கிரக அஸ்தமனம்
அஸ்தமனம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?
ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம்
இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும்
கிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம்
10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்
நவகிரகங்கள் சூரியனை
நெருங்கும், சில சமயம் சூரியனை விட்டு தூர விலகிச் செல்கின்றன. அப்படி சூரியனை ஒரு
குறிப்பிட்ட தூரத்தில் நெருங்கும் போது சூரிய ஒளியில் அந்த கிரகம் மங்கி விடுகின்றன.
இந்த நிலையை அஸ்தமனம் அல்லது அஸ்தங்கம் என்கிறோம்.
இனி எந்தெந்த கிரகங்கள்
எவ்வளவு தூரத்தில் வரும்போதே அஸ்தமனம் அடைகின்றன என்பதை பார்ப்போம்!
அஸ்தங்கத
பாகை
1.
சந்திரன் சூரியனுக்கு
12° வரும்போது அஸ்தமனம் ஆகிறது.
2.
செவ்வாய் சூரியனுக்கு
17° வரும்போது அஸ்தமனம் ஆகிறது
3.
புதன் (வக்கிரம்
இல்லாத போது) சூரியனுக்கு 14° வரும்போது அஸ்தமனம் ஆகிறது.
4.
குரு சூரியனுக்கு11°
வரும்போது அஸ்தமனம் ஆகிறது
5.
சுக்கிரன் (வக்கிரம்
இல்லாத போது) சூரியனுக்கு 10° வரும்போது அஸ்தமனம் ஆகிறது
6.
சனி சூரியனுக்கு
15°வரும்போது அஸ்தமனம் ஆகிறது.
கிரக
அஸ்தமனம்
இந்த அஸ்தங்க தோஷத்தால்
லக்னத்தைப் பொறுத்து நன்மை தீமைகள் மாறி நடக்கும். அதாவது அஸ்தமனம் அடையும் கிரகம்
தான் தர வேண்டிய பலனை சூரியனிடம் ஒப்படைத்து விடுகின்றன. அந்த பலனை சூரியன் வாங்கி
அந்த லக்னத்திற்கு தான் பெற்ற ஆதிபத்தியம் பிரகாரம் மாற்றி வழங்குகிறார்.
அஸ்தமன
தோஷத்தைப் பற்றி இரண்டு நிலைகள் உண்டு
1.ஜோதிட சம்பந்தமானது
2.வானவியல் சம்பந்தமானது
ஜோதிட சம்பந்தமானது
எந்த கிரகமும்
சூரியனை அடைவதற்கு முன்பு 5 பாகைக்குள் இருக்குமானால் அதற்கு முழு அஸ்தமன தோஷம் உண்டு.
சூரியனைத் தாண்டி விட்ட பிறகு 5° இருக்குமானால் அஸ்தமன தோஷம் பெயரளவில்தான் இருக்கும்.
வானவியல் சம்பந்தமானது
சுக்கிரனும் புதனும்
முறையே சூரியனை நெருங்கி 13° மற்றும் 8°இருக்கும் பொழுது முதல் அவை அஸ்தமனத்தில் இருப்பதாக
கருதப்படும்.
ஆனால் ஜாதக ரீதியாக சூரியனிலிருந்து 3° முன்பின் இருக்கும்
பொழுது மட்டும் தான் புதனும் சுக்கிரனும் அஸ்தமனத்தின் விளைவாக தோஷத்தை செய்யும். சில
சமயம் கிழக்கேயும், சில சமயம் மேற்கேயும் அஸ்தமன,உதயம் ஆவது புதன், சுக்கிரனின் இயல்பாகும்.
ஒரு கிரகம் ஆட்சி
பெற்று இருந்தாலும் உச்சம் பெற்று இருந்தாலும் அஸ்த்தமன தோஷத்தை அடையும் பொழுது அது
முழுமையாக பலமற்றதாக ஆகிவிடுகிறது. புதன் சுக்கிரன் இருவரும் சூரியனைத் தாண்டி பிறகு
அஸ்தமனத்தில் இருந்தால் கூட நன்மை செய்வார்கள். அஸ்தமன தோஷம் பாதிக்காது.
கிரகங்கள்
ஆனது அஸ்தங்கம் அடையும்.சுக்கிரனும் புதனுமே அடிக்கடி அஸ்தங்கதம் அடையும் கிரகங்களாகும்.
மீனம் – சுக்கிரன்
– 9 பாகை
கடகம் – குரு– 11 பாகை
கன்னி – புதன்
– 13 பாகை
துலாம் – சனி– 15 பாகை
மகரம் – செவ்வாய்
– 17 பாகை
அஸ்தங்கம்
பற்றிய குறிப்புகள்.
1.
மேலே
கூறப்பட்ட பாகைகளில் சூரியனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் சஞ்சரிக்கும் போது அஸ்தங்கதம்
அடைகிறது. எனினும் இப்பாகைகளில் பாதி பாகையே அதிக பாதிப்பினை தருகிறது.
2.
சூரியன்
8, 12 ம் பாவத்தில் அமர்ந்து அஸ்தங்கம் தந்தால் அதிக பாதிப்பு உண்டாகிறது.
3.
ரிஷப,
மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் லக்கினங்களுக்கு எந்த கிரஹம் அஸ்தங்கம் அடைந்தாலும்
பாதிப்பு உண்டாகிறது.
4.
மேஷம்,
கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் லக்கினங்களுக்கு செவ்வாய், குரு அஸ்தங்கத்தினால்
அதிகம் பாதிப்பு தருவதில்லை.
5.
சூரியனை
விட அஸ்தங்கதம் அடைந்த கிரஹம் அதிக பாகையில் இருந்தால் பாதிப்பு அதிகம் தருவதில்லை.
6.
அஸ்தங்கதம்
அடைந்த கிரகம் ஆட்சி, உட்சம் பெற்றாலும், திக்பலத்தில் இருந்தாலும், சுபர் பார்த்தாலும்,
நவாம்சத்தில் பலமாக இருந்தாலும் பாதிப்பு அதிகம் தருவதில்லை.
7.
அஸ்தங்கதம்
அடைந்த கிரஹம் வக்கிரம் பெற்றாலும் பாதிப்பு தருவதில்லை. இது மிகவும் அரிதாகும்.
8.
சூரியன்
வலிமை இழந்து அஸ்தங்கம் தந்தாலும் பாதிப்பு இல்லை.
9.
அஸ்தங்கம்
அடைந்த கிரஹத்தின் ஆதிபத்திய பாவ பலனை தன் தசா புத்தியில் கொடுப்பதில்லை. மாறாக சூரிய
தசா, புத்திகளிலே அப்பலன் நடைபெறுகிறது.
10. சூரியன் இருந்த வீட்டின் அதிபதி அல்லது நக்ஷத்திர
அதிபதி அஸ்தங்கம் அடைந்தால் அதிக பாதிப்பினை தருகிறது.
11. சூரியனும் அஸ்தங்கம் அடைந்த கிரஹமும் வேறு
வேறு ராசிகளில் இருந்து அஸ்தங்கம் அடைந்தாலும் அதில பாதிப்பு தருவதில்லை.
12. சந்திரன் 12 பாகைக்குள் ( ஒரு திதி அளவு)
இருந்தாலும் அஸ்தங்கம் அடைந்ததாக சில நூல்கள் குறிப்பிடுகின்றன.
13. சனி அஸ்தங்கம் அடைந்தாலும் ஜாதகருக்கு ஆயுளை
நிர்ணயிப்பதில் அஸ்தங்கத்தினை எடுத்துக்கொள்ளகூடாது.
14. அஸ்தங்கதம் அடைந்த கிரஹம் ஏதேனும் ஒரு வழியில்
பலம் பெற்றால் அதிக பாதிப்பினை தருவதில்லை.
15. அஸ்தங்கம் அடைவதினால் கிரஹங்கள் தன் இயல்பு
நிலையிலிருந்து மாறி சில மாற்றங்களை உண்டாக்கிறது. அவற்றின் பலன் ஆனது.
சூரியனுடன் செவ்வாய் சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது
1.
எதற்கும்
போட்டி போடுதல்
2.
பிறரின்
மீது அதிக ஆதிக்கம் செலுத்துதல் மற்றும் உதாசீனப்படுத்துதல்.
3.
பிடிவாதமாக
இருத்தல்
4.
அவ்வளவு
சீக்கிரம் சமரசம் ஆகாதிருத்தல்
5.
தானே
பெரியவன் என்ற எண்ணத்துடன் இருத்தல்
6.
வலுவான
மன உறுதி கொண்டிருத்தல்
7.
ஆணாதிக்கமும்,
முரட்டு தைரியமும் கொண்டிருத்தல்
8.
தேவையற்ற
ஆர்வமும், ஆற்றலும் கொண்டிருத்தல்
9.
அதீத
பித்த தேகத்துடன் இருத்தல்
10. வழுக்கை விழுதல்
11. கண் நோய் பாதிப்பு உண்டாகுதல்.
சூரியனுடன்
புதன் சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது
1.
படபடப்புடன்
இருத்தல்
2.
எவ்வளவு
மன அழுத்ததினையும் தாங்குதல்
3.
தான்
நினைப்பதனை வெளியில் கூறாதிருத்தல்
4.
தன்னைப்பற்றியே
அதிகம் யோசித்தல், பேசுதல்.
5.
நரம்பு
பலவீனமாக இருத்தல்
6.
பித்தப்பையினால்
வயிற்றில் நோய் உண்டாதல்.
சூரியனுடன்
குரு சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது
1.
பழமையில்
நம்பிக்கையாக இருத்தல்
2.
எதனையும்
செய்ய முடியும் என அதீத கர்வத்துடன் இருத்தல்
3.
அளவுக்கு
மீறிய வாக்குறுதிகளை கொடுத்தல்
4.
தடங்கலில்
தடுமாறி மீளாமல் இருத்தல்
5.
தம்மால்
மட்டுமே நீதியினை நிலைநாட்டமுடியும் என்று இருத்தல்
6.
ஒழுக்கமானவராக
தன்னை காட்டிக்கொள்ளுதல்
7.
நியாபகமறதி
அதிகம் இருத்தல்
8.
உடல்
வலி, வாயு தொல்லைகளினால் அவதிப்படுதல்
சூரியனுடன்
சுக்கிரன் சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது
1.
மனநிறைவையே
பிராதனமாக கொண்டிருத்தல்
2.
வேடிக்கை
விளையாட்டில் ஆர்வத்துடன் இருத்தல்
3.
உறவுகளிடமே
தன்முனைப்பாக இருத்தல்
4.
புகழுடனே
இருக்கவேண்டும் என விரும்புதல்
5.
பிறரின்
வாழ்க்கை ரகசியங்களை அறிய ஆர்வமாக இருத்தல்
6.
அளவிற்கு
அதிகமாக பிறருடன் ஒத்துப்போகுதல்
7.
சிறுநீர்
பிரச்சினைகளை சந்தித்தல்
8.
தொற்றுநோயினால்
அவதிப்படுதல்
சூரியனுடன் சனி சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது
1.
அதீத
சுயகட்டுப்பாடுடன் இருத்தல்
2.
எவருடனும்
அவ்வளவு சீக்கிரமாக நெருங்கி பழகாமல், எச்சரிக்கையுடன் இருத்தல்
3.
கடின
உழைப்பில் நம்பிக்கையாய் இருத்தல்
4.
பிறருடைய
உணர்விற்கு தன்னை ஆட்படுத்தி கொள்ளாதிருத்தல்
5.
இளமையிலேயே
முதிர்ந்த பக்குவம் அடைதல்
6.
வயதிற்கு
மீறிய அனுபவத்துடன் இருத்தல்
7.
எந்த
வேலையையும் தாமதமாகவே செய்தாலும் சரியாகவே செய்கிறோம் என நம்புதல்
8.
உடல்
வலியினால் அவதிப்படுதல்
9.
தொடைக்கு
கீழே உள்ள உடல் உறுப்பில் பலம் குன்றி இருத்தல்.
பொதுவாக அஸ்தங்கம்
அடையும் கிரஹம் தன்னுடைய பாவ பலனை சூரியனிடம் இழந்து விடும். சூரியன் என்பது ஆத்மாவாக
கூறப்பட்டுள்ளதால் ஆத்மாவிற்கு அப்பாவ பலனை அடைய பாக்கியம் இல்லை எனவும் தீர்மானிக்கலாம்.
எனினும் தெய்வ பக்தி, சூரிய நமஸ்காரம், சிவ வழிபாடு போன்றவற்றின் மூலமும் நாம் அஸ்தங்கதம்
அடைந்த கிரஹத்தின் பலனை சூரிய தசா புத்திகளில் அடையமுடியும்.
எனவே ஜாதகப்பலனை
தீர்மாணிக்கவும், தசாபுத்தி பலனை நிர்ணயிப்பதிலும் அஸ்தங்கம் முக்கியமாக இருக்கிறது.
சில
குறிப்பிட்ட நிலைகளில் சனியும், அட்டமாதிபதியும் அஸ்தங்கம் அடையும் நிலையில் தீர்க்காயுளை
தருவதில்லை.
1.
லக்னாதிபதி
அஸ்தங்கமடையும் போது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்தும். பெயரையும்,
புகழையும் அடைய முடியாது. சுயபலம், தன்பலம் இருக்காது. சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
2.
குடும்பாதிபதி
அஸ்தங்கம் அடைய குடும்பத்தில் பிரச்னைகள், பணத்தட்டுப்பாடு,கடன் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
சர ராசியாக லக்னம் அமையப்பெற்று அட்டமாதிபதி திசை நடக்கும் காலத்தில் குடும்பத்தை விட்டு
தூர தேசத்துக்கு தொழிலுக்காகவோ கல்விக்காகவோ செல்ல வைக்கும்.
3.
நான்காம்
அதிபதி அஸ்தங்கம் அடையும் போது தாயார் , மனை, மாடு, கொடுக்கல், வாங்கல், போக்குவரத்து,
செய்தொழில் போன்ற ஆதிபத்திய காரகங்களில் பிரச்னைகளை தருகிறது.
4.
குருவும்,
பஞ்சமாதிபதியும் அஸ்தங்கம் அடையும் போது குழந்தைகளால் விரையமும், துன்பங்களும், துயரங்களும்,
குழந்தை யின்மையும், பெண்களானால் கர்ப்பப்பை கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.
5.
சுக்கிரனும்,
சப்தமாதிபதியும் சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தங்கம் அடையும் போது களத்திரம் தொடர்பான
பிரச்சினைகளையும், திருமணம் ஆகாத நிலையையும் , மனைவியை விட்டு பிரிதலையும், தாம்பத்ய
சுகத்திற்கு இடைஞ்சலையும் கண்டிப்பாக தருவார்கள்.
6.
பாக்கியாதிபதி
அஸ்தங்கம் அடையும் போது தகப்பனார் வழி தொல்லைகள், பூர்வீக சொத்துக்கள் இழப்பு போன்ற
பலன்களையும்
7.
ஜீவனாதிபதி
அஸ்தங்கம் அடையும் போது ஜீவனமே இருக்காது. தொழிலில் இடைஞ்சலையும், சிக்கலையும், தொல்லைகளையும்
ஏற்படுத்தும்.
8.
லாபாதிபதி
அஸ்தங்கம் அடையும் போது லாபமே இருக்காது. லாபத்தை கொடுக்கற மாதிரி காமிச்சு, லாபத்தை
கொடுக்கற மாதிரி கொடுத்து நஷ்டத்தை ஏற்படுத்துவார்.
9.
விரையாதிபதி
அஸ்தங்கம் அடையும் போது தூக்கம் கெடும். நைட் ஷிப்ட் வேலை பார்ப்பார். இங்கிருந்து
அங்க,அங்கிருந்து இங்க என அழைய வைப்பார்.
10. நல்ல சாப்பாடு நேரத்திற்கு கிடைக்காது. நேரம்
கெட்ட நேரத்தில் சாப்பிட வேண்டி வரும். தூக்க மாத்திரை போட்டு தூங்குபவர்கள் இந்த அமைப்பில்
இருப்பார்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தருவார்
11. செவ்வாய் சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடையும்
போது பெண்களுக்கு அவர் கணவன் காரகன் என்பதால் கணவன் வலுவோடு இருக்க முடியாது. இதோடு
ஏழாம் இடம் பாவிகளால் அதிகம் பாதிக்கப்படும் போது கணவன் மனைவி பிரிவு நிச்சயம் இருக்கும்.
12. சந்திரன் சூரியனுடன் அஸ்தங்கம் அடையும் போது
அவர் மனசுக்காரகன் என்பதால் மனசு பாதிக்கப்படும். சந்திரன் சூரியனுடன் 8 1/2 பாகைக்குள்
நெருங்கி இருக்கும் போது அவன் தந்திரசாலியாக இருப்பான். அவனுக்கு எப்படியும் பிழைக்கலாம்
என்ற எண்ணம் இருக்கும். சந்திரனுக்கு பட்சபலம் குறைவுபடுவதால் எதிர்மறையான எண்ணங்கள்
இருக்கும். பஸ்ஸில் செல்லும் போதுகூட இந்த பஸ் எங்கே ஆக்ஸிடென்ட் ஆகிவிடுமோ என்று சதா
குழப்பத்திலே இருக்கும் குழப்பவாதிகள் இவர்கள். முடிவெடுக்க தயங்குவார்கள். நாளைக்கு
செய்யலாம் நாளைக்கு செய்யலாம் என்று எல்லா விஷயங்களையும் தள்ளி தள்ளி போட்டு நல்ல வாய்ப்புகளையும்
கோட்டை விட்டு விடுவார்கள். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள். சந்திரன்
சூரியனுடன் மிக நெருங்கி, நான்காம் இடமும் ,அதன் அதிபதியும் பாதிக்கப்படும் போது தாயை
இளமையிலே பிரிபவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் சூரியனை விட்டு பாகை முறையில்
பத்து டிகிரிக்கு மேல் விலக விலக சந்திரனுக்கு பலம் கூட ஆரம்பித்து விடும். அப்போது
இந்த பலன்கள் நடக்காது.
13. சந்திரன் பட்சபலம் இல்லாத அமாவாசை நாட்களில்
சுபகாரியங்களுக்கு விலக்கு அளித்துள்ளார்கள். அதேபோல செவ்வாய், சனிக்கிழமைகளிலும் சுபகாரியங்களுக்கு
விலக்கு அளித்துள்ளார்கள். ஏன் என்று சிந்திப்போமானால் அவையெல்லாம் குருட்டு நாட்கள்.
கண்ணில்லாத நாட்கள்.
14. சந்திரன் சூரியனுக்கு 12 டிகிரி இடைவெளியில்
அஸ்தங்கம் அடைகிறது.
செவ்வாய் சூரியனுக்கு
17 டிகிரி முன் பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது.
குரு 11டிகிரி
இடைவெளியில் சூரியனுக்கு முன் பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது.
சனி 15டிகிரியில்
சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது.
புதன் நேர்கதியில்
14டிகிரி வித்தியாசத்திலும்,வக்ர கதியில் 12டிகிரி வித்தியாசத்திலும் சூரியனுக்கு முன்பின்
ராசிகளில் அஸ்தங்கம் அடைவார்.
சுக்கிரன் நேர்கதியில்
10டிகிரி முன்பின்னும், வக்கிர கதியில் 8 டிகிரியில் சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில்
அஸ்தங்கம் அடைவார்.
வலுவான யோகம் பெற்ற
கிரகங்கள் அஸ்தங்கம் அடையும் போது யோகங்கள் நசிந்து விடுகின்றன. ஜாதகங்களை பரிசீலிக்கும்
போது அஸ்தமனங்களையும் வக்கிரங்களையும் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT