உங்கள் லக்னத்திற்க்கு பாதகாதிபதி யார்? என்ன செய்வார் ?
பாதகாதிபதி ஒவ்வொரு
வகை லக்னத்திற்க்கும் மாறுபடுவார். லக்னங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது . அவை
சர லக்னம் ஸ்திர லக்னம் உபயலக்னம் என வகைப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு லக்னத்திற்க்கும் பாதகாதிபதி கிரகம் மாறுபடும்.
பாதகதிபதி என்பவர்
பாதகத்தை செய்பவர். அதாவது ஒரு காரியத்தை செய்யவிடாமல் தடுப்பது அல்லது செயல்படாமல்
செய்வது என்று பொருள் கொள்ளலாம் . சுருக்கமாக கெடுதல் செய்யும் கிரகம் .
பாதகாதிபதி
எப்போது பாதகம் செய்வார் ?
பாதகாதிபதி கிரகம்
தனது தசை புக்தி அந்தரங்களிலும் அல்லது பிற தசைகள் நடக்கும்போது புத்தி நாதனாக அந்தர
நாதனாக வரும்போது பாதகம் செய்வார்.
லக்னம் பாதகஸ்தானம் பாதகாதிபதி ஸ்தானாதிபதி
மேஷம் 11 ஆமிடம் சனி
ரிஷபம் 9 ஆமிடம் சனி
மிதுனம் 7 ஆமிடம் குரு
கடகம் 11 ஆமிடம் சுக்கிரன்
சிம்மம் 9 ஆமிடம் செவ்வாய்
கன்னி 7 ஆமிடம் குரு
துலாம் 11 ஆமிடம் சூரியன்
விருச்சிகம் 9 ஆமிடம் சந்திரன்
தனுசு 7
ஆமிடம் புதன்
மகரம் 11 ஆமிடம் செவ்வாய்
கும்பம் 9 ஆமிடம் சுக்கிரன்
மீனம் 7
ஆமிடம் புதன்
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT