது கெடுதல் செய்வார்களா? எனவே தோஷம் இல்லை.
ரிஷபம்-
துலாம்: சுக்கிரனின் சொந்த
வீடு. இருவருக்கும் ரகசிய நட்பு இருக்கிறது அல்லவா. எனவே செவ்வாய் தோஷம் இல்லை,
கடகம்-
சிம்மம் : நவக்கிரகங்களின்
தலைவன் சூரியன். எனவே சூரியனோடு சேர்ந்த செவ்வாய் ஒருபோதும் தோஷத்தைத் தருவதில்லை.
சந்திரன் : தாய் எனும் அந்தஸ்தை உடையதாலும் 12 ராசிகளிலும்,
ராகு கேது தவிர்த்து மற்ற கிரகங்களை தொடர்பு கொண்டு இருப்பதாலும் தோஷம் இல்லை. மேலும்
சந்திரன், செவ்வாய் சேர்க்கை சந்திர மங்கல யோகத்தைத் தருமே தவிர, தோஷத்தை தருவதில்லை.
தனுசு
மீனம்: குருபகவானின் சொந்தவீடு. இவர் தேவகுரு, எனவே குருவோடு சேர்ந்த
அல்லது குரு பார்வை பெற்ற செவ்வாய், குரு மங்கல யோகத்தைத்தான் தருவாரே தவிர, தோஷத்தை
எப்போதும் தரமாட்டார்,
மகரம்: சனிபகவானின் ஆட்சி வீடு. எனவே இந்த வீட்டில்தான்
செவ்வாய் பகவான் உச்சம் அடைகிறார். ஆகவே இங்கு அமர்ந்த செவ்வாய், தோஷத்தை தருவதில்லை,
கும்பம்: இதுவும் சனி பகவானின் ஆட்சி வீடு. நாம்
ஏற்கெனவே விளக்கியபடி சனிபகவான் தொடர்பு பெற்ற செவ்வாய் பகவான் தோஷத்தைத் தரமாட்டார்.
மிதுனம்
,கன்னி இந்த இரண்டு லக்ன மற்றும்
ராசிகளுக்கு மட்டுமே செவ்வாய் தோஷத்தின் வீரிய அளவு பார்க்கபட வேண்டும்,
இந்த ராசிகளுக்கு
செவ்வாய் கடுமையான எதிரி.
இதற்கு மட்டுமே
விதிவிலக்கு என்ன என்பதை ஆராய்ந்தால் போதும், 90 சதவிகிதம் செவ்வாய் தோஷ விலக்கு ஏற்படும்.
செவ்வாய் தோஷத்திற்கு
இதுவரை தந்த விளக்கங்கள் உங்களுக்குப் பயன் உள்ளதாகவும் இருக்கும்; பயம் போக்குவதாகவும்
இருக்கும் என நம்புகிறேன்,
தோஷத்தைப் பார்த்து
பயம் கொள்ளத் தேவையில்லை. ஜாதக ரீதியான பொருத்தங்களை ஆராய்ந்து மணவாழ்க்கை அமைத்துக்கொள்ள
வேண்டுகிறேன். மங்கலகரமான வாழ்வு நிச்சயம்.
செவ்வாய்
தோஷ பரிகாரங்கள்
இப்படி செவ்வாய்
தோஷம் உள்ள ஜாதகர்கள் என்ன விதமான பரிகாரங்கள் செய்யலாம் என பலரும் கேட்கின்றனர். உண்மையில்
நான் பரிகாரம் என பரிந்துரைப்பது முருக வழிபாடு மட்டுமே! அதாவது, கந்தனை வேண்டினால்,
சகல தோஷங்களும் காணாது போகும். இதில் செவ்வாய் தோஷமெல்லாம் எம்மாத்திரம்?
மேஷம், சிம்மம்,
தனுசு : நெருப்பு ராசிகள்
ரிஷபம், கன்னி,
மகரம் : நில ராசிகள்
மிதுனம், துலாம்,
கும்பம் : காற்று ராசிகள்
கடகம், விருச்சிகம்,
மீனம் : நீர் ராசிகள்.
செவ்வாயானது,
நெருப்பு ராசியில் நின்று தோஷத்தைத் தந்தால்
ஆலயத்தில் விளக்கேற்றி தீப வழிபாடு செய்து வாருங்கள். அது ஒன்றே போதும்.விரைவில் தோஷ
நிவர்த்தியாகிவிடும்!
செவ்வாயானது,
நில ராசியில் நின்று தோஷத்தைத் தந்தால்,
அவரவர் நட்சத்திரங்களுக்கு உண்டான மரம் வளர்த்தல், அல்லது கோயிலில் உள்ள ஸ்தல விருட்சங்களுக்கு
தண்ணீர் விட்டு வழிபடுதல் முதலானவை தோஷ நிவர்த்திக்கு வழிவகுக்கும்.
செவ்வாயானது,
காற்று ராசியில் இருந்து, தோஷத்தைத் தந்தால், முருகனின் கந்த சஷ்டி கவசம், சண்முகக் கவசம், துர்கை கவசம்,
துர்கை அஷ்டோத்ரம் முதலானவற்றைப் படித்து வர, செவ்வாயால் உண்டான தோஷம் நிவர்த்தியாகி
விடும் என்பது உறுதி!
செவ்வாயானது,
நீர் ராசியில் இருந்து தோஷத்தைத் தந்தால்.
இறைவனுக்கு நடத்தப்படும் அபிஷேகப் பொருட்களான பால், பன்னீர், தேன், சந்தனம், இளநீர்
அல்லது கோயில்களில் விளக்கேற்ற நல்லெண்ணெய் ஆகியவற்றை வழங்கி பிரார்த்திக்கலாம்.இவற்றாலும்
தோஷங்கள் சீக்கிரமே நிவர்த்தியாகும்!
செவ்வாய் தோஷம்
என்பதே இல்லை என்றீர்கள். இப்போது பார்த்தால், அதற்கு பரிகாரங்களைச் சொல்கிறீர்கள்
என்று எவரேனும் கேட்கலாம்.
தோஷம் என்பது திருமணமே
இல்லை என்ற நிலையை ஒருபோதும் எவருக்கும் தருவதில்லை, தாமதம் என்ற நிலையை மட்டுமே தருகின்றன
என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இந்த பரிகாரங்கள்
உங்களுக்கோ, அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ விரைவில் திருமணம் நடந்து இல்லறம் சிறக்க
வாழ வேண்டும் என்பதற்காகதான்!
இன்னும்
சில பரிகாரங்கள் :
ஜாதகத்தில் செவ்வாய்
பலம் இழந்தவர்கள், முடிந்த அளவு ரத்ததானம் தாருங்கள், அற்புதமான பலன்களைக் காண்பீர்கள்.
செவ்வாய்க் கிழமைகளில்
சாம்பார் சாதம் தானம் தருவது. உங்கள் கிரகத்துக்கும் அதன் மூலமாக உங்களுக்கும் பலம்
கொடுக்கும். பலன் பெறுவீர்கள்!
உங்கள் சகோதர உறவுகளுக்கு
பிரதிபலன் பாராமல் உதவி செய்யுங்கள். சகோதர பந்தத்தை ‘நாம ஒரே ரத்தம்’ என்று சொல்லுகிறோம்,
இல்லையா. ஆகவே சகோதர உறவுக்குச் செய்யப்படும் உதவி, உங்கள் வாழ்வை இன்னும் வளரச் செய்யும்;
மலரச் செய்யும்!
சந்தர்ப்பம் கிடைக்கிற
தருணங்களிலெல்லாம், சிவப்புநிற ஆடைகளை தானம் தாருங்கள்,
அம்மன் ஆலயங்களில்
( சக்தி வடிவான தெய்வம்)
குங்கும அர்ச்சனை
செய்யுங்கள். முடிந்த அளவு ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் செய்து வாருங்கள், செவ்வாயால்
உண்டான தோஷங்கள் அனைத்தும் விலகும்,
வீட்டு வாசலில்
சிவப்பு மிளகாய், எலுமிச்சை பழத்தோடு சேர்த்து கட்டி வையுங்கள். திருஷ்டியும் விலகும்.
தீயசக்தியும் அண்டாது. தோஷங்களும் விலகும்!
இவை அனைத்தும்
நல்ல நல்ல பலன்களை வாரி வழங்குவது உறுதி!
பெண்களுக்கு கணவனைக்
குறிக்கும் கிரகம் செவ்வாய், எனவே செவ்வாய் பலம் அடைந்தால் கணவன் பலம் அடைவதாக அர்த்தம்.
ஆண்களுக்கு மனைவியைக்
குறிக்கும் கிரகம் சுக்கிரன்,
பெண்களுக்கு கணவனைக்
குறிக்கும் கிரகம் செவ்வாய்.
கணவர் நலமாகவும்
வளமாகவும், நீண்ட ஆயுளோடும் வாழ செவ்வாய் சார்ந்த விஷயங்களைத் தொடர்ந்து செய்தாலே போதும்,
நீங்கள் நினைத்தது நடக்கும்.
அந்தக் காலத்திலும்,
தற்போதும் பெண்கள் தாலியில் பவளமணிகளை கோர்த்துக் கொள்வது செவ்வாய் என்னும் கணவருக்காகத்தான்,
சிவப்பு நிற மலர்கள்
சூடிக்கொள்வதும், செவ்வாயின் ஆளுமையே! மல்லிகையைதானே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்
என கேட்கலாம் மல்லிகையின் மணம் சுக்கிரன் சம்பந்தப்பட்டது,
துவரை நாம் அதிகமாக
உபயோகப்படுத்தும் உணவு என்பது நம் எல்லோரும் உணர்ந்திருப்பீர்கள்.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT