ஜோதிடப்படி
ஒருவருக்கு அவமானம் எப்பொழுதெல்லாம் நிகழும்?
ஜோதிடப்படி அவமானத்திற்கு
காரணகர்த்தாவான கிரகம் சனி.
ஜாதகத்தில்
சனியின் ஆதிக்கம் அதிகமாக இருந்து, லக்னம், லக்னாதிபதியுடன் தொடர்பு பெற, அடிக்கடி
அவமானப்பட வேண்டி இருக்கும்.
சனி திசை நடக்கும்
போது, இந்த பலன் அப்பட்டமாக வெளிப்படும்.
எந்த
ஒரு ஜாதகத்திலும், அவமானத்தைக் குறிக்கும் பாவகம் எட்டு.
கோச்சாரத்தில், ஏழரைச் சனியில் ராசி எனப்படும் ஜென்ம ராசியில் சனி
அமரக்கூடிய காலகட்டங்களில், 100:99% சதவீதம்
பேர், ஏதாவது ஒரு விதத்தில் , அவமானத்தை சந்திக்க கூடிய நிலைக்கு ஆளாகி இருப்பர்.
ராசிக்கு எட்டாம்
பாவகத்தில் (அஷ்டமச்சனியில்) 100:100% சதவீதம், ஏதோ ஒரு நிலையில், ஒருவர், நிச்சயமாக
அவமானத்தை அடைந்தே வந்திருப்பர்.
இது
எல்லா ஜாதகருக்கும் பொருந்தும்.
நிச்சயமாக ,ஒரு
நாளாவது, நிம்மதியான அமைப்பில், தூக்கம் இல்லாமல் , அதை நினைத்து கவலைப்பட வேண்டியது
இருந்திருக்கும்.
பணத்தால் அவமானம்,
குடும்பத்தால் அவமானம், கணவன் மனைவிக்குள்ளே பிரச்சனையால் அவமானம், பெண்களால் அவமானம்
, கடனால் அவமானம், வேலையால் அவமானம், போலீஸ்
ஸ்டேஷனுக்கு சென்று வருவதால் அவமானம், என, அப்பொழுது அவர்களுக்கு நடக்கும் தசா புத்தியின்
அமைப்பை பொறுத்து, ஏதாவது ஒரு விதத்தில் அவமானத்தை
அனுபவிக்க நேரிடும்.
ஜாதகத்தில் சனி
சுக்கிரன் நெருக்கமாக இணைந்து, சனி உங்களுடைய ஜாதகத்திற்கு எட்டாம் அதிபதியினுடைய நட்சத்திர
சாரத்தைப் பெற்று , சனி திசை நடந்து, கோட்சாரத்தில் ஏழரைச் சனியோ, அஷ்டம சனியோ நடந்தால்
பெண்ணால் தலைகுனியக்கூடிய அமைப்பை கொடுக்கும்.
ஜாதகத்தில் சனி
திசையோ, எட்டுக்குடைய திசையோ நடந்து, ஏழரைச் சனியோ, அஷ்டம சனியோ நடந்தால், வெளியே தலை
காட்ட முடியாத அளவிற்கு ,அவமானத்தால் கூனிக் குறுக நேரிடும்.
இந்த அமைப்பு லக்னம்,
லக்னாதிபதியோடு தொடர்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது எட்டாம் அதிபதி, லக்னாதிபதியுடன்
தொடர்பு பெற்று இருக்க வேண்டும்.
பொதுவாக 8ம் அதிபதி
தசை, சனி திசை நடக்கக்கூடிய காலகட்டங்களில் அவமானப்பட வேண்டிய நேரிடும் என்பதால், இந்த
காலகட்டங்களில், இந்த அமைப்போடு, நம் லக்னம்
லக்னாதிபதி தொடர்பு பெறுகிறதா என்பதை பொறுத்து, எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT