விவாகரத்து பெரும் அமைப்பு உள்ள ஜாதக நிலைகள் .

கடந்த பதிவில் நாம் பார்த்தது  திருமணம் செய்து கொண்டவர்கள் விவாகரத்து வரை வந்தது பற்றி.

இனி நாம் பார்க்க இருப்பது திருமணத்திற்கு முன்பே ஒருவரது ஜாதக அமைப்பை கொண்டு திருமண வாழ்க்கையில்  தோல்வி நிலை இல்லாத ஜாதகமா ?

1.   ஒருவரது ஜாதகத்தில் சூரியன் எனும் கிரகமும் , சந்திரன் எனும் கிரகமும் 100  சதவிகிதம் ராகு கேதுவால்  பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த ஜாதகரின் இல்லற வாழ்க்கை நிச்சயம் நன்றாக இருக்க, வாய்ப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை .

2.   ஒருவரது ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் , களத்திர ஸ்தானம் இரண்டும் 100  சதவிகிதம்  பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த ஜாதகரின் இல்லற வாழ்க்கை நிச்சயம் நன்றாக இருக்க, வாய்ப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை .

3.   ஒருவரது ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் வக்கிரகம் பெற்று அந்த கிரகங்கள் அமர்ந்த வீடுகள் அனைத்தும் 100  சதவிகிதம்  பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த ஜாதகரின் இல்லற வாழ்க்கை நிச்சயம் நன்றாக இருக்க, வாய்ப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை .

4.   ஒருவரது ஜாதகத்தில் லக்கினமும் , பூர்வ புண்ணியமும் 100  சதவிகிதம் பாதிக்க பட்டு, பூர்வீகத்தில் குடியிருந்தால், அந்த ஜாதகரின் இல்லற வாழ்க்கை நிச்சயம் தோல்வி அடையும் .

5.   ஒருவரது ஜாதகத்தில் நான்காம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று திசையை நடத்தும் பொழுது , நான்காம் வீடு சம்பந்தம் பெற்ற திசைகளை குறிக்கும் வீடுகளில் ஜாதகர் குடியிருந்தால் நிச்சயம் விவாகரத்து ஜாதகர் வீடு தேடி வரும் .

6.   மருமகன் , மருமகளை பற்றி புரிந்துகொள்ளாத மாமனார் மாமியார் , மற்றும் சொந்த பந்தங்கள் , நண்பர்கள் இருந்தாலும் இல்லற வாழ்க்கை தோல்வியை  தரும் .

7.   தம்பதியரிடம் அன்பு பற்று , விட்டுகொடுக்கும் மனப்பான்மை இல்லை என்றாலும் , ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் திறன் இல்லை என்றாலும், இல்லற வாழ்க்கை தோல்வியை  தரும் . 

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.