திருமணத்திற்கு
பின்பு வாழ்க்கை துணைக்கு ஏற்படும் பாதிப்பை அறிவது எப்படி?
சிலரின் பிறந்த
கால அமைப்புபடி உடல் குறைபாடு உள்ள வாழ்க்கை துணை அமையும் .
அப்படி பட்ட ஜாதக
அமைப்பு கொண்ட நபர்கள் குறைபாடு உள்ள வாழ்க்கை துணையை ஏற்றுக்கொள்வது நல்லது.
சிலர் ஜாதக அமைப்பு
தெரியாமல் குறைபாடு நல்ல ஆரோக்கியமான உடல் ஊனமில்லாதவரை திருமணம் செய்து
பிறகு அந்த நபரை ஊனமாக்கி விடுகிறார்கள்.
திருமணப்பொருத்தம்
பார்க்கும் பொழுது இதை கண்டறிவது நல்லது.
ஜோதிட
விதிகளை காண்போம்:
ஏழாம்
அதிபதி:லக்னத்திற்கு ஏழாமிடம்
வாழ்க்கைத்துணை ஸ்தானம் ஆகும்.
சூரியன்:வெப்பத்தை உமிழக்கூடியது.(நெருப்பு) இதனுடன்
மிகவும் இணையும் கிரகம் அஸ்தங்கமாகி பாதிப்பு அடையும்.
சனிகிரகம்:உடல் ஊனத்தை குறிக்கும்
மனித கால் ஐ குறிக்கும்.
சூரியனுக்கு பகை
கிரகம்
ராகு
/கேது : இந்த இரு கிரகங்களும்
உடல் ஊனமுற்றது.
தலை வேறு உடல்
வேறு என்று வெட்டு பட்ட நிலையில் காட்சி அளிக்கும்.
மேலும் சூரியன்
,சனிக்கு பகையான கிரகங்கள்.
செவ்வாய் கிரகம்:
அவசரப்படுத்தும் கிரகம்( Speed)
சனி கிரகத்துக்கு
பகையான கிரகம்.
வெப்ப கிரகம்.
செவ்வாய் சனியுடன்
இணைந்து இருந்தால் விபத்து ஏற்பட்டு ஏதோ ஓரு உறுப்பு பாதிக்கும்.
ஜோதிட
விதி :
ஏழாம் அதிபதி அஸ்தங்கமாகி
அதனுடன் ராகு/கேது/செவ்வாய்/சனி இணைந்து இருந்தால் அவரின் வாழ்க்கை துணை ஊனமுற்றவராக
இருப்பார்.
சூரியன்+ஏழாம்
அதிபதி+சனி
சூரியன்+ஏழாம்
அதிபதி+ராகு
சூரியன்+ஏழாம்
அதிபதி+கேது
சூரியன்+ஏழாம்
அதிபதி+செவ்வாய்
சூரியன்+ஏழாம்
அதிபதி+செவ்வாய்+சனி
இப்படிபட்ட கிரக
கூட்டணி ஜாதகத்தில் இருக்கும்.ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு உடல் ஊனம் ஏற்படும்.
ஒருவரின்
ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சூரியனுடன் மிக நெருக்கமாக இணைந்து அஸ்தங்கமாகி செவ்வாயுடன்
இணைந்து இருந்தது.
அவருக்கு
திருமணமாகி அவரது மனைவிக்கு தீபாவளியின் போது வெடி கையில் வெடித்து கை கருகியது.
காரணம்
இரண்டு வெப்ப கிரகத்துடன் அவரது ஏழாம் அதிபதி இணைந்ததால் தீவிபத்து போன்று வெடி விபத்து
ஏற்பட்டு மனைவியின் கை கருகியது.
இப்படிபட்ட ஜாதக
அமைப்பு கொண்டவர்கள் ஏதேனும் உடல் குறைபாடு உள்ளவரை மணப்பது நல்லது.
ஆனால் உடல் ஊனமுற்ற வரை மணக்க மறுப்பார்கள்.
பாதிப்பு அடையும்
விதி கொண்ட ஜாதகர் வலிய வந்து மேற்படி நபரை திருமணம் செய்து ஏதேனும் ஒரு உடல் குறைபாட்டை
அடைவார்கள்.
இது விதி.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT