லக்னாதிபதி நீசம், 6, 8, 12 ல் மறைவு.
ஜோதிடம் கொஞ்சம்
புரிய ஆரம்பித்தவுடன் எல்லாரும் முதலில் சுய ஜாதகத்திலேயும் சரி. யாரோ தெரிந்தவர் ஜாதகத்துலயும்
சரி. நாம் ஒரு சில முக்கிய விதிகளை பொருத்தி பார்க்கும் போது.நாமும் குழம்பி அடுத்தவரையும்
குழப்பி விடுவோம்.
அவ்ளோ தான்.லக்கினாதிபதி
நீசம், லக்கினாதிபதி 6, 8, 12 ல் போய் விட்டார்.. பலம் இழந்து விட்டார்.ஆயுள் குறை,
ஜாதகர்க்கு மிகவும் கஷ்டம் குஷ்டம் எதிலும் தோல்வி இப்படி பொத்தாம் பொதுவாக ஒரு முடிவுக்கு
வருவது ஜோதிடத்தை நாம் அறை குறையாக கையாளுகிறோம் என்பதே என் கருத்து.
லக்கினாதிபதி நீசம்
என்றால் உடனே ஆயுள் குறை என்றெல்லாம் இல்லை.
லக்கினாதிபதிக்கு
அடுத்த 5 ஆம் வீடு பூர்வ புண்ணியம் இதன் அதிபதி நிலை,8 ஆம் வீடு அதன் அதிபதி நிலை,
ஆயுள் காராகர் ஆன சனி யின் நிலை இத்தனை யும் சேர்த்து தான் ஒரு விதி மற்றும் அதன் ஆயுள்
பலனே முழுமை பெறுகிறது.
லக்கினாதிபதி நீசம்
என்றால் ஜாதகருக்கு எதும் எளிதில் கிடைக்காது. எளிதில் புகழ் வராது.யாரும் இவர் செயலை
பாராட்ட மாட்டார்கள்.
இருப்பினும், கடுமையான
உழைப்பால் ஜாதகர் உயர்வார். எந்த ஒரு செயலிலும் மிக கடுமையான உழைப்புக்கு பின்னரே வெற்றி
கிடைக்கும். அவ்ளோதான்.இதில் நீசம் என்றவுடன் ஒரு பலனும் சிறக்காது சிறப்பில்லை என்று
அர்த்தம் இல்லை.
லக்னாதிபதி நீசம்
என்றால் அந்த ஜாதகர் தன்னம்பிக்கை,முயற்சி,உழைப்பு இவற்றை அதிகப்படுத்த வேண்டும்.
லக்னாதிபதி
6,8,12 ல்.இது துர் ஸ்தானம் பீடை ஜாதகம் என்று பார்ப்பது முற்றிலும் தவறு. ஜாதகர் தன்
இருப்பிடத்தில் (அ) பூர்வீகத்தில் சிறப்பு அடைய முடியாது. இடம் விட்டு இடம் பெயர்வதால்
முன்னேற்றம் இருக்கும். ஜாதகர் தொழில், வேலை நிமித்தமாக வெளிஊர்,வெளி மாநிலம், வெளி
நாட்டில் சென்று பொருள் ஈட்டும் வாய்ப்பு இருக்கும்.
லக்னாதிபதி
மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ
ஒரு
பாவம் கெட்டுவிட்டது என்பதற்கும் பாதிக்கப்பட்டது என்பதற்கும் என்ன வித்யாசம் ?
ஒருவருக்கு சுய ஜாதகத்தில் ஒரு பாவத்துக்குண்டான கிரகம் தனது
வீட்டுக்கு சுப பலனை பெறாமலும் , அந்த பாவகத்துடன் சம்பந்தம் பெரும் கிரகங்களும் சம்பந்தம்
பெற்ற பாவத்துக்கு நன்மையை செய்யவில்லை என்றால், அந்த பாவகம் 100 சதவிகிதம்
கெட்டு விட்டதாக நிர்ணயம் செய்ய முடியும்.
மேலும் இந்த அமைப்பில்
பாவகத்துக்கு அதிபதி நன்றாக இருந்து, சம்பந்தம் பெற்ற பாவத்தை
பார்க்கும் கிரகங்கள் தீமை செய்தாலும்
. பார்க்கும் கிரகங்கள் நன்மை செய்து , பாவ அதிபதி மட்டும் தீமை செய்தாலும். அந்த பாவகம்
பாதிக்க பட்டுள்ளதாக நிர்ணயம் செய்ய முடியும் . மேலும் எவ்வளவு சதவிகிதம் பாதிக்க பட்டுள்ளது
என்று சுய ஜாதகத்தை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் .
பூர்வபுண்ணியத்தில்
ராகு இருந்தால் ஏற்படும் தோஷத்திற்கும்,ராகுவோடு சூரியன் சேர்ந்து இருக்கும் தோஷத்திற்கும்
என்ன வித்யாசம்?
ராகு சுய ஜாதகத்தில்
எந்த பாவகத்தில் உள்ளாரோ அந்த பாவகத்திர்க்கு உண்டான முழு பலனையும் தானே செய்வார் ஆகவே
அவருடன் சேர்ந்த கிரகம், அந்த பாவகத்தை பார்த்த கிரகம் பற்றிய கவலை நமக்கு தேவையே இல்லை
அது எந்த கிரகமானாலும், ஒரு ஜாதகத்தில் மிகுந்த வலிமை உடைய கிரகம் ராகுவும் , கேதுவுமே
ஆகும் என்பதனை நான் இங்கு நினைவு கூறுகிறேன் .
பூர்வ புண்ணிய
ஸ்தானத்தில் ராகு இருப்பாரே ஆயின் அவருடன் சேரும் சூரியனால் மற்ற கிரகங்களால் பெரிய
கெடுதல் எதுவும் நிகழ்ந்து விட வாய்ப்பு இல்லை, சூரியனையும் சந்திரனையும் மறைக்கும்
தன்மை ராகு கேதுவுக்கு உண்டு . இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது ஐந்தாம் பாவத்தில்
அமரும் ராகுவோ அல்லது கேதுவோ நன்மை செய்கின்றனர அல்லது தீமை செய்கின்றனர என்பது மட்டுமே.
லக்னாதிபதி
மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ என்ன மாதிரியான பலன் ஏற்படும்?
லக்னாதிபதி மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம்
அடைந்தாலோ, சுய ஜாதகத்தில் லக்கினம் கெட்டு விட்டதாக நிர்ணயம் செய்வது பெரிய தவறு
, மேலும் லக்னாதிபதி ஆட்சி,உச்சம் , நட்பு , சமம் என்ற நிலையில் இருந்தால் ஜாதகருக்கு
நன்மை செய்வதாக நிர்ணயம் செய்வது பெரிய தவறு.
சிம்ம
லக்கின ஜாதகருக்கு சூரியன்
துலாம் ராசியில் நீச்ச நிலையில் அமர்ந்தாலோ , கும்பத்தில் அல்லது ரிஷபத்தில் பகை பெற்று
அமர்ந்தாலோ லக்கினத்திற்கு நன்மையே செய்வார், மேலும் சிம்மத்தில் ஆட்சி பெற்று அமருவது
லக்கினத்தை தானே 100 சதவிகிதம் கெடுத்து விடுவார்,
மேஷத்தில் உச்சம் பெற்று அமருவது பாதிப்பையே செய்வார்.
ஒருவேளை சிம்மத்தில் ராகுவோ அல்லது
கேதுவோ அமர்ந்தால், லக்கினாதிபதி எங்கு இருந்தாலும் அவரை பற்றி நாம்
கவலை கொள்ள தேவை இல்லை ஏனெனில் லக்கினத்திற்கு உண்டான முழு பலனையும் ராகுவோ அல்லது கேதுவோ மட்டுமே செய்வார் அதுவும் 100 சதவிகிதம்
நன்மையாக!
லக்கினம் எந்த
கிரகத்தால் பாதிக்க பாதிக்க படுகிறதோ அந்த கிரகத்தின் மீது தவம் இயற்றலாம், அந்த கிரகத்திற்கு
உண்டான உறவுகளுடன் பகைமை பாராட்டாமல் நல்லுறவை பேணலாம் . அந்த கிரகத்திற்கு உண்டான
ரத்தினங்களை சுத்தி செய்து பயன் படுத்தி உயிர்கலப்பு பெறலாம், இந்த அமைப்பின் மூலம்
ஜாதகர் 100 சதவிகித நன்மை பெற முடியும் .
லக்னாதிபதி பாவகிரகத்தோடு
சேர்ந்தாலோ,பாவகிரகத்தால் பார்க்கப்பட்டாலோ,6,8,12ம் வீட்டின் தொடர்பை பெற்றிருந்தாலோ
என்ன மாதிரியான பலன் ஏற்படும்?
லக்னாதிபதி பாவகிரகத்தோடு
சேர்ந்தாலோ,பாவகிரகத்தால்
பார்க்கப்பட்டாலோ
லக்கினம் பாதிக்க பட வாய்ப்பு இல்லை , ஒரு வேலை 6,8,12ம் வீடுகளில் மறைவு பெற்றால்
வேண்டுமானால் லக்கினம் பாதிக்க பட வாய்ப்பு அதிகம் உண்டு , அப்படி பாதிக்க பட்டாலும்
லக்கினத்தில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் லக்கினம் 100 சதவிகிதம் வலுப்பெறும் .
ஜோதிடம் பார்ப்பதே
ஜாதகரின் சரியான வழிகாட்டுக்காகவும், தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்த மட்டுமே.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT