காதல் + காமம்   செவ்வாய் + சுக்கிரன் சேர்க்கை.

ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும் ஒருவரின் உணர்வு தூண்டுகின்றன. சுக்கிரன் செவ்வாய் இணைவு அல்லது பார்வை உணர்ச்சியை தூண்டக்கூடியது.

காமம் என்பது இறைவன் படைப்பில் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக கொடுக்கப்பட்ட ஒரு உணர்வு என்றாலும் அது அத்துமீறி அளவுக்கு அதிகமாக செல்லும் போது சமூதாய சீர்கேடாகவும் தர்ம வழிக்கு விரோதமாகவும் அமைந்து விடுகிறது.

உணர்ச்சிகளின் வேகம்

சுக்கிரன் காம உணர்வு கொண்டவர். ஆண்களுக்கு சுக்கிலத்தை தரக்கூடியவர். செவ்வாய் அனுபவிக்கும் சக்தியும் வேகத்தையும் உடலில் உண்டாகும் சூட்டையும் ஏற்படுத்தி அதற்கு தயார் படுத்தி தகுதியே தருபவர். எனவேதான் காம உணர்வை தூண்டக்கூடிய கிரக அமைப்பை பெற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

ஆண், பெண் விந்து,பெண்ணுருப்பு, கருப்பைகள், கன்னம், இதயம், சமையலறை, இசை, நடனம், நடிப்பு, மது கடை, கால்நடை துறை,துணி வியாபாரி, அன்பு, கவிதைகள், பூ, உடலுறவு, திருமணம், வீடு, இன்பம், வாகனங்கள், மயக்குதல்,போதை, அழகான தோற்றம், அழகு, ஆகியவைகளின் காரகத்துவத்தை கொண்டது சுக்கிரன்.

படுக்கையறை

அறுவை சிகிச்சை மருத்துவம், விவசாயம், புருவம், பற்கள், இரத்தம், இதய பகுதி, விந்து, எலும்பு மஜ்ஜை,மூக்கு பாலம்,படுக்கையறை, அடுப்பு, சக்தி, ஊசி, கத்தி ஆகியவைகளின் காரகத்துவத்தைக் கொண்டது செவ்வாய்.

காமத்தில் ஈடுபாடு

பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி செவ்வாய் 4-7-8-12-ம் வீடுகளில் அமைய பெற்றால் செவ்வாய் தோஷம் என்கிறார்கள்.இந்த வீடுகளில் செவ்வாய் இருந்தால் காமத்தில் அதிக ஈடுபாடும் அதை இடத்தில் அமைய பெற்ற ஆணோ,பெண்ணோ இருவரும் திருமணம் செய்தால் இருவருக்கும் பொருத்தமாக இருக்கும். அப்படி இணைக்காமல் செய்யும் திருமணம் தோல்வியில் முடிகிறது

பாலியல் உணர்வு

செவ்வாய் சுக்கிரன் இருவரும் 4-7-8-12-ம் இடங்களில் அமைந்தால் அதே போல அமைந்துள்ள ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். ஒருவருக்கு 8வது வீட்டில் சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை இருப்பதால் அவருக்கு பாதிப்பு என்று கூற முடியாது. அவர் எந்த லக்னம் என்பதையும் பார்க்க வேண்டும். எனவேதான் பூட்டுக்கு ஏற்ற சாவியை தேடி இணைக்க வேண்டும் என ஜோதிநூல் கூறுகிறது. சரியான ஜோடி சேர்க்காவிட்டால் தறிகெட்டு அலைய காரணமாகிறது.

செவ்வாய் தசை

மேஷம், ரிஷப லக்னத்திற்கு 8இல் இந்த சேர்க்கை இருப்பது பாதிப்பை ஏற்படுத்தாது. செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருப்பவர்களுக்கு செவ்வாய் தசை அல்லது சுக்கிர தசை வரும் போதுதான் பாலியல் உணர்வுகள் வித்தியாசப்படும். அந்தக் காலகட்டத்தை அவர்கள் கடந்துவிட்டால் அதன் பின்னர் பிரச்சனைகள் வராது.

மனதின் நாயகன்

சந்திரன் மனதில் நாயகன், ஆண் பெண் யாராக இருந்தாலும் அவர்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனும் இணைந்து இருந்தாலும் ஒன்றுக்கொன்று பார்வை இருந்தாலும் அவர்களுக்கு காம உணர்வு மிக அதிகமாகவே இருக்கும் அதே போல சுக்கிரன் சந்திரன் இவற்றோடு புதனும் சேர்க்கை பெற்றால் பலரோடு இணைவார்கள்.

பலரோடு தொடர்பு

கள்ள காதல் உறவு வைக்கும் பலரின் ஜாதகத்தை பார்த்தால் சுக்கிரன் சந்திரன் ராகு ஆகிய மூன்று கிரகங்களும் சேர்க்கை பெற்று இருக்கும் அதே போல சுக்கிரன் சந்திரன் புதன் ராகு ஆகிய நான்கு கிரகங்களும் சேர்க்கை பெற்று இருப்பவர்கள் காம உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

குருவின் நட்சத்திரம்

செவ்வாய், சுக்கிரன் சேர்க்கையை குரு பார்த்தாலும் அல்லது செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் பலன்கள் மாறுபடும். அவர்களின் பாலியல் உணர்வு சாதாரணமாகவே இருக்கும். எனவேதான் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன், ராகு, சந்திரன் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து புற்றுள்ள கோவில்களில் பால் ஊற்றி இறைவனை வணங்கினால் பாதிப்பில் இருந்து விடுபடலாம். செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை பல நன்மைகளையும் செய்கிறது

=====================================

இது பொதுவான பலன்களே:

மேற்கூறிய பலன்கள் பொதுவானது தங்கள் ஜாதகத்தில் கிரக சேர்க்கை கிரகபார்வை பொறுத்து பலன் மாறுபடும்.

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.