புத்திர தோஷம்.ஏன்? எதனால்?
இந்தத் தொடரின்
நோக்கமே இந்தத் தோஷங்களைக் காட்டி உங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்வது அல்ல!
உங்களுக்கு மன ரீதியாக உளைச்சலை ஏற்படுத்தி நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிற இந்த
தோஷங்கள் எல்லாமே “கடந்து போகும்” என்று உங்களுக்கு உற்சாகத்தையும், விழிப்பு
உணர்வையும் ஏற்படுத்துவதே தொடரின் நோக்கம்.
அந்தக் காலத்தில்
மருத்துவரே ஜோதிடராகவும், ஜோதிடரே மருத்துவராகவும் இருந்தார்கள்.
அதற்குமுன் அவரின்
ஜாதகத்தை பார்த்து நோயின் தன்மை, நோய் தீரும் காலம் என அனைத்தையும் சொன்னார்கள். அதுவும்
எப்படித் தெரியுமா? திசா புத்தி, கோச்சாரம் பார்த்து முடிவு செய்தார்கள்.
இப்போதும் அதேபோல்
ஜாதகத்தை ஆராய்ந்து நோயின் தன்மை, அது தீரும் காலம் முதலானவற்றை நிர்ணயம் செய்ய முடியும்,
“புத்திரதோஷம்”என்பது என்ன?
எந்த மாதிரியான
பாதிப்புகளை கிரகங்கள் செய்கின்றன?
அதற்கு விலக்கு
உண்டா? அப்படியெனில் என்ன?
1.
ஆண்
ஜாதகத்தில் 5 ஆம் பாவகம்
2.
பெண்
ஜாதகத்தில் 9 ஆம் பாவகம் புத்திர பாக்கியத்தைக் காட்டும்.
3.
குரு
பகவான் புத்திர பாக்கியத்தை தருபவர். அவர் நிலை என்ன என்பதும் பார்க்கப்பட வேண்டும்.
4.
ஐந்தாம்
பாவக அதிபதி நிலை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
5.
உயிர்
ஜனனம் என்னும் ஆன்ம காரகன் சூரியன் நிலை கவனிக்கப்பட வேண்டும்.
6.
ஊழ்வினை
காரணமாக நாம் பிறப்பெடுக்கக் காரணமான ராகுகேது என்ன செய்கிறார்கள் என்பதையும் பார்க்கவேண்டும்.
7.
ஆணின்
உயிர் உற்பத்தியான விந்து, பெண்ணின் கருமுட்டை இவற்றின் காரகமான சுக்கிரன் என்ன ஆனார்
என கவனமாகப் பார்க்க வேண்டும்.
8.
வேகம்,
வீரியத்திற்கு காரணமான செவ்வாயின் நிலை கவனிக்கப்பட வேண்டும்.
9.
உடல்
தகுதியைக் காட்டும் சந்திரனையும் பார்க்கவேண்டும்.
10. இவை அனைத்தும் மட்டுமின்றி நவாம்சம் என்னும்
அம்ச கட்டத்தையும் ஆராய வேண்டும்.
இதெல்லாம் எங்களுக்கு
எப்படித் தெரியும்? நாங்கள் என்ன ஜோதிடமா படித்திருக்கிறோம்? என்பவர்களுக்கு.
நான் இங்கே ஜோதிடம்
கற்றுக்கொடுக்க வரவில்லை. உங்களை கற்றுக் கொள்ளச் சொல்லவுமில்லை.
உங்கள் குழப்பங்களுக்கு
எளிமையாக, புரியும்படியாக, தெளிவு பெறும் வகையில் விவரிக்கப் போகிறேன்.
எளிமையான பரிகாரங்கள்
மூலம் உங்கள் பிரச்சினை தீர அதற்கு உரிய தெய்வங்களை உணர்த்தப் போகிறேன். அவ்வளவுதான்!
“நோய்நாடி
நோய் முதல்நாடி”
என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு.
நோய்நாடி - அதாவது
மருத்துவரைப் பார்ப்பது.
நோய் முதல்நாடி
- அதற்கு முன்னதாக ஜோதிடரைப் பார்ப்பது.
நமக்கு வரும் நோய்கள்
பல விதமாக இருந்தாலும், அடிப்படையில் 3 விதமான விஷயங்களே மூலகாரணங்களாக அமைகின்றன.
அவை,
வாதம், பித்தம், கபம்
வாதம்
: காற்று மற்றும் நிலம் தத்துவம்,
அதாவது செயலற்ற அல்லது குறைவான இயக்கம், பக்கவாதம், ஜீரணக்கோளாறு, வாயுப் பிடிப்பு,
மூச்சுப்பிடிப்பு, ஒரு சிலருக்கு குளிர் காலங்களில் கால் பாதத்தில் இறுக்கப் பிடித்து
கொள்ளும். இது ஒருசில நிமிடங்கள் வரை நீடிக்கும் இதுவும் வாதம்தான். வாதத்தில் ஒருவகைதான்.
பித்தம்:-
நெருப்புத் தன்மை அதாவது உடல் சூடு,
நம் உடலின் சூடு
ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதை நீங்கள் அறிவீர்கள், மேலும் நெஞ்செரிச்சல், தொண்டை
எரிச்சல், நீர்க்கடுப்பு ( ஆகியவை உடல் அதிகமாக உஷ்ணமாவதால் ஏற்படுவது என்பதெல்லாம்
நமக்குத் தெரியும். மூலம்,அலர்ஜி, நமைச்சல், அரிப்பு, அல்சர் என்னும் குடல் புண், கட்டி,
கொப்புளம், ரத்த அழுத்தம், தலைவலி , தலைச்சுற்றல், வாந்தி , படபடப்பு முதலானவையும்
பித்தம் சம்பந்தபட்டது.
கபம்
: நீர் தத்துவம். சளி, மூச்சிரைப்பு,
ஆஸ்துமா, இழுவை நோய் ( வீசிங்) , உள்ளங்கையில் வியர்ப்பது, தூசி, அலர்ஜி, சீதளம், பேதி,
ஆறாத புண், சர்க்கரை நோய், கணையம், சிறுநீரகச் செயல்பாடு, தைராய்டு, நுரையீரல் தொற்று,
விந்து நீர்த்துப் போதல், மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு ஏற்படுதல் இவை அனைத்தும்
கபம் சார்ந்தது.
சரி இதற்கும் புத்திர
தோஷத்திற்கும் என்ன சம்பந்தம்?
நெருப்பும்,
நீரும் பகை
காற்றும்,
நீரும் ஒன்று சேராது
நெருப்பும்,
காற்றும் நட்பு
நீரும்
காற்றும் ஒன்று சேராது எனினும் பகையில்லை.
திருமணத்தில் தசவித
பொருத்தம் எனும் 10 வித பொருத்தங்கள் உண்டு
அதில் நாடிப் பொருத்தமும்
ஒன்று.
சமான நாடி, மத்திய
நாடி, பார்ச்சுவ நாடி என மூவகை நாடியும்
இந்த வாதம்,பித்தம்,
சிலேத்துமம் (கபம்) என்பதின் வேறுவகை சொல்லாக்கம்தான்.
சமான நாடி : காற்று
மத்ய நாடி : நெருப்பு
பார்ச்சுவ நாடி
: நீர்
சமானம் அனைத்தையும்
ஏற்கும்.
மத்யம் : சமான
மற்றும் பார்ச்சுவ நாடியை ஏற்கும்,
பார்ச்சுவ : சமானநாடி
ஏற்கும்.
இதில்தான் உள்ளது
சூட்சுமம்
நெருப்பும்
நெருப்பும் சேரும் போது உயிர்அணுக்கள் இறந்து போகும்.
இருவரும் நீர்
எனும் போது ( பார்ச்சுவ) விந்து நீர்த்துப் போகும்
நெருப்பும்
நீரும் இணையும்போது உயிர்அணுக்கள் பலவீனம் அடையும்.
இப்போது உங்களுக்கு
புரிந்திருக்கும்.
திருமணப் பொருத்ததின்
போது, ரஜ்ஜு பார்க்கும் போதே நாடியும் பார்க்க வேண்டும்.
சூரியன்,செவ்வாய்,
கேது : நெருப்பு
சனி, புதன்,ராகு
: காற்று
சந்திரன்,சுக்ரன்
: நீர்
அப்படியானால் குருபகவான்?
அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அல்லது எல்லாமும் ஆக இருப்பவர் குரு பகவான். அதாவது நில
தத்துவம்.
கிரக ஆதிக்கம்
உடையவர்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாக உடல் தட்பவெப்பத்தை சீராக்கலாம்.
சூட்டுத் தன்மை
உடையவர்கள் கோதுமையைத் தவிர்க்க வேண்டும்,
நீர்த் தன்மை உடையவர்கள்
கோதுமை, பச்சரிசி எடுத்துக்கொள்ள வேண்டும்,
காற்றுத் தன்மையினர்
எளிதில் செரிமானம் ஆகும் உணவை உண்ணவேண்டும்,
30 வருடங்களுக்கு
முன், பெண்கள் பூப்பெய்வது என்பது 15,16,17 வயதில் தான் நடந்தது. ஆனால் தற்போது 9,
10, 11 என்ற வயதிலேயே பூப்பெய்வது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும்தான் உள்ளன.
ஏன்?
என்ன காரணம்?
1.
ஆண்
ஜாதகத்தில் 5 ஆம் பாவகம் அதாவது 5ம் இடம். இதை எப்படி அறிவது என்பவர்களுக்காக, உங்கள்
ஜாதகத்தில் லக்னம் என்பதை சுருக்கமாக “ல” என எழுதியிருக்கும். அது முதல் பாவகம்.
அதிலிருந்து வரும் 5ம் இடமே 5ம் பாவகம்.
2.
இதேபோல
பெண் ஜாதகத்தில் 9ம் இடம் பார்க்க வேண்டும்.
3.
இந்த
இடத்தில்
4.
சூரியன் இருக்க,
ஆண் குழந்தை உண்டு. ஆனால் ஒரு குழந்தை மட்டுமே இருக்கும். உங்களில் யாராவது “இல்லையே
எனக்கு 2 குழந்தை இருக்கே “ என்பவர்களுக்கு, சூரியன் மட்டும் தனித்து இருந்தால் தான்
மேற்கூறிய பலன்.
5.
மாறாக
சூரியனோடு இன்னொரு கிரகம் இருந்தால் இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட குழந்தை உண்டு.
6.
இங்கு
விவரிக்கும் தகவல்கள், தனித்த கிரகங்கள் இருக்கும் பலன்களே.
7.
சந்திரன் இருக்க
பெண் குழந்தை உண்டு.
8.
செவ்வாய் இருக்க
ஆண் குழந்தை, புதன் இருக்க பெண் குழந்தை, சுக்கிரன் இருக்க பெண் குழந்தை, சனி இருக்க
தாமதமாக குழந்தை பாக்கியம். ஆனால் இரவில் குழந்தை பிறக்கும்.
9.
ராகு இருக்க பல
குழந்தைகள். அதிலும் ஆண் குழந்தைகளே அதிகம்.
10. கேது இருக்க பல பெண் குழந்தைகள் உண்டு.
இதுவரை புத்திரபாக்கியம்
தரும் விபரங்களை சிறிய அளவில் பார்த்தோம். ஆனால் நாம் பார்ப்பது புத்திரதோஷத்தைப் பற்றி.
எனவே அதைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
ராகு
கேது இருந்தால் புத்திர தோஷம் என்பார்கள்,
ராகு இருக்க பல
ஆண் குழந்தை என்று சொன்னேன் அல்லவா. அப்படியானால் இதில் புத்திர தோஷம் எப்படி வரும்?
வரும். அதாவது
இத்தனை ஆண் குழந்தை இருந்தும் கடைசிக் காலத்தில், மாதம் ஒரு பிள்ளையின் வீட்டில் வாசம்
செய்ய வேண்டிவரும். இது தோஷம்தானே!
கேது இருக்க பெண்
குழந்தைகள் மட்டுமே உண்டு எனப் பார்த்தோம், ஆம். இதுவும் ஒருவகையில் தோஷமே. எப்படி?
கேதுவானவர் ஒன்றைத்
தந்து அதை அனுபவிக்க அனுமதிக்கமாட்டார். ஏங்கச் செய்வார்.
பெண் குழந்தை என்பதே
திருமணத்திற்குப் பின் கணவர் வீட்டில் வாழ்வதுதான் மரியாதை,சிறப்பு.
இப்போது புரிகிறதா.கேது
குழந்தையைத் தந்து சந்தோஷத்தைக் கொடுத்து பிறகு திருமணத்திற்குப் பின் பிரிவு என்ற
தோஷத்தைத் தருவார்.
இங்கு
இன்னும் குருபகவானைப் பற்றி விளக்கவில்லை,
காரணம்? புத்திர
பாக்கியத்தை அருளுபவர் குருபகவானே. ஆனால் அவர் மேலே குறிப்பிட்ட பாவகங்களில் இருந்தால்,
அவரே புத்திரதோஷத்தையும் தருவார்.
அதற்கு பெயர்
“காரகோபாவக நாஸ்தி.”
இதன் விளக்கம்
என்னவென்றால் 5ம் இடம் என்பது பாவகம், குருவானவர் புத்திர காரகன், இந்த இரண்டும் இணையும்போது
“ ’’காரகோபாவக நாஸ்தி”
என்னும் தோஷம் உண்டாகிறது.
இங்கு ஒரு விஷயத்தை
கூர்ந்து கவனிக்க வேண்டும். அந்த ஸ்தானங்களில் மற்றொரு கிரகம் இருந்தாலும், அல்லது
பார்த்தாலும் தோஷம் கிடையாது.
வீட்டில்
குழந்தை கண்ணன் படம் இருக்கா? குழந்தை பாக்கியம் நிச்சயம்!
இது ஒரு விழிப்பு
உணர்வு தொடர். பரிகாரம் என்று நீங்கள் ஏமாறாமல் இருக்கவும், உண்மையான பரிகாரம் எது
என்பதை உணர்த்தவும் இந்த தொடர் உங்களுக்கு உதவும்.
மற்ற எந்த தோஷத்தைவிடவும்
இந்த புத்திர தோஷத்திற்காக பரிகாரம் என்ற பெயரில் பணத்தையும் மனநிம்மதியையும் தொலைப்பவர்கள்தான்
அதிகம். பொறுமையாகவும், கவனமாகவும் படியுங்கள். எளிய பரிகாரம் மூலம் இறைவனின் அருளோடு
எல்லா நன்மையும் உண்டாகும். அழகன் முருகன் அருள்புரிவான்.
ராகு,கேது,
குரு இவர்கள் தரும் புத்திர
தோஷத்தைப் பார்த்தோம், இனி மற்ற கிரகங்கள் தரும் புத்திர தோஷத்தைப் பார்க்கலாம்,
குரு
பகவான் எப்படி எல்லாம் தோஷத்தைத் தருகிறார் என்று பார்க்கலாம்.
அஸ்தமனம் என்னும்
ஒரு நிலை மற்றும் வக்கிரம் என்னும் ஒரு நிலை மற்றும் கிரகயுத்தம் என்னும் நிலை என வரிசையாகப்
பார்க்கலாம்.
1.
குரு
பகவான் அஸ்தங்கம் என்னும் அஸ்தமனம் அடைந்தால் புத்திர பாக்கியத்தில் தாமதம் ஏற்படும்.
2.
வக்கிரம்
என்னும் நிலை அடைந்தாலும் தாமதம் ஏற்படும்.
3.
குரு
பகவான் கிரக யுத்தத்தில் தோற்றாலும் தாமதம் என்ற நிலை ஏற்படும்.
இதை நாங்கள் எப்படி
அறிவது? என்கிறீர்களா?
நீங்கள் எளிமையாக
அறியம்படி கூறுகிறேன்.
குரு
பகவான் அஸ்தங்கம்
உங்கள் ஜாதக ராசி
மற்றும் அம்சம் கட்டம் அருகருகே இருக்கும்.
ராசிக் கட்டத்தில்
குரு பகவானும் சூரிய பகவானும் ஒரே கட்டத்தில் இருந்து, அம்ச கட்டத்திலும் ஒரே ராசியில்
இருந்தால் குரு அஸ்தமனம் அடைந்துள்ளார் என அறியலாம். மேலும் அம்ச கட்டத்தில் சூரியன்
இருக்கும் கட்டத்திற்கு முன், பின் கட்டங்களில் இருந்தாலும் அஸ்தமனமே.
வக்கிரம்
அறிவது எப்படி?
ராசிக் கட்டத்தில்
குரு இருக்கும் கட்டத்தில் இருந்து சூரியன் 5, 6, 7, 8, 9 ஆக இருந்தால் குரு வக்கிரம்
என்னும் நிலையை அடைவார். ( இதில் 5 மற்றும் 9 கட்டங்களில் பாதியில் இருந்து கணக்கிட
வேண்டும் இதை ஜோதிடர்கள் மட்டுமே அறிய முடியும்).
கிரக
யுத்தம்?
குரு பகவான் இருக்கும்
கட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்க அங்கே “கிரகங்களுக்குள்
யுத்தம் ஏற்படும்.” அதில் வெற்றி பெற்றவர் மற்ற கிரகங்கள் தரவேண்டிய பலன்களை தானே ஏற்றுக்கொண்டு
பலன் தருவார்,
இந்த யுத்தத்தில்
குரு தோற்றாலும் புத்திர பாக்கியத்தில் தாமதம் ஏற்படும்.
இதற்கு
என்ன பரிகாரம் உள்ளது?
எளிமையான பரிகாரங்களே
போதும்,
1.
குரு
பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வியாழன் தோறும் கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம்
செய்து தானம் தாருங்கள்.
2.
அரசமர
விநாயகரை அதிகாலை 5 மணிக்கு 48 முறை வலம் வாருங்கள்.
3.
குருவாயூர்
கண்ணனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்ளுங்கள். உடனே புத்திரபாக்கியம்
உண்டாகும்.
4.
திருச்செந்தூர்
சென்று முருகனை வேண்டுங்கள். புத்திரத்திற்கு உத்திரவாதம் உண்டு.
5.
வீட்டுக்கு
அருகில் உள்ள குழந்தைகளை வரவழைத்து, லட்டு மற்றும் சர்க்கரைப் பொங்கல் மற்றும் பாயசம்
உண்ணக்கொடுங்கள். அவர்களோடு நேரத்தைச் செலவழியுங்கள். அந்த மழலைகளின் சப்தமானது, சிறந்த
அதிர்வலைகளை உண்டு பண்ணும்.
6.
யானைக்கு
உணவு வழங்குங்கள் (வாழைப்பழம், கரும்பு, தென்னை ஓலை). நிச்சயம் உண்டு குழந்தை.
7.
கருமாரி
அம்மனை மனதார வணங்குங்கள். கரு உண்டாகும். அதிசயம் உணர்வீர்கள்,
8.
குழந்தை
கண்ணனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். குழந்தை பாக்கியம் சர்வ நிச்சயம்.
9.
மிக
முக்கியமாக “ குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்யுங்கள்” குலதெய்வம் தெரியாதவர்கள்
இஷ்ட தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட்டு தானம் செய்யுங்கள்.
10. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச்
சென்று சிவசக்தி சொரூபத்தை வழிபட குழந்தை பாக்கியம் ஏற்படும்.
11. ஶ்ரீஅனுமன், நித்ய பிரம்மச்சாரிதான். ஆனாலும்
கேட்ட வரத்தை கேட்ட படி வழங்குவார் ஆஞ்சநேயர். எனவே ஸ்ரீராமஜெயம் எழுதி வணங்குங்கள்.
நல்ல வழி கிடைக்கும்.
12. அபிராமி அந்தாதி படித்து வாருங்கள். அழகான
குழந்தை கிடைக்கும்.
13. எல்லாவற்றுக்கும் மேலாக வறியோர்க்கு உதவுங்கள்.
சந்தான பாக்கியம் முதலான சகல நல்லதுகளும் நடக்கும்.
வஸ்திர
தானம் செய்தால் குழந்தை பாக்கியம்!
சூரியன்
முதற்கொண்டு வரிசையாக கிரகங்கள் ஏற்படுத்தும் புத்திரத் தடையையும், அதற்கான பரிகாரங்களையும்
பார்க்கலாம்.
சூரியன்:- இவர்தான் ஒவ்வொரு ஜீவனுக்கும் உயிர் என்னும்
ஜீவனையேத் தருபவர்,
ஜாதகத்தில் லக்னம்
என்பது குழந்தை பிறக்கும் நேரத்தில் சூரியனின் ஒளிப்புள்ளி நின்ற ராசியே லக்னம் என்னும்
உயிர் ஜனித்த புள்ளி.
ஆக இவர்தான் ஒரு
உயிர் உருவாக முக்கியக் காரணம். விந்துவில் உள்ள உயிரணுக்களில் உள்ள ஜீவ சக்தி சூரியன்
அம்சம்.
கருமுட்டை சந்திர
அம்சம் ஆகும்.
சூரியன் - சிவம்
சந்திரன் - சக்தி
இந்த இரு சக்தியும்
இணையும் போது சிவசக்தி என்னும் உயிர் உருவாகிறது.
அதனால்தான் ஒவ்வொரு
ஆணுக்குள்ளும் பெண் தன்மை உண்டு.
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
ஆண் குணம் உண்டு.
சூரியன்
எப்படி புத்திர பாக்கியத்தில் தடை அல்லது தாமதத்தை தருகிறார்
உயிர் அணுக்கள்
சுக்கிர அம்சம் ஜாதகத்தில் சுக்கிரன், சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் அடைந்தால், இந்த
உயிரணுக்கள் பிரச்சினை ஏற்படும், அதாவது பலம் இழந்து போகும்.
இது மருத்துவ பரிசோதனையில்
மட்டுமே அறிந்து கொள்ளமுடியும் என நினைத்திருப்போர்க்கு ஜாதகத்தை பார்த்த உடனே கண்டுபிடிக்க
முடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது சூரியனின்
சக்தியால் சுக்கிரனுக்கு ஏற்படும் தோஷம். எனவே இதற்கு என்ன பரிகாரம்?
சுக்கிரனின் விருட்சம்
அத்தி மரம்,
சூரியனின் விருட்சம்
எருக்கு.
இருந்தாலும் சூரியனின்
நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இவர்களின் மரங்கள்:-
கார்த்திகை - அத்திமரம்
உத்திரம் - அலரி
உத்திராடம் - பலா
மரம்
1.
இதில்
ஒரு ஒற்றுமை அத்தி மட்டுமே. எனவே அத்திப்பழம் தினமும் சாப்பிட்டு வந்தாலே உயிரணுக்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும்.
2.
இது
விஞ்ஞான பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட ஒன்று. மேலும் சித்தர்கள் பரிந்துரைத்ததும் அத்திப்பழத்தையே
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3.
பலாப்பழத்தை
தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
4.
அத்திமரத்துக்கு
தண்ணீர் விட்டு வந்தாலும், முடிந்தால் வளர்த்து வந்தாலும் நன்மைகள் ஏற்படும்.
5.
கார
உணவுகளைத் தவிர்ப்பது, பித்தம் தரும் உணவுகளைத் தவிர்ப்பது நல்ல பலனைத் தரும்.
6.
சூரியன்
உதிக்கும் அதிகாலையில் சூரியனைப் பார்த்து வணங்குவது நல்ல பலனை அளிக்கும்.
7.
வெள்ளிக்கிழமை
அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதரைத் தரிசிப்பது நற்பலன்களை வழங்கும்.
சந்திரனால்
உண்டாகும் தோஷம்
சந்திரன், சுக்கிரனோடு
இணையும் போது விந்து நீர்த்துப் போகும்,
ஆணின் உயிரணுக்கள்
நீர்த்துப் போவதால் உயிரணுக்களின் வேகம் குறையும். அதனால் குழந்தை உருவாவதில் தாமதம்
ஏற்படும்.
இதற்கு
என்ன பரிகாரம்?
1.
சந்திரனின்
விருட்சம் கல்யாண முருங்கை, முருங்கை,
2.
முருங்கைக்
கீரைக்கு விந்துவை கெட்டிப்படுத்தும் சக்தி உண்டு. மேலும் நாட்டு மருந்துக் கடைகளில்
முருங்கை பிசின் விற்பனை செய்யப்படுகிறது. இதைச் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலனைத்
தரும்.
3.
பௌர்ணமி
மற்றும் வளர்பிறை திருதியை திதி நாளன்று திருப்பதி சென்று இரவு தங்கி பெருமாளை தரிசித்துவர
புத்திர பாக்கியம் உண்டாகும்.
4.
வயதான
பெண்களுக்கு உடை(வஸ்திரம்) தானம், பச்சரிசி தானம் தருவது சந்தான பாக்கியத்தை வழங்கவல்லது.
5.
புகழ்பெற்ற,
பழமையான, உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அம்மன் ஆலயங்களில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள்.
செவ்வாயின்
பங்கு
அஷ்டலட்சுமிகளில்
தைரியலட்சுமியின் அருளாசி இருந்தாலே போதும்.மற்ற லட்சுமிகள் தானாகவே நமக்கு அருளை வாரி
வழங்குவார்கள் என்பது மூத்தோர் வாக்கு.
அதற்கு என்ன காரணம்?
தைரியம் என்கிற
வீரியம் இருந்தால்தான் மற்ற செல்வங்களை நாம் அடைய முடியும்.
செவ்வாய்
என்பவர் தைரியம், வீரியம், வேகம் இவற்றுக்கெல்லாம் அதிபதி.
ஒரு ஜாதகத்தில்
எல்லா கிரகங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் செவ்வாய் பலவீனம் அடைந்துவிட்டால் புத்திரபாக்கியத்தில்
தடையை ஏற்படுத்திவிடுவார்,
ஏன்? ஆணின் விந்துவில்
லட்சக்கணக்கான உயிரணுக்கள் இருந்தாலும் ஒரேஒரு உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையில் உட்புகும்.
அந்த அணுதான் குழந்தையாக உருவாகிறது.
ஆணின் குறியிலிருந்து
கருமுட்டை வரை உள்ள தூரம் நம்மை பொருத்தவரை சில சென்டிமீட்டர் தூரம்தான்.
ஆனால் கண்ணுக்கே
புலப்படாத உயிரணுக்கு அந்த தூரம் என்பது ஒரு மாரத்தானுக்கு ஒப்பானது.
ஆக அந்தத் தூரத்தை
வேகமாக ஓடி கடக்க, செவ்வாய் என்னும் வீரியம் இருந்தால் மட்டுமே முடியும்.
இப்போது புரிகிறதல்லவா!
எல்லா கிரகங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் செவ்வாய் என்னும் போர் வீரன் இருந்தால்தான்
புத்திரபாக்கியம் உண்டாகும். ( ஏன் செவ்வாய் போர்வீரன்? கருவை நோக்கி ஓடும் ஓட்டம்
மட்டும் முக்கியமல்ல, வேறுயாரும் நம்மை முந்திவிடக்கூடாது என்று மற்ற உயிரணுக்களையும்
தாக்கி முந்தவிடாமல் செய்து முடிவில் வெற்றிக்கோட்டினை அடைகிறது)
நீங்கள் தினமும்
வணங்கும் ஶ்ரீமுருக பெருமானின் கையில் இருக்கும் “வேலின் வடிவம்” தான் உயிரணுவின் வடிவம்.
இப்போது உங்களுக்கே
தெரிந்திருக்கும் என்ன பரிகாரம் என்பது.
ஆம் முருகனை நம்பினோர்
ஒருபோதும் கை விடப்படார்.
ஜாதகத்தில்
செவ்வாய் பலவீனம் என்பதை எப்படி அறிந்து கொள்வது?
செவ்வாய்
கடக ராசியில் இருந்தால் நீசம்
என்னும் நிலை அடைந்து தன் பலத்தை இழப்பார்.
செவ்வாய்,
சூரியனோடு இணைந்து அஸ்தமனம்
அடைய, பலம் இழப்பார்,
செவ்வாய்
கேதுவோடு இணைய தன் பலத்தை இழப்பார்,
செவ்வாய்
ராகுவோடு இணைய அடங்காத காமம்
உடையவர்
செவ்வாய்
சந்திரனோடு ஒரே பாகையில்(டிகிரி)
இணைந்தால் நீர்த்துப் போய்விடுவார்,
செவ்வாய்
சனியோடு இணைய தன் சக்தியை இழப்பார்,
செவ்வாய்
புதனோடு இணைய சிற்றின்பம் என்பது
மேலும் சிறிய சிற்றின்பமாக முடியும், என்னும் திருப்தியற்ற நிலையை உண்டாக்கும்,
இதற்கெல்லாம்
என்ன பரிகாரம் என்பதைப் பார்க்கலாம்,
நாம் முருகனின்
பல்வேறு கதைகள், காவியங்களைப் படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.
அதில் ஒன்று பிரம்மாவிடம்
இருந்த படைக்கும் தொழிலை தானே எடுத்துக்கொண்டது என்பதை அறிவோம்.
முருகனின் அவதார
நோக்கமே இனவிருத்தி என்னும் மக்கள் பெருக்கமே, இவரே காதலின் அடையாளம், காமத்திற்கும்
இவரே உருவம்.
இனவிருத்தி என்னும்
சந்ததி விருத்திக்கும் இவரே காரணம். ஒவ்வொரு உயிரினமும் தனக்கு வீரியமுள்ள சந்ததியை
உருவாக்கத்தான் முயற்சிக்கும்.
அந்த வகையில் நமக்கு
நோய் எதிர்ப்பு சக்தி உடைய, நல்ல அறிவாற்றல் உள்ள, எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்ட
குழந்தை உருவாக “முருகப்பெருமானே” அருள் புரிவார்.
ஆக மேலே சொன்ன
அத்தனை தோஷங்களுக்கும் ஒரே பரிகாரம் “முருகன்” மட்டுமே.
குழந்தை
பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்!
செவ்வாய் சூரியனோடு
இணைந்து அஸ்தங்கம் என்னும் அஸ்தமனம் அடைய, தன் பலத்தை இழப்பார். செவ்வாயின் வேலையை
இப்போது சூரியன்தான் செய்வார்.
சூரியன் நெருப்பு
கிரகம், செவ்வாய் நெருப்பு கிரகம். ஆக இரண்டும் நெருப்பு கிரகம். இதில் ஒன்று பலமிழக்க,
அந்த நெருப்பை மீண்டும் பலமாக்க வேண்டும்.
இப்போது நமக்குத்
தேவை அக்னிஸ்தலம்; அது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை.பஞ்ச பூத
ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் என்பதை அறிந்திருப்பீர்கள். அங்கே குடிகொண்டிருக்கும் தெய்வம்
அண்ணாமலையாரே நமக்கு துணை செய்வார். புத்திர பாக்கியம் தந்தருள்வார்.
திருவண்ணாமலை,
சிவ ஸ்தலமாக இருப்பினும் அங்கே முருகனின் அற்புத நிகழ்வுகள் ஏராளம். எனவேதான் அது முருகனுக்கும்
உகந்த ஆலயம் என்று போற்றப்படுகிறது.
அந்த இறைவனின்
அக்னி, உங்கள் உடலில் உள்ள குறைபாடுகளை சுத்தமாக்கித் தருவார், எனவே அங்கு சென்று வந்தாலே
உங்கள் குறை தீரும்.
வெள்ளெருக்கு விநாயகரை
வீட்டில் வைத்து வழிபட நல்லதே நடக்கும்.
செவ்வாய்,
சந்திரனோடு இணைந்து பலவீனம்
அடைய முருகனுக்கு பால் காவடி எடுத்தல், பாலபிஷேகம் செய்தல் போன்றவை நலம் தரும்.
யாத்ரீகர்களுக்கு,
வழிப்போக்கர்களுக்கு, பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கு நீர்மோர் வழங்குதல், தண்ணீர்ப்
பந்தல் அமைத்தல் போன்றவை நல்ல பலன்களை வாரி வழங்கும்.
செவ்வாய்,
கேதுவோடு இணைந்தால் முற்றிலும்
தன் பலத்தை இழப்பார். உண்மையில் இதுதான் புத்திரபாக்கியத்தை
இல்லாமலே செய்துவிடும் அமைப்பு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இதற்கு என்ன பரிகாரம்?
கேது என்பது தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் இயல்பை உடையது.
எனவே இதற்கான பரிகாரம்
என்பதும் உங்கள் உடலை வருத்தி கடுமையான முறையிலேயே இருக்கும்.
சஷ்டி
விரதம் :
“சட்டியில்
இருந்தால் அகப்பையில் வரும்” என்பதன் அர்த்தம் சஷ்டியில் விரதம் இருந்தால்
கர்ப்பப்பை என்னும் அகப்பையில் கரு உண்டாகும் என்பதே.
சஷ்டி
விரதம் கடைபிடிக்க வேண்டும். புத்திர பாக்கியம் நிச்சயம்!
கிருத்திகை
விரதம்:
கார்த்திகேயனை
நினைத்து கிருத்திகை விரதம் இருப்பதும் சிறப்பு ( கிருத்திகை நட்சத்திரத்தின் வடிவம்
(சவர) கத்தி. எனவே தேவையில்லாததை நீக்கி சுத்தப்படுத்தும் வேலையைச் செய்யும்) கருப்பையில்
இருக்கும் குறைகளை நீக்கி கருவை பலப்படுத்தும்.
பழநி பாதயாத்திரையில்
பங்கெடுப்பது, காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் முதலானவை கேதுவின் காரகத்துவத்தை
மட்டுப்படுத்தும்.
செவ்வாய்,
சனியோடு இணைந்து பலவீனம் அடையும்போதுஅய்யனார்
அல்லது ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருவது மிகச்சிறந்த பலனை தரும். சந்தான பாக்கியத்தை
வழங்கி அருளும்.
ஐயப்பன் கோயிலுக்கு
மாலை அணிந்து விரதம் இருந்து சென்று வந்தவர்களுக்கு “மணி” போன்ற குழந்தை பாக்கியம்
இருப்பது, நாம் எல்லாரும் அறிந்த ஒன்று.
தாம்பத்யத்தை பரிந்துரைக்கும்
முறையில் தொடர்ந்தாலே புத்திர பாக்கியம் உண்டாகும்.
சித்தர்கள்
உரைத்த பொன் மொழி ஒன்றைப் பார்க்கலாம்.
“தினம்
இரண்டு”
“வாரம்
இரண்டு”
“மாதம்
இரண்டு”
“
வருடம் இரண்டு”
தினம்
இரண்டு : ஒருநாளைக்கு இருவேளை
உணவு
வாரம்
இரண்டு : வாரத்திற்கு இருமுறை
எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.( எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் விந்து மற்றும்
கர்ப்பப்பை பலப்படும்)
மாதம்
இரண்டு : மாதத்தில் இரண்டு
முறை மட்டுமே தாம்பத்யம் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் ஏறக்குறைய
அனைவரும் அதீத உடல் உறவை வைத்துக்கொள்கின்றனர், அது தவறு. விந்துவில் உயிரணுக்கள் பலவீனமாகும்,
இப்படி பலவீனமான உயிரணுக்களால் உண்டாகும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பதே
இல்லாமல் போகும்.
வருடம்
இரண்டு : ஆண்டுக்கு இருமுறை
பேதிக்கு மருந்தெடுத்து வயிற்றைச் சுத்தம் செய்யவேண்டும்.
எந்தநாளில்
எண்ணெய் தேய்த்து குளிக்கணும் தெரியுமா?
சரித்திர காலத்தில்,
அதாவது அரசர்கள் காலத்தில் தர்மம், நீதி, நேர்மையுடன் ஆட்சி செய்த ஏராளமான அரசர்களை
அறிந்திருப்பீர்கள்.
அவர்கள் அரண்மனையில்
அந்தப்புரம் இருந்ததையும் அறிவீர்கள். தர்மப்படி ஆட்சி செய்தவர்களுக்கு ஏன் அந்தப்புரம்
இருக்க வேண்டும்? அதில் நிறைய பெண்கள் ஏன் இருக்க வேண்டும்?
அதாவது, நம் குடும்ப
வாழ்வியல் படி, நினைத்தவுடன் மனைவியுடன் இருப்பதுபோல் மன்னர்கள் அரசியின் அரண்மனைக்குள்
செல்ல முடியாது.
ஏன்? அரசனும் அரசியும்
எப்போது சந்திக்கலாம்? எப்போது தாம்பத்யம் வைத்துக்கொள்ளலாம் என்பதை ராஜகுரு எனும்
பல கலைகள் (ஜோதிடம் உட்பட) அறிந்த அந்த அறிஞர் அனுமதித்தால் மட்டுமே சந்திக்கமுடியும்.
உறவு வைத்துக் கொள்ள முடியும்.
ஏன்? எதற்காக இப்படி?
அரசை ஆளும் அடுத்த
வாரிசு எல்லாவகையிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் எனவே, ராஜகுரு குறித்துக்கொடுக்கும்
நேரத்தில் மட்டுமே ராணியை சந்திக்கமுடியும். அது ஒரு குறுகிய நேரமாக இருக்கும். அந்த
நேரம் முடிந்த உடன் மெய்க்காவலர்களால் பிரிக்கப்படுவார்கள். அந்த நேரத்தில் உருவாகும்
குழந்தை மட்டுமே ராஜ வாரிசாக முடியும்.
மன்னனின் இச்சை
தீர உண்டாக்கப்பட்டதே அந்தப்புரம்!
இப்போது உங்களுக்குப்
புரிந்திருக்கும். எந்த நேரத்திலும் தாம்பத்யம் என்பது தவறு. ஒவ்வொரு முறைக்கும் (குழந்தை
வேண்டுபவர் மட்டும்) நல்ல நேரம் பார்க்கப்படவேண்டும்.
இப்படி பெறும்
குழந்தை, நல்ல ஆரோக்கியம், அறிவு, சமயோசித புத்தி, சாதிக்கும் வல்லமையோடு பிறக்கும்.
குறைந்தபட்சம்
சாந்திமுகூர்த்தம் நேரம் குறித்து தாம்பத்யம் ஆரம்பித்தால் அனைத்தும் சுபமே என்கிறது
சாஸ்திரம்.
ஆனால் யாரும் திருமணத்திற்கு
நேரம் குறிக்கிறார்களே தவிர, இந்த நிசேகம் என்னும் சாந்தி முகூர்த்தத்திற்கு அதாவது
அடுத்தடுத்து நிகழ்கிற தாம்பத்யங்களுக்கு நேரம் பார்ப்பதில்லை,
நான் கூறுவது ஒன்றேஒன்றுதான்.
கிரகங்கள் துணையில்லாமல் எதுவும் இல்லை. ஒவ்வொரு நிகழ்வும் கிரகங்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது
என்பதை அறிந்து கொண்டால் எல்லாம் சுபமே. எப்போதும் நலமே!
எண்ணெய் தேய்த்துக்
குளித்தல் அதற்கு ஏதும் நாள் கிழமை பார்க்கப்பட வேண்டுமா என கேட்டிருந்தார்கள்.
பெண்கள்
வெள்ளிக்கிழமை அன்று நல்லெண்ணெய் குளியல் கட்டாயம் எடுக்க வேண்டும்.
ஆண்கள்
சனிக்கிழமை எண்ணெய் குளியல் எடுக்கவேண்டும்.
ஏன் பெண்கள் வெள்ளிக்கிழமை?
ஆண்கள் சனிக்கிழமை?
நல்லெண்ணெய் சனிபகவானின்
அம்சம்.
வெள்ளிக்கிழமை
பெண்கள் நல்லெண்ணெய்க் குளியல் எடுப்பது அவர்களுக்குள் உள்ள சோம்பல், தரித்திரம், அவநம்பிக்கை,
அவச்சொல் போன்றவை நீங்கி லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
ஆண்கள் சனிக்கிழமை
எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் வலிமை உண்டாகும், உடல்வலிமை உண்டாவதால் பார்க்கும்
வேலையில் சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உண்டாகும்.
(கடின உழைப்பிற்கு
சனிபகவானே காரகன்)
ஆண்கள்
சனிக்கிழமை அன்று பிறந்திருந்தால்,
சனிக்கிழமையை தவிர்த்து புதன்கிழமை அன்று எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.
ஜென்ம
கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
இது
பெண்களுக்கு பொருந்தாது.
இப்போது
பரிகாரங்களைப் பார்க்கலாம்,
செவ்வாய்
புதனோடு இணைய தாம்பத்ய பலவீனத்தைத்
தருவார் என பார்த்தோம் அல்லவா.
அதற்கான
பரிகாரங்களை இப்போது பார்க்கலாம்.
உடற்பயிற்சி, யோகாசனம்
உடல் வலிவைத் தரும்,
மகாவிஷ்ணுக்கு
துளசிமாலை அணிவித்தல், சக்கரத்தாழ்வாருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தல்
முதலான வேண்டுதல்கள் நல்ல பலனைத்தரும்.
கீரை வகைகளை அதிகம்
சேர்த்துக்கொள்ளுதல், பச்சைப்பயறு சுண்டல் செய்து தானம் செய்தல் மிகுந்த நன்மைகளை வாரி
வழங்கும்!
பூப்பெய்தும் இளம்
பெண்களுக்கு (புதன் - பதின்ம வயது பெண் குழந்தைகளை குறிப்பவர்) உதவுதல், ஆடை வழங்குதல்
எல்லா நன்மைகளையும் தரும்.
மாணவர்களுக்கு
கல்வி உபகரணங்கள் வழங்குவது நல்ல பலனைத்தரும்.
இங்கு நான் குறிப்பிடும்
பரிகாரங்கள் எளிமையாக இருப்பதால். “இதனால் என்ன நன்மை வரப்போகிறது என்பவர்களுக்கும்,
இந்த பரிகாரங்கள் எப்படி இல்லற வாழ்வுக்கு துணை நிற்கும் என்பவர்களுக்கும்” ...
தாம்பத்யம்
வைத்துக்கொள்ளும் நேரம்!
எப்போது
தாம்பத்யம் வைத்துக் கொள்ளவேண்டும்
பகலில்
தாம்பத்யம் கூடாது என்பது சாஸ்திர விதி.
ஏன் அப்படி? எதனால்
இவ்விதம்? சாஸ்திரம் ஏன் கூடாது என்கிறது?
சாஸ்திரம் சொல்வது
அனைத்தையும் அறிவியல் ரீதியாக அணுகுகிற ஆட்கள்தானே நாம்.
அறிவியல் ரீதியாக
ஏன் என்பதை அறிந்துகொள்வோம்.
பகல் பொழுதில்
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்கிக்கொண்டிருக்கும், அதனால் ஏற்படும் ரத்த ஓட்டம்
அதிகமாவதால் உடல் சூடு அதிகமாக இருக்கும்,
இப்படி உடல் சூடு
அதிகமாக இருக்கும்போது, தாம்பத்யம் வைத்துக்கொள்வது உடல் பலஹீனத்தை ஏற்படுத்தும்.
அதுமட்டுமா? உயிரணுக்களில்
வேகமும் இருக்காது. மேலும் தாம்பத்யத்திற்குப் பின் உடலுக்கு முழு ஓய்வு தேவைப்படும்.
எனவே பகலில் உடல்சேர்க்கை என்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.
கூடுதலுக்கு முன்பு
ஆண், பெண் இருவரின் மனம், உடல் எப்படி தயாராக வேண்டும் என்பதை விளக்கமாகவும் அதேசமயம்
எளிமையாகவும் சொல்லிக் கொடுத்திருப்பார் திருவள்ளுவப் பெருந்தகை.
அதன்படி உங்கள்
தாம்பத்யத்தை அமைத்துக்கொள்ளுங்கள். இல்லறம் சிறக்கும்,
பெண்ணின் கருமுட்டையானது
28 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும்தானே.
சந்திரன் 12 ராசிகளையும்
கடந்து வரும் நாட்களைக் குறிக்கும். ஆம்.கரு என்பது சந்திரனின் அம்சம்.
எனவே மாதவிடாய்
உண்டான 5 நாட்களுக்குப் பிறகு அடுத்த 5 நாட்கள் மட்டுமே குழந்தை உருவாகும் சாத்தியக்
கூறு உண்டு, அதாவது அந்த 5 நாட்கள் மட்டுமே கருமுட்டையானது திறந்திருக்கும். அதன் பிறகு
அந்த முட்டை மூடிக்கொள்ளும். அடுத்த சுற்றுக்கு தயாராகிவிடும்.
எனவே இதுவரை புத்திரபாக்யம்
இல்லாதவர்கள் மாதத்தில் இந்த 5 நாட்கள் மட்டும் கூடவேண்டும் என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்,
மற்ற நாட்களைத்
தவிர்த்துவிட்டு, சக்தியை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இது பல விதத்திலும் புத்திரபாக்யத்தை
உண்டாக்கித்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT