ராகு கேது ஜாதகம் , செவ்வாய் தோஷ ஜாதகம் ! எனவே திருமணம் கால தாமதமாக நடக்கும்
ஜோதிட
ஆலோசனை பெற வந்த பெண்ணின் பெற்றோர் என்னிடம் கேட்ட கேள்வி :
1.
எங்களது
பெண்ணின் ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும் இது ராகு கேது ஜாதகம் , செவ்வாய் தோஷ ஜாதகம் ! எனவே
திருமணம் கால தாமதமாக நடக்கும் என்றும் ,இளம் வயதில் திருமணம் செய்ய கூடாது என்றும்,
அப்படி செய்தால் மன வாழ்க்கை சிறப்பாக அமையாது என்றும், எனவே உங்களது மகளுக்கு 27 வயதுக்கு மேல் திருமணம் செய்து வையுங்கள் என்று
அதுவே சிறப்பாக இருக்கும் என்றும் சொல்கின்றனர் .
இது சரியா?
2.
எங்களது
சொந்தத்தில் நல்ல வரன் வந்துள்ளது அந்த வரன் வீட்டினர் எங்களது மகளை திருமணம் செய்துகொள்ள
ஆர்வமாக உள்ளனர் , எங்களுக்கு மிகவும் குழப்பமாக உள்ளது சரியான பதிலை எதிர்பார்த்து
இங்கு ஒரு நண்பரின் ஆலோசனையின் பேரில் வந்துள்ளோம் சரியான வழிகாட்டுதல் தேவை என்றனர்
?
3.
ஆக
ஜோதிடர்கள் மீண்டும் ராகு கேது, செவ்வாயை, வைத்து ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்து விட்டார்கள் என்று மனதில் நினைத்து
கொண்டேன் , பிறகு அந்த பெண்ணின் ஜாதகத்தையும் , அவர்களுக்கு வந்த வரனின் ஜாதகத்தையும்
வைத்து பார்த்த பொழுது ராகு கேது ஜாதகம் , செவ்வாய் தோஷ ஜாதகம் ! என்ற அமைப்பை அந்த
கிரகங்கள் செய்யவில்லை , மாறாக கடக லக்கினத்தில் அமர்ந்த கேது 100 சதவிகித நன்மையையும் 7 ம் வீடு மகரத்தில் அமர்ந்த ராகு 100 சதவிகித நன்மையையும். லக்கனத்தில்
4.
(
இந்த ஜாதகிக்கு லக்கினம் கடகத்தில் 14 பாகையில்
ஆரம்பித்து சிம்மத்தில் 14 பாகையில்
முடிவடைகிறது )
5.
சிம்ம
வீட்டில் அமர்ந்த செவ்வாயும் , எந்தவித தோஷ அமைப்பையும் செய்யாமல் சிறப்பாக இருந்தது
மேலும் களத்திர ஸ்தானம் குடும்ப ஸ்தானம் எனும் இரு வீடுகளும் மிகவும் சிறப்பாக அமைந்து
இருந்தது.
6.
இதன்
காரணமாகவே இந்த பெண்ணிற்கு சரியான வயதில் வரன்
வந்துள்ளது , மற்ற ஜோதிடர்கள் சொன்னது போல் இது ராகு கேது ஜாதகம் , செவ்வாய் தோஷ ஜாதகம்
இல்லைஎன்றும்.
7.
மேலும்
வரனின் ஜாதகமும் சிறப்பாக இருப்பதால் திருமணம் செய்து வைப்பதில் எவ்வித சிரமமும் யாருக்கும்
ஏற்ப்பட வாய்ப்பு இல்லை என்றும் ஆலோசனை கொடுத்து , இருவருக்கும் திருமணத்திற்கு உகந்தகாலம்
இதுவே ( பருவத்தே பயிர் ) என்று ஆலோசனை கொடுத்து அனுப்பி வைத்தேன் .
8.
இது
மாதிரியான குழப்பங்களால் சரியான வயதில் திருமண வாழ்க்கை அமையாமல் நிறை ஆண் பெண் ஜாதகங்கள்
நிறை இப்பொழுது வருகின்றது , காரணம் ஒன்றுதான் சரியான ஜோதிட அறிவு இல்லாத ஜோதிடர்களிடம்
ஆலோசனை பெறுவதினால் ஏற்ப்படும் இன்னல்கள் இவை .மேலும் ராகு கேது , செவ்வாய் ஒரு ஜாதகத்தில்
எந்த வீடுகளில் அமர்ந்தாலும் நன்மையை செய்கிறதா அல்லது தீமை செய்கிறதா என்பதே தெரியவில்லை
என்றால் அந்த ஜோதிடர் எப்படி தம்மை நாடி வருபவர்களுக்கு நல்ல ஜோதிட ஆலோசனை சொல்ல இயலும்.
9.
பொதுவாக ராகு கேது , 1
, 2 , 5, 7 , 8 ,
12 வீடுகளில் இருந்தால் அவை ராகு கேது தோஷம் என்றும் , செவ்வாய் 2 ,
4 , 7
, 8 , 12 வீடுகளில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்றும் ஜோதிடர்கள்
முத்திரை குத்தி சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்டு விடுகின்றனர்
, இதனால் பாதிக்க படுவது என்னவோ சம்பந்தப்பட்ட
ஜாதக அமைப்பை சேர்ந்த ஜாதகனும் ஜாதகியும் தான்.
10. ராகு கேது , 1 , 2 , 5,
7 , 8 , 12 வீடுகளில்
இருந்தாலும் , செவ்வாய் 2 , 4 , 7 , 8 ,
12 வீடுகளில் இருந்தாலும் அவை நன்மையை செய்யும்
அமைப்பில் இருந்தால் நிச்சயம் இளம் வயதில் சரியான பருவத்தில் திருமண வாழ்க்கையினை அமைத்து
கொடுத்து விடும் என்ற உண்மையை ஜோதிடர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்
என்பது தெரியவில்லை.
11. மாறாக
ராகு கேது , 1 , 2 , 5, 7 , 8
, 12
வீடுகளில் , செவ்வாய் 2 , 4 ,
7 , 8
, 12 வீடுகளில் இருந்து கெடுதல் செய்யும்
அமைப்பு 1000 ஜாதகங்கள் வந்தால், அதில் ஒரு
20 ஜாதகங்களில் மட்டுமே இருக்கும். இது எங்களது
ஆய்வில் தெரிந்த நிருபிக்க பட்ட உண்மை
.
12. மேலும் சில நட்சத்திரம் தோஷமானவை என்று முதல்
பார்வையிலே ஜோதிடர்கள் ஒதுக்கி தள்ளி விடுகின்றனர், இதை போல் ஒரு முட்டாள் தனமான செய்கை
வேறு எதுவும் இல்லை, ஒரு நட்சத்திரம் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்துவிடுவதில்லை
, ஜாதக அமைப்பே ஒருவரின் வாழ்க்கையை 100 சதவிகிதம்
நிர்ணயம் செய்கிறது இதை அனைவரும் மனதில் கொள்வது நலம் தரும்.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT