மோட்ச ராசியில்,மோட்ச லக்கனத்தில் பிறந்தவர்களைப் பற்றிய தகவல்கள்.

"கடகம்,விருச்சிகம்,மீனம்" இந்த 3 மோட்ச ராசியில் அல்லது மோட்ச லக்னங்களில்  பிறந்தவர்களுக்கு பொதுவாக இருக்கக்கூடிய எண்ணங்கள் குணங்கள்  பிரச்சனைகள் ஏமாற்றங்கள் என்ன என்பதை இந்த பதிவில் நாம் மிகத் தெளிவாக பார்க்கலாம்.

முதலில் மோட்சம் என்ற தத்துவத்தின் பொருள் விளக்கம்

 

ஒவ்வொரு ராசி மண்டலமும் ஒவ்வொரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படும்.

ஒவ்வொரு ராசி தத்துவத்திற்கும் தனித்தனியான செயல்பாடுகள் இருக்கும்.

நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய 12 பாவங்களும் நான்கு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் பிரித்துள்ளனர்.இது குறிப்பாக மோட்ச தத்துவம் என்ற ஒரு பாவம் இருக்கின்றது.

மோட்சம் என்பதன் பொருள் முக்தி என்று பொருளாகும்.

நாம் செய்யக்கூடிய தவறுகளுக்கும் கர்மாக்களுக்கும் நாம் அனுபவிக்க கூடிய தண்டனைகள் தான் இந்த மோட்சம் ஆகும்.

அந்த வகையில் நாம் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளை

இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்க நாம் மோட்ச பாவ தத்துவத்தில் தான் பிறப்போம்.இந்த ஜென்மத்தில் மோட்ச பாவ தத்துவத்தில் நாம் பிறந்து வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான கஷ்டங்களை துன்பங்களை பிரச்சனையை நாம் அனுபவிப்போம்.

நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய 12 பாவங்களில் மோட்ச தத்துவத்தை குறிக்கக்கூடிய பாவங்கள் என்னவென்றால் "கடகம் விருச்சிகம்,மீனம்" இந்த மூன்று ராசிகள் மற்றும் பாவங்கள் தான் மோட்ச பாவங்கள் ஆகும்.

 

இந்த மூன்று மோட்ச ராசி, மோட்ச லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்றே சில விதமான பிரச்சனைகள் கஷ்டங்கள் குணங்கள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் பொதுவாக இருக்கும்.அவற்றை இப்பொழுது பார்க்கலாம்.

"கடகம்,விருச்சிகம், மீனம்"இந்த 3 மோட்ச ராசி மற்றும் மோட்ச லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சிலவிதமான பிரச்சனைகள் எண்ணங்கள் குணங்கள் கஷ்டங்கள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் பொதுவாக இருக்கும்.

இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கின்ற அந்தப் பணத்தில் தங்களுக்காக தங்களுடைய விருப்பத்திற்காக ஆசைக்காக என்று 5 சதவீதம் கூட இவர்கள் அந்த பணத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள்.

இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணத்தை இவர்கள் விருப்பத்திற்காக ஆசைக்காக என்று இவர்களால் வாழ்க்கையில் அவ்வளவாக அனுபவிக்க முடியாது.

இவர்கள் வாழ்க்கையில் சம்பாதிக்கின்ற பெரும்பாலான பணம் ஒன்று கடன் பிரச்சனைகளுக்கோ ,EMI ,loan credit card,இது போன்ற விஷயங்களுக்குகோ குடும்பத்திற்காகவோ மற்றவர்களுக்காகவோ வெட்டிச் செலவுகளுக்கு விரைய செலவுகளுக்கு மருத்துவ செலவுகளுக்குகாகவோ தான் இவர்கள் வாழ்க்கையில் சம்பாதிக்கின்ற பெரும்பாலான பணம் போய்க்கொண்டிருக்கும்.

இது போன்றவற்றிற்காக தான் இவர்கள் சம்பாதிக்கின்ற பெரும்பாலான பணத்தை இவர்கள் செலவு செய்து கொண்டிருப்பார்கள்.

தங்களுக்காக என்று வாழ்க்கையில் இவர்கள் சம்பாதிக்கின்ற பணத்தை அவ்வளவாக இவர்களால் அனுபவிக்க முடியாது.

ஒன்று போனால் ஒன்று இவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் கஷ்டங்கள் என்பது இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்,வந்து கொண்டே இருக்கும்

தேவையில்லாத பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் இவர்கள் அடிக்கடி வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

வாழ்நாள் முழுவதும் இவர்கள் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் கடமைகள் தேவைகள் என்பது இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.இதில் குறிப்பாக இவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதுமே இருக்கும்.

தன்னுடைய குடும்பம் சொந்தங்கள் உறவினர்கள் இவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையில் இவர்கள் ஆசைப்பட்ட விருப்பப்பட்ட நிறைய விஷயங்களை இவர்கள் விட்டுக் கொடுத்திருப்பார்கள் அல்லது தியாகம் செய்திருப்பார்கள்.

பணம் சேமிப்பு சார்ந்த பிரச்சினைகள்(Money savings problem) இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதுமே இருக்கும்.இவர்கள் எவ்வளவுதான் பணத்தை சம்பாதித்தாலும் இவர்களால் அந்த பணத்தை அவ்வளவாக சேமித்து வைக்க முடியாது இவர்கள் கையில் பணம் தாங்காது நிற்காது.

இவர்கள் வங்கிக் கணக்கில் அல்லது இவர்கள் கையில் பணம் வந்தால் உடனே அந்த பணத்திற்கு வேட்டு வைக்க ஆப்பு வைக்க இவர்களுக்கு ஒரு விஷயம் அல்லது ஒரு பிரச்சனை எப்போதுமே காத்துக் கொண்டிருக்கும்.

பணம் சேமிப்பு சார்ந்த பிரச்சினைகளால் அதிகமாக இவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள்.மேலும் இவர்களின் வருமானத்திற்கு சக்திக்கு அதிகமான செலவுகள், தேவைகள், வெட்டி விரயங்கள், பண தேவைகள் ,பண செலவுகள் என்பது இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

அதாவது இவர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்திற்கு வருமானத்திற்கு அதிகமான வெட்டிச் செலவுகள்,வெட்டி விரயங்கள்,

விரைய செலவுகள்,பண செலவுகள், தேவைகள் என்பது இவர்களுக்கு எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.

யாரெல்லாம் இந்த "கடகம்,விருச்சிகம்,மீனம்" இந்த 3 ராசிகளில் அல்லது லக்னங்களில் ஏதேனும் ஒரு ராசி, லக்னத்தில் பிறந்து இருக்கின்றீர்களோ நீங்கள் இந்த பதிவில் நான் சொல்லி இருப்பதை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

ஜாதகத்தில் இந்த சூட்சமத்தை பொருத்தி பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

நீங்கள் இந்த 3 ராசிகளில் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்து இருந்தீர்கள் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் உங்களுக்கு 50% சதவீதம் பொருந்தும்.அதேபோன்று நீங்கள் இந்த 3 லக்ணங்களில் ஏதேனும் ஒரு லக்னத்தில் பிறந்து இருந்தீர்கள் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் உங்களுக்கு 100% பொருந்தும்.

அதாவது ராசிக்கு இந்த பதிவு 50 சதவீதம் பொருந்தும். லக்னத்திற்கு இந்த பதிவு 100 சதவீதம் பொருந்தும்.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.