ஜாதக லக்னத்திற்க்கு மாரகாதிபதி யார்? என்ன செய்வார் ?

பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி

ஒருவர் ஜாதகத்தில் மாரகம்(மரணம்) செய்வதற்கும், பாதகமான நிலைகளை செய்வதற்கும் ஆன சில அமைப்புக்கள் உள்ளன.

சர, ஸ்திர, உபய ராசிகளின் அடிப்படையில் இந்த மாரக,பாதக அமைப்புகள்  தரப்பட்டுள்ளன.

சரம் ராசிகள்

மேஷம்,கடகம்,துலாம்,மகரம்.

2ம் வீடும், 7ம்வீடும் மாரகஸ்தானங்கள்.அதன் அதிபதிகள் மாரகாதிபதிகள். 11ம் வீடு பாதகஸ்தானம். அதன் அதிபதி பாதகாதிபதி்.

ஸ்திர ராசிகள்

ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், கும்பம்.

3ம் வீடும்,8ம் வீடும் மாரகஸ்தானங்கள். அதன் அதிபதிகள் மாரகாதிபதிகள். 9ம் வீடு பாதகஸ்தானம். அதன் அதிபதி பாதகாதிபதி.

உபய ராசிகள்

மிதுனம்,கன்னி, தனுசு, மீனம்

7ம் வீடும்,11ம் வீடும் மாரகஸ்தானங்கள். அவற்றின் அதிபதிகள் மாரகாதிபதிகள்.

7ம் வீடு பாதகஸ்தானம். அதன் அதிபதி பாதகாதிபதி.

உபய லக்கினத்திற்கு மட்டும் தான் 7ம் வீடு மாரக, பாதக ஸ்தானமாக வரும்.

மாரகாதிபதி கிரகம் மாரகம் அல்லது அதற்க்கு ஒப்பான கஷ்டங்களை கண்டங்களை கொடுப்பவர். ஒவ்வொரு லக்னத்திற்க்கும் மாரகாதிபதி கிரகம் மாறுபடும் . மாராகம் என்றால் மரணம் என்று பொருள் .

பொதுவாக ஒருவருக்கு மரணம் ஏற்படும் அந்திம காலங்களில் இந்த மாரகாதிபதி கிரகம் தனது பங்கு காரியங்களை செய்யும்.  நடுத்தர வயதில் அல்லது இளம் வயதில் மாரகாதிபதி கிரகம் மாராகத்திற்க்கு ஒப்பான கண்டங்களை கொடுக்கும்.  ஒருசிலருக்கு ஆயுள் பாவம் குறைவாக இருப்பின் மாரகாதிபதி நிச்சயம் மரணத்தை கொடுக்கும்.

மாரகாதிபதியாக வரும் கிரகம் பிற ஸ்தானங்களுக்கு அதிபதியாக வரும்போது அந்த ஸ்தான பலன் முழு சுபமாக நடைபெற வாய்ப்பில்லை . மேலும் அந்த ஸ்தானத்தால் மாராகத்திற்க்கு ஒப்பான கண்டங்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.

மேற்படி மாரகாதிபதி 6, 8, 12 ஆமிடதில் மறைந்தாலோ அல்லது நீசம் பெற்றாலோ அல்லது ஒரு பகை கிரகத்தோடு அஸ்தங்கம் பெற்று இருந்தாலோ மாரகதன்மை இளம் வயதில் ஏற்பட வாய்ப்பில்லை. அதாவது நண்மை அல்லது தீமையோ செய்ய இயலாது.

மாரகாதிபதி எப்போது மாராகம் செய்வார் ?

ஒருவருக்கு மாரகாதிபதி தசை நடைபெறும்போது அல்லது ஆயுள் ஸ்தான அதிபதி தசையில். அல்லது மூன்றமிடம் தசையில்  மாரகாதிபதி புக்தி நடைபெறும்போது மாராகம் நடக்க வாய்ப்புகள் உண்டு.

லக்னம்    மாரகஸ்தானம்       மாரகாதிபதி     ஸ்தானாதிபதி

மேஷம்    2 ஆமிடம் 7 ஆமிடம்       சுக்கிரன்

ரிஷபம்    3 ஆமிடம் 8 ஆமிடம்      சந்திரன் குரு

மிதுனம்   7 ஆமிடம் 11 ஆமிடம்      குரு செவ்வாய்

கடகம்     2 ஆமிடம் 7 ஆமிடம்       சூரியன்    சனி

சிம்மம்    3 ஆமிடம் 8 ஆமிடம்       சுக்கிரன்   குரு

கன்னி     7 ஆமிடம் 11 ஆமிடம்      குரு சந்திரன்   

துலாம்    2 ஆமிடம் 7 ஆமிடம்      செவ்வாய்

விருச்சிகம் 3 ஆமிடம் 8 ஆமிடம்       சனி  புதன்

தனுசு          7 ஆமிடம் 11 ஆமிடம்      புதன் சுக்கிரன்

மகரம்     2 ஆமிடம் 7 ஆமிடம்       சனி சந்திரன்

கும்பம்    3 ஆமிடம் 8 ஆமிடம்       செவ்வாய் புதன்

மீனம்          7 ஆமிடம் 11 ஆமிடம்      புதன் சனி

ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 8ம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவகிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவனாவார்.

ஒருவரின் ஜாதகத்தில் 8ம் பாவமும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்து விட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும்.

8ம் பாவம் பலமிழந்து சனி பகவானும் 8ம் அதிபதியும் பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது.அது போல பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாகிறது.

ஒரு சில தசாக்கள் சிலருக்கு கண்டத்தை ஏற்படுத்துகின்றது.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4வது திசையாக வரும் சனி திசை

அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5வது திசையாக வரும் செவ்வாய் திசை

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 6வது திசையாக வரும் குரு திசை

ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7வது திசையாக வரும் ராகு திசை

கண்டத்தை உண்டாக்கும் என்பது பொது விதி.

ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகஸ்தானம் உண்டு. அந்த ஸ்தானதிபதியின் தசா புக்தியும், ஸ்தானத்திலுள்ள கிரகங்களின் தசா புக்தியும் நடைபெறும் சமயங்களில் கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 12லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர்.

சர லக்னம் மேஷம், கடகம், துலாம், மகர  லக்னத்திற்கு 2,7ம் வீடுகள் மாரக ஸ்தானம்.

ஸ்திர லக்னம் ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்ப லக்னத்திற்கு 3,8ம் வீடுகள் மாரக ஸ்தானம்.

உபய லக்னம் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம்

ஜென்ம லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் மாரக ஸ்தானாதிபதியின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாக கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.

அக்கிரகங்களை சுப கிரகங்கள் பார்வை செய்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை  கடக்க முடியும். அதுவே பாவ கிரக பார்வை, பாவ கிரக சேர்க்கைப் பெற்று பலவீனமாக இருந்து அந்த நேரத்தில் ஏழரை சனி அஷ்டம சனி போன்றவை நடைபெற்றால் மாரகத்தை எதிர் கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.

1.   மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதியான சுக்கிரன் மாரகாதிபதியாவார். 2,7க்குரிய கிரகமான சுக்கிரனின் தசா புக்தி காலங்கிளலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

2.   ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8 க்கு அதிபதிகள் மாரகாதிபதிகளாவார்கள் அதனால் 3ம் அதிபதி சந்திரனின் தசா புக்தி காலங்களிலும் 8ம் அதிபதி குருவின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 3,8ல் அமையும் கிரகங்களின் தசா புக்தி காலத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

3.   மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான குரு, செவ்வாய் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலத்திலும் 7,11ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தல் கவனம் செலுத்துவது நல்லது.

4.   கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதிகளான சூரியனும் சனியும் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 2,7 அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

5.   சிம்ம லக்னத்தில் பிறந்வர்களுக்கு 3, 8க்கு அதிபதிகளான சுக்கிரனும் குருவும் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசாபுக்தி காலங்களிலும்  3,8ல் அமையும் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கித்தில் கவனம் செலுத்துவது நல்லது.

6.   கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான குருவும் சந்திரனும் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமையப் பெற்றுள்ள  கிரகங்களின்   தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும்.

7.   துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதியான செவ்வாய் மாரகாதிபதியாவார். செவ்வாயின் திசா புக்தி காலங்களிலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

8.   விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8க்கு அதிபதிகளான சனி, புதன் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசாபுக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.

9.   தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான புதன் சுக்கிரன் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமைந்துள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

10. மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதிகளான சனி, சந்திரன் மாரகாதிபதிகள் ஆவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகும்.

11. கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8க்கு அதிபதிகளான செவ்வாய், புதன் மாராகதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும்.

12. மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான புதன் சனி ஆகியோர் மாரகாதியாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய பாதிப்புகள் எதிர் கொள்ள வேண்டும்.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.