கிரகங்கள் வக்கிரம்
வக்கிரம் என்ற
சொல் சம்ஸ்கிருத மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் 'பின்னோக்கி நகர்த்தல்' என்றே
அர்த்தம்
மாயத்
தோற்றம்
பெரும்பாலும் வக்கிரம்
பெற்ற கிரகங்கள் பூமிக்கு அருகில் இருக்கும். இதன் காரணம் ஜாதக சக்கரத்தில் சூரியனுக்கு
எதிர் திசையில் இந்த கிரகங்கள் வருவதே காரணம். ஏற்கனவே கூறியபடி சூரியனுக்கு 7 இடத்தில்
பூமி இருக்கும் என்ற கோட்பாட்டின்படி, வக்கிரம் பெற்ற கிரகங்கள் பூமிக்கு அருகில் இருக்கும்.
கிரக
வக்கிரமும், வக்கிர நிவர்த்தியும்
ஒரு கிரகம் இருக்கும்
நட்சத்திரத்தில் இருந்து 10 நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் போது, அந்த கிரகம் வக்கிரம்
பெறும். அது போல சூரியன் 21 நட்சத்திரத்தில் பயணிக்கும் போது அந்த கிரகம் வக்கிர நிவர்த்தி
அடையும்.
குறிப்பு: சூரியனில் இருந்து முன்னோக்கி செல்ல செல்ல
இருக்கும் கிரகங்களின் வக்கிர நாட்கள் அதிகரிக்கும்.
புதன் 24 நாட்கள்
வக்கிரமாகவும்,
சுக்கிரன் 42 நாட்கள்
வக்கிரமாகவும்,
செவ்வாய் 80 நாட்கள்
வக்கிரமாகவும்,
குரு 120 நாட்கள்
வக்கிரமாகவும்,
சனி 140 நாட்கள்
வக்கிரமாகவும் இருப்பார்கள்.
கிரக
வக்ர காலம்
குருவின் வக்ர
காலம்–
3மாதங்களுக்கு அதிகமாகவும்
சனியின் வக்ர காலம்
-4 முதல் 5மாதம் வரையிலும்
செவ்வாயின் வக்ர
காலம்-சுமார் 2மாதம் (2ஆண்டுக்கு ஒருமுறை)
சுக்ரனின் வக்ர
காலம்-சுமார் 50 நாட்கள் 11/2 வருடத்திற்கு
ஒருமுறை
வக்ர
நிலை பற்றி ஜோதிட சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்
1.
சுப
கிரகங்கள் வக்ரம் ஆனால் அதிபலம் ஏற்படும்.அவை ராஜ்யத்தை கொடுக்கும்.
2.
பாவ
கிரகங்கள் வக்ரம் ஆனால் மனிதனுக்கு துக்கத்தை தருவதுடன், வீண் அலைச்சலை உண்டாக்கும்.
3.
வக்ரமடைந்த
கிரகங்கள் உச்ச பலனை தரும்.
4.
வக்ர
கிரகம்+ வக்ர கிரகம் சேர்ந்தால் மிக அதிக அளவு பலம் பெறும்
5.
வக்ர
கிரகம் உச்ச ராசியில் - மத்திம பலன்
6.
வக்கிர
கிரகம் ஆட்சி வீட்டில் - பலம் இல்லை
7.
வக்கிர
கிரகம் நீச ராசியில் - அதிக பலம் பெறும்
8.
சனி,
செவ்வாய் வக்ரம் பெற்று நீச்ச, பகை வீடு பெற்றால்
அதிக பலம் இவர்கள் நல்ல பலன் தருவார்கள்.
நடைமுறையில்
வக்கிர பலன்
1.
வக்கிரம்
பெற்ற கிரகங்கள்இளமையில் கஷ்டங்களையும் போராட்டத்தையும்
கொடுத்து முதுமையில் ஏதோ ஒரு வகையில் புகழை தருகிறது
2.
பாவ
கிரகங்கள் வக்கிரம் பெற்றால் சுப பலன்கள் அதிகம் தந்து கடைசியில் பயனற்ற நிலையையோ அல்லது
புகழோடு மரணத்தையோ தந்துவிடுகிறது
3.
சுப
கிரகங்கள் வக்ரம் பெற்றால் பல சோதனைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் தந்து பின் நல்ல வாய்ப்பை
தருகிறது
4.
ஒரு
ஜாதகத்தில் 3 அதற்கு மேலும் கிரகங்கள் வக்கிரம் அடைந்திருந்தால் கடினமான சோதனைகளையும்
வேதனைகளையும் தந்து கடைசியில் உயர் நிலைக்கு வந்து புகழையும், எதிர்பாராத திடீர் மரணத்தையும்
தருகிறது.
5.
சனி
வக்கிர நிலை-உலக பற்றுகளில் இருந்து விடுவித்து ஆன்மீகத்தில் உயர்வடைய வழிகாட்டுகிறது.
6.
புதன்
வக்கிர நிலை-சமயோசிதமான புத்திசாலித்தனத்திற்கும், ஏமாற்றுவதற்கும்,திறமையாக பேசுவதற்கும்,
கபடநாடகத்திற்கும் துணைபுரிகிறது.
7.
குரு,சனி
வக்கிர நிலை கௌரவம் புகழை ஏற்படுத்துகிறது.
1.
ஒரு
கிரகம் வக்கிரமடைந்து, அஸ்தங்கம் அடையாவிட்டால் மிகவும் வலுவாகக் கருதப்படும். அதே
போல் வக்கிரமடைந்த ஒரு கிரகம் உச்சமடைந்திருந்தாலோ அல்லது பகை வீட்டில் அமர்ந்தாலோ,
அந்த கிரகம் வலுவாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில் வக்கிர பலம் பெற்ற ஒரு கிரகம் அசாதாரண
தன்மை அல்லது விபரீதமான நிலை பெற்று பலன்தர வல்லது.
2.
வக்கிரமடையும்
எல்லா கிரகங்களும் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5-ம் இடத்திற்கு வருவதிலிருந்து
வக்கிரமடையும். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5, 6, 7, 8-ம் இடத்தில் உள்ள கிரகங்கள்
வக்கிர நிலை அடையும்.
3.
புதன்
ஒரு வருடத்திற்கு 3 முறையும், சனி மற்றும் குரு ஒவ்வொரு வருடத்தில் சில மாதங்களும்,
செவ்வாய், சுக்கிரன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் வக்கிர கதி பெறும். ராகு, கேதுக்கள்
எப்பவுமே வக்கிர கதி பெறும்.
4.
கேடு
விளைவிக்கும் பாப கிரகங்கள் வக்கிர நிலை பெறும்போது கெட்ட மற்றும் எதிலும் சாதகமற்ற
சூழலையே தரும். அதே சுப கிரகங்கள் வக்கிர நிலை பெறும்போது நல்ல மற்றும் எதிலும் சாதகமான
சூழலையே தரும். வக்கிர நிலை பெறும் கிரகமானது அது கடந்து வந்த முன் ராசியில் என்ன நிலை
கொண்டிருந்ததோ அந்த பலனையே தற்போது வக்கிர நிலை பெற்ற ராசியில் அளிக்கும்.
5.
ஒரு
கிரகத்திற்கு மேல், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் வக்கிரகதி அடைந்திருந்தால் எந்த வக்கிரம்
பெற்ற கிரகம் அதிக பாகை கொண்டுள்ளதோ அதுவே அதிக விளைவை, அது நல்லதையோ / கெட்டதையோ ஏற்படுத்தும்.
உச்சமடைந்த நிலையில் ஒரு கிரகம் வக்கிரமடைந்தால், ஜாதகருக்கு, அது தனது உதவும் சக்தியை
இழக்கும். அதுவே நீச்ச நிலையில் ஒரு கிரகம் வக்ரமடைந்தால் ஜாதகருக்கு, அது தனது உதவும்
சக்தியை பல வழிகளில் உதவிடச் செய்யும். ராசியில் இல்லாமல், ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தின்
நவாம்சத்தில் நீச்ச நிலையில் வக்ரமடைந்தால் அது ஜாதகருக்கு உதவும் நிலையைத் தரும்.
சுக்கிரன்
வக்ரமடைந்த ஜாதகருக்குரிய பலன்கள்:
சுக்கிரன் வக்கிர நிலை பலன்:
பாசத்தை வெளிப்படுத்துவதற்கு
முன்பாக, மறு பரிசீலனை செய்வது மற்றவர்களுடன், அசிங்கமாக தொடர்புப்படுத்திப் பார்ப்பது.
மற்றவர்களின் பாசத்தை சந்தேகிப்பது உறவுகளிடம் மிகுந்த அன்போடு இருப்பது மற்றவர்களின்
அர்ப்பணிப்பை ஏமாற்றுவது அல்லது கைவிடுவது. தமக்குத் தாமே, கடின பிரயாசை மூலம் பெறும்
மகிழ்ச்சியைத் தடுத்துக்கொள்வது.
1.
இது
பெண்கள் விஷயத்தில் பல முறைகேடான வழிகளை ஏற்படுத்தும். திருமண வாழ்வில் குறைபாடுகள்
தோன்றும். எதிலும் ஒரு கட்டுப்பாடான நிலை இருக்காது.
2.
சுக்கிரன்
வக்கிரமாக உள்ளவர்கள் தங்கள் உறவுகளிலிருந்து வேறுபட்ட ஒன்றை விரும்புகிறார்கள்
3.
சுக்கிரன்
நீர் உள்உறுப்புகளை ஆட்சி செய்கிறது. மனித
உடல் 85% க்கும் அதிகமான நீரால் ஆனது. நீர் உணர்ச்சிகள், சுவை, மகிழ்ச்சி மற்றும் அமைதி
ஆகியவற்றைக் கையாள்கிறது. வக்கிர சுக்கிரன்
இவை அனைத்திலும் பிரச்சனைகளை உருவாக்கலாம்.
4.
சுக்கிரன்
வக்கிரகதனத்தின் விளைவு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு பேரழிவு / அற்புதமானதாக இருக்கலாம்,
நிச்சயமாக, ஜாதகத்தில் நிலையைப் பொறுத்து, மிக முக்கியமானது.
5.
சுக்கிரனின்
வக்கிரம் ஜாதகி / ஜாதகர் படிப்படியாக பாலியல் செயல்பாடுகளில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.
சுக்கிரன் வக்கிரம் அடையும்போது அனைத்து ராசிகளில் ஒரே மாதிரியாக வேலை செய்கிறது. பெண்களை
விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது.
6.
சுக்கிரனின்
வக்கிரம் வாழ்க்கையில் ஆடம்பரங்கள் மற்றும் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுடனான நமது
உறவுகளுடன் தொடர்புடையது
7.
சுக்கிரன்
வக்ரமடைந்த ஒருவருக்கு இணையான சரியான ஜோடி என சொல்லப்படும் அளவிற்கு துணை கிடைப்பதில்லை.
சுக்கிரனின் முக்கியமான காரகத்துவம் காமம் எனப்படும் தாம்பத்திய சுகம் என்பதால் சுக்கிரன்
வக்ரமடையும் நிலையில் அந்த ஜாதகருக்கு தாம்பத்திய சுகத்தில் ஆர்வமின்றிப் போகலாம்.
8.
அவரது
ஆர்வத்திற்கேற்ப துணை கிடைக்காமல் போகலாம். இதுபோலவே சுக்கிரன் தனது மற்ற காரகத்துவங்களான
வீடு, வாகனம் போன்றவைகளையும் நல்ல விதமாகத் தரும் வலுவை வக்ரமடையும் போது இழப்பார்.
செவ்வாய்
வக்ரமடைந்த ஜாதகருக்குரிய பலன்கள்:
கோபத்தை வெளிப்படுத்தும்
முன் மறுபரிசீலனை செய்வது, போட்டி சூழ்நிலைகளில் கையாள சிரமப்படுவது, அடக்குவதற்கு
முனைதல் மனஅழுத்தம். செவ்வாய் வக்ரமடைவு என்பது, அதிக ஆன்மீக ஆசையைத் தூண்டும்.
இதுவும் வாழ்வில்
போராட்டத்தையும் கடின உழைப்பையும் காட்டும். சில சமயம் திடீர் லாபமும் உண்டு, சில சமயம்
விபத்தும் உண்டு.
குரு
வக்ரமடைந்த ஜாதகருக்குரிய பலன்கள்:
நம்பகத்தன்மையை
சந்தேகிப்பது தம்மை உள்ளுக்குள் உயர்வாக எண்ணுவது ஏராளமான மனோபாவத்துடன் இருப்பது மத
சம்பந்தமான கேள்விகளை அகத்தே கொண்டிருப்பது
அதிக கண்டிப்பு,
உள் மனதில் நிம்மதியற்ற தன்மையை அளிப்பதோடு, அவர்கள் வாய் திறந்து எதனையும் பேச தயங்குவார்கள்.
நாஸ்திக எண்ணங்களுக்கும்,
தவறான வருமானத்திற்கும், முறைகேடான செயல்களுக்கும், முறையற்ற சந்ததிகளுக்கும் வழிவகுத்து
விடுகிறது. குரு துரோகம்,கோயில் சொத்தை அபகரித்தல், பொய்யான ஆன்மீகம் போன்ற செயல்களை
செய்யத் தூண்டுகின்றன.
சனி
வக்ரமடைந்த ஜாதகருக்குரிய பலன்கள்:
தாழ்வு மனப்பான்மை
உணர்வது, எதிலும், போதாமையை உணர்வது, பயத்தை மறைப்பது. சனி கிரகம் மட்டுமே தனிமனித
ஒழுக்கத்துக்கு காரகர் ஆவார்.
கடின உழைப்பால்
உயர வைக்கும், ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும், வாழ்வில் போராட்ட சூழ்நிலையில் இருந்து
கொண்டே இருக்கும்
திடீர் அதிர்ஷ்டத்தை
தரும், திடீர் நோய்,விபத்து, வழக்கு போன்றவையும் தரும்.
புதனின்
வக்கிர நிலை பலன்:
இது நன்மையைத்
தரும் உயர்ந்த கல்வியையும், நல்ல பேச்சாற்றலையும் திறமையையும் தரும்.
வக்கிரம்
முடிவு:
ஒரு கிரகம் வக்ரம்
பெற்றால் அந்த கிரகத்தின் தன்மையிலும் காரகத்துவத்திலும் குறைபாடுகள் இருக்கவே செய்யும்.
அதே போல் வக்கிர கிரகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டின் ஆதிபத்திய பலனையும் குறைபாடுகள்
இருக்கவே செய்யும்.
வக்கிரம் பெற்ற
கிரகம் அதன் ஆதிபத்தியம் காரகத்துவத்திலும், இருக்கும் வீட்டிலும் தன் வக்கிர குணத்தை
காட்டவே செய்யும். எனவே ஒரு பைத்தியக்காரனைப் போல அதன் செயல்பாடுகள் உறுதி அற்றதாக
இருக்கும்.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT